Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும்

Featured Replies

ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும்

sambandhan11-aacd884c0d1b5a54847e7128393f30c4f96fcdae.jpg

 

2017ஆம்­ ஆண்­டுக்­கா­ன  வ­ர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்­தின்­ இ­ரண்­டாம் ­வா­சிப்­பு­ மீ­தா­ன­ ஐந்தாம்  நாள்­ வி­வா­தத்­தில் ­த­மிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் த­லை­வ­ரும்­ எ­திர்க்­கட்­சித்­ த­லை­வ­ரும்­ தி­ரு­கோ­ண­ம­லை மாவட்ட எம்.பி.யுமா­ன  ­இ­ரா. ­சம்­பந்­தன்­  ஆற்­றி­ய­ உரை

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் பிர­தம மந்­தி­ரியும் கொள்கை திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­தாங்கும் ஐக்­கி­ய­தே­சிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சிகள் இணைந்து நடத்தும் தற்­போ­தைய தேசிய கூட்­ட­ர­சாங்­கத்­தினால் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவை இவ்­விரு அர­சியல் கட்­சி­க­ளி­னதும் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

வெறு­மனே பொரு­ளா­தார ரீதி­யாக மாத்­தி­ர­மன்றி அர­சியல் மற்றும் சமூக ரீதி­யா­கவும் இந்த நாட்­டிற்கு புதி­யதோர் எதிர்­கா­லத்தை வழங்­கு­வதே இவ்­விரு அர­சியல் கட்­சி­க­ளி­னதும் குறிக்­கோ­ளாகும். அதுவே உண்­மையில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இந்த நாட்டின் தீர்ப்­பா­க­வி­ருந்­தது. முன்­னைய ஆட்­சியும் அதன் தலை­மைத்­து­வமும் இவ்­விரு தேர்­தல்­க­ளிலும் முக்­கிய பங்­கு­பற்­று­னர்­க­ளாக இருந்­தன. இரண்டு தேர்­தல்­க­ளிலும் அவர்கள் இந்த நாட்டை ஆளு­வ­தற்­கான மேலு­மொரு மக்கள் ஆணையை நாடி நின்­றனர். அவ்­வாறு அவர்கள் நாடிய ஆணையை வழங்க மக்கள் மறுத்­து­விட்­டனர். தமது இறைமையைப் பிர­யோ­கிக்கும் செயற்­பாட்டில் மக்கள் அர­சி­ய­ல­மைப்­பினால் விதித்­து­ரைக்­கப்­பட்­ட­வா­றான ஒரு காலப் பகு­திக்கு இந்த நாட்டை ஆளு­வ­தற்­கான தமது ஆணையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் பிர­தம மந்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் வழங்­கி­யுள்­ளனர். இது, அர­சி­ய­ல­மைப்­பிற்­க­மை­ய­வன்றி வேறு எவ்­வ­கை­யிலும் அகற்ற முடி­யாத மக்­களின் இறை­மை­மிக்க தீர்ப்­பாகும். உண்­மை­யான ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்­க­மைய இந்த நாடு ஆளப்­ப­ட­வேண்டும் என்­ப­தையே இந்த நாட்டில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் விரும்­பு­கின்­றனர். இந்த விழு­மி­யங்கள் புனி­த­மா­னவை. எனவே அவை போற்றிப் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும்.

இது தொடர்­பாக, ஐக்­கிய நாடு­க­ளினால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதும் நாம் இணங்­கி­யி­ருப்­ப­து­மான சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­ட­னத்தை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்­பு­கிறேன். சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­ட­னத்தின் 21 ஆம் உறுப்­பு­ரையை நான் மேற்கோள் காட்­டு­கிறேன்.

1. தமது நாட்டின் அர­சாங்­கத்தில் நேர­டி­யா­கவோ அல்­லது சுதந்­தி­ர­மாகத் தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நி­தி­க­ளி­னூ­ட­கவோ பங்­கேற்­ப­தற்­கான உரிமை ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உண்டு.

2. தமது நாட்டில் பொதுச் சேவையைப் பெற்றுக் கொள்­வதில் சம வாய்ப்­பிற்­கான உரிமை ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உண்டு்

துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்­கையில் குறிப்­பாக தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அந்த விதி பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை உப பந்தி (3) குறிப்­பி­டு­வ­தா­வது, மேற்கோள்:  மக்­களின் விருப்­பமே அர­சாங்க அதி­கா­ரத்தின் அடிப்­ப­டை­யாதல் வேண்டும்.இந்த விருப்பம் இர­க­சிய வாக்­குகள் அல்­லது அதை­யொத்த சுதந்­தி­ர­மான வாக்­க­ளிப்பு நடை­மு­றைகள் வாயி­லா­னதும் சர்­வ­ஜன மற்றும் சம வாக்­கு­ரிமை வாயி­லா­ன­து­மான காலா­கால மற்றும் நேர்­மை­யான தேர்­தல்­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். 

இதைத்தான் ஒரு நாட்டின் ஆட்சி தொடர்­பான மக்­களின் விருப்பம் மற்றும் மக்­களின் சம்­மதம் தொடர்­பாக சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­டனம் உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றது. உரிய காலத்தில் நேர்­மை­யான தேர்தல்­களில் வெளிப்­ப­டுத்­தப்­படும் மக்­களின் விருப்­பம்தான் அர­சாங்க அதி­கா­ரத்­தின்­அ­டிப்­ப­டை­யாதல் வேண்டும். அது தெளிவா­கவே உள்­ளது.

 எமது அர­சி­ய­ல­மைப்­பிற்­க­மைய சட்­ட­பூர்­வ­மாக ஏற்­க­னவே முடி­வு­றுத்­தப்­பட்­டா­லொ­ழிய, பாரா­ளு­மன்­றத்­தி­னதும் ஜனா­தி­ப­தி­யி­னதும் பதவிக் காலம் ஆறு வரு­ட­மாகும். ஆறு வருட காலத்­திற்­கென மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­போதும், பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு தான் உறு­து­ணை­யா­க­வி­ருந்த பத்­தொன்­ப­தா­வது திருத்­த­தின்கீழ், ஜனா­தி­பதி பதவிக் காலத்தை ஐந்து வரு­ட­மாகக் குறைத்தார். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட பத்­தொன்­ப­தா­வது திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் ஐந்து வரு­ட­மாகக் குறைக்­கப்­பட்­டது.  

