Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இராணுவ அட்டூளியம் கால்பதிக்காத வீதிகளும் இல்லை ஈழத்தில், கதவைத்தட்டாத வீடுகளும் இல்லை. உண்மைதான்

இந்த கொடுமைகளைக் கண்கொண்டால் இரத்தம் கொதிக்காதவன் மனிதனும் இல்லை.

இப் பெரும் வரலாற்றுக் காயத்துக்கு மருந்து பகையை வளர்ப்பதாலா, உறவை வளர்ப்பதாலா இடைக்கும்?

வெறும் துவக்கத்திலேயே தமிழீழத்தின் பிரசவம் சந்திக்கப் போகும் சூழ்நிலைப் பிரதிகூலங்கள்.

சிறுபான்மை இனம்.

எந்த நாட்டுக்கும் பெரும்பான்மையிடம் பகையை வாங்கிக் கொண்டு உள்நுளையும் தன் புதிய உறவுக்கொள்கை. சிறுபான்மையிடம் மேலான நன்மை பெற்றுத்தரும் என்று நினைக்கமாட்டாது.

எமது கலாச்சாரத்தின் தன்மை.

இந்தியாவுக்கு போட்டியான அண்டைப் பிராந்திய சக்திகள் புது உறவுக்கரம் நீட்ட, அவர்கள் உளவியல் சமன்பாட்டுக்கு தீர்வு கொடுக்காத காரணிகளாக இருக்கின்ற எமது கலாச்சாரப் பண்பு.

இந்தியாவுடன் இன்றுள்ள பகையப் போல் பன்மடங்கு அதிகமாகவேதான் இருந்தாலும், காலஓட்டம் அதைக் கரைத்து விடும் மாறாக, இந்தியாவின் எதிரிகளை எம் எதிரிகள் போல் பாவிக்கவும் செய்யும் கலாச்சாரத்தின் காலநிலைக்குள் வாழ்கின்றமை.

எனவே எம்தேசத்தில் உள்ள ஒவ்வொரு துகள் மண்ணிலும் தன் தேசியப்பற்றுக்கு உரம் உள்ளதுபோல்,

இந்தியத்தின் தேசியபற்றிக்கும் உரம் உள்ளதென்பது ஆய்வாளர்கண்களுக்கு நிதர்சனமான உண்மை.

எனவே இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பிராந்திய சக்தியும், தமக்கு நாட்பட்டு நிரந்தரமான பின்னடைவாகப் போகும் திட்டமொன்றுக்கு, அத்திவாரம் இடமுடியுமா?

எனவேதான் இந்தியாதவிர்ந்த எந்த நாட்டின் ஆதரவையும் அடித்தும் பழுக்கவைக்க முடியாத தேசியப் பண்பு கொண்டதே ஈழம்.

  • Replies 119
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் தேவன் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு மனம் வர மறுக்கிறது. ஈழவனின் கருத்தே மிகச் சரியானது. அது மட்டுமல்ல தமிழீழத்தை சீனாக்காரன் ஆதரித்தாலும் இந்தியா ஆதரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசித்தவர்கள் ஆனால் சிங்களவர்களோ என்றும் இந்தியாவை எதிர்த்து வந்தவர்கள்தாம். தனி ஈழத்தை மனபலத்தாலும் மறவர் தோள் பலத்தாலும் வென்றெடுக்கும் திறன் ஈழப் போராளிகளுக்கு உண்டு. இந்தியா அந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரலு அளித்தாலே போதும். அனால் அதைச் செய்யாமல் ஒன்று பட்ட இலங்கை என்று சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குகிறது.

