Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன நீர்மூழ்கி கப்பல் வந்ததாகக்கூறி இந்தியா அநாவசியமாக குழம்பியது

Featured Replies

சீன நீர்மூழ்கி கப்பல் வந்ததாகக்கூறி இந்தியா அநாவசியமாக குழம்பியது

P15-6a30ce948057ca70e50f073735aa9ee1ca9f673e.jpg

 

இந்தியா சுயநலமாக செயற்பட்டதை குறைகூறவும் முடியாது என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்­கையின் உள்­நாட்டு விட­யங்­களில் தலை­யிட வேண்­டிய தேவை எந்­த­வொரு சர்­வ­தேச நாட்­டிற்கும் கிடை­யாது. அதற்­கான சந்­தர்ப்­பத்தை தானாகவே சென்று அர­சாங்கம்  வழங்­கு­கின்­றது. ஆனால் எனது ஆட்­சியில் அவ்­வா­றான சந்­த­ர்ப்பம் வழங்­கப்­பட வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.  

உத்­தேச அர­சியல­மைப்பு வரைபு ஒற்­றை­யாட்­சியா அல்­லது சமஷ்­டியை அடித்­த­ள­மாக கொண்­டதா ? என்று கூறாமல் போலி­யாக அறிக்­கை­களை சமர்ப்பிப்­பதால் எவ்­வி­த­மான பலனும் கிடை­யாது. மாறாக நாட்டை பிள­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­களே அர­ச­யி­ல­மைப்பின் ஊடாக இது­வ­ரை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வெ ளிநாட்டு கொள்­கைகள் நிலை­யற்­ற­தா­கவும் முறை­யற்­ற­தா­க­வுமே காணப்­ப­டு­கின்­றன. சீனா­வுடன் நெருங்கி நாம் செயற்­பட்­டாலும் இந்­தி­யா­விற்கு சிறப்­பான கௌர­வத்தை வழங்­கினோம். ஆனால் இந்­தியா சுய அர­சி­ய­லுக்­காக பல சந்­தர்ப்­பங்­களில் செயற்­பட்­டது. இதனை என்னால் குறைகூற முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நேற்றைய தினம் கொழும்பில் ஊட­கங்­களின் தலைமை ஆசி­யர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்.

புதிய கட்­சி­யுடன் கூட்டு எதிர்க் கட்சி ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது .மக்கள் மத்­தியில் அவ்­வா­றா­ன­தொரு எதிர்­பா­ர்ப்பும் காணப்­ப­டு­கின்­றது. ஏனென்றால் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மக்கள் மத்­தியில் வெறுப்புத் தன்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

சர்­வ­தேச முத­லீ­டுகள் தேவை­யில்லை என்று நாங்கள் கூற வில்லை. ஆனால் வெ ளி நா­டு­க­ளுக்கு காணி­களை விற்­பணை செய்ய வேண்டாம் என்றே நாங்கள் கூறு­கின்றோம். 

இந்­தி­யா­விற்கு மாத்­திரம் அல்ல சீனா­விற்கும் காணி வழங்­கு­வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது. அர­சாங்கம் சீனாவை பகைத்து அவர்­களை அகௌ­ர­வப்­ப­டுத்தி தற்­போது சீன முத­லீ­டு­க­ளுக்கு பின்னால் செல்லும் கொள்கை புரிய வில்லை. சீனாவின் நீர்­மூழ்கி கப்பல் வந்­த­தாக கூறி இந்­தியா அன்று அநா­வ­சி­ய­மாக செயற்­பட்­டது. இந்து சமுத்­தி­ரத்­திற்குள் சீனாவின் நீர்­மூழ்கி கப்பல் வரு­வ­தாயின் அது குறித்து அறி­விப்­புகள் விடுக்­கப்­படும் என்றே நான அறி­கின்றேன். 

ஆனால் இந்­தியா இதனை பெரிய விட­ய­மாக கொண்டு செயற்­பட்ட நிலையில் இன்று 15000 ஏக்கர் காணியை சீனா­விற்கு வழங்கும் போது மௌனித்­துள்­ளது. அர­சாங்­க­ததின் இரா­ஜ­தந்­திர கொள்கை இதுவா ? என்றும் புரி­ய­வில்லை. தேசிய வளங்­களை விற்­பனை செய்து ஆட்சி நடத்­து­வதே ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கை­யாகும். ஆனால் சுதந்­திர கட்­சியின் கொள்கை அது­வல்ல. இன்று அந்த கூட்­டுக்குள் இவர்­களும் நுழைந்துக் கொண்­டுள்­ளனர். 

