Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

Featured Replies

நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
 
 
நல்லூரில் மாவீரர்களுக்கு  சுடரேற்றி  அஞ்சலி
தமிழின விடிவுக்காய் தம்மை ஆகுதியாக்கிகொண்ட  மாவீரர்களுக்கு   யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள திலீபன் நினைவுத் தூபியில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
வாடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்மற்றும் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 
 
மிகவும் அமைதியான முறையில்  இந் நிகழ்வு இடம்பெற்றது. 
1480222891_unnamed.jpg
 
1480222915_unnamed%20%281%29.jpg
 
 
15218392_806650622807355_1268141740_n.jpg
 
1480222993_unnamed%20%282%29.jpg

http://onlineuthayan.com/news/20715

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

img_2648
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

img_2653img_2656img_2663

http://globaltamilnews.net/archives/8311

  • தொடங்கியவர்
திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி
 
27-11-2016 10:43 AM
Comments - 0       Views - 24

article_1480223952-IMG_2667.jpg

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத்தூபியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (27) காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

article_1480223962-IMG_2657.jpg

article_1480223970-IMG_2668.jpg

article_1480224004-IMG_2665.jpg

article_1480224015-IMG_2669.jpg

- See more at: http://www.tamilmirror.lk/186977/த-ல-பன-ன-ந-ன-வ-த-த-ப-ய-ல-அஞ-சல-#sthash.LPGyxxhM.dpuf
  • தொடங்கியவர்

கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு  அஞ்சலி  (படங்கள்)

 

 

 

 ரி.விரூஷன்

கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்  கே.சிவாஜலிங்கம்  குறித்த சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

15175473_787955238022514_1611586260_n.jp

15216174_787953941355977_271111484_o.jpg

15224572_787953878022650_699179480_o.jpg

 

15233691_787953951355976_1528162027_o.jp

15271181_787953881355983_487338982_o.jpg

http://www.virakesari.lk/article/13915

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் மாவீரர்களுக்கு தீபமேற்றி மலரஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெரிய பரிசு கிடைக்கும்போது மைத்திரிக்கு இனவாதம் சுருண்டு போய் படுத்திடும் .

  • தொடங்கியவர்
மாவீரர்களை நினைவு கூர மறுப்பவர்கள் விடுதலையை பற்றி பேச அருகதை அற்றவர்கள்-சிவாஜிலிங்கம்
 
 
மாவீரர்களை நினைவு கூர மறுப்பவர்கள் விடுதலையை பற்றி பேச  அருகதை  அற்றவர்கள்-சிவாஜிலிங்கம்
தென்னிலங்கையில் ஜே.வி.பி யினர் தங்களுடைய கார்த்திகை வீரர்கள் தினத்தினை கொண்டாடமுடியுமாக இருந்தால் விடுத லைப்புலிகளை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கு  இல்லையா என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபி முன்  நடைபெற்ற மாவீரர் தின சுடரேற்றல்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறுதெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 
 
மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்று அது தமிழ்மக்களின் எழுச்சிப்போராட்டமாக உரிமைகளின் கோரிக்கைகளாக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு எங்களது ஜனநாயகவழிப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து 1969இல் தமிழீழத்திற்கு ஒரு ஆயு தப்போராட்டமே சரி என எண்ணப்பட்டது. விடுதலை இயக்கங்கள் ஆயுதப்போரட்டத்தை கையிலெடுத்தன. இதனால் பல்வேறான இயக்கங்கள்  எழுந்தன. அவ்வாறான  பல்வேறு இயக்கங்களை 50000இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் இறந்திருக்கிறார்கள்.
 
ஆகவே இந்த நவம்பர் 27 மாவீரர் தினத்திலே நாங்கள்  இறந்துபோன அத்தனை மாவீரர்களுக்கும்  பொதுமக்களுக்கும்  அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். இன்றைய வீரவணக்கத்தை செலுத்துவதற்கும் சகோதரப்படுகொலையில் கொல்லப்பட்ட அத்தனை மறவர்களுக்காகவும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக  ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட  அப்பாவி பொது மக்களையும் இந்த மாவீரர் தினத்திலே நினைவு கூருகிறோம்.
 
எந்த சக்திகள் அடக்குமுறைகளை பிரயோகித்தாலும் எங்களுடைய மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த  அஞ்சலியை செலுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் தமிழினம் தன்னைத்தானே ஆளக்கூடிய தீர்மானத்தினை எடுக்கவேண்டும்.  நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும்.போரில் நடைபெற்ற குற்றங்களுக்கு சர்வதேச நீதிவேண்டும் என்ற கோரிக்கையிலே நாங்கள் உறுதியாக நிற்க வேண்டும். மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலிசெலுத்த மறுப்போமாக இருந்தால் நாங்கள் விடுதலையை கோருவதற்கு தகுதியற்றவர்களாவோம்.
 
எங்களுக்குரிய தீர்வு கிடைத்த பின்னரும் நாங்கள் ஆண்டாண்டு காலமாக மாவீரர்களை நினைவுகூருவோம். இன்றைய தினம் தமிழர் தாயகங்களில் மாவீரர்களை எந்தெந்த இடங்களில் நினைவுகூரமுடியுமோ அங்கெல்லாம் நினைவுகூரவேண்டும். தமிழ் இனம் தலை வணங்காது தலைசாய்க்காது. நாங்கள் அற்ப  எலும்புக்கூட்டிற்கு சமமான  அரைகுறை  தீர்வுகளை முற்றாக நிராக ரிப்போம். நிரந்தர அரசியல் தீர்வுகிடைக்கும் வரை எங்களுடைய ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும். ஆயுதப்போராட்டமே நசுக்கப்பட்டதே ஒழிய எங்களுடைய தேசிய விடுதலைக்கான போராட்டத்தினை ஒருவராலும்  நசுக்கமுடியாது.
 
மாவீரர்களுக்கு  அஞ்சலிசெலுத்த மறுப்பவர்களாக இருந்தால் இன விடுதலையை பற்றி கதைக்க  அருகதை அற்றவர்களாகி விடு வோம். எனவே எமது இலங்கை நோக்கி  தொடர்ந்து பயணிப்போம். தென்னிலங்கையில் ஜே.வி.பி யினர் தங்களுடைய கார்த்தி கை வீரர்கள் தினத்தினை கொண்டாடமுடியுமாக இருந்தால்  விடுதலைப்புலிகளை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கு இல்லையா? நாம் மாவீரர்களை நினைவுகூராவிடின் விடுதலையை பற்றி பேச  அருகதை  அற்றவர்கள் எனவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/20735

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.