Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம்

Featured Replies

வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம்

12-4c9f498a59e99540ab626d751076028505451bf4.jpg

 

‘பாய்வது’ சரியான நடைமுறையா?
நாட்டில் இப்­போது பயங்­க­ர­வாதம் இல்லை என்று அர­சாங்கம் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சங்­களில், யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் எந்­த­வொரு பயங்­க­ர­வாதச் செயற்­பாடும் இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்கம் உறு­தி­யாக அறி­வித்­தி­ருக்­கின்­றது.

இத்­த­கைய நிலை­யில்தான் வட­மா­கா­ணத்தின் பல இடங்­க­ளிலும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்; கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றார்கள்.

பயங்­க­ர­வா­தமும், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களும் இல்­லா­விட்டால், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் ஆட்­களைக் கைது செய்­யப்­ப­டு­வதன் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்­போது விசு­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்டு குழுக்­களின் செயற்­பா­டுகள் பரந்த அளவில் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பொலிஸார் தீவிர நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருக்­கின்­றனர்.

வாள் வெட்டு குழுக்­களைச் சேர்ந்த பலர் நீதி­மன்­றங்­களில் சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கப்­பட்டு பிணை வழங்­கப்­ப­டாமல் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இருப்­பினும் வாள் வெட்டுக் குழு­வி­னரின் அடா­வ­டித்­த­னமும், வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் முடி­வுக்கு வந்­த­பா­டில்லை.

ஆனால், யாழ்ப்­பா­ணத்தின் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களில் 'ஆவா குழு' பிர­பல்­ய­மா­கி­யி­ருக்­கின்­றது.

வாள்­க­ளினால் ஆட்­களை வெட்­டிக்­கா­யப்­ப­டுத்­தியும், வாள்­களைக் காட்டி அச்­சு­றுத்­தியும் நடத்­தப்­பட்ட கொள்­ளைகள் உட்­பட்ட பல்­வேறு சம்­ப­வங்­க­ளிலும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில், பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

அவர்­களில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்­த­மையும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

யாழ். குடா­நாட்டில் பாது­காப்பைப் பலப்­படுத்தி, சுற்­றுக்­காவல் நட­வ­டிக்­கை­க­ளையும், கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் அதி­கப்­ப­டுத்தி, வாள்­வெட்டு குழுக்­க­ளுக்கு எதி­ராக, பொலிஸார் தீவி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்த போதிலும், வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் எதிர்­பார்த்த அளவில் குறை­வ­டை­ய­வில்லை.

இதனால் அவர்­களின் செயற்­பா­டுகள் சட்டம் ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை சீர் குலைத்­தி­ருந்­தது. மக்கள் பொலிஸார் மீது நம்­பிக்கை இழந்­தார்கள். இந்த அள­வுக்கு வாள்­வெட்டு குழு­வினர் ஆவா குழு என்ற பெயரில் துணி­க­ர­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு இரா­ணுவம் பின்­பு­ல­மாக இருந்து செயற்­ப­டு­வ­தாகப் பர­வ­லாக சந்­தேகம் எழுந்­தி­ருந்­தது.

இந்த நிலையில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த ஒரு­வரும் ஆவா குழுவில் இருந்தார் என்ற தகவல் வெளி­யா­கி­ய­தை­ய­டுத்து, இரா­ணு­வமே, ஆவா குழுவைச் செயற்­ப­டுத்தி வரு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு பல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டது.

அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்ன செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கிய கோத்தபாய ராஜ­ப­க் ஷவே ஆவா குழுவை உரு­வாக்­கி­யி­ருந்தார் என தெரி­வித்­தி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், அந்தக் குழுவைச் செயற்­ப­டுத்தி வந்த பிரி­கே­டியர் யார் என்­பதும் தனக்குத் தெரியும் என்றும் அவர் உறு­தி­படக் கூறி­யி­ருந்தார்.

அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் என்ற ரீதியில் அவர் வெளி­யிட்ட இந்தக் கூற்று, ஆவா குழு­வுக்கும் இரா­ணு­வத்­திற்கும் சம்­பந்தம் இருக்­கின்­றது என்று பல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டுக்கு வலு சேர்த்­தி­ருந்­தது.

ஆனாலும் பாது­காப்புத் துறை சார்ந்த இரண்டு அமைச்­சர்கள் இதனை மறு­த­லித்­தி­ருக்­கின்­றனர்.

ஆவா குழுவில் இடம்­பெற்­றி­ருந்­த­மைக்­காகக் கைது செய்­யப்­பட்­டி­ருந்த இரா­ணு­வத்தைச் சேர்ந்­தவர், இரா­ணு­வத்தில் பணி­யாற்றி, பல மாதங்­க­ளுக்கு முன்னர் தப்­பி­யோடி தலை­ம­றை­வா­கி­யவர் என்றும், இவ­ரு­டைய செயற்­பாட்­டுக்கும் இரா­ணு­வத்­திற்கும் சம்­பந்தம் இல்­லை­யென்றும் சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல இரத்­நா­யக்­கவும், பிரதி பாது­காப்பு அமைச்சர் ருவான் விஜே­வர்­த­னவும் பாரா­ளு­மன்­றத்தில் அதி­கா­ர­பூர்­வ­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

ஆவா குழுவின் உண்­மை­யான நிலை என்ன?

அத்­துடன், ஆவா குழு என்­பது கொள்ளைச் சம்­ப­வங்கள் உள்­ளிட்ட குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களே தவிர, அவர்­க­ளுக்கும் இரா­ணு­வத்­திற்கும் சம்­பந்தம் இல்லை என்றும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் ஆவா குழு­வினர் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அல்ல என்­ப­தையும் அவர்கள் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்­த­வர்கள் என்ற சந்­தே­கத்தில் பலர் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு கொழும்பு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு வரு­கின்­றார்கள்.