தனது வரவு–செலவுத் திட்ட உரை­யின் ­போது நிதி அமைச்சர் இந்த அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் சமூக தொலை­நோக்கை விப­ரித்தார். அவ­ரது உரையின் 2 ஆம் பந்­தியை நான் வாசிக்­கின்றேன். மேற்­கோள்: நீடித்து நிலைக்கும் சமா­தானம், சுதந்­திரம் மற்றும் தேசிய ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்­றுக்­காக ஜன­நா­யகம், அடிப்­படை உரி­மைகள்,நல்­லி­ணக்கம் மற்றும் அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான உன்­ன­த­மான முயற்­சியில் நாம் தொடர்ந்து முன்­னே­றுவோம்.

 அடிப்­ப­டையில் இந்த நாடு ஒரு­வ­ரை­யொ­ருவர் மதித்தல் மற்றும் உரை­யாடல் ஆகி­ய­வற்­றின்­மீது கட்­டி­யெ­ழுப்­பப்­படும் நீடித்து நிலைக்கும் சமா­தானம் எனும் தொலை­நோக்­கினால் வழி நடத்­தப்­ப­டு­கி­றது. இந்த நடை­மு­றைக்கு உர­மூட்­டு­வ­தற்கு சமூக, அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சர்­வ­தேச உற­வுகள் உள்­ளிட்ட அனைத்து முக்­கிய துறை­க­ளையும் உள்­ள­டக்­கிய இலட்­சி­ய­மிக்க நிகழ்ச்சி நிர­லொன்றை நாம் வகுத்­துள்ளோம். இந்த நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான சீர்­தி­ருத்­தங்கள், சட்­டத்தின் ஆட்­சி­யை­மீள நிலை நிறுத்தி அதனை ஸ்திரப்­ப­டுத்தல் மற்றும் நீதித்­துறைச் சுதந்­திரம் ஆகி­ய­வற்றில் அதிக கவனம் செலுத்தும் 

எனது மரி­யா­தை­மிக்க கருத்தில், அர­சாங்­கத்தின் தொலை­நோக்­கா­னது நிதி அமைச்­ச­ரினால் அவ­ரது வரவு–செலவுத் திட்ட உரை­யின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு கூற்றில் மிகவும் தெளிவாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நான் முன்னர் குறிப்­பிட்­ட­வாறு அர­சாங்கம் இந்த நாட்­டுக்கு புதிய அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சமூகத் தொலை­நோக்­கொன்றை வழங்க பற்­று­றுதி பூண்­டுள்­ளது. நாம் சுதந்­திரம் பெற்ற காலத்­தி­லி­ருந்து இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த இரு பிர­தான அர­சியல் கட்­சி­களின் சம்­ம­தத்­தோடு புதி­யதோர் அர­சி­ய­ல­மைப்பை வகுப்­ப­தற்கு நாம் இப்­போது முதற் தட­வை­யாக முனை­கிறோம். ஒன்றில் ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிதான் நாம் சுதந்­திரம் பெற்ற காலத்­தி­லி­ருந்து இந்த நாட்டை ஆண்டு வந்­துள்­ளன. ஏனைய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் இந்த நாட்டு மக்­க­ளி­னதும் சம்­ம­தத்­தோடு இந்த நாட்­டிற்கு புதி­யதோர் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக இவ்­விரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செய­லாற்­று­வ­தற்­கான கூட்டு முயற்­சி­யொன்று தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.

இது முன்னர் நடை­பெற்­றி­ராத ஒரு புதிய நிகழ்வு. ஒரே, பிரி­வு­ப­டாத மற்றும் பிரிக்க முடி­யாத ஒரு நாடு என்ற வரைச்­சட்­ட­கத்­தினுள் இயன்­ற­வரை அதி­கூ­டிய கருத்­தொ­ரு­மைப்­பாட்டின் அடிப்­ப­டையில் அது அமைந்­தி­ருக்கும். நாம் இதற்கு முன்னர் மூன்று அர­சி­ய­ல­மைப்­பு­களைக் கொண்­டி­ருக்­கிறோம். முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு 1947 ஆம் ஆண்டில் சுதந்­தி­ரத்­தின்­போது எமது கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டது. இரண்­டா­வது அர­சி­ய­ல­மைப்பு 1972 இல் மற்ற பிர­தான அர­சியல் கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னது அல்­லது தமிழ் மக்­களைக் கணி­ச­மா­ன­ளவு பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அர­சியல் கட்­சி­யி­னது சம்­ம­த­மின்­றியே ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் அதன் இட­து­சாரி பங்­காளிக் கட்­சிகள் ஆகி­ய­வற்­றினால் உரு­வாக்­கப்­பட்­டது.

மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்பு 1978ஆம் ஆண்டு மற்றப் பிர­தான அர­சியல் கட்­சி­யான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அல்லது தமிழ் மக்­களை கணி­ச­மா­ன­ளவு பிர­தி­நி­தித்­து­வப்­படுத்­திய கட்­சியின் சம்­ம­த­மின்­றியே ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் வகுத்து நிறை­வேற்­றப்­பட்­டது. வேறு வகையில் கூறு­வ­தாயின், 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பும் ஒரு கட்சி சார்­பா­ன­வை­யாகும் என்­ப­தோடு, நாட்­டி­லுள்ள மற்றப் பிர­தான கட்­சியின் சம்­ம­த­மின்றி, அதிலும் குறிப்­பாக அந்தக் கால­கட்­டங்­களில் இந்த நாட்டில் தமிழ் மக்­களை கணி­சமா­ன­ளவு பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சியின் சம்­மதம் அல்­லது கருத்­தொ­ரு­மைப்­பாடு இன்றி ஒரு சில கூட்­டணிப் பங்­காளிக் கட்­சி­களின் துணை­யோடு ஒரு தனிக் கட்­சி­யினால் வகுக்­கப்­பட்­ட­வை­யாகும்.

