Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம்

Featured Replies

முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம்

916538-shutterstock-1436277043-806-640x480-87cd475ea8b07e54fbc43fda61d891715738309c.jpg

 

இலங்­கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறை­வேற்­றப்­பட்­டது. நாட்டில் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­கா­கவே இச்­சட்டம் கொண்டுவரப்­பட்­டது. யாரையும் கேள்­வி­யின்றி கைது செய்­யவும், தடுத்து வைக்­கவும் இச்­சட்­டத்தில் ஏற்­பா­டு­க­ளுண்டு.

இதனால், இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி பல இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். இன்றும் இச்­சட்­டத்தின் மூல­மாக கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அத்­தோடு அவ­சரகால சட்­டமும் நாட்டில் கொண்டு வரப்­பட்­டது. இந்த சட்­டமும், பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டமும் தனி­ந­பர்­களை கைது செய்­யவும், தடுத்து வைக்­கவும் கூடிய அதி­கா­ரத்தை பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு வழங்­கி­யது.

இச்­சட்டமூலத்தில் உள்ள கடுமை கார­ண­மாக பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தையும், அவ­ச­ர­கால சட்­டத்­தையும் நீக்­கு­மாறு தமிழ் மக்கள் பிர­தி­நி­திகள் இச்­சட்ட மூலம் கொண்டுவரப்­பட்ட நாள் முதல் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்து வந்­துள்­ளார்கள்.

ஆனால், அர­சாங்கம் இச்­சட்­டங்­களை நீக்­கு­வ­தற்கு விரும்­ப­வில்லை. இந்­நி­லையில் நாட்டில் பயங்­க­ர­வாதம் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு 07 வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் இச்­சட்­டங்கள் நடை­மு­றை­யி­லேயே இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில் சர்­வ­தேச நாடு­களும், அமைப்­புக்­களும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தினை நீக்க வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை கேட்­டுள்­ளன.

குறிப்­பாக பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை நீக்­கி­வி­டு­மாறு ஐரோப்­பிய சங்­கமும் ஜெனீவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தமை குறிப்பிடத்­தக்கது.

ஐரோப்­பிய சங்­கத்­தி­னதும், ஜெனீவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வி­னதும் வேண்­டு­கோ­ளுக்கு ஏற்ப பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதுபற்றி அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் அறி­வித்­துள்­ளது.

ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரா­க­வுள்ள எண்­ணங்­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்கே அர­சாங்கம் இச்­சட்­டத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு இணங்­கி­யுள்­ளது.

ஆயினும், இச்­சட்ட மூலத்­திற்கு பதி­லாக ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்றச் செயல்­களை கட்­டுப்­ப­டுத்தல், விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் போதுள்ள சட்ட திட்­டங்கள் மற்றும் புல­னாய்வு சேவை நட­வ­டிக்கை என்­பன தொடர்­பான பிர­தான மூன்று விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக பயங்­க­ர­வா­தத்­தினை முறி­ய­டிக்கும் வகை­யி­லான தேசிய பாது­காப்புச் சட்டம் ஒன்­றினை கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இச்­சட்டமூலம் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தினை விடவும் கடுமை வாய்ந்­தாக இருக்­கு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வா­தத்­தினை முறி­ய­டிக்கும் சட்டமூல­மா­னது சர்­வ­தேச நாடு­களின் ஆலோ­சனைப்படி உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­களும் முடி­வ­டைந்­துள்­ள­தா­கவும், இதனைச் சட்­ட­மாக்கும் பணி மாத்­தி­ரமே இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே வேளை, குறித்த 'பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிக்கும் சட்ட மூலம் முஸ்­லிம்­களின் அடை­யா­ளத்தை குறி­வைத்தே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு மௌலவி வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­சலில் ஓதும் குத்­பாவை (பிர­சங்கம்) பொறுத்து அவரை கைது செய்­யவும், இஸ்­லா­மிய பிர­சார ந­ட­வ­டிக்­கை­களை முடக்­கவும், இஸ்­லா­மிய இயக்­கங்­களை தடை செய்­யவும், ஏன் முழு முஸ்லிம் நவீன கட்­ட­மைப்­புக்குள் இருக்கும் அனைத்து அங்­கங்­க­ளையும் கண்­கா­ணித்து கட்­டுப்­ப­டுத்­தவும், அல்­லது கட்­டுப்­ப­டா­த­வி­டத்து கைது செய்து தண்­டனை வழங்க முடி­யு­மான ஏற்­பா­டுகள் இச்­சட்டமூலத்தில் இருக்­கின்­றன என்­பது அச்­ச­மாகும்' என்று முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும், முன்னாள் அமைச்சரு­மான பசீர் சேகு­தாவூத் எச்­ச­ிக்கை செய்துள்ளார்.