ஆவா குழு தொடர்­பாக சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் பல விவ­ரங்­களை வெளி­யிட்­டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இணுவில் அம்மன் கோவில் திரு­வி­ழா­வின்­போது, இரண்டு இளைஞர் குழுக்­களுக்கி­டையில் ஏற்­பட்ட ஒரு மோதலைத் தொடர்ந்து குமரேஸ் இரத்­தினம் விநோதன் என்­ப­வரின் தலை­மையில் ஆவா குழு உரு­வாக்­கப்­பட்­டது.

விநோதன் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்றார். ஆயினும் அந்தக் குழு­வுக்கு 8 தலை­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­களைத் தேடி பொலிஸார் வலை விரித்­தி­ருக்­கின்­றார்கள்.

ஆவா குழுவில் 62 பேர் இணைந்­தி­ருப்­ப­தாகத் தகவல் கிடைத்­தி­ருக்­கின்­றது. இவர்­களில் 38 பேர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஆறு பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். மிகுதி 32 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பிரேசில் நாட்டில் இருந்து இந்­தியா வழி­யாகக் கொண்டு வரப்­பட்ட முத­லா­வது வாள் ஒன்றை மாதி­ரி­யாகக் கொண்டு உள்­ளூரில் வாள்கள் தயா­ரிக்­கப்­பட்டு, அவற்றைப் பயன்­ப­டுத்தி கொள்­ளைகள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை அச்­சு­றுத்தல், அவர்கள் மீது தாக்­குதல் நடத்­துதல், வர்த்­த­கர்­க­ளிடம் கப்பம் வசூ­லித்தல் போன்ற குற்றச் செயல்­களில் இந்தக் குழு­வினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் விவ­ரித்­துள்ளார்.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில்தான் ஆவா குழு­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட 11 பேர் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்த ஆவா குழுவின் தலை­வ­ராக முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­ன­ரான சன்னா என்­ப­வருள்ளார் என பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்கின்றனர். ஆயினும் சன்­னா­வுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பிற்கும் எந்­த­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை என அவ­ரு­டைய குடும்­பத்­தினர் மறுத்­து­ரைத்­தி­ருக்­கின்­றனர்.

புலம்­பெயர் நாடு­களில் உள்ள தமி­ழர்கள் ஆவா குழு­வி­ன­ருக்கு நிதி­யு­தவி செய்து வரு­வ­தா­கவும், இந்தக் குழு­வினர் அராங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்­சரும் பிரதி பாது­காப்பு அமைச்­சரும் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் ஆவா குழு­வி­ன­ருக்கு சம்­பந்தம் இல்லை என தெரி­வித்­தி­ருக்கும் நிலையில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் ஒருவர் ஆவா குழு­வுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்றார் என்ற தகவல் யாழ். குடா­நாட்டில் ஏற்­பட்­டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்­கு­லை­வா­னது மற்­று­மொரு பரி­மா­ணத்தை நோக்­கி­யி­ருக்­கின்­றதோ என்ற அச்ச நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்தக் குழப்ப நிலைமை ஒரு புற­மி­ருக்க, ஆவா குழு­வினர் என்ற சந்­தே­கத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­துவும், கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் அவர்கள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­துவும் சட்ட முரண்­பாட்டு நிலை­மை­களைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் சட்­டச்­சிக்­கல்கள் மிகுந்த கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின்

கீழ் கைது செய்­ய­லாமா?

நாட்டில் பயங்­க­ர­வா­தமும், பயங்­க­ர­வாதச் செயற்­பாடும் இல்­லாத நிலையில் ஒரு நபரை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­வ­தென்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய நட­வ­டிக்­கை­யாகத் தெரி­ய­வில்லை.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் குற்றம் புரிந்தார் என்று ஒருவர் கைது செய்­யப்­ப­டும்­போது, அவர் அந்தச் சட்­டத்தின் கீழ் என்ன குற்றம் புரிந்தார் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். ஏனெனில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் என்­பது சாதா­ரண சட்­ட­மல்ல. அது விசே­ட­மாகக் கொண்டு வரப்­பட்டு விதி­வி­லக்­கான நிலை­மை­க­ளுக்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சட்­ட­மாகும்.

பொலிஸார் மற்றும் முப்­ப­டை­களைச் சேர்ந்­த­வர்கள் மீதான தாக்­குதல், நாட்டின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண முத­ல­மைச்­சர்கள், மாகாண அமைச்­சர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் மற்றும் நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள் போன்­ற­வர்கள் மீதான தாக்­கு­தல்கள், அத்­த­கைய தாக்­கு­த­லுக்­கான சதி முயற்­சிகள் போன்ற செயற்­பா­டுகள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக, பயங்­க­ர­வாதக் குற்றச் செயல்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் தேசிய பாது­காப்­புக்குக் குந்­தகம் விளை­விக்­கத்­தக்க தேசத் துரோகச் செயற்­பா­டு­களும் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளா­கின்­றன.

எனவே, இது போன்ற பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­தவும், அவ்­வா­றா­ன­வர்­களைக் கைது செய்து, தண்­டிப்­ப­தற்­கு­மா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் உரு­வா­கி­யது.

ஆயுத மோதல்கள் கார­ண­மாக தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருந்த ஓர் இக்­கட்­டான சூழ்­நி­லையில் ஒரு தற்­கா­லிக ஏற்­பா­டாக இந்தச் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டது.

சிவி­லியன் ஒரு­வரை மற்­று­மொரு சிவி­லியன் கொலை செய்தால், வாளினால் வெட்­டினால் அல்­லது வாளைக் காட்டி அச்­சு­றுத்தி ஒரு சிவி­லி­ய­னு­டைய வீட்டில் கொள்­ளை­ய­டித்தால் அல்­லது கப்பம் வசூ­லித்தல் பொன்ற குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களைக் கைது செய்­வ­தற்கும், அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் சாதா­ரண சட்­டங்கள் நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்தச் சட்­டங்­களைப் பயன்­ப­டுத்தி இத்­த­கைய குற்­றங்­களைப் புரிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக ஏற்­க­னவே நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன.

