Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ?

Featured Replies

இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ?

 

நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது.

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர்.

எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சலசலப்பைத் தோற்றுவிக்கின்ற அதே நேரம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் இட்டுச் செல்லலாம் என அஞ்சிய நலன்விரும்பிகளும் பொலிஸாரும் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டனர். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குள் குறித்த காலப்பகுதிக்குள் எவரும் ஆர்ப்பாட்டங்களையோ பேரணிகளையோ நடாத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில்தான் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன பகுதியில் வைத்து சனிக்கிழமை காலை பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டனர். பேரணி மட்டக்களப்பினுள் நுழையாதவாறு பொலிசார் வீதி மறியல்களை ஏற்படுத்தினர். பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை பேரணியாக வந்தவர்களிடம் காண்பித்தனர். எனினும் இதனால் ஆத்திரமடைந்த ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவுப் பத்திரத்தை பொலிஸார் முன்னிலையிலேயே கிழித்து வீசியதுடன் நாட்டின் சட்டத்துறைக்கு எதிராகவும் பொலிஸாருக்கு எதிராகவும் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார்.

அத்துடன் அவருடன் வருகை தந்த குழுவினர் வீதியில் அமர்ந்தும் ரயில் பாதையை மறித்தும் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களின் போக்குவரத்தும் மட்டக்களப்பு -பொலன்னறுவை ரயில் போக்குவரத்தும் அன்றிரவு வரை ஸ்தம்பிதமடைந்தது. மேலும் தம்மை மட்டக்களப்புக்குள் செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன் எப்படியேனும் மட்டக்களப்புக்குச் சென்றே தீருவோம் என்றும் இக் குழுவினர் விடாப்பிடியாக இருந்தனர். எனினும் பொலிஸார் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

பின்னர் குறித்த குழுவினர் ரிதிதென்னையிலிருந்து புணானை பிரதேசத்திற்கு கால்நடையாகச் சென்று அங்குள்ள பெளத்த விகாரை ஒன்றில் தங்கியிருந்தனர். நள்ளிரவு வேளையிலாவது மட்டக்களப்புக்குச் சென்று விட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருந்தது. எனினும் கொழும்பிலிருந்து உயர் மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு செல்லும் தமது திட்டத்தைக் கைவிட்டு சனிக்கிழமை பின்னரவில் மீண்டும் கொழும்பு திரும்பினர்.

சுமணரத்ன தேரரின் போராட்டம்

இதற்கிடையில் தன்னைச் சந்திக்கவும் தனது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும் வருகை தந்த குழுவினரை மட்டக்களப்புக்குள் நுழைய அனுமதிக்குமாறு கோரி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தனது விகாரை அமைந்துள்ள பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தினார். எனினும் அப் பகுதியிலும் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தேரரும் அவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தினர். இதன்போது வீதித் தடை கம்பிகளின் மேல் ஏறி நின்று சுமணரத்ன தேரர் ஆக்ரோஷமாக போராட்டம் நடத்தினார்.

தேரர் இவ்வாறு போராட்டம் நடத்திய சமயம் அப் பகுதி வாழ் தமிழ் மக்கள் தேரரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் மட்டக்களப்பு நகரத்தில் பதற்ற நிலை தோன்றியது. உடனே விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வரவழைக்கப்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அப் பகுதிக்கு வந்து தேரரின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்துமாறும் தமிழ் இளைஞர்களை அமைதிகாக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேரர் மீண்டும் அவரது விகாரைக்கு பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

அவதூறு பேச்சுக்கள்

ஞானசார தேரருடன் மட்டக்களப்புக்குள் நுழைய முயன்ற குழுவினரில் சிலர் தாம் பயணித்த வழிகளில் தமிழர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இனவாதக் கருத்துக்களைப் பேசியபடியே சென்றதுடன் அதனை முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பும் செய்தனர். குறிப்பாக ரிதிதென்ன ஜும்ஆ பள்ளிவாசலை தாக்குவதற்கும் முற்பட்டனர். எனினும் அப் பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் குழுமி நின்றதால் அவ்வாறானதொரு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதேபோன்று ரிதிதென்ன பகுதியில் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் பகைலைக்கழக கட்டிடத்தை காண்பித்து "தெற்காசியாவிலேயே நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய பள்ளிவாசல் இதுதான்.இதனை உடைத்தெறிய அனைவரும் வாருங்கள்" என அழைப்பு விடுக்கும் காட்சிகள் முகநூல் வழியாக பரப்பப்பட்டன.

பொலிஸில் முறைப்பாடுகள்

மட்டக்களப்பை நோக்கி பெளத்த கடும்போக்கு அமைப்புகள் பேரணியாகச் சென்ற சமயம் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஆர்.ஆர்.ரி அமைப்பு இரு வேறு முறைப்பாடுகளை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தது.