இச்­சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒப்­புதல் அளித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­படு­கின்­றது.அண்­மையில் இடம்­பெற்ற பாது­காப்பு கவுன்சில் கூட்­டத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வ­ப்­ப­டுத்தும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும், இன்னும் சில பிர­தி­நி­தி­க­ளையும் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அழைத்து இப்­பு­திய சட்டமூலத்­திற்­கான ஆத­ரவைப் பெற்­றுள்­ள­தாக அறிய முடி­கி­றது என்றும் பசீர் சேகு­தாவூத் தெரி­வித்­துள்ளார். தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி சுமந்­திரன் இச்­சட்ட மூலம் தமி­ழர்­களை பாதிக்­காது என்று தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் இல்­லாத ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்­துடன் இலங்கை முஸ்­லிம்­களை தொடர்­பு­ப­டுத்தி பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­களும், பாரா­ளு­மன்­றத்தில் நீதி அமைச்­சரும் கருத்­துக்­களை முன்வைத்­துள்ள பின்­ன­ணியில் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிக்கும் சட்ட மூல­மா­னது சர்­வ­தேச நாடு­களில் உள்­ள­வற்­றிக்கு இணை­யாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­திகள் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இச்­சட்­டத்­திற்கு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், அழைக்­கப்­பட்ட முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் ஒப்­புதல் அளித்­தி­ருந்தால் அது பற்றி முஸ்­லிம்­க­ளுக்கு தெளி­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும். பயங்­க­ர­வாத்தை முறி­ய­டிக்கும் சட்­டத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­பில்லை என்று கூற முடி­யு­மாயின் அதனை மக்­க­ளுக்கு சொல்­லுதல் வேண்டும். மட்­டு­மல்­லாது, இப்­பு­திய சட்­டத்­திற்கு ஆத­ரவளிக்­க­வில்­லை­யாயின் அதற்­கான கார­ணத்­தையும் இவர்கள் தெரிவிக்க வேண்டும். இதே வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யங்­க­ளிலும், புதிய சட்ட மூலங்­களை உரு­வாக்கும் விட­யங்­க­ளிலும் மக்­க­ளி­டையே கருத்­துக்­களை முன்வைக்கக் கூடா­தென்ற பொது­வா­ன­தொரு உடன்­பாட்­டிற்கு முஸ்லிம் கட்­சிகள் வந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால்தான் ஏனைய விவ­கா­ரங்­களில் முட்டி மோதிக் கொள்ளும் முஸ்லிம் கட்­சிகள் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிக்கும் சட்ட மூலம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு ஆகி­ய­வற்றில் முஸ்லிம் கட்­சி­களும், தலை­வர்­களும் மௌன­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அமைச்சர் பத­வி­களைப் பெற்­றுள்­ள­வாகள் கூட்டுப் பொறுப்பை பேண வேண்­டு­மென்ற அதி­காரத் தரப்பின் கட்ட­ளைக்கு கட்­டுப்­பட்டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

பயங்­க­ர­வாத்­தினை முறி­ய­டிக்கும் சட்­ட­மா­னது சர்­வ­தேச ரீதி­யாக பயங்­க­ர­வாத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்ற வகையில் வர­வி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சர்­வ­தேச ரீதி­யாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் மாத்­திரம் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளிலும், மனித உரிமை மீறல்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­வ­தாக சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதக் குழுக்­களை விடவும் மோச­மான பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளையும், மனித உரிமை மீறல்­க­ளையும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பல நாடுகள் தமது இரா­ணு­வத்தின் மூல­மாக மேற்­கொண்டு வரு­கின்­றன.