குற்றச் செயல்­களில் மிக மோச­மான நட­வ­டிக்­கை­யாக சிவி­லியன் ஒரு­வரை இன்­னு­மொ­ருவர் கொலை செய்­தால்­கூட, அந்தக் கொலைக் குற்­றத்­திற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

இந்த நிலையில் சாதா­ரண குற்றச் செயல்­க­ளுக்குப் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­த­லாமா என்ற கேள்வி சட்ட ரீதி­யான விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றது.

நாட்டில் இப்­போது யுத்­த­மோ­தல்கள் இல்லை. யுத்தச் சூழ்­நி­லையும் கிடை­யாது. இந்த நிலையில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தாக இருந்தால், அதற்கு சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வலு­வான கார­ணங்கள் இருக்க வேண்டும். யாழ் குடா­நாட்டில் சட்டச் சீர்­கு­லைவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் நடை­மு­றையில் உள்ள சாதா­ரண குற்­ற­வியல் நட­வடிக்கை கோவையின் கீழ் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய குற்றச் செயல்­களே அங்கு அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன.

சாதா­ரண குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­வது என்­பதை சட்ட ரீதி­யாக நியா­யப்­ப­டுத்­து­வது இல­கு­வான காரி­ய­மல்ல. .

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற குற்றச் செயல்­களில் குறிப்­பாக சுன்­னாகம் பகு­தியில் சிவில் உடையில் காணப்­பட்ட புல­னாய்வு பொலிஸார் இரண்டு பேர் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுச் சம்­ப­வத்தை வேண்­டு­மானால் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டாக சித்­தி­ரிப்­ப­தற்கு முற்­ப­டலாம்.

இருப்­பினும் சம்­பவ நேரத்தில் வாள்­வெட்­டுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் பொலி­ஸாரின் சீரு­டையில் இல்­லாத கார­ணத்­தினால் அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் பயங்­க­ர­வாதக் குற்­றத்தைச் செய்ய வேண்டும் என்ற தீர்­மா­னத்­தோடு குற்றம் புரிந்­தார்­களா என்­பது சட்ட ரீதி­யான விவா­தத்­திற்கு உள்­ளாக நேரிடும்.

யாழ். குடா­நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீர்­செய்­வ­தற்­காக பொலிஸார் முன்­னெ­டுத்­தி­ருந்த நட­வ­டிக்­கை­யொன்­றின்­போது, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூடு கார­ண­மாக படு­கொலை செய்­யப்­பட்­டனர். அந்தச் சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தற்கு பொலிஸார் மேற்­கொண்ட முயற்­சி­யை­ய­டுத்து, அந்தச் சம்­பவம் விசு­வ­ரூ­ப­மெ­டுத்­தது.

பொலி­ஸாரின் நட­வ­டிக்கை குறித்து கடும் கண்­ட­னங்கள் எழுந்­தி­ருந்த சூழ­லி­லேயே ஆவா குழு­வி­னரைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயன்­படுத்­தப்­பட்டு ஆட்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்கின்றனர்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் இடம்­பெறும் வரையில் ஆவா குழு­வினர் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற வாள்­வெட்டு குழு­வி­ன­ருக்கு எதி­ராக சாதா­ரண சட்ட விதி­களின் கீழேயே பொலிஸார் கைது­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அந்­தந்தப் பிர­தேச நீதி­மன்­றங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்தி வழக்­கு­களைத் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இத்­த­கைய வழக்­கு­களில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)

வடக்கில் ...

(4ஆம் பக்கத் தொடர்ச்சி)

அத்­த­கைய தண்­ட­னை­களை எதிர்த்து செய்­யப்­பட்ட மேன்­மு­றை­யீ­டு­களும் மேல் நீதி­மன்­றத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதே வர­லா­றாக உள்­ளது.

இவ்­வாறு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலை­மையில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் மர­ணங்­க­ளை­ய­டுத்து, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பிர­யோ­கிக்­கின்ற நிலை மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது இப்­போது பல்­வேறு சட்டச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வடக்கில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை தெற்கு நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­த­லாமா?

ஒரு­வரைக் கைது செய்தால், கைது செய்­யப்­பட்ட இடத்­திற்கு அண்­மையில் உள்ள தகுதி வாய்ந்த நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்த வேண்டும் என்று இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் அடிப்­படை மனித உரிமை பிரிவில் மிகத் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்புச் சட்­டமே, நாட்டின் உயர்ந்த, முதன்­மை­யான சட்­ட­மாகும்.

அதே­நேரம் கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் விரை­வாக நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­ய­வேண்டும் என சர்­வ­தேச மனித உரி­மைகள் அர­சியல் உரி­மைகள் மாநாட்டு சட்­டங்கள் கூறு­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் அடிப்­படை உரிமை தொடர்­பான சட்டப் பிரிவை மீறினால், ஒரு மாத காலத்தில், அதனால் பாதிக்­கப்­பட்ட நபர் அல்­லது அவ­ரு­டைய உற­வுகள் அல்­லது அவர் சார்­பான சட்­டத்­த­ர­ணிகள் உச்ச நீதி­மன்­றத்தில் அடிப்­படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

அத்­துடன், இத்­த­கைய அடிப்­படை மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் 3 மாத­கா­லத்தில் மாகாண மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யலாம் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­தினால் சட்­ட­மாக்­கப்­பட்ட சர்­வ­தேச சிவில் அர­சியல் உரிமை மாநாட்டுச் சட்டம் கூறு­கின்­றது.

யுத்­த­மோ­தல்கள் இடம்­பெற்ற காலத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம், விசேட பாது­காப்புச் சட்டம் போன்ற சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை மனித உரிமைச் சட்ட விதி­க­ளுக்கு முர­ணான வகையில் இந்தச் சட்;டங்கள் அப்­போ­தைய சூழலில் தேவையை கருத்திற் கொண்டு ஆக்­கப்­பட்­டி­ருந்­தன.

சாதா­ரண சட்­டத்தின் படி கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் 24 மணி­நே­ரத்தில் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட வேண்டும்.