புணானை பிரதேசத்தில் வைத்து நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் உடைப்போம் என எச்சரிக்கை விடுத்தமை மற்றும் அல்குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகியன தொடர்பில் சிங்ஹலே அமைப்பின் தேசிய அமைப்பாளர் சாலிய ரணவக்கவுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று கடந்த சனிக்கிழமை இரவு புணானை பகுதியில் வைத்து மகாசேன பலகாய அமைப்பின் தேசிய அமைப்பாளர் அமித் வீரசிங்க, கண்டியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் கலவரங்களை ஏற்படுத்துவோம் என அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பை நோக்கி மேற்படி பேரணி சென்று கொண்டிருந்த சமயம் கண்டி லைன் பள்ளிவாசல் முன்பாக நின்று முகப்புத்தக நேரலை மூலமாக முஸ்லிம்கள் பற்றிய தவறான தகவல்களை வழங்கியதுடன் முஸ்லிம் பிரதேசங்களை தாக்குவதற்காக பெளத்தர்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்த நபருக்கு எதிராக ஏ.ஆர்.சி. அமைப்பும் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளன.

தேரருக்கு அழைப்பாணை

கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் செய்தமை மற்றும் இன ரீதியான கருத்துக்களை தெரிவித்தமை, இயல்பு நிலையை குழப்புவதற்கு காரணமாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு எதிராக பொலிஸார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து எதிர் வரும் 14.12.2016 புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் கருத்து

மட்டக்களப்பிற்கு பேரணியாகச் செல்ல முனைந்த குழுவினரை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ கருத்து வெளியிட்டிருந்தார். "மட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்­ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. அதனால் அவர்கள் மட்டு. நக­ருக்குள் நுழையும் போது உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தற்­கா­கா­கவே இடை­ந­டுவில் அவர்­களை மறித்து தடை உத்­த­ர­வினை கைய­ளிக்­கு­மாறு பொலி­ஸாரை பணித்தோம்" என அவர் குறிப்பிட்டார்.

அதே­நேரம் நீதி­மன்ற தடை உத்­த­ரவை கிழித்­தெ­றி­வது மன்­றினை அவ­தூறு செய்­வ­தா­கவே கருத்­தப்­படும் என்றும் அந்த தவறை இழைப்­ப­வர்­களை கைது செய்­வது உரிய நடை­மு­றை­யாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மட்­டக்­களப்பில் மங்­க­ள­ரா­மய விகா­ராதி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரரின் செயற்­பா­டுகள் நாட்டின் சமா­தா­னத்­தினை சீர்­கு­லைப்­ப­தா­கவே உள்­ளன. ஆனால் முன்னர் போன்று இல்­லாமல் எமது நாட்டின் நான்கு மதங்­க­ளுக்கு பொறுப்­பாக நான்கு அமைச்­சர்கள் உள்­ளனர். அவர்கள் அனை­வரும் ஜனா­தி­பதி தலை­மையில் கூடி பேச்­சு­வார்த்­தையொன்றை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பேச்­சு­வார்த்­தைக்கு பெளத்த மற்றும் முஸ்லிம் தமிழ் மத­கு­ருக்­க­ளையும் நாம் அழைத்­துள்ளோம். அதே­நேரம் மட்­டக்­க­ளப்­பிற்கு செல்ல முற்­பட்ட பிக்­குகள் குழுவை அர­சாங்­கமே தடுக்க கோரி­யது. அதற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அத­னை­ய­டுத்தே பொலிஸார் நீதி­மன்ற தடை உத்­த­ரவை பெற்­றுக்­கொண்டு பிக்­குகள் மட்டு. நக­ருக்குள் செல்ல விடாமல் தடுத்­தனர். அதே­நேரம் இங்­கி­ருந்து செல்லும் பிக்­குகள் குழு மீது தாக்­குதல் நடத்­தவும் மட்­டக்­க­ள­ப்பிற்குள் குழு­வொன்று தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் எமக்கு தகவல் கிடைத்­தது. அதன் பின்பே நாம் குறித்த பிக்­கு­களை செல்­லாது தடுக்க நேரிட்­டது. அங்கு உயிர் சேதங்கள் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்றே நாம் அந்த தீர்­மா­னத்தை எடுத்தோம்.

எவ்­வா­றா­யினும் அங்கு நீதி­மன்ற தடை உத்­த­ரவு கிழித்­தெ­றி­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்த முடி­யாது. காரணம் நீதி மன்றத் தடை உத்­த­ரவை கிழித்­தெ­றி­வது நீதி­மன்­றத்­தினை அவ­ம­திக்கும் செய­லாகும். எனவே அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது செய்­வதே உரிய தீர்வாகும். இருப்­பினும் இந்தச் சம்­பவம் குறித்து ஆராய்ந்த பின்னர் அதற்­கான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும்.எவ்­வா­றா­யினும் பேச்­சு­வார்த்­தையில் தீர்வை எட்­டவே பெரிதும் முயற்­சிக்­கின்றோம் என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

கைது செய்யாதது ஏன்?