இலங்­கை­யிலும் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து பௌத்த கடும்­போக்கு இன­வாத அமைப்­புக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மனித உரிமை மீறல்கள் என்று அழைப்­ப­தில்லை.

அண்­மையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு கல­கொட அத்த ஞான­சார தேரரின் தலை­மையில் மேற்­கொள்­ள­வி­ருந்த விஜ­யத்­திற்கு நீதி­மன்றம் தடை விதித்­தி­ருந்­தது. இத்­த­டை­யுத்­த­ரவுக் கடிதம் தேர­ரிடம் வழங்­கப்­பட்டபோது நீதி­மன்­றத்தின் உத்­த­ரவுப் பத்­தி­ரம் பகி­ரங்­க­மாக கிழித்து எறி­யப்­பட்­டது.

நீதி­மன்­றத்­தினை உத்­த­ர­வினை அவ­ம­தித்த குறிப்­பிட்ட தேரர் இன்னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இதே செயற்­பாட்டை முஸ்லிம், இந்து, கிறிஸ்­தவ மதத் தலை­வர்கள் செய்­தி­ருப்­பார்­க­ளாயின் உட­ன­டி­யாகக் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பார்கள்.

ஆதலால், பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிக்கும் சட்ட மூலத்தில் உள்­ள­வற்றைத் தெளி­வாக புரிந்து கொள்­ளாது அங்­கீகாரம் வழங்க முடி­யாது.

கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்வ மதத் தலை­வர்­க­களை சந்­தித்தார். இச்­சந்­திப்பில் கலந்து கொண்ட பொதுபல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் எமது பௌத்த மர­பு­ரி­மைகள் ஏனைய மதத்­த­வர்­க­ளினால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது பாரம்­ப­ரிய பௌத்த வர­லாற்­றுக்கு சான்­றா­க­வுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் முஸ்­லிம்­க­ளினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

கூர­கல, தெவ­ன­கல, முதுகு மகா விகாரை, புனித பூமிக் காணிகள் முஸ்­லிம்­களின் வச­முள்­ளன என்று தெரி­வித்­துள்ளார்.

முஸ்­லிம்­களை நில ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள், சர்வதேச பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற தமது கொள்கை வார்ப்பில் பௌத்த இன­வாத தேரர்கள் விடு­ப­ட­வில்லை என்­பது ஞானசார தேரரின் கருத்­துக்­களின் மூல­மாக தெரி­கின்­றன. முஸ்­லிம்­களின் காணிகள் புனித பூமி என்றும், வன­­லா­கா­வுக்­கு­ரிய காணிகள் என்றும் கப­ளீகரம் செய்­யப்­பட்­டுள்­ளன. பல இடங்­களில் முஸ்­லிம்­க­ளிடம் பறிக்­கப்­பட்ட காணிகள் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. தமி­ழர்­களின் காணி­களும் பறிக்­கப்­பட்­டுள்­ளது. ஆயினும், முஸ்­லிம்­களின் மீதுதான் பழி சுமத்­தப்­ப­டு­கின்­றன. தலை­வர்கள் எளி­ய­வர்­க­ளாக இருந்தால் இவ்­வாறுதான் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும். 

இதே வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுக்கு பொதுபல சேனா கடும் எதிர்ப்­புக்­களை தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை ஒழித்து நாட்டை ஐந்து மாநி­லங்­க­ளாக பிரிப்­ப­தற்கு அர­சியலமைப்பில் திருத்­தங்­களை கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். இதற்கு நாங்கள் ஒரு போதும் இட­ம­ளிக்க மாட்டோம். எம்மை மீறி திருத்­தங்கள் மேற்­கொண்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடு­மென பொதுபல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான தேரர் தெரி­வித்­தி­ரு­கிறார்.