இந்தியாவையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் போட்டுக் குழப்ப வேண்டாம். அவர்கள் நம் இரத்த உறவுகள். நான் இங்கே குறிப்பிடுவது டில்லி அரசியலை. நான் அறிந்தவரை ஈழத்தை முழு முச்சாக ஆதரிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் 95 வீதமானோர் இந்திய எதிர்ப்பாளர்களே.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது பிழை துயவன் மறக்க முடியாத கொடுரங்கள் இக்கொடுமைகளை எம் அடுத்த சந்ததியும் அறிய வேண்டும் அரசியல் கரணத்துக்காக மறக்க சொல்ல முடியாதவை இவை. இந்தியப் பிரதமர் இந்திய அட்டூழியப்படையால் பாதிக்கப்பட்டவரின் நினைவுதுபியில் மலரஞ்சலி செலுத்தினாலும் மன்னிக்கபட முடியாதவை அவற்றை மறந்து கைகோர்ப்போம் என்பது முட்டாள்தனம்
எது ஈழவன் பிழை? சும்மா பழைய கதைகளைக் கதைத்து பிரச்சனைகளைக் கூட்டுவது இந்த வேலை! இந்தியாவால் எவ்வளவு தூரம் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள்? ஆனால் இந்தியாவால் தன் நெருங்கிய சக போராளிகளையும், ஆதரவாளவர்களையும் இழந்த தலைவருக்கு உங்களை விட வலி அதிகமாக இருக்கும். கிட்டண்ணா சக போராளிகள், குமரப்பா, புலேந்திரன், ஜெனி, திலீபன் என்று ஆரம்ப காலத்தில் ஒன்றாக நின்று தோள்கொடுத்தவர்களை இழந்த போதிலும், தலைவர் இந்தியாவைத் தந்தை நாடாகவே மதிக்கின்றார்! ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வலி என்று அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப் போகின்றாராம்.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றோம் என்ற போர்வையில் எதிரி இந்தியாவிற்கும்- தமிழீழத்திற்கும் பிரிவினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உரம் போராதீர்கள். புலிகள் அண்டை நாடுகளோடு நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் ஏதோ வெட்டுறம், புடுங்கின்றோம் என்று பிரச்சனைகளை அதிகமாக்குகின்றீர்கள். ஏனென்றால் தமிழீழம் பற்றி உங்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது. அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நீங்கள் இருக்கின்ற நாட்டில் குடியுரிமை பெற்று வாழலாம்.

ஒரு காலத்தில் சோழப்பேரரசு, இலங்கை இராட்சியங்களை ஆக்கிரமித்து, அடிமையக்கியது என்று சிங்கள தேசம், அதனோடு இன்று பகைமை பாராட்டவில்லை. ஏன் இந்திய அரசு, போராளி அமைப்புக்களுக்கு பயிற்சி வழங்கியதற்காக, இலங்கையரசு இந்தியாவிற்கு எதிராக நடக்கவில்லை. தமிழர் தரப்பையும், இந்தியாவைம் மோத விட்டு வேடிக்கை பார்த்தது. பின் இந்தியாவையும், எம்மையும் பிரித்து, தான் அதனோடு நட்பாகியது. அவ்வாறே அமெரிக்கா இஸ்ரேல் மூலம் போராளிகளுக்கு பயிற்சி அளித்தது. ஆனால், இன்று அமெரிக்காவை எமக்கு எதிராக்க முயல்கின்றது. இது தான் சுத்தமான இராஜ தந்திரம்.

எதிரியின் சதி தெரியாமல் நீங்கள் அவனுக்கு அடிவருடிக் கொண்டிருக்கின்றீர்கள்.

எந்த நாட்டோடும், கைகோர்ப்பது, வேண்டாம் என்று முடிவெடுக்க நீங்கள் யார்?

தழும்புகள் அழியாது ஆனால் மனதில் தைத்த வலி என்றும் ஆறாது அதை புரியுங்கள்.ஜே அரின் சூழ்ச்சி என சொல்லி சின்னப்பிள்ளைதனமான விளக்கத்தை கொடுக்காதீர்கள் துயவன் இந்தியா என்ன குழந்தையா எவ்வளவு பெரியதேசம் அப்படி அறிவிலிகளா அவர்கள் இல்லை இது வேண்டுமென த்ன் சுயநலத்துக்காக அதாவது தன் பாதுகாப்புக்காக செய்த கொடுமைகள்

எது சின்னப்பிள்ளைத்தனம் என்று கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கேளும். இப்போது நீங்கள் இந்தியா எதிர்ப்புணர்வை அதிகரிக்க முயல்வது சின்னப்பிள்ளத் தனம் மட்டுமல்ல, அடிப்படைச் சிந்தனையே இல்லை என்பதற்கான அடையாளம்.