முதல் தட­வை­யாக, ஒரே, பிரி­ப­டாத மற்றும் பிரிக்­க­மு­டி­யாத நாடு என்ற வரைச் சட்­ட­கத்­தினுள் பரந்த கருத்­தொ­ரு­மைப்­பாடு என்ற அடிப்­ப­டையில் வகுக்­கப்­படும் ஓர் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாகும் என்றும் இந்த அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளி­னது விருப்­பத்­தையும் பிர­தி­ப­லிக்கும் என்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­ட­னத்தின் உறுப்­புரை 21 இல் குறிப்­பி­டப்­பட்­ட­வா­றான அர­சாங்க அதி­கா­ரத்தின் அடிப்­ப­டை­யாக அமையும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த நாட்டின் வர­லாற்றில் முதற் தட­வை­யாக, குறிப்­பாக இந்த நாட்டின் வடக்­கு, கிழக்கில் வாழும் மக்­களைக் கணி­ச­மான அளவு பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சி அதா­வது, நான் சார்ந்­துள்ள தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அர­சி­ய­ல­மைப்பை வகுக்கும் நடை­மு­றையில் ஒரு தரப்­பாக அமை­ய­வி­ருக்­கி­றது. இது, நிதி அமைச்­சரின் வரவு – செலவுத் திட்ட உரையின் பகுதி 1 இன் 2 ஆம் பந்­தியில் விரித்­து­ரைக்­கப்­பட்ட இந்­நாட்­டிற்­கான எதிர்­கால தொலை­நோக்கு அடை­யப்­பெ­று­வ­தற்கு உதவும்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்­பாக நான் ஓரு சில வார்த்­தைகள் கூறுவேன். சமூக உள்­ளீர்த்தல் மூலம் வளர்ச்­சியை வேக­மாக்­குதல் என்­பதே வரவு செலவுத் திட்­டத்தின் தொனிப் பொரு­ளாக அமைந்­துள்­ளது. இது ஒரு கடி­ன­மான பணி­யென நான் கரு­து­கிறேன். கழுத்­த­ளவு கடனில் நீங்கள் ஆழ்ந்­தி­ருக்­கும்­போது வளர்ச்­சி­யென்­பது கடி­ன­மா­னது. நிதி­ய­மைச்­சரால் மேற்­கொள்­ளப்­பட்ட கூற்­றின்­படி, எமது கடன் இருப்பு ரூபா 9 ட்றில்­லி­ய­னுக்குச் சற்று அதி­க­மாகும். எனவே, எமது வரு­மா­னத்தின் பெரும் பகுதி, அதா­வது எமது வரு­மா­னத்தின் ஏறத்­­தாழ 90 சத­வீ­த­மென நான் நினைக்­கின்றேன், கடனைத் திருப்பிச் செலுத்­து­வ­தற்கே செல­வா­கி­றது.

எவ்­வாறு இத்­த­கைய கடன்கள் உண்­டா­கின என்­பதை அறிந்­து­கொள்­வது நாட்­டிற்கு உகந்­த­தாகும்: அர­சுக்குச் சொந்­த­மான பொறுப்பு முயற்­சி­களில் ஏற்­பட்ட நட்­டங்கள் வெள்ளை யானை­க­ளாக மாறி­ய­மையும், தனிப்­பட்ட புக­ழுக்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யு­மான பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் என்று அழைக்­கப்­பட்­ட­வற்­றின்­மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெரும் செல­வி­னங்கள், மிகக் கூடிய செல­வி­லான உட்­கட்­ட­மைப்பு,அபி­வி­ருத்தி எப்­போதும் உண்­மை­யான செல­வை­விட இரு மடங்கைக் கொண்­டி­ருந்­தமை, ஊழல், டாம்­பீகம்,விரயம், இவைதான் இந்த நாட்­டிற்கு ஏற்­பட்ட பெரும் கடன் பளு­விற்கு பங்­க­ளிப்புச் செய்த கார­ணி­க­ளாகும்.

நாடு அதன் அள­வுக்­க­தி­கமான கடனைத் திருப்பிச் செலுத்­த­வேண்­டி­யி­ருக்­கும்­போது வளர்ச்­சியும் அபி­வி­ருத்­தியும் எளி­தா­ன­வை­யல்ல என்­பதை அறிந்து கொள்­வது நாட்­டுக்கு நல்­லது. கல்வி, சுகா­தாரம், விவ­சாயம் முத­லிய முக்­கிய துறை­க­ளுக்கு தவிர்க்­க­மு­டி­யாத­வாறு கிடைக்­க­வேண்­டி­ய­தை­விட குறை­வா­கவே கிடைக்கும்.

வளர்ச்­சியைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­திடம் இலட்­சி­யம்­மிக்க நிகழ்ச்சித் திட்­டங்கள் உள்­ளன. பல நாடு­க­ளுடன் - இந்­தியா, சீனா, சிங்­கப்பூர், தென்­கொ­ரியா மற்றும் பல நாடு­க­ளுடன் - சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களைச் செய்­து­கொள்­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மி­டு­கி­றது. பெரு­ம­ளவு வெளிநாட்டு நேரடி முத­லீ­டு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்­றது. கடந்த காலத்தை விட மிகவும் வேறு­பட்ட வகையில் இன்று உலகம் இலங்­கை­யோடு நட்­பு­ற­வுடன் உள்­ளது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். எனவே, எமது எதிர்­பார்ப்­புகள் நிறை­வேறக்­கூடும். அது நிக­ழு­மாயின், நாம் உற்­பத்தி செய்து பாரிய சந்­தை­களைக் கொண்ட நாடு­க­ளுக்கும் ஏனைய நாடு­க­ளுக்­கும்­கூட எமது உற்­பத்திப் பொருட்­களை ஏற்­று­மதி செய்ய முடியும். எனவே, நாம் எமது ஏற்­று­ம­தி­களை மேம்­ப­டுத்­து­வதில் முக்­கிய கவனம் செலுத்த வேண்டும். தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை போன்ற பாரம்­ப­ரிய ஏற்­று­ம­திகள் வீழ்ச்­சி­யுற்­றுள்­ளன. நாம் எமது முன்­னைய செய­லாற்­று­கையை மீள நிறுவி மேம்­ப­டுத்த வேண்டும்.