இந்த சட்­டப்­பி­ரி­வு­களில் இன்­னு­மொரு பிரி­வின்­படி கைது செய்­யப்­பட்­டவர் இல்­லா­விட்­டா­லும்­கூட, கைது செய்­யப்­பட்­டவர் தொடர்­பான குற்ற அறிக்­கைகள் 24 மணி­நே­ரத்தில் நீதவான் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும்.

ஒரு குற்றச்செயல் இடம்­பெற்­றி­ருந்தால், அதில் சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டா­த­போ­திலும், அந்தக் குற்றச் செயல் தொடர்பில் நீதவான் நீதி­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். குற்ற நட­வடி கோவையில் இந்த விட­யங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த சாதா­ரண சட்ட நட­வ­டிக்­கைகள் யுத்த காலத்தில் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்த நெருக்­க­டி­களைச் சமா­ளிப்­ப­தற்கும் ஆயு­த­மேந்திப் போரா­டி­ய­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­மா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் உள்­ளிட்ட விசேட சட்­டங்கள் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டன.

ஒரு பயங்­க­ர­வாத சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வரை, பிணை­யின்றி 18 மாதங்கள் தடுத்து வைப்­ப­தற்கு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழி­வ­குத்­தி­ருக்­கின்­றது. இந்தத் தடுப்­புக்­காவல் உத்­த­ரவை பாது­காப்பு அமைச்சர் வழங்க வேண்டும் என்­பதும் அந்தச் சட்­டத்தின் விதி­யாகும்.

அதுவும் மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு தடவை இந்த தடுப்புக் காவல் உத்தரவு பாதுகாப்பு அமைச்சரினால் புதுப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட வேண்டும். அந்த வகையிலேயே கைது செய்யப்பட்ட ஒருவரை 18 மாதங்களுக்குத் தடுத்து வைத்திருக்கலாம் என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவு கூறுகின்றது.

அதேவேளை, கைது செய்யப்படுகின்ற ஒருவரை பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம், 3 மாதத்திற்கு ஒரு தடவை தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்து, அவரை ஒரு வருடத்திற்குத் தடுத்து வைத்திருக்க முடியும் என்று, இப்போது செயலற்றுள்ள அவசரகாலச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இந்தச் சட்டவிதிகள் மிகத் தீவிரமாக நடைமுறiயில் கைக்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தச் சட்ட விதி­களைப் பயன்­ப­டுத்தி, அக்­கா­லப்­ப­கு­தியில் யாழ்ப்­பாணம், வவு­னியா, மன்னார் உள்­ளிட்ட வட­மா­கா­ணத்தின் பல இடங்­க­ளிலும், அதே­போன்று, கிழக்கு மாகாணப் பிர­தே­சங்­க­ளிலும் ஆட்கள் கைது செய்­யப்­பட்டு, பாது­காப்பைக் காரணம் காட்டி அவர்கள், கொழும்பு மற்றும் அநு­ரா­த­புரம் போன்ற வெளி மாவட்­டங்­களில் உள்ள நீதி­மன்­றங்­களில் முன்­னி­லை­யாக்­கப்­பட்­டார்கள். அன்­றைய யுத்தச் சூழல் அதற்கு ஏற்­பு­டை­ய­தாக இருந்­தது.

இந்த நட­வ­டிக்கை அர­சியல் அமைப்­புச்­சட்­டத்தை மீறி­ய­தாக இருந்த போதிலும், நாட்டின் பாது­கப்பு மிக முக்­கியம் என்ற கருத்தின் அடிப்­ப­டையில், இதனை எவரும் பெரி­தாக அலட்டிக் கொள்­ள­வில்லை.

ஆனால் இப்­போது நிலைமை அவ்­வா­றில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்­டது.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஆயு­த­மேந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­களின் இரா­ணுவ ரீதி­யான செயற்­பா­டுகள் இல்­லாமற் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிலையில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை நடை­மு­றைப்­படுத்­து­வதும், அந்தச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை கொழும்பு நீதவான் நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு சென்று அங்கு முன்­னி­லைப்­ப­டுத்­து­வதும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய செயற்­பா­டு­க­ளல்ல.

இது சட்ட விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ள­துடன், இதற்கு தகுதி வாய்ந்­த­வர்­க­ளினால் தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஜனநாயக உரிமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்ட தேவை தலையெடுத்திருக்கின்றது.

தொடரும்.........

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-25#page-4

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் கைதான ஆவா குழு சந்தேக நபர்களை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியது எந்தவகையில் நியாயம்?

Untitled-1-63f49ac3195944bd037180ff9af28d60fed70b48.jpg

 

(நேற்றைய தொடர்ச்சி)

யுத்தம் முடி­வுற்று ஏழரை வரு­டங்கள் கடந்து­ விட்­டன. முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், அடிப்­படை உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நம்பத் தகுந்த வகையில் எப்­படி நடத்­து­வது என்று நல்­லாட்சி அர­சாங்கம் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

அதற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வது தொடர்பில் இப்­போது கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது, சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் இந்தப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று ஐ.நா.வும் சர்­வ­தே­சமும், கோரி­யி­ருக்­கின்­றன. அந்தக் கோரிக்கை இன்னும் வலு­வி­ழந்து போக­வில்லை.  

ஆயினும் சர்­வ­தேச பங்­க­ளிப்போ, சர்­வ­தேச நீதி­ப­தி­களோ அல்­லது வழக்குத் தொடு­னர்­க­ளையோ நாங்கள் அனு­ம­திக்கப் போவ­தில்லை. ஐ.நா. முன்­வைத்த கலப்பு விசா­ரணை பொறி­மு­றை­யையும் ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை. உள்­ளக விசா­ர­ணை­களே நடத்­தப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­யாகக் கூறி­யி­ருக்­கின்­றது.

எனினும், ஐ.நா. மனித உரிமை மன்­றத்­திலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் இலங்­கையில் இன்னும் மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. முன்­னேற்றம் காண­வில்லை என்று தொடர்ச்­சி­யாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஆயினும் இலங்­கையில் மனித உரிமை நிலை­மைகள் முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கின்­றது என்று அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. ஐ.நா. மன்­றத்தில் இருந்து மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உய­ர­தி­கா­ரிகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ளும்­போது, நல்­லாட்சி அர­சாங்கம் ஓடி­யோடி உப­ச­ரிக்­கின்­றது.