ஜேஆர் ஒரு தடவை சொன்னார். "ராஜுவ் காந்திக்கு இப்போது தான், 40(??) வயது, ஆனால் என் அரசியல் வாழ்வே 40 வயது" என்று. இந்தியா இவ்வளவு பெரிய நாடு என்பதற்காக அந்த நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து தான் அரசியல் முடிவுகள் எடுக்கின்றார்கள் என்று சிந்திக்கின்றீர்கள் பாருங்கள். அங்கே தான் அறிவிலித்தனம் தெரிகின்றது.

மேலும் இந்தியா தன் சுயநலத்திற்காக தமிழீழத்தை ஆக்கிரமித்தது என்றோ, அல்லது எம் மக்களைக் கொன்றது குறித்ததான விவாதத்துக்கு நான் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் அந்த விவாதமே தேவையில்லாத ஒன்று என்பதையே நினைவூட்டுகின்றேன்.

ஒருவர் சொன்னார் ஆக்கிரமிப்பு படைகள் இவற்றை செய்யும் இது சாதாரனம் என ஆனால் பாதிக்கப்படாதவருக்கு சாதாரணம் பாதிக்கப்பட்டவருக்கு அது வலி,இன்னும் இந்திய தமிழர்கள் IPKF எண்டால் ஏதோ மகாத்மாக்கள் என நினைகிரார்கல் அதை விளங்கப்படுத்த வேண்டும்
இந்தியா செய்தது அன்று சரி என்று விவாதம் செய்தால் அவருக்கு பதில் கொடுங்கள். ஆனால் இந்தப் பிரச்சனை மீண்டும் இங்கே கிளறுவது யார்? இப்போது யாருக்கு பதில் அளிக்கப் போகின்றேன் என்று வெளிக்கிடுகின்றீர்கள்? நீங்களாகவே, கிளறிக் கொண்டு, வலியைப் பற்றிக் கதைக்கின்றாராம்.

இப்படியான மேதவித்தனத்தைக் காட்டப் போய்த்தான் உலகமட்டத்தில் போராட்டத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கின்றீர்கள். ஏதோ, தமிழீழத்தை இந்தியாவில் இருந்து, நகர்த்தி வைக்கலாம் என்று வேறு சிந்திக்கின்றீர்கள் போல.

தூயவன் தேவன் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு மனம் வர மறுக்கிறது. ஈழவனின் கருத்தே மிகச் சரியானது. அது மட்டுமல்ல தமிழீழத்தை சீனாக்காரன் ஆதரித்தாலும் இந்தியா ஆதரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.
உங்கள் நம்பிக்கையில் குப்பையில் போடுக

உலகத்தில் எந்த ஒரு அமைப்பும் ஆதரிக்காவிட்டால், ஆதரிக்க வைப்பது தான் முறை. சிங்கள அரசுக்கு இந்தியா ஆயுதம் கொடுக்க மறுத்தால் சிங்கள அரசு பாகிஸ்தானிடம் போய், ஆயுதங்களைக் கேட்கும். பாகிஸ்தானிடம் இலங்கை சரணடையக் கூடாது என்பதற்காக இந்தியா இலங்கையை ஆதரிக்கும். இது தான் இலங்கையரசு காலம்காலமாகச் செய்து வருவது. இந்தியா முதலில் மறுத்துவிட்டது என்பதற்காக, கோபித்துக் கொண்டு அது செல்வதில்லை.

உங்களுக்கு தமிழீழம் குறித்து எவ்வித பொறுப்பும் இல்லை எண்டதற்காக, எழுந்தமானத்திற்கு விமர்சனம் செய்யக் கூடாது. இப்போது தமிழக மக்கள் காட்டிய ஆதரவுக்காக, இந்தியா வெளிப்படையாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிலைக்குச் செல்ல மாட்டேன் என்ற உறுதிமொழியை வழங்கியது. இது தான் ஆதரிக்க வைக்கின்ற நிலமை.

ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசித்தவர்கள் ஆனால் சிங்களவர்களோ என்றும் இந்தியாவை எதிர்த்து வந்தவர்கள்தாம்.
உங்களின் நேசம் உண்மையாக இருந்தால் இப்படி நீங்கள் கதைக்கத் தேவையில்லையே! சிங்களவர்கள் இந்தியாவை எதிர்த்தவர்கள் என்றால், அது பற்றிய விளக்கத்தை இந்திய மக்களுக்கு எவ்வவு தூரம் கொண்டு சென்றீர்கள். சிங்களவர்கள் எதிர்த்தவர்கள் என்பதற்காகவா, இப்போது இந்தியாவை நீங்களும் எதிர்க்கின்றீர்கள்?