சர்­வ­தேச நாடு­க­ளிடம் உத­வி­களை பெற்று நாட்டை அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் இத­னையே நாங்கள் செய்தோம். ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் ஒட்­டு­மொத்­த­மாக நாட்டின் காணி­களை விற்­பனை செய்­கின்­றது. திரு­கோ­ண­ம­லையை இந்­தி­யா­விற்கும் அம்­பந்­தொட்­டையை சீனா­விற்கும் வழங்கும் வகை­யி­லேயே இலங்கை இன்று செயற்­ப­டு­கின்­றது. மரக்­கறி வளர்க்க ஜப்­பா­னுக்கும் காணி வழங்­கப்­பட உள்­ளதாம். 

99 வரு­டங்­க­ளுக்கு காணியை வழங்­கு­வ­தாக அர­சாங்கம் கூறி­னாலும் காணி மீண்டும் கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்பை வைக்க முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. உரிய திட்­டத்­த­து­ட­னேயே அம்­பந்­தொட்­டையில் விமான நிலையம் , துறை­முகம் ,மைதானம் மற்றும் மாநாட்டு மண்­ட­பம் என அமைத்தோம். அவை நட்­டத்தில் செயற்­பட வில்லை. போதிய வரு­மா­னங்­களை வழங்­கி­யது. 

குறிப்­பாக அம்­பந்­தொட்டை துறை­மு­கத்தின் வரு­மானம் ஏறு­வ­ரி­சை­யி­லேயே காணப்­பட்­டது. அந்த காலப்­ப­கு­தயில் தேசிய பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் வளர்ச்சி வேகம் 7 வீத­மாக காணப்­பட்­டது. ஆனால் நாட்டின் இன்­றைய நிலை அனை­வ­ருக்கும் தெரியும். எமது கடனை அடைக்க முடி­யா­துள்­ளது என அர­சாங்கம் கூறி திரி­கின்­றது. கடந்த இரண்டு வருடங்கள் கடன் அடைக்­கப்­பட்­டி­ருந்தால் கடனின் எண்­ணிக்கை அதி­க­ரிக்க வாய்ப்­பில்லை. கணக்கு தெரி­யாத அர­சாங்கம் .

சீனா­வுடன் அநா­வ­சி­ய­மாக முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி மேற்­கு­லக நாடு­களை நோக்கி அர­சாங்கம் சென்­றது. ஆனால் எதிர்­பார்த்த வரு­மானம் அல்­லது முத­லீ­டுகள் கிடைக்­கா­மை­யினால் மீண்டும் சீனா­விடம் கையேந்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. நாங்கள் இவ்­வாறு எந்த நாட்­டையும் பகைத்துக் கொள்ள வில்லை. இந்­தியா எம்­முடன் முரண்­பட்­டது. தென்­னிந்­திய அர­சியல் நிலை­மைகள் கார­ண­மா­கவே இந்த நிலை ஏற்பட்டது. இதனை தவ­றாக நாங்கள் பார்க்க வில்லை. குடும்­பத்தில் மூத்த சகோ­த­ர­னுக்கு வழங்கும் வழங்­கிய மரி­யா­தை­யி­னையே நாங்கள் இந்­தி­யா­விற்கு வழங்­கினோம். 

அமெ­ரிக்­கா­வு­டனும் முரண்­பா­டு­களை கொண்­டி­ருக்க வில்லை. ஆனால் நட்பு நாடு­க­ளுடன் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. அரசின் இய­லா­மையே இதற்கு காரணம் . தற்­போது அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்தில் உள்­ளனர். உத்­தேச அர­சி­ய­ல­மைப்பின் வரைபு எத்­தன்மை கொண்­டது என்­பதே முதலில் வெ ளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒற்­றை­யாட்­சிாய ? சமஷ்­டியா ? என்ற நிலைப்­பாடு முதலில் அறி­விக்­கப்­பட வேண்டும். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை இரத்து செய்வதாக கூறி முழு அரசியலமைப்பையும் மாற்றுவது எதற்கு என்பது புரிய வில்லை. 

தாய் நாட்டை பாதுகாக்க வேண்டியது கடமை . எனவே தேசியத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டியதன் வெ ளிப்பாடு இன்று அமெரிக்காவிலும் வெ ளிப்பட்டுள்ளது. டொனல்ட் ட்ரம்பின் வெற்றியும் அதுதான். உள்ளக விடயங்களில் சர்வதேச நாடுகள் தலையிட கூடாது . அதற்கு சந்தர்ப்பம் அளிக்க கூடாது. ஆனால் அரசாங்கம் தலையீடுகளுக்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்றது. எமது ஆட்சியில் அவ்வாறு இல்லை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-23#page-1

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ..மொத்தத்தில் இரண்டு கட்சிகளுக்கும் ஒற்றுமை உள்ளது!

அந்தக் கையேந்தும் விசயத்தைத் தான் சொல்லுகின்றேன்!

அதை ஆரிடம் ஏந்துவது என்பது தான் உங்கள் இருவருக்குமுள்ள வேறு பாடு போன்று உள்ளது!

மேலை நாடுகளிடம் ஏந்துவதா....அல்லது சீனாவிடம் ஏந்துவதா என்பது தான் பிரச்சனை!:mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.