"நீதி­மன்ற தடை உத்­த­ரவை கிழித்­தெ­றி­வது மன்­றினை அவ­தூறு செய்­வ­தா­கவே கருத்­தப்­படும் என்றும் அந்த தவறை இழைப்­ப­வர்­களை கைது செய்­வது உரிய நடை­மு­றை­யாகும் " என்று குறிப்பிட்ட நீதியமைச்சர் ஏன் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பைச் சுமந்துள்ள அவர், எவ்வாறு ஞானசார தேரர் சுதந்திரமாக நடமாடவும் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு நடத்தி அவதூறுகளைப் பேசவும் இடமளிக்க முடியும்?

ஞானசார தேரரின் ஊடக சந்திப்பு

தாம் மட்டக்களப்பு செல்லாது தடை செய்யப்பட்டமை தொடர்பில் ஞானசார தேரர் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி கருத்து வெளியிட்டார். " மட்­டக்­க­ளப்பில் பௌத்­தர்­களின் புதை­பொருள் மர­பு­ரிமை பிர­தே­சங்கள் அழிக்­கப்­பட்­டு­வ­ரு­வதை மட்­டக்­க­ளப்பு மங்­க­ளா­ரா­மய விகாராதிபதி எதிர்த்தார். அப்­ப­கு­தியில் சிங்­க­ள­வர்கள் அநா­தை­க­ளாக இருப்­பதை நாம் விரும்­ப­வில்லை. மங்­க­ளா­ரா­மய விகாராதி­ப­திக்கு உத­வு­வ­தற்­கா­கவும் போதி பூஜைக்­கா­க­வுமே நாம் அங்கு சென்றோம்.

மகா­நா­யக்க தேரர்­களைக் கலந்­தா­லோ­சித்தே சிங்­கள அமைப்­புகள் இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்­டன. என்­றாலும் எமது பயணம் பொலன்­ன­று­வையைக் கடந்­ததும் நீதி­மன்ற உத்­த­ரவு மூலம் பொலி­ஸாரால் எமக்கு தடை­வி­திக்­கப்­பட்­டது. இதே­ சமயம் மட்­டக்­க­ளப்பில் மங்­க­ள­ராம விகா­ரைக்கு அருகில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் பிரி­வி­னை­வா­தி­களும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் ஒன்றிணைந்து சிங்களவர்களைத் தாக்குவதற்குத் தயாராக இருந்தார்கள். பட்டாசு கொளுத்தினார்கள். மட்டக்களப்புக்கு நாம் போனால் இனக்கலவரம் ஏற்படும் என்றார்கள். பாதையை மூடினார்கள். பொலிஸார் குண்டாந்தடிகளால் எம்மையே தாக்கினார்கள். தமிழ் முஸ்லிம்களை அவர்கள் தாக்கவில்லை. பிரபாகரனின் பிறந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாத உளவுப்பிரிவு எமது விஜயத்துக்கு தடை விதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமைக்கு உளவுப்பிரிவின் செயற்பாட்டினை விமர்சிக்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று இவ் ஊடக சந்திப்பில் இஸ்லாத்தையும் குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை முஸ்லிம்களை ஆத்திரமூட்டியிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் ஞானசார

மேற்படி சம்பவங்களால் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களிடையே பதற்ற நிலை தோற்றம் பெறுவதை உணர்ந்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் மற்றும் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களை அழைத்து கடந்த செவ்வாய்க்கிழமை நல்லிணக்க சந்திப்பு ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் நடத்தினார். இதில் சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக இச் சந்திப்புக்கு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் ராவண பலயவின் தலைவர் அக்மீம தயாரத்ன தேரர் போன்ற இனவாத சிந்தனையை பரப்புவோரும் அழைக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

மட்டக்களப்புக்குச் சென்று கலவரம் ஒன்றை ஏற்படுத்த முனைந்த, நீதிமன்ற தடையுத்தரவைக் கிழித்தெறிந்த, கைது செய்யப்பட வேண்டும் என நீதியமைச்சராலேயே தெரிவிக்கப்பட்ட ஒரு நபரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து ஏனைய மதத் தலைவர்களுடன் அமர வைத்து கெளரவம் வழங்கியமை எந்தவகையில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பாராளுமன்றிலும் எதிரொலித்த சர்ச்சை