தனி ஈழத்தை மனபலத்தாலும் மறவர் தோள் பலத்தாலும் வென்றெடுக்கும் திறன் ஈழப் போராளிகளுக்கு உண்டு. இந்தியா அந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரலு அளித்தாலே போதும். அனால் அதைச் செய்யாமல் ஒன்று பட்ட இலங்கை என்று சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குகிறது
.

இது வெட்டிப் பேச்சு! இப்படியான கருத்துக்கள், போராளிகள் மீது அழுத்தங்களைக் கொடுத்து, போராட்டத்தை இழுத்தடிக்க செய்கின்ற முயற்சி. எதிரியின் ஆக்கிரமிப்புக்கும், அழிப்புக்கும் எதிராக போராட மக்களுக்குள் இருந்து போனவர்களே தவிர, வானத்தில் இருந்து அவர்கள் வரவில்லை. போராளிகளுக்கு தமிழீழம் பெற்றுத் தரும் சக்தி உண்டு என்பதற்காக, உலகம் முழுக்கப் பகையை உருவாக்கி மோத வைக்க வேண்டும் என்பதா இந்த வேலை?

18 000 போரளிகளையும், 80 000ம் மக்களையும் இழந்த பின்னராவது புத்தி வரவில்லையா?

இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றால், அதை ஆதரிக்க வைக்கின்ற செயலைச் செய்ய வேண்டும்! ஆதரிக்க வைக்க நீங்கள் செய்த பங்கு என்ன? ரசியாவில் மழை பெய்தால், யாழ்பாணத்தில் குடை பிடிக்கின்ற கணக்காக, பாகிஸ்தான், இந்தியாப் பிரச்சனையை வைத்து, இந்தியாவை திட்டிக் கொண்டிருப்பதா?

இந்தியாவையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் போட்டுக் குழப்ப வேண்டாம். அவர்கள் நம் இரத்த உறவுகள். நான் இங்கே குறிப்பிடுவது டில்லி அரசியலை. நான் அறிந்தவரை ஈழத்தை முழு முச்சாக ஆதரிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் 95 வீதமானோர் இந்திய எதிர்ப்பாளர்களே.

சிங்கள தேசத்துக்கு ஏன் ஆதரவு வழங்குகின்றது என்ற உம் கேள்விக்கான பதில் இங்கே நீர் எழுதியிருப்பது தான். தமிழ்நாட்டுத் தமிழ்மக்கள் இந்தியாவை எதிர்கின்றார்களா இல்லையா என்று உம்மிடம் சொன்னார்களா? எப்போது கருத்துக்கணிப்பு நடத்தி, 95 வீதம் என்று கணக்கெடுத்தீர்? உமக்கேன் முத்தின வேலை?

தமிழ்நாட்டில் இருந்து, ஆதரவு தருகின்ற மக்களை இவ்வாறு எழுதுவதன் மூலம், இந்தியா எதிர்ப்பாளராகக் காட்டி, அவர் தமிழீழத்துக்கு ஆதரவு தராமல் தடுக்கின்ற செயலைத் தான் நீர் இங்கே செய்கின்றீர். ஏற்கனவே மத்திய அரசு, தமிழீழம் கிடைத்தால், அது இந்தியாவிற்குள் பிரிவினை உருவாக்கும் என்று முட்டாள்தனமாக சிந்திக்கின்ற கருத்துக்கு தூபம் போடுகின்றீர்.

இது கூடத் தமிழீழத்தை இந்தியா ஆதரிக்காமல் தடுக்கின்ற ஒரு முயற்சியே! என்றைக்கு தமிழீழ விடுதலை என்பது இந்தியாவிற்கு பாதகமில்லை என்று அடையாளப்படுத்துகின்றோமோ, அன்று வரை அவர்கள் சிங்களத்துக்கு ஆதரவாகத் தான் செயற்படுகின்ற நிலமையை உருவாக்கும்.