எமது ஆடைத்­தொழில் சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளது. பல்­வே­று­பட்ட துறை­களில் ஏற்­று­ம­திக்­கான புதிய சந்தை வாய்ப்­பு­களை நாம் தேடி ஆராய வேண்டும். அத்­த­கைய சந்­தை­களை இனங்­காண்­பதில் எமது தூத­ர­கங்கள் பயன்­மிக்க வகி­பா­க­மொன்றை ஆற்ற முடியும். நமக்கு அண்­மை­யி­லுள்ள சந்­தை­களில் நாம் பிர­வே­சிக்க வேண்டும். இந்­தி­யா­வுக்கு பல்­வேறு வகை­யான பருப்பு வகைகள் மிகவும் தேவைப்­ப­டு­கி­ற­தென்­ப­தையும் அத்­தகைய பருப்பு வகை­களை நாம் பெரு­ம­ளவில் உற்­பத்தி செய்து அவற்றை இந்­தி­யா­விற்கு ஏற்­று­மதி செய்ய முடி­யு­மென்றும் நான் முன்னர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறேன். அது உண்­மை­யி­லேயே ஒரு பெரிய சந்­தை­யாக இருக்க முடியும்.

நாம் கடலால் சூழப்­பட்­டுள்ள ஒரு தீவாக இருப்­பதன் பெறு­ம­தியை நாம் போற்­று­வ­தாகத் தோன்­ற­வில்லை. எமது கடல் வளங்­க­ளி­லி­ருந்து முழு­மை­யாக நாம் பயன் பெறு­வ­தாகத் தோன்­ற­வில்லை. அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு உரிய முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்டால், இவ்­வளம் எமது ஏற்­று­ம­தி­களுள் மிகப் பெரி­ய­தொன்­றாக விளங்கும். எமது நாட்டின் பல பகு­தி­களில் பல வாவிகள் உள்­ளன. கிழக்கு மாகா­ணத்தில், அதிலும் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பில் பல வாவிகள் உள்­ளன. இவ் வளங்­க­ளி­லி­ருந்து நாம் அறவே பயன் பெறு­வ­தாகத் தோன்­ற­வில்லை. இதுவும் இத­னுடன் சேர்ந்து கடல் மீன்­பி­டியும் மிகக் கவ­ன­மான ஆய்வும் ஏற்­று­ம­தியை நோக்­காகக் கொண்ட செயல்­திட்­டத்தின் உரு­வாக்­கமும் தேவைப்­படும் ஒரு துறை­யாகும். இந்தத் துறையில் ஏற்­று­ம­திக்­கான அதிக வாய்ப்பு இருக்­கி­ற­தென்று நான் கரு­து­கிறேன்.

அபி­வி­ருத்­தி­ய­டைந்த ஏனைய நாடு­க­ளி­லி­ருந்து நாம் படிப்­பினை பெற்­றுக்­கொள்ள வேண்டும். உதா­ர­ணத்­திற்கு சிங்­கப்­பூரை எடுத்­துக்­கொள்வோம். சிங்­கப்பூர் சுதந்­திரம் பெற்­றதன் பின்னர், லீ குவான் யு இலங்­கையைப் போன்று சிங்­கப்­பூரை அபி­வி­ருத்தி செய்ய தான் விரும்­பு­வ­தாகக் கூறினார். அந்தக் கால­கட்­டத்தில் இலங்­கையில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த அபி­வி­ருத்தி குறித்து அவர் அவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யுற்­றி­ருந்தார். சிங்­கப்பூர் எங்கு சென்­றி­ருக்­கி­றது, நாங்கள் இன்று எங்கே இருக்­கிறோம்? எமது தலா வரு­மானம் சிங்­கப்­பூரின் தலா வரு­மா­னத்தின் பத்­தி­லொரு பங்­கிற்­கா­வது சம­மா­ன­தென நான் கரு­த­வில்லை.

ஜேர்­மனி யுத்­தத்தால் சிதை­வுற்ற ஒரு நாடு. உண்­மையில் ஜேர்­மனி நான்கு பிரி­வு­களாகப் பிரிக்­கப்­பட்­டது. ஒரு பகுதி ஐக்­கிய அமெரிக்கா­வினால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. ஒரு பகுதி ஐக்­கிய இராச்­சி­யத்­தி­னாலும் ஒரு பகுதி பிரான்­சி­னாலும் இன்­னொரு பகுதி ரஷ்யாவி­னாலும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. நாடு நான்கு பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டது.

(தொடரும்) 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-28#page-4

  • தொடங்கியவர்

ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும்

sambandhan11-56e5fd2d4fbfc0245cc53913f27360c7cd3a9547.jpg

 

சிறிது காலத்தின் பின்னர் ஐக்­கிய அமெரிக்கா, ஐக்­கிய இராச்­சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த மூன்று பகு­திகள் ஒன்­றாக இணைந்­தன. ரஷ்யாவி­னதும் மேற்கு நாடு­க­ளி­னதும் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பகுதி நீண்ட காலம் தனி­யாக இருந்­தது. கிழக்கு ஜேர்­ம­னி­யையும் மேற்கு ஜேர்­ம­னி­யையும் பிரித்து நின்ற,ஒன்­றரை தசாப்­தத்­திற்கு முன்­னர்தான் இடிக்­கப்­பட்ட ஜேர்மன் சுவர் அங்கே இருந்­தது. இன்று அவர்கள் எவ்­வ­ளவு விரி­வான முன்­னேற்றம் அடைந்­துள்­ளனர்?