அவர்­களை எல்லா இடங்­க­ளுக்கும் - விசே­ட­மாக இறு­தி­யாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வட­ப­கு­தியின் பல இடங்­க­ளுக்கும் அழைத்துச் சென்று நிலை­மை­களை நீங்­களே பாருங்கள். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் கேட்டுப் பாருங்கள் என்ற ரீதியில் மிகவும் பவ்­வி­ய­மாக நடந்து கொள்­கின்­றது.

இந்த நிலை­மை­யில்தான், யாழ்ப்­பா­ணத்தில் தலை­வி­ரித்­தாடத் தொடங்­கிய ஆவா குழு­வி­னரை அடக்­கு­வ­தற்­காக இரவு நேர கண்­கா­ணிப்புச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸாரின் தாக்­கு­தலில் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் கொல்­லப்­பட்­டார்கள். ஆவா குழுவைச் சேர்ந்­த­வர்­களை பயங்­க­ர­வாதப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்யத் தொடங்­கி­னார்கள்.

இத­னை­ய­டுத்து, ஆவா குழு பற்­றிய பிரச்­சி­னைகள் தேசிய மட்ட விவ­கா­ர­மாக விசு­வ­ரூ­ப­ மெ­டுத்­தது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள நீதி­மன்­றங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டாமல், கொழும்பு நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யா­னது, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­திற்கும் சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்­க­ளுக்கும் விரோ­த­மா­னது என்று யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஊர்­கா­வற்­றுறை பகு­திக்குத் தேர்தல் பிர­சா­ரத்­திற்­காகச் சென்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு அடை­யாளம் தெரி­யா­த­வர்கள் நடத்­திய தாக்­கு­தலில் இருவர் கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக யாழ். மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது, நீதி­பதி இளஞ்­செ­ழியன் இதனைக் கூறி­யி­ருக்­கின்றார்.

வட­மா­கா­ணத்தில் யாழ்ப்­பா­ணத்­திலும் மற்றும் இடங்­க­ளிலும் இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை கொழும்பு நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தனால், இங்கு நீதி­மன்­றங்கள் இல்­லையா என்ற எண்ணம் மக்கள் மனங்­களில் எழுந்­தி­ருக்­கின்­றது. இது குறித்து அவர்கள் மத்­தியில் கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

ஆவா குழுவைச் சேர்ந்­த­வர்கள் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 70 வீத­மா­ன­வர்கள் யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட பல நீதி­மன்­றங்­க­ளினால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் தொடர்­பான வழக்­குகள் அந்த நீதி­மன்­றங்­களில் நிலு­வையில் இருக்­கின்ற நிலையில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் வெளி­மா­வட்ட நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­ப­டு­வது இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் மட்­டு­மல்­லாமல், சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டத்­தையும், சர்­வ­தேச அர­சியல் சிவில் சட்­டத்­தையும் மீறிய செயற்­பா­டாகும் என அவர் தெரிவித்திருக்­கின்றார்.  

இலங்­கையின் அர­சியல் சட்­டத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள், மனித உரி­மைகள் தொடர்­பான விட­யங்­களை அனை­வரும் கடைப்­பிடிக்க வேண்­டி­யது அவ­சியம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். நீதி­பதி இளஞ்­செ­ழியன் சுட்­டிக்­காட்­டி­யுள்ள விட­யங்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. நீதித்­துறை சார்ந்­த­வர்கள் அனை­வரும் இந்த விட­யத்தில் மிகவும் கவ­ன­மா­கவும் விழிப்­பா­கவும் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்­தி­லும்­கூட, வட­மா­கா­ணத்தில் வவு­னியா, மன்னார் போன்ற மாவட்­டங்­களில் நீதி­மன்­றங்கள் இயங்­கின. மக்கள் நீதித்­து­றையின் மீது நம்­பிக்கை வைத்து நீதி கோரி, அந்த நீதி­மன்­றங்­களை நாடி­யி­ருந்­தார்கள்.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட யுத்த நிறுத்த ஒப்­பந்தம் நான்கு வரு­டங்கள் நீடித்­தி­ருந்த காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­களில் இருந்­த­வர்­களும் கூட, இந்த நீதி­மன்­றங்­க­ளுக்குச் சென்றால் தங்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்­பிக்கை வைத்து செயற்­பட்­டி­ருந்­தார்கள்.

சில வழக்­கு­களில் விடு­தலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளும்­கூட நம்­பிக்கை வைத்து இந்த நீதி­மன்­றங்­க­ளுக்குச் சென்­றி­ருந்த தக­வலும் உண்டு. நெருக்­க­டிகள் மிகுந்த நேரங்­க­ளிலும் இந்த நீதி­மன்­றங்கள் தம்­மு­டைய பொறுப்­புக்­களை உணர்ந்து உரிய முறையில் செயற்­பட்­டி­ருந்­தன. அதே­போன்று யுத்தம் முடி­வுக்கு வந்து இடம் பெயர்ந்­த­வர்கள் மீள்­கு­டி­யேறத் தொடங்­கி­யதும், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களின் நீதி­மன்­றங்கள் மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யி­ருந்­தன.  

அந்த நீதி­மன்­றங்கள் உள்­ள­டங்­க­லாக வட­மா­கா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் உள்ள நீதி­மன்­றங்கள் யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பல வரு­டங்­க­ளாக நல்ல முறையில் செயற்­பட்டு வரு­கின்­றன. பழைய நீதி­மன்­றங்­க­ளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள மேல் நீதி­மன்­றங்­களும் யாழ்ப்­பாணம், வவு­னியா, மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் சீராகச் செயற்­பட்டு வரு­கின்­றன.  

