Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்தவர் நீதிமன்றத்துக்கு வெளியில் கைது

Featured Replies

நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்தவர் நீதிமன்றத்துக்கு வெளியில் கைது
 

article_1479960999-article_1479873038-il-செல்வநாயகம் கபிலன் 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டு வந்த ஒருவரை, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து புதன்கிழமை (23) கைது செய்து நீதிமன்ற பொலிஸார், அவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பகுதியினை சேர்ந்த என்.என்.ஜக்சன் எனும் நபர் தனது முகப்புத்தகம் ஊடாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருந்தார். 

அதாவது, இரண்டு மாணவர்கள் சுட்டுகொலை செய்யப்பட்டதற்கு நீதிபதி இளஞ்செழியன் பதில் கூறவேண்டும். அவர் மீது சமூக நல வழக்கு தாக்கல் செய்ய ஆராயவேண்டும். இச் சம்பவத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் காரணம் என கருதமுடியும் என பல விடயங்களை வியாக்கியானம் செய்து கருத்துவெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், மேற்படி நபர் பிறிதொரு வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (23) வந்திருந்தார். குறித்த நபர் தொடர்பில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, மேற்படி நபர் நீதிமன்றினை விட்டு வெளியில் செல்லும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஆஜர்படுத்தியுள்ளனர். 

வவுனியா பகுதியினை சேர்ந்த மேற்படி நபர், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபை சார்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/186804/ந-த-பத-இளஞ-ச-ழ-யன-வ-மர-ச-த-தவர-ந-த-மன-றத-த-க-க-வ-ள-ய-ல-க-த-#sthash.goG68FZZ.dpuf
  • தொடங்கியவர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை முகநூலில் விமர்சித்தவர் கைது.

15107235_576765472528684_7494225251590213278_n
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முகநூலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு குற்ற புலனாய்வு துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.  வவுனியாவை சேர்ந்த என். என். ஜாக்சன் எனும் நபரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு பிறிதொரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த போது நீதிமன்றுக்கு வெளியில் பொலிசாரினால் கைது செய்யபப்ட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.  அது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்ட போது , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனையும் கடுமையாக சாடி பதிவிட்டு இருந்தார்.  அது குறித்த முகநூல் கருத்து தொடர்பிலையே குறித்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்த பொருள் ஒன்றினை 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஊடகங்களுக்கு அறிவித்து இருந்தார். அது தொடர்பான செய்திகள் வெளியாகியதை அடுத்து குறித்த நபர் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/8058

இந்த ஜாக்சன் ஒரு கைதேர்ந்த ஏமாற்றுப் பேர்வழி! 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.