ஜப்பான், போரினால் அழித்­தொ­ழிக்­கப்­பட்டது. யுத்­தத்தின் பின்னர் ஜப்பான் அபி­விருத்­தி­யுற்­றது. இன்று இந்த நாடுகள் உலகில் பொரு­ளா­தா­ரத்தில் முன்னேற்றமடைந்து விளங்­கு­கின்­றன. இவை­யெல்லாம் அற்­பு­தங்கள் அல்ல. அவை வெற்­றியின் கதைகள். கொள்­கை­க­ளுக்கும் விழு­மி­யங்­க­ளுக்­கு­மான பற்­று­றுதி, அறி­வார்ந்த திட்­ட­மிடல், உறு­தி­யான அமு­லாக்கல் முன்­னேற்­றத்தின் மீதும் வெற்­றியின் மீது­மான பற்­று­றுதி.

அதுதான் இந்த நாடு­களில் வெற்றி ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம். அதுதான் உயர்ந்த நாட்டுப் பற்று. நாட்டுப் பற்று என்­பது, அர­சியல் ரீதி­யாக இருப்­புக்­கொள்­வ­தற்­காக நாட்­டினுள் ஒதுக்கி வைத்தல், பிரிவு மற்றும் பதற்றம் ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­பதும் அந்த நடை­முறையில் அதி கூடிய தனிப்­பட்ட நன்­மை­களை அடை­வதும் அல்ல. இந்த நாடு முற்­றாக மாற்­றப்­பட்டு ஒரு வேறு­பட்ட நாடாக ஆக்­கப்­பட முடியும். பற்­று­று­தியும் நேர்­மையும் கடும் உழைப்­புமே இதற்குத் தேவை.

எமது சேவைகள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். முத­லா­வ­தாக, அரச சேவை மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். அரச சேவை அதன் வழியை இழந்து விட்­ட­தாகத் தோன்­று­கி­றது. அதி­கூ­டிய வினைத்­தி­ற­னோடு செய­லாற்­று­வ­தற்­கான விருப்பம் அற்­றுப்­போ­ன­தாகத் தோன்­று­கி­றது. இது, அர­சி­யல்­ம­யப்­ப­டுத்தல் மற்றும் அரச சேவை வெவ்­வேறு முகாம்­க­ளாக பிரிக்­கப்­பட்­டி­ருத்தல் ஆகி­ய­வற்­றி­னாலா என்று எனக்குத் தெரிய­வில்லை. அர­சியல் தலை­யீடு இருந்து வரு­கி­றது என்­பது உண்­மை­யாகும். நாட்டின் மீதான கட­மை­யு­ணர்­வொன்றை அவர்­க­ளுக்கு ஊட்­டு­வ­தன்­ மூலம் அரச சேவைக்கு மீள வலு­வூட்­டு­வ­தற்­கான தேவை­யொன்று உள்­ளது.

சில பரி­கார நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அது வெறு­மனே வெளிப் பகட்­டா­ன­தாக மட்டும் இருத்­த­லா­காது. ஆழ­மான சுய ஆய்வு ஒன்றும் நாட்­டுக்கு சேவை­யாற்­று­வ­தற்­காக அதனை மீள உயிர்ப்­பூட்­டக்­கூ­டிய ஒரு நிகழ்ச்சித் திட்­டத்­தினை வகுத்­தலும் தேவை. அர­சாங்கச் செயற்­பாட்டில் அரச சேவை ஒரு முக்­கி­ய­மா­னதும் பெறு­மதி மிக்­க­து­மான கரு­வி­யாகும். நாம் இதனை மேலும் மோச­ம­டைய இட­ம­ளிப்­பது எமக்கு தீங்­கையே ஏற்­ப­டுத்தும். பொலிஸ் சேவைக்கும் இது பொருந்தும். சட்­டத்தின் ஆட்­சியை அனுஷ்ட்­டிப்­ப­தற்கு பற்­று­றுதி கொண்ட ஒரு சேவை­யாக அது மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். நாட்­டிற்­கான அவர்­க­ளது கடமை பற்­றியும் சட்­டத்தின் ஆட்­சியைப் பேணிப் பாது­காப்­ப­தற்­கான அவர்­க­ளது கடப்­பாடு பற்­றியும் அவர்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்­கான ஒரு தேவை இங்கு மீண்டும் உள்­ளது. இங்கும் அர­சியல் மயப்­ப­டுத்தல் ஒரு நோயா­கவே இருந்து வரு­கி­றது. நாடு ஒரு புதிய திசையில் செல்­ல­வேண்­டு­மாயின், சுதந்­தி­ர­மாக இயங்­க­வேண்­டிய நிறு­வ­னங்­களில் தலை­யிட்டு அந்தப் புதிய திசை­யி­லான முன்­னேற்­றத்தைத் தாம் தடுத்­த­லா­காது என்­பதை அர­சி­யல்­வா­தி­களும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.

கல்­வியும் சுகா­தா­ரமும் எந்­த­வொரு நாட்­டிலும் மிக முக்­கி­ய­மான இரு துறை­க­ளாகும். இல­வசக் கல்­வியும் இல­வச சுகா­தார சேவையும் நாங்கள் வழங்­கு­கிறோம் என்று வெறு­மனே கூறு­வது போதாது. அது நிச்­ச­ய­மாக பாராட்­டப்­ப­டு­கி­றது. எனினும், நாம் தர­மான கல்­வியும் தர­மான சுகா­தா­ரமும் வழங்­க­வேண்டும். இந்தத் துறை­க­ளி­லான சேவைகள் மோச­மா­னவை என்று நான் ஒரு கணமும் கூற வர­வில்லை.