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான் இந்த நீதி­மன்­றங்­களைப் புறந்­தள்­ளிய வகையில் ஆவா குழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் தாங்கள் கைது செய்த சந்­தேக நபர்­களை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

முறை­யற்ற வகையில் இந்தக் கைது நட­வ­டிக்கை இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­வித்து அதனைக் கண்­டித்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் மனித உரி­மைகள் ஆணைக்­குழுவின் யாழ். பிராந்­திய அலு­வ­ல­கத்தில் முறை­யிட்­டி­ருக்­கின்­றனர். இந்த முறைப்­பா­டுகள் குறித்து விசா­ரணை நடத்­திய மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினர் இந்தக் கைதுகள் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழேயே இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.  

அது­மட்­டு­மல்­லாமல், கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்­பான உண்மை நிலை­மையை அறியும் வரையில் அவர்­களைப் பயங்­க­ர­வா­திகள் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனித உரி­மைகள் ஆணைக்­குழு விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில் கேட்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் ஆவா குழு­வினர் என்ற அடை­யா­ளத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள போதிலும், அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் இலங்­கையில் இடம்­பெ­ற­வில்லை என்று ஐ.நா.வின் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான குழுவின் அமர்­வு­களில் இலங்கை அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

இலங்­கையில் யுத்த மோதல்கள் இல்­லாத நிலை­யிலும் சித்­தி­ர­வ­தைகள், பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்கள், வெள்­ளைவான் கடத்தல் தொடர்ந்து இடம்­பெ­று­வ­தாகச் சுட்­டிக்­காட்டி, அந்தச் செயற்­பா­டுகள் தொடர்பில் ஐ.நா.வின் சித்­தி­ர­வ­தை­க­ளு­க்கு எதி­ரான குழு­வினர் இலங்கை அதி­கா­ரி­களை, கேள்­வி­க­ளினால் துளைத்­தெ­டுத்­தி­ருந்­தனர்.

அவர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு உரி­ய­வ­கையில் பதி­ல­ளிக்க முடி­யாமல் இலங்கை அதி­கா­ரிகள் தடு­மாறி திகைப்­ப­டைந்­தி­ருந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. ஆயினும் சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரி­யவின் தலை­மையில் இந்த ஐ.நா.வின் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான குழு அமர்­வு­களில் கலந்து கொண்­டி­ருந்த இலங்கைக் குழு­வினர், இலங்­கையில் எவரும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­ட­வு­மில்லை. தடுத்து வைக்­கப்­ப­ட­வு­மில்லை என மறுத்­து­ரைத்­தி­ருக்­கின்­றனர்  

அதே­வேளை, அவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர். இது, உள்­நாட்டில் உள்ள நிலை­மை­க­ளுக்கு முர­ணா­ன­தாகும். இதன் மூலம் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற விட­யத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் உள்­நாட்டில் ஒரு முகத்­தையும், ஐ.நா. மன்­றத்­திலும் சர்வதேச மட்­டத்­திலும் முரண்­பா­டான வேறு ஒரு முகத்­தையும் காட்­டு­வது வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருக்­கின்­றது.  

வட­மா­கா­ணத்தில் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களை அந்த மாகா­ணத்­திற்கு வெளியே 400 கிலோ மீற்றர் தொலை­வுக்கு அப்பால் கொழும்பு நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­துவ­தற்­கு­ரிய விதி­வி­லக்­கான நிலை­மைகள் இப்­போது கிடை­யாது. வட­மா­காண நீதி­மன்­றங்கள் பர­ப­ரப்­பா­கவும் துடிப்­போடும் செயற்­ப­டு­கின்ற நிலையில் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் தங்­களால் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை இவ்­வாறு தொலை தூரத்தில் உள்ள நீதி­மன்­றத்­திற்கு என்ன கார­ணத்­திற்­காக, எந்த சட்­ட­வி­தி­களின் கீழ் கொண்டு செல்­கின்­றார்கள் என்­பது தெரி­ய­ வில்லை.  

இந்த நட­வ­டிக்­கை­யா­னது பொது­மக்கள் மத்­தியில் பலத்த சந்­தே­கத்­தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்தி வரு­வ­தையே காண முடி­கின்­றது. முன்னர் - யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் இவ்­வாறு தான் செய்தோம். அதே­போன்­றுதான் இப்­போதும் செய்­கின்றோம் என்று அவர்கள் நொண்­டிச்­சாட்டு கூற முடியாது.  ஏனெனில் அன்­றைய நிலை வேறு – இன்­றைய நிலைமை வேறு. அன்று இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான போர்ச்­சூழல் காணப்­பட்­டது.  

ஆனால், இன்று நாட்டில் யுத்த மோதல்கள் இல்­லாத கார­ணத்­தினால், அதே நட­வ­டிக்கை மனித உரி­மை­க­ளையும், அடிப்­படை உரி­மை­க­ளையும் அப்­பட்­ட­மாக மீறு­கின்ற செயற்­பாடாக மாறி­யி­ருக்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது. இன்­றைய சூழ்­நி­லையில் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வரை சாதா­ரண சட்­டத்தின் கீழேயா - அல்­லது பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழேயா - எந்தச் சட்­டத்தின் கீழ் விசா­ரணை செய்ய வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்­கின்ற பொறுப்பு நீதி­மன்­றங்­க­ளி­டமே காணப்­ப­டு­கின்­றது.  

ஏனெனில் சட்­டத்­திற்குப் பொருள் கோடல் செய்யும் வல்­லமை நீதி­மன்­றங்­க­ளுக்கே உள்­ளது. அந்த வல்­ல­மையை பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரோ அல்­லது பொலிஸாரோ தமது கைகளில் எடுக்க முடி­யாது. எடுக்­கவும் கூடாது. முன்­னைய அர­சாங்­கத்தின் மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று கோரப்­ப­டு­கின்ற இன்­றைய சூழலில், உள்­நாட்டின் நீதிக் கட்­ட­மைப்­பு­க­ளுக்­குள்­ளேயே அந்த விசா­ர­ணை­களை நடத்த முடியும் என்று அர­சாங்கம் பிடி­வா­த­மாகக் கூறி வரு­கின்­றது. 