ஞானசார தேரர் மட்டக்களப்புக்குச் சென்று கவலரம் ஒன்றைத் தோற்றுவிக்க முனைந்த விவாகரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழ் முஸ்லிம் எம்.பி.க்கள் இது தொடர்பில் பாராளுமன்றில் காரசாரமான உரைகளை ஆற்றியதுடன் இரண்டு தேரகைளையும் உடனடியாக கைது செய்து சிறையிலடைக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் கடும் ஆக்ரோஷமான உரையொன்றை ஆற்றியிருந்தார். " இஸ்­லாமும், குர்­ஆனும் தொடர்ச்­சி­யாக சில­ரினால் நிந்­திக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் முஸ்லிம் இளை­ஞர்கள் மிகுந்த மன­வே­த­னை­ய­டைந்­துள்­ளனர். இவற்­றுக்கு எதி­ராக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கைகட்டி வாய் மூடி மௌனி­க­ளாக இருக்­கின்­றார்­க­ளென சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­சித்து வரு­கின்­றனர்.

கடந்த காலத்தில் தமி­ழர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­போது ஆயு­த­மேந்­திய தமிழ் இளை­ஞர்கள் முதலில் தமிழ் தலை­வர்­க­ளையே படு­கொலை செய்­தனர். அதே­போல முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கினால் முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளாக இருக்கும் எம்­மையே முதலில் படு­கொலை செய்­வார்கள்" என ஹிஸ்புல்லாஹ் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் ஹிஸ்புல்லாவின் உரையை இடைமறித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ " நல்­லாட்­சியில் இப்­படி பேசு­கி­றீர்கள். எனினும் அளுத்­கம சம்­ப­வத்தின் போது அன்­றுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேச­வில்லை. நானும் கிரி­யெல்ல அமைச்­ச­ருமே சபையில் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு பேசினோம். நீங்கள் அதன் போது வேறு எத­னையோ பேசி­னீர்கள். ஆனால், தற்­போது வாய்­கி­ழிய கத்­து­கி­றீர்கள். நீங்கள் அங்கம் வகித்த முன்­னைய ஆட்­சியின் போதே இந்த நிலைமை ஏற்­பட்­டது. பாது­காப்பு செய­லாளர், மஹிந்த ராஜபக் ஷ எம்மை பாது­காப்­பார்கள் என எண்­ணி­னீர்கள். அமைச்சு பத­வியும் வரப்­பி­ர­சா­தங்­களும் பெறு­வ­தற்­காக நீங்கள் எதனை வேண்­டு­மா­னாலும் செய்­வீர்கள். மக்கள் மீது அக்­கறை இல்­லா­த­வர்கள் நீங்கள்" என கடுமையாக பதிலளித்தார்.

கவலையளிக்கும் அரசின் நகர்வுகள்

மேற்படி விடயங்களை ஒட்டுமொத் தமாக நோக்குகையில் அர­சாங்­கத்தின் சம­கால நகர்­வுகள் கவ­லை­ய­ளிப்­ப­தா­கவே உள்­ளன. கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் எவ்­வாறு இன­வா­திகள் கட்­டுக்­க­டங்­காது சுதந்­தி­ர­மாக செயற்­பட்­டார்­களோ அதே­போன்­றுதான் இன்றும் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள்.

ஜனா­தி­ப­தி நடத்திய கூட்டத்தில் குறித்த தேரர் கலந்து கொள்­வ­தற்குப் பொருத்­த­மற்­றவர் என்ற யதார்த்­தத்தை ஜனா­தி­ப­தியால் ஏன் விளங்கிக் கொள்ள முடி­ய­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது. மேற்­படி கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்கு ஒரு சில மணி நேரங்­க­ளுக்கு முன்­னர்தான் ஞான­சார தேரர் செய்­தி­யாளர் மாநாட்டை நடத்தி இஸ்­லாத்தை மிக மோச­மாக கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

சட்­டத்தை அவ­ம­தித்த குறித்த தேரரை அன்­றைய தினம் நீதி­மன்­றத்தில் நிறுத்­தி­யி­ருக்க வேண்­டுமே தவிர மதத் தலை­வ­ராக மதித்து ஜனா­தி­பதி மாளி­கைக்கு அழைத்து வெள்ளைப் பிடவை விரித்து அமர வைத்­தி­ருக்கக் கூடாது என்­பதே நீதியை விரும்­பு­வோரின் அபிப்­பி­ரா­ய­மாகும். என­வேதான் அர­சாங்கம் இந்த இன­வாத சக்­தி­க­ளுக்கு இன்­னு­மின்னும் இட­ம­ளிப்­பதை இத்­துடன் நிறுத்த வேண்டும். அவர்­க­ளது கொட்­டத்தை அடக்க வேண்டும். சட்­டத்தை மீறுவோருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். அதேநேரம் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் இனவாதிகளின் மாய வலையில் சிக்காது சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்.

- பைஸ் -

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-10#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.