எனினும், குறிப்­பாக கிராமப் புறங்­களில் இந்தத் துறை­களில் முன்­னேற்­றத்­திற்­கான தேவை நிச்­சயம் உண்டு. நிதி வழங்­கல்­களின் போதாத்­தன்மை, போதாத ஒதுக்­கீ­டு­க­ளுக்­கான கார­ண­மாக இருக்­கலாம். ஆனால், நாடு உண்­மை­யான முன்­னேற்­றத்தை நோக்கி நகர வேண்­டு­மாயின், கல்வி மற்றும் சுகா­த­ார சேவைகள் எவ்­வ­ளவு சிறப்­பாக இருக்­க­வேண்­டுமோ, அவ்­வ­ளவு சிறப்­பாக இருக்­க­வேண்டும். இந்த நாடு செல்ல உத்­தே­சிக்கும் புதிய திசையில் இவற்றை மிக முக்­கி­ய­மான அம்­சங்­க­ளாக அர­சாங்கம் மனதில் கொள்­ள­வேண்டும்.

எமது பாட­சா­லை­களில் கற்­பித்தல் தரம் குறை­வ­டைந்­துள்­ளதா என்­ப­தையும் நாம் ஆரா­ய­ வேண்டும். மேலும் தேர்ச்­சி­பெற்­றதும் அர்ப்­ப­ணிப்­பு­ணர்வு கொண்­ட­து­மான ஒரு ஆசி­ரியர் சேவையை நாம் கொண்­டி­ருக்­கக்­கூ­டி­ய­தாக ஆசி­ரியர் சேவையின் ஆட்­சேர்ப்பு, பயிற்சி மற்றும் வேத­னங்கள் ஆகி­யன தொடர்­பான தற்­போ­தைய நடை­மு­றை­களை மீள் கட்­ட­மைக்க வேண்­டுமா என்­ப­தையும் ஆரா­ய­வேண்டும். யார்­மீதும் குற்றம் சுமத்த நான் ஒரு கணமும் முனை­ய­வில்லை. எனினும், கற்­பித்­தலின் தரம் குன்­றி­யுள்­ளதா என்ற வினா என் மனதில் எப்­போதும் எழு­கின்­றது. எமது ஆசி­ரி­யர்­களை எமக்கு நினை­வி­ருக்­கி­றது. எமது பள்ளிக் காலம் எமக்கு நினை­வி­ருக்­கி­றது. எமது ஆசி­ரி­யர்கள் எத்­துணை அர்ப்­ப­ணி­ப்பு­டை­ய­வர்க­ளாகத் திகழ்ந்­தார்கள் என்­பதும் எமக்கு நினை­வி­ருக்­கி­றது. அவர்­க­ளி­ட­மி­ருந்து நாம் எவ்­வ­ளவு பயன் பெற்­றுக்­கொண்டோம். எமது நாடு எதிர்­காலத்தில் சிறப்­புற செய­லாற்­ற­வேண்­டு­மாயின், எமது மாண­வர்­க­ளுக்கு மிகச் சிறந்த கல்வி வழங்­கப்­ப­ட­வேண்டும். எதிர்­கால சந்­த­தி­யி­னர்­ மீ­தான முத­லீ­டுதான் எதிர்­கா­லத்­திற்­கென நாம் மேற்­கொள்­ளக்­கூ­டிய மிகச் சிறந்த முத­லீ­டாகும். அந்த விட­யத்தை நாம் ஒரு யதார்த்­த­மான முறையில் கையா­ள­வேண்டும். எமது மாண­வர்­களின் நலனில் நாம் அதிக கவனம் செலுத்­த­வேண்டும் என்று நான் எண்­ணு­கின்றேன். தொழி­லுக்­க­மர்த்த முடி­யாத பட்­ட­தா­ரி­களை உரு­வாக்­கு­வதை நிறுத்தும் வண்­ணமும் எந்தப் பட்­ட­தாரி­க­ளுக்கு கிராக்கி நில­வு­கி­றதோ, அந்தப் பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கும் வண்­ணமும் எமது பல்­க­லைக்­க­ழகக் கல்வி பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட­ வேண்டும். வாழ்க்­கைத்­தொழில் பயிற்­சியும் தொழில் நுட்பக் கல்­வியும் இன்­னொரு முக்­கி­ய­மான துறை­யாகும். நேரடி வெளிநாட்டு முத­லீடும் அபி­வி­ருத்­தியும் உற்­பத்­தியும் இருக்­கு­மாயின், தேவை­யான திறன்­கொண்ட கணி­ச­மா­ன­தொரு தொழில்­படை நமக்குத் தேவைப்­படும். அந்தத் திறன்­களைக் பெற்­றுக்­கொள்­வ­தற்குத் தேவை­யான வாய்ப்­பு­களை எமது இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கு­வதன் மூலம் அந்த எதிர்­கால நிகழ்­விற்­கு ­எம்மை நாம் தயார்­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.

நிதி அமைச்­சரின் உரை­யின்­படி, உள்ளூரில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய பல்­வேறு பொருட்­களை கணி­ச­மான செலவில் நாம் இறக்­கு­மதி செய்­கின்ற சில துறை­களைப் பற்றி நான் குறிப்­பிட விரும்­பு­கிறேன். சீனி இறக்­கு­ம­தியில் நாம் அமெரிக்க டொலர் 250 – 400 மில்­லியன் வரை செல­வி­டு­கின்றோம். உணவுப் பொருட்கள் மற்றும் விவ­சாயம் தொடர்­பு­பட்ட தேவை­களின் இறக்­கு­ம­திக்­காக ஆண்­டு­தோறும் அண்­ண­ள­வாக ரூபா 200 பில்­லியன் செல­வி­டு­கிறோம். பெரும் செலவில் 81,000 மெட்றிக் தொன் பால் மாவை நாம் இறக்­கு­மதி செய்­கிறோம்.

இலங்கை ஒரு சிறிய நாடு. உரிய திட்­ட­மி­ட­லோடு எமக்­குத் தேவை­யான எல்லா உணவுப் பொருட்­க­ளையும் நாம் உற்­பத்தி செய்யக் கூடி­ய­தாக இருக்­க­வேண்டும். இத்­த­கைய இறக்­கு­ம­தி­களைத் தவிர்ப்­ப­தற்­காக உள்­நாட்டு உற்­பத்­தியை நாம் முயன்று பார்க்க வேண்­டிய நிலை­யில்தான் எமது பொரு­ளா­தாரம் இருக்­கின்­றது. அது எமது சக்­திக்கு உட்­பட்­ட­துதான்.