இந்த நிலையில் நீதித்­துறைச் செயற்­பா­டு­களில் அர­சி­ய­ல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள விதி­மு­றை­க­ளுக்கு அமை­வாகச் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவற்றை மீறிச் செயற்­ப­டு­வது, யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எந்த வகை­யிலும் உதவப் போவ­தில்லை.  

மறு­பு­றத்தில் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சட்­டங்­களை மீறு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதி­மன்­றத்தை நாடி, தமக்­கு­ரிய நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சட்­ட­வி­திகள் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இருந்த போதிலும், சட்­ட­வி­தி­களின் துணை­யோடு தமது உரி­மை­களை நிலை நாட்­டிக்­கொள்­கின்ற செயற்­பா­டுகள் மக்கள் மத்­தியில் காணப்­ப­ட­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

சட்­டங்­களில் பொது­மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்ள வாய்ப்­புக்கள், வச­திகள் என்­ப­வற்றை சாதா­ரண மக்கள் மட்­டு­மல்ல படித்­த­வர்­க­ளும்­கூட அறிந்­தி­ருப்­ப­தில்லை. சட்ட வல்­லு­ந­ர்­களே இது­பற்­றிய அறி­வையும் தெளி­வையும் பெற்­றி­ருக்­கின்­றார்கள். எனவே யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மனித உரிமை மீறல்கள், அடிப்­படை உரிமை மீறல்கள், தவ­றான வழி­களில் சட்­டங்­களைக் கையாள்­கின்ற போக்கு என்­ப­வற்றைக் கண்­ட­றியும் திறன்­களும் சட்ட வல்­லு­நர்­க­ளி­டமே காணப்­ப­டு­கின்­றது.  

ஆகவே, சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்­பான விட­யங்­களில் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் உள்ள மக்­களை வழி­ந­டத்த வேண்­டி­யதும், மக்­க­ளுக்கு விழிப்­பூட்ட வேண்­டி­யதும் சட்ட வல்­லு­நர்­க­ளி­னதும், சட்­டத்­துறை சார்ந்­த­வர்­க­ளி­னதும் பொறுப்­பாகும்.

அர­சியல் தலை­வர்­க­ளாக உள்ள மக்கள் பிர­தி­நிதி­க­ளுக்கும் இந்தப் பொறுப்பு உள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது. இவர்­க­ளு­டைய வழி­காட்­டலின் மூலம் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதி­மன்­றங்­க­ளிடம் நீதி கேட்டுச் செல்லும் போதுதான் சட்­டங்­க­ளுக்­கு­ரிய சரி­யான பொருள் கோடலை நீதி­மன்­றங்கள் வெளிப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும்.  

வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டா­மலும், வழக்கு விசா­ர­ணைகள் இல்­லா­மலும் நீதி­மன்­றங்கள் வெறு­மனே சட்­டங்­க­ளுக்குப் பொருள் கோடல் செய்ய முடி­யாது. ஆவா குழு தொடர்பில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தேகநபர்கள் கைது செய்­யப்­பட்ட நட­வ­டிக்­கையை ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சரை மாகாண முத­ல­மைச்­ச­ராகக் கொண்­டுள்ள வட­மா­காண சபையோ அல்­லது அந்த சபையின் உறுப்­பி­னர்­களோ கண்­டு­கொள்­ளா­தி­ருப்­பது வியப்­பாக உள்­ளது.  

வட­மா­காண சபையில் சட்­டத்­த­ர­ணி­களும் இருக்­கின்­றார்கள். சட்ட அறி­வு­டை­ய­வர்­க ளும் இல்­லா­ம­லில்லை. எல்­லா­வற்­றுக்கும் மேலாக நீதித்­து­றையில் பழுத்த அனு­ப­வங்­களைக் கொண்ட முன் னாள் நீதி­ய­ரசர் ஒரு­வரே வட­மா­காண முத­ல­மைச்­ச­ராகப் பணி­யாற்றி வரு­கின்றார்.  

இந்த நிலையில் சாதா­ரண சட்­டங்­களின் கீழ் தீர்வு காணப்­பட வேண்­டிய குற்றச் செயல்­க­ளுக்கும் சமூக விரோதச் செயற்­பா­டு­க­ளுக்கும் எதி­ராக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போக்­கிற்கு எதி­ராகக் குரல் கொடுக்­காமல் இருப்­பது துர­திர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

வட­மா­காண சபை மட்­டு­மல்ல. சட்­டத்­துறை அறிவும் அனு­ப­வத்­தையும் கொண்­டுள்ள பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும், நீண்டகால பாரா­ளு­மன்ற அனு­ப­வங்களைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த விட­யத்தில் கவனம் செலுத்­தாமல் இருப்­பது ஏன் என்று தெரி­ய­வில்லை.

சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நிலை­மைகள் குறித்து சாதா­ரண சட்­டங்கள் பற்­றிய அடிப்­படை அறி­வையும் தெளி­வையும் கொண்­டுள்ள மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டங்­களை உரு­வாக்­கு­கின்ற சட்­ட­வாக்க சபை­யா­கிய பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வர­வேண்டும்.

அது தொடர்பில் அங்கு விவா­தங்கள் நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­த­கைய விவா­தங்­களின் ஊடா­கவே, சரி­யான முறையில் சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா இல்­லையா என்­பதும், சட்­டங்கள் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால், அடுத்­த­தாக என்ன செய்ய வேண்டும் என்­பதைத் தெரிந்து அதற்­கேற்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடி­ய­தா­கவும் இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

வட­மா­கா­ணத்தில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீராக நிலை­நாட்­டு­வதில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அணு­கு­மு­றை­க­ளையும், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­கின்ற போக்­கையும் மக்கள் பிர­தி­நி­திகள் கண்டும் காணாத போக்­குமே காணப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய போக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மா­னது வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களின் மூலம் மக் கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கத்­தானே மேற் ­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்று இன்­றைய நிலை­மையை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­பு­டை­ய­தாகக் கரு­தக்­கூ­டாது.