-------------------------------------------------

இவ்வாறே ராஜுவ் கொலையில் உரிமை எடுக்கும் கனவான்களின் வேலையால் தமிழீழத்துக்கு அவப்பெயர். நேரு குடும்பத்தில் நேருவிற்கு பிறகு இந்திரா காந்தி, சஞ்சாய் காந்தி, ராஜுவ் காந்தி என்று வம்சமே அழிக்கப்பட்டது ஏன்?பின்னர், சோனியா காந்தி பிரதமாக வர வாய்ப்பிருந்தும், கடைசி நேரத்தில் ஏன் தடுக்கப்பட்டார் என்பதற்கான பதில், நேரு குடும்பத்தை பதவியில் இருந்து அகற்ற பின்ணனியில் யாரோ செயற்படுகின்றார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கும்.

ஆனால் எங்களுக்குள் உள்ள திமிர், ராஜுவ் கொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஒரு விடயத்தை அனைவரும் புரிந்தாக வேண்டும். ராஜுவ் கொலை தொடர்பாக இந்தியாவால் இது வரை ஆதராங்கள் எதையுமே ஆக்கபூர்வமாகக் காட்ட முடியவில்லை. அதனால் தான் பாலா அண்ணா இந்தியாவோடு, நெருக்கமாக வேண்டும் என்று உரைத்ததை, திரித்து ராஜுவ் கொலைக்கு உரிமை கோரியதாக இந்திய உளவுத்துறை அறிவித்தது.

ஆக, புலிகள் மட்டத்தில் எவ்வாறாவது ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அது அலைகின்றது என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும். சமீபத்தில் தமிழ்செல்வன் வெளிப்படையாகவே, ராஜுவ் கொலைக்கு புலிகள் பொறுப்பாளிகள் அல்ல என்று சொன்னதை, அது தம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவிடாது தடுத்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இந்திய மக்கள் மத்தியில் ராஜுவ் கொலைக்கு புலிகள் பொறுப்பாளிகள் அல்ல என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது. அப்போது தான் தான் மக்களுக்கிடையிலான உறவு அதிகரிக்குமே தவிர, சிங்கள தேசம் விரும்புகின்ற போன்ற தமிழக மக்களுக்கிடையிலான விரிசலை அதிகரிப்பதால் அல்ல.

தமிழீழம் தான் எம் இலக்கே தவிர, பிரச்சனைகளை வளர்ப்பதால் அல்ல.

புலி அடிச்சு பிளந்து கொட்டினா அதை வைச்சு கொக்கரிக்கலாம். கெட்டகாலம் புலி வேற அமைதியாக இருக்குது.

தேசி ஆதரவாளர்கள் இரை மீக்கிறதுக்கு பொழுது போக்கிறதுக்கு ஏதாவது தேவை தானே. அதுக்குத்தான் வேறை என்ன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதத்துக்கு அடிவருடியாக இருப்பவன் இந்தியாவுக்கும் அடிவருடியாகத்தான் இருப்பான் என்பதை தூயவன் மெய்ப்பித்து விட்டார். ஏனென்றால் இந்துத்துவமும் இந்தியத் தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.

ராசா இந்தியாவுக்கு அடிவருடியாக இருக்கச் சொல்லி ஒருவரும் இங்கு எழுதவில்லை. இந்தியாவோடு வரிஞ்சு கட்டிக் கொண்டு மல்லுக் கட்டிற கருத்தாடல்கள் தான் ஆக்கபுhர்வமற்றது எண்டு திருப்பி திருப்பி சொல்லப்படுகிறது. பழய கசப்பான அனுபவங்களை மீட்டுப் பார்க்கும் பொழுது எதிர் காலத்தையும் நினைத்து எழுதவும். பழயவற்றை மீட்டுப்பார்ப்பதன் நோக்கம் ஒரு புரிந்துணர்வில் மரியாதையை வழர்த்து புதிய நம்பிக்கையை உருவாக்கி உறவை பலப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும். எமது தேசியத்தோடு முரண்படாத இந்தியாவின் தேசியத்தைப் பற்றிய உள்வீட்டு விடையங்கள் எமக்கு தேவையற்றது. இந்தியாவில இந்தி படிப்பீக்கட்டும் இந்து கோயில் கட்டட்டும் ராமருக்கு விழா எடுக்கட்டும், இந்தியாவின் தேசியம் என்றால் என்ன என்று விளங்கப்படுத்தட்டும். அதை கேக்க நீங்கள் யார்? இந்தியாவின் தேசியத்தில் இலங்கைத் தீவின் தமிழர் தாயகத்தையும் இணைத்து விளக்கம் கொடுத்திருந்தால் இந்தியாவின் தேசியத்திற்கு எதிராக எழுதுங்கோ.