இவ்­வாறு பௌத்த தேரர்­களில் ஒரு குழு­வினர் நாட்டின் அமை­திக்கும், சட்­டத்­திற்கும் மாறாக நடந்து கொண்­டி­ருக்கின்றார்கள். ­ வன்­மு­றையை தூண்டும் வகையில் இச்­சி­றிய குழு­வினர் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை சட்­டத்தின் கைகொண்டு அடக்­காது இருந்­த­மை­யால்தான் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தின் காலத்தை போன்று மோச­மான நட­வ­டிக்­கை­களில் நல்­லாட்­சி­யிலும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்டில் ஒரு குழு­வினர் சட்­டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமி­ழர்கள் சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் தமக்கு எதி­ரான செயற்­பா­டு­களை படிப்­ப­டி­யாகத் தடுத்துக் கொண்டு வரு­கின்­றார்கள். ஆனால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இன்னும் தீவி­ர­ம­டைந்து கொண்டு வரு­கின்­றன. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், மக்கள் பிர­தி­நி­தி­களும் எடுப்பார் கைப்­பிள்ளை போல உள்­ளார்கள். காலத்­திற்கு காலம் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்று முஸ்லிம் தலை­வர்கள் தெரி­வித்துக் கொள்­கின்­றார்கள். அதே வேளை, முஸ்­லிம்­களின் உரி­மைகள் காவு கொண்டு போய்க் கொண்­டி­ருப்­ப­தனை வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அர­சாங்கம் இஸ்­ரேலின் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளது. யுனெஸ்­கோவில் பலஸ்தீன் விவ­கா­ரத்தில் இலங்கை பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­காது இருந்­தமை. முஸ்லிம் தனியார் சட்ட மூலத்தில் திருத்தம் கொண்டு வரு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள், முஸ்­லிம்கள் நில ஆக்­கி­ர­மிப்­பாளர் என்று பெரும்­பான்மை பௌத்த மக்­க­ளுக்கு பிழை­யான தக­வல்­களை வழங்­கப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்மை பௌத்­தர்­களை திசை திருப்பும் சூழ்ச்சி, முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சிங்­க­ள­வர்கள் இல்­லாத இறக்­காமம் - மாணிக்­க­மடு, கிண்­ணியா ஆகிய இடங்­களில் புத்தர் சிலையை வைக்கும் நட­வ­டிக்­கைகள் என சங்­கிலித் தொட­ராக நடை­பெ­று­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நிலையில் பயங்­க­ர­வாத்தை முறி­ய­டிக்கும் சட்­டத்தை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் பதவிப் பசிக்கு தீன் போடு­வ­தற்­காக அங்­கீ­க­ரிக்க முடி­யாது.

நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும், மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றாத வகை­யிலும் சட்­டங்கள் இருப்­பது அவ­சி­ய­மாகும். ஆனால், அச்­சட்டமூலம் ஒரு இனத்தின் அடை­யா­ளங்­களை குறி வைத்து, சர்­தேச நாடு­களின் தேவைக்கு ஏற்­ற­வாறு அமைக்­கப்­படக் கூடா­தென்­பதே எமது வேண்­டு­கோ­ளாகும்.

ஆதலால், முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் தங்­களின் கவ­னத்தை இது விட­யத்தில் செலுத்­துதல் வேண்டும். அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் கூடுதல் அக்­க­றை­யுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­த­கை­ய­தொரு ஈடு­பாட்டை பயங்­க­ர­வா­தத்தை முறி­டிக்கும் சட்ட மூலத்­திலும் காட்­டுதல் வேண்டும்.

ஒரு சமூ­கத்தின் தலை­வர்கள் வெறும் பார்­வை­யா­ளர்­க­ளா­கவும், சுய­ந­ல­வா­தி­க­ளா­கவும் இருப்­பார்­க­ளாயின் அச்­ச­மூகம் தமக்­கான புதிய தலை­வர்­களை உரு­வாக்கிக் கொள்­வது கட்­டா­ய­மாகும். சமூகத்தின் தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பார்களாயின் அச்சமூகம் தமக்கான புதிய தலைவர்களை உருவாக்கிக் கொள்வது கட்டாயமாகும். இல்லையாயின் அச்சமூகத்தின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது. நல்ல தலைவர்களை உருவாக்குவது மக்களின் பொறுப்பாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.