நாம் சுற்­றுலாத் துறையை ஊக்­கு­விக்­க­வேண்டும். இது அதிக அபி­வி­ருத்­திக்­கான வாய்ப்புக் கொண்ட ஒரு துறை­யாகும். எமது கடற்­க­ரை­களும் கலா­சாரத் தலங்­களும் சுற்­றுலாத் துறை­யி­னரைக் கவரும் இடங்­களாகத் திக­ழு­கின்­றன. நாம் தர­மான பெரிய­ளவில் செலவு செய்யும் சுற்றுலாப் பிர­யா­ணி­களை ஈர்க்­க­வேண்டும்.

வடக்கு, கிழக்கு குறித்து நான் ஒரு சில வார்த்­தைகள் பேச விரும்­பு­கிறேன். இது யுத்­தத்­திற்கு முன்­னரும் அதன் பின்­னரும் நீண்ட கால­மாக மிகவும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரும் ஒரு பிர­தே­ச­மாகும். யாழ்ப்­பாணம், மன்னார், வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை என்று முழு வடக்கு, கிழக்­கி­லு­மி­ருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்­களை அவர்கள் எந்தக் காணி­க­ளி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­தார்­களோ, அந்தக் காணி­க­ளி­லேயே மீளக்­கு­டி­ய­மர்த்­துதல் ஒரு முன் நிபந்­த­னை­யாகும். முக்­கிய தேவை­யாகும்.

புனர்­வாழ்வு, வீட­மைப்பு மற்றும் அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் விவ­சாயம் செய்தல் அடங்­க­லான வாழ்­வா­தாரம், மீன்­பிடித்தல், விலங்கு வேளாண்மை, கால்­நடை அபி­வி­ருத்தி முத­லி­யன 2017 இல் முழு­மை­யாக அடை­யப்­பெ­ற­வேண்டும். பாதிக்­கப்­பட்ட இந்த மக்­களின் துன்ப துய­ரங்கள் ஒரு தொடரும் நிகழ்­வாக இருத்­த­லா­காது. பெரும் எதிர்­பார்ப்­புடன் பொறு­மை­யாகக் காத்­தி­ருந்து காத்­தி­ருந்து மக்கள் களைத்துப் போயுள்­ளனர். இப்­போது காரி­யங்கள் நிறை­வே­ற­வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றனர். வடக்கு, கிழக்­கி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்­டுள்ள 18 தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுள் 16 பேர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பைச் சேர்ந்­த­வர்கள். இது 90 சத­வீ­தத்­திற்கு அதி­க­மா­ன­தாகும். மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நாங்கள் அர­சாங்­கத்தில் இல்­லா­விட்­டாலும், நான் தற்­போது விரித்­து­ரைத்த பணி­களை நிறை­வேற்ற அர­சாங்­கத்­தோடு இணைந்து செயற்­பட விரும்­பு­கிறோம். இந்தப் பணியை நிறை­வேற்­று­வ­தற்கு நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை அர­சாங்கம் வகுக்க வேண்­டு­மென்று நாங்கள் விரும்­பு­கிறோம். குறைந்­தது சபை முதல்­வ­ரா­வது இங்­கி­ருப்­பது குறித்து நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். அவர் இரக்­க­மான செவி­களைக் கொண்ட ஒரு மனிதர். அர­சாங்கம் வடக்கு, கிழக்­கிற்கு விரி­வான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை வகுக்க வேண்­டு­மென்றும் அந்தப் பணியை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தாக இருக்­கு­மு­க­மாக எனது கட்­சியைச் சார்ந்த தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிர­தி­நி­தி­க­ளோடு அர­சாங்கம் இணைந்து செயற்­பட வேண்­டு­மென்றும் நான் கரு­து­கின்றேன். இது நடை­பெற வேண்­டு­மென நாங்கள் வலி­யு­றுத்­து­கிறோம். அத்­த­கைய நிகழ்ச்சித் திட்­ட­மொன்று விரை­வாக ஆரம்­பிக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்வோம். அது நாங்கள் இனியும் புறக்­க­ணிக்க முடி­யாத ஒரு பணி­யாகும். நாங்கள் (அதில்) ஆக்­க­பூர்­வ­மா­ன­தொரு பங்கு வகிப்போம்.

வடக்கில் முஸ்லிம் மக்­களை மீளக் குடி­ய­மர்த்தும் விட­யத்தில் கண்­கூ­டான முன்­னேற்­றத்தை காண்­ப­தையும் நாங்கள் விரும்­பு­கிறோம். அண்­மையில் நடை­பெற்ற வடக்கு முஸ்லிம் சிவில் சமூகச் சங்க உறுப்­பி­னர்கள் மாநா­டொன்றில், முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­திகள், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்­சரின் ஒரு பிர­தி­நி­தி­மற்றும் வட மாகாண முத­ல­மைச்­சரின் உத்­தி­யோ­க­பூர்வ பிர­தி­நிதி ஆகியோர் இதி­லுள்ள சிர­மங்­களைக் களைந்து வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் உத­வு­வ­தற்கு இணைந்து செயற்­ப­டு­வார்கள் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதுவும் அவ­சர நட­வ­டிக்கை தேவைப்­படும் ஒரு விட­ய­மாகும். தாங்கள் புறக்­க­ணிக்கப் பட்­டி­ருப்­ப­தாக முஸ்லிம் மக்கள் மத்­தியில் கவலை நில­வு­வ­தாகத் தோன்­று­கி­றது. வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்கள் திரும்பி வந்து அனைத்து வச­தி­க­ளோடும் தமது காணி­களில் மீளக் குடி­யேற வேண்டும் என்­பதே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும் தமிழ் மக்­க­ளதும் கொள்­கை­யா­கையால், இந்தக் கவலை தொடர்ந்து நில­வ­வேண்­டு­மென்று நான் கரு­த­வில்லை.