மற்றும் படி பகுத்தறிவு என்றதன் ஊடாக மதம் கடவுள் என்ற மாயைகள் பற்றி எழுதும் பொழுது ஈழத் தமிழர் என்ற எங்களுக்குரிய வட்டத்தை முதலில் திருத்த முயற்சியுங்கோ. அது தான் இன்றய தேவை. உங்கடை சனம் முக்கியமாக புலம்பெயர்ந்தவர்கள் இந்து மதத்தின் பெயரால் விரையமாக்கிற நேரத்தையும் பொருளாதாரத்தையும் பற்றி சிந்தியுங்கோ கருத்தாடுங்கோ மாற்றங்கள் கொண்டு வர முயற்சியுங்கோ. ஈழத் தமிழர் தான் விடுதலை வேண்டி போராடிற இனம். அவர்களிற்கு தான் நெருக்கடிகள் அவலங்கள் என்று தொடர்ந்து கொண்டு இருக்கு. அந்த அவலங்களின் மத்தியில் மூடநம்பிக்கைகளில் கடவுளின் பெயரால் விரயமாக்கப்படும் பொருளாதாரம் மிகவும் வேதனைக்குரியது. இந்தியத் தமிழருக்கும் கஸ்மீர் இஸ்லாமியருக்கும் அறிவுரை கூற முதல் எங்கடை அவலத்துக்கு ஏதாவது யோசிப்பம். மூஞ்சுhறு தான் போக வழியக் காணம் இந்தியாவின் தேசியத்துக்கு வியாக்கியானம் வேண்டிக் கிடக்கு.

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநியாயங்களும் அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் உங்களில் யாராவது குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் அனைவரும் தோழர்களே! - தோழர் சேகுவேரா.

சிங்களப் பேரினவாதம், இந்திய வல்லாதிக்கம், அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தும் பேயரசுகளின் பிணந்தின்னிக் கழுகுகளே!

அநியாயங்களும் அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் உங்களில் யாராவது குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் அனைவரும் தோழர்களே! - தோழர் சேகுவேரா.

சிங்களப் பேரினவாதம், இந்திய வல்லாதிக்கம், அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தும் பேயரசுகளின் பிணந்தின்னிக் கழுகுகளே!

அடயாரப்பா இந்தநேரத்தில் இப்படியபன குப்பை விசயத்துக்காக என்ளையிளுப்பது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விது உது நல்லா இல்லை அம்புட்டுதான்

இதை நீர் குப்பை என்பதால் சேகுவேராவின் படத்தை எடுத்து விடும். பதிலுக்கு வாஜ்பாயி அத்வானியின் படங்களைப் போடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதத்துக்கு அடிவருடியாக இருப்பவன் இந்தியாவுக்கும் அடிவருடியாகத்தான் இருப்பான் என்பதை தூயவன் மெய்ப்பித்து விட்டார். ஏனென்றால் இந்துத்துவமும் இந்தியத் தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.

இளங்கோ, ஈழவன் உங்கள் இருவர் கருத்துக்களும் முழுமையாக மறுப்பதற்கு முடியாதவைதான். தூயவனின் கருத்துக்கள், எமது குறிக்கோள்களுக்கு ஆரோக்கியமான பாதை எது என்பதை வெளிப் படுத்துகிறது.

எபோதும் ஒரு பிராந்திய சக்தியின் தேசியநலம், எப்போதும் அண்டை அயலில் தோன்றும் புதிய மாற்றங்களை, தானே தத்தெடுக்க ஆசைப்படும். இதுவே உலகபோக்கின் தேசியத்தர்மமாகும்.

எனவே தமிழீழம் என்ற எமது இலட்சியம் இந்தியதேசியவாதக் கணக்குக்கு வேம்பாக இருந்தது.

உலகநடைமுறையின் எல்லைக்குள் இருந்து தன் சக்திக்கு ஆனமட்டும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தது எமது போராட்டத்துக்கு.

எமது போராட்டம் அனைத்து தடைகளுக்குள்ளும் தீக்குளிப்புச் செய்து தனது இலட்சியத்தை அடைவதில் உறுதியாக இருந்தது.

எனவே இந்திய தேசியத்துக்கு புதிய சூழ்நிலை உருவாக்குகிறது, தமிழீழம் முளைப்பதைத் தடுக்கமுடியாமையினால், அவர்கள் திட்டம் இனி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப் படவேண்டும்.

இனி அவர்களின் புதிய உறவுக் கொள்கைக்கு, ஆதரவுத் தூதை அனுப்ப வேண்டிய நிலமையை உருவாக்குகிறது தமிழீழத்தின் மலர்ச்சி.

எனவே யதார்த்தப் போக்கை வெல்லும் வழியில் எமது சிந்தனைகள் பயணிக்கட்டும்,

வெறும் பல்லைச் சப்பி பச்சை தண்ணி மெண்டு கொண்டிருக்கும் பகை உணர்வை விடுத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்துக்கு அடிவருடியாக இருப்பவன் இந்தியாவுக்கும் அடிவருடியாகத்தான் இருப்பான் என்பதை தூயவன் மெய்ப்பித்து விட்டார். ஏனென்றால் இந்துத்துவமும் இந்தியத் தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.

எந்த நாடுகளையும் நட்பாக்குவதன் மூலம் தான், எமக்கு தமிழீழத்தை விரைவாக பெற்றெடுக்க வழி ஏற்படும் என்றால் என்னை அடிவருடி என்று கதை கட்ட முயல்கின்றீர். ஆனால் உம்மிடம் இவ்வாறு அவச்சொல் கேட்பது எனக்குப் புதிதல்ல.

ஜேர்மனி இவ்வளவு அக்கிரமம் யூதர்களுக்கு செய்தபோதும், ஜேர்மனியோடு நட்பாக இருந்தபடி, தன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இஸ்ரேல் இட்டுச் சென்றிருக்கின்றது. அந்த நிலமை தான் தமிழீழ மண்ணும் பெற வேண்டும். இப்படி திட்டிக் கொண்டு இருந்து எவ்வித பிரியோசனமும் எமக்கில்லை. எம் இறைமையைப் பாதுகாக்கும் அதே வேளை, அண்டை நாடுகளோடு நட்புறவு அவசியமே!

எதிரி இந்தியாவை பகைக்க வைப்பதால் எவ்வளவு அனுகூலம் பெறுகின்றான் என்பதையோ, மற்றய நாடுகளை எதிரியாக்கி எங்களை எவ்வளவு தூரத்தில் வைக்க முயல்கின்றான் என்பதைச் சிந்திப்பது நல்லது. தமிழீழத்தை உலக மட்டத்தில் அங்கிகரிக்க வைக்க மற்றய நாடுகளின் ஆதரவு நமக்கு மிகமிக அவசியமாகும்.

--------------------------------------

இந்துத்துவம் என்றதைப் பற்றிய ஒரு மண்ணும் அறியாத ஆள் நீர் என்பதை உணர வைத்திருக்கின்றீர். அது இந்தியத் தேசியமாக இருந்திருந்தால் அம்பேத்கார் சட்டங்களை உருவாக்க முடிந்திருக்காது. முஸ்லீம்கள் நாட்டுத் தலைவர்களாக ஆகியிருக்கவும் முடியாது.

இந்திய மண் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டியது அவ் நாட்டு மக்களே! உமக்குப் பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையிருந்தால் தாராளமாக இந்தியாவிற்குப் போய்ச் செய்யும். லண்டனில் இருந்து கொண்டு, தமிழீழ மண்ணைப் பாவித்துச் செய்ய வேண்டாம். அது என்றைக்குமே அவ்வாறான சிந்தனை கொண்டது கிடையாது.

தமிழீழத்தை சிங்கள தேசம் மனமுவந்து தந்திருக்குமானால் அது கூட நமக்கு நட்பு நாடு தான். அது சாத்தியமற்றுப் போனதால் தான் இந்தப் போராட்டம். ஆனால் பலருக்கு மனோரீதியாக ஏற்பட்ட வெறியை நீக்க என்னுமொரு போராட்டம் செய்தாக வேண்டி இருக்கின்றது போல.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயங்களும் அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் உங்களில் யாராவது குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் அனைவரும் தோழர்களே! - தோழர் சேகுவேரா.

சிங்களப் பேரினவாதம், இந்திய வல்லாதிக்கம், அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தும் பேயரசுகளின் பிணந்தின்னிக் கழுகுகளே!

தாய்நாட்டையே என்னும் பெறக் காணோம். அண்டை வீட்டில் அடிதடி தேவையா என்றும் சேகுவரா கேட்கவில்லையா? தமிழீழம் தான் எங்கள் இலக்கே தவிர, மற்றவர்களோடு முண்டிக் கொண்டிருப்பதல்ல. அமெரிக்கா பிணம் தின்னுகின்றதா இல்லையா என்பது கவலையல்ல. நம்மவர்களை சிங்களப் பேரினவதிகளிடம் இருந்து காப்பாற்றுவது மட்டும் தான் நம் தேவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பேரவா. ஆனால் மீண்டும் மீண்டும் ஒன்று பட்ட இலங்கை, இறையாண்மை போன்றவற்றைப் பற்றி கீறல் விழுந்த றெக்கோடர் மாதிரி இந்தியா பிதற்றிக் கொண்டிருந்தால் எரிச்சல் வராதா?

இலங்கையின் இறையாண்மை பற்றி இது என்ன இழவுக்கு கவலைப் படுகிறது. கொசோவோவை ஆதாரிக்கிறது செக்கோஸ்லோவாக்கியா பிரிந்ததை ஆதரிக்கிறது ஆனால் தனக்குப் பக்கத்தில் தினம் தினம் மனித அவலத்தை சந்திக்கும் தமிழர்களைப் பற்றிக் கவலை இல்லை. இந்தியா நினைத்தால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம் ஆனால் அதோ இரட்டை வேடம் போடுகிறது.

நம்மவர்களுக்கோ இன்னும் இந்திய மயக்கம் தீர்ந்த பாடில்லை. அந்தக் கேவலமான நாட்டை தலையில் துக்கி வைத்து ஆடுகிறார்கள். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் டில்லியின் துரோக அரசியல் உங்களுக்கும் புரியும்.

Edited by இளங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி ஜனனி.

எனது கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மிக நல்ல தகவல்களை இணைக்கின்றீர்கள். என்ன ஒரு வருத்தம் அவ்வப்போது காணாமல் போய்விடுகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனனியின் பதிவையொட்டி ஒரு கருத்தை தெளிவாக்க விரும்புகிறேன்

தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டம் வேறு. தமிழீழ விடுதலைப் போராட்டம் வேறு. இரண்டுமே வேறு வேறு தளங்கள். தமிழ் நாட்டுப் பிரிவினைக்கு தமிழீழம் ஒரு போதும் காரணமாக இருக்காது.

தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றிவிட்டால் இந்தியாவில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை வலுவடையைச் செய்து விடும், என்ற கருத்து இந்தியாவுக்கு இருக்கிறது. இக்கருத்து பொய்யானது மட்டுமல்ல வரலாற்று முரணானதும் கூட. ஈழத்தில் தனி நாட்டுக் கோரிக்கை 1970 களின்; தொடக்கத்தில்தான் எழுப்பப் படுகிறது. அது வரைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வையே (Federal Solution) தமிழர்கள் எழுப்பி வந்தார்கள், அதுவும் 1949 இல்தான் சமஷ்டிக் கட்சி (Federal Party) தொடங்கப் படுகிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் 1938-ம் ஆண்டு தந்தை பெரியார், சோமசுந்தரப் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களால் ~தமிழ்நாடு தமிழருக்கே| என்ற விடுதலைக் குரல் தமிழக மண்ணில் எழுப்பப் பட்டு விட்டது. தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இறுதிவரைக்கும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இவர்கள் யாரும் ஈழத்தைப் பார்த்து தங்கள் விடுதலைக் கோரிக்கையை எழுப்பவில்லை. ஏனவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ் நாடும் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் என்று கூறுவது பொருத்தமற்றது. வங்கதேசம் பிரிந்தவுடன் அதனோடு ஒட்டி இருந்த மேற்கு வங்காளம் பிரிந்து சென்