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீராகப் பேணுவ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட­மானால் என்ன சாதா­ரண குற்­ற­வியல் நட­வ­டிக்­கை­யானால் என்ன ஏதா­வது ஒரு சட்­டத்தைக் கொண்டு காரி­யத்தை முடித்தால் போதும் என்ற மனப்­பாங்கு எதிர்­கால நிலை­ மை­க­ளுக்கு நல்­ல­தல்ல.

வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரு­மான ராஜித சேன­ாரத்­ன­விடம், ஆவா குழு தொடர்­பான சந்­தேக நபர்­களைக் கைது செய்­வ­தற்­காகப் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயன்­ப­டுத்­து­வது கு­றித்து விமர்­சனம் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­ கின்­றதே என செய்­தி­யா­ளர்கள் வின­வி­னா ர்கள்.

அதற்குப் பதி­ல­ளித்த அமைச்சர் ராஜித சேனா­ரத்ன எந்தச் சட்­ட­மானால் என்ன மக்­க­ளு­டைய அமை­தி­யான வாழ்க்­கைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஆவா குழு­வி­ன ரைக் கைதுசெய்து அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பை இல்­லாமல் செய்­வ­தற்கு எந்தச் சட்­டத்­தை­யாவது பயன்­படுத்தி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது முக்­கியம். மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற பாதிப்பை இல்­லாமல் செய்­வ­து­தானே முக்­கியம் என தெரி­வித்­துள்ளார்.

சமூக விரோதச் செயற்­பா­டு­க­ளையும் சாதா­ரண குற்றச் செயல்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களைக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கென நாட்டில் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் அந்த சட்­டங்­களைப் பயன்­ப­டுத்­தாமல் அர­சியல் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் விசேட தேவையின் நிமித்தம் உரு­வாக்­கப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தென்­பதை புத்­தி­சா­லித்­த­ன­மான நட­வ­டிக்­கை­யாகக் கொள்ள முடி­யாது.

மிக மோச­மான விதி­களைக் கொண்­டுள்ள கார­ணத்­தி­னா­லேயே, அந்தச் சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பர­வ­லாக உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இத்­த­கைய நிலையில், சாதா­ரண குற்­ற­வியல் சட்­டங்­களின் மூலம் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய குற்றச் செயல்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக, இல்­லாமல் செய்ய வேண்­டிய பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­கின்ற போக்கை உற்­சா­கப்­ப­டுத்­து­வதும் ஊக்­கு­விப்­பதும் நன்­மை­ய­ளிக்­கத்­தக்க நட­வ­டிக்­கை­யாக மாட்­டாது.

தமிழ் மக்கள் வாழ்­கின்ற பிர­தே­சம்­தானே அங்கு உரு­வா­கி­யுள்ள சமூகவிரோ­தக்­ குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டுள்ள வாள் வெட்டுக் குழு­வா­கிய ஆவா குழுவை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு எந்தச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்­தி­னாலும் பர­வா­யில்லை என்ற மெத்­த­ன­மான போக்கை தென்­ப­கு­தியில் உள்ள அமைச்­சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொள்ளக் கூடாது.

வடபகுதியில் உருவாகியுள்ள பயங்கர வாதத் தடைச்சட்டத்தை சாதாரண சட்டத் தைப் போன்று பயன்படுத்துகின்ற போக்கு பின்னாளில் மோசமான விளைவுகளுக்கு நாட்டில் உள்ள அனைவருமே முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும்.

ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பின்னர் படிப்படியாக முழு தமிழ் சமூகத்தையும் மோசமாகப் பாதிக்கின்ற நிலைமைக்கு இட்டுச் சென்றதை இலகுவில் மறந்துவிட முடியாது. தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்ட இதே சட்டம் சிங்கள மக்களையும் விட்டு வைக்கவில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நினைவில் கொள்வது நல்லது.  

அதுமட்டுமல்லாமல் சிறுபான்மை இன மக்களின் அமோகமான ஆதரவின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சிக் காலத்தில் நிலவிய மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்களை விசாரணை செய்து பொறுப்புக்கூற வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.

அத்­த­கைய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தின் உரிமை மீறல்­க­ளுக்கு பொறு ப்புக்கூறு­கின்ற அதேவேளை, தன்­னு­டைய ஆட்­சியில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­றாமல் பார்த்துக் கொள்­வது மிக முக்­கி­ய­ மாகும்.

அந்தப் பொறுப்பைக் கைந­ழுவ விட்டால், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மனித உரிமை மீறல்­க­ளுக்கும், அடிப்­படை உரிமை மீறல்­க­ளுக்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பின்னால் ஆட்­சி­ய­மைக்­கின்ற புதிய அர­சாங் கம் பொறுப்புக் கூறு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­பட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு ஆளாக நேரி­டலாம்.

அது மட்­டு­மல்­லாமல், எதேச்­ச­தி­காரப் போக்­கிற்கு முடி­வு­கட்டி நாட்டில் நல்­லாட்சி நடத்தப் போவ­தாகக் கூறி பத­விக்கு வந்த ஆட்­சி­ய­ாளர்­களும் ஒரே குட்­டையில் ஊறிய மட்­டை­தானே என்ற வகையில் நடந்து கொண்­டார்­களே என்ற பழிச் சொல்­லுக்கு உள்­ளா­கு­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

எனவே, நல்­லாட்­சியின் கீழ் சமூ­கங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்­தையும் ஐக்­கி­யத்­தையும் சமா­தா­னத்­தையும் உரு­வாக்­கு­வ­தாகக் கங்­க­ணம்­கட்டிச் செயற்­ப­டு­கின்ற நல் ­லாட்சி அர­சாங்கம் பயங்­க­ர­வாதத் தடைச்­ சட்­டத்தைக் கைவிட்டு, மனித உரி­மை­க­ளையும், அடிப்­படை உரி­மை­க­ளையும் முறையாகப் பேணி, உரிய சட்ட ஒழுங்குக ளைப் பயன்படுத்தி, சட்டத்தையும் ஒழுங் கையும் சீராக நிலைநாட்டுவதற்கு முன்வர வேண்டும். 

பி.மாணிக்­க­வா­சகம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.