எனது தொகு­தியும் எனது மாவட்­டமும் நான் நீண்ட காலம் இந்தப் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­து­மான திரு­கோண­மலை தொடர்­பாக நான் ஒரு சில வார்த்­தைகள் பேச வேண்டும். திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு ரூபா 1000 மில்­லி­யன் ­ஒ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­களின் அபி­வி­ருத்தி, அவர்­களின் வாழ்க்கைத் தர அபி­வி­ருத்தி, வீட­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, வாழ்­வா­தா­ரத்தை மீள­மைத்தல், வாழ்­வா­தா­ரத்தை மீள­மைப்­ப­தற்­கான வச­திகள் மற்றும் உப­க­ர­ணங்கள், மீன்­பி­டித்தல், கமம், கால் நடை அபி­வி­ருத்தி, விலங்கு வேளாண்மை, சிறு கைத்­தொ­ழில்கள், குடிசைக் கைத்­தொ­ழில்கள், நடுத்­தரக் கைத்­தொ­ழில்கள் ஆகி­ய­னவே அர்த்­த­முள்ள அபி­வி­ருத்­தி­யாக அமையும். இவைதான் எமக்குத் தேவை.

திரு­கோ­ண­ம­லையில் பெரும் வாய்ப்பு வளம்­கொண்ட இரு பெரும் நீர்ப்­பாசன திட்­டங்­களை நான் குறிப்­பிட வேண்டும். இதில் ஒரு திட்டம் திரு­கோ­ண­ம­லைக்கு வடக்­கே­யுள்ள பேராறு என்று அழைக்­கப்­ப­டு­வது. இங்கு பெரு­ம­ளவு நீர் கடலில் சென்று கலக்­கி­றது. அந்த நீர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. இப்­ப­கு­தி­யி­லுள்ள நிலம் முழு­வதும் பெரு­ம­ள­விற்கு மானா­வாரி என்று நாங்கள் தமிழில் கூறும் மழை­நீ­ரையே நம்­பி­யி­ருக்கும் நில­மாகும். நாங்கள் அந்த நிலத்­திற்கு நீர்ப்­பாசன வசதி வழங்­க­வேண்டும். வழங்­கினால், அங்கு இரு போகத்­திலும் பயிர்ச் செய்கை மேற்­கொள்ள முடியும்.

நான் குறிப்­பிட விரும்பும் மற்றத் திட்டம், திரு­கோ­ண­ம­லைக்குத் தெற்கே வெருகல் -ஈச்சி­லம்­பற்று பகு­தி­யி­லுள்ள கல்­ல­ரிப்பு என்று அழைக்­கப்­ப­டு­வ­தாகும். இங்கும் பெரு­ம­ளவு நீர் கடலில் சென்று கலக்­கி­றது. இந்த நீர் பயன்­ப­டுத்­தப்­பட்டால், தற்­போது மானாவாரி பயிர்ச் செய்­கை­யிலும் மழை­நீரை நம்­பிய செய்­கை­யிலும் மட்டும் உள்ள ஆயிரக்­கணக்­கான ஏக்கர் நிலத்­திற்கு நீர்ப்­பா­சனம் வழங்க முடியும். மக்கள் இரு போகமும் பயிர்ச் செய்­கையில் ஈடு­பட முடியும். இது, இப்­பகுதியில் வாழும் பல ஆயிரம் குடும்­பங்களின் வாழ்க்கைத் தரத்தை மிகச் சிறந்­த­தொரு முறையில் மேம்­ப­டுத்த வழி வகுக்கும்.

இந்த இரண்டு திட்­டங்­களும் நீண்ட கால­மாக திட்­ட­மிடல் நிலை­யி­லேயே இருந்து வரு­கி­றது. ஏதோ­வொரு கார­ணத்­திற்­காக அவை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்­திக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள இந்­நி­தியில் இவ்­விரு திட்­டங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்டு அந்தப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்று நான் கரு­து­கின்றேன். நாங்கள் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம் - உண்­மையில் நான் ஜனா­தி­பதியி­டமும் பிர­தமரி­டமும் இதை வலி­யு­றுத்­துவேன். ஜனா­தி­பதி மகா­வலி அபி­வி­ருத்­திக்கும் பிர­தான நீர்ப்­பா­சனத் திட்­டங்­க­ளுக்கும் பொறுப்­பாக இருக்­கிறார். இவ்­விரு திட்­டங்­களும் முன்­னு­ரி­மைக்­கு­ரிய விட­யங்­க­ளாகும். அவை நீண்ட கால­மாக நிலு­வையில் உள்­ளன.

உண்­மையில், பேராறு பற்றி 1977 இல் நான் முதல் தட­வை­யாக இந்தப் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்­த­போது பேசினேன். யுத்தம் கார­ண­மாக, முரண்­பாடு கார­ண­மாக, கல­வர நிலைமை கார­ண­மாக காரியம் கைகூ­ட­வில்லை. ஆனால், இப்­போது அது நடை­பெற­வேண்டும். 2017 ஆம் ஆண்டு இறு­திக்குள் இவ்­விரு துறை­க­ளிலும் கணி­ச­மா­ன­ளவு முன்­னேற்­றத்தை நாம் காண­வேண்டும்.

திரு­கோ­ண­ம­லையில் அக்­க­றை­கொள்­ளத்­தக்க இன்­னொரு விடயம் கரை­யோ­ரத்தைப் பாது­காத்­த­லாகும். இப்­ப­கு­தியில், திரு­கோ­ண­மலை நகரின் சில முக்­கிய பகு­தி­களும் அதன் அயற் புறங்­களும் கட­ல­ரிப்­பினால் சீக்­கிரம் அழி­வ­டை­யக்­கூ­டிய கவ­லை­தரும் சாத்­தி­யத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளன. அந்தப் பகு­தி­களை இனங்­காட்ட நான் விரும்­பு­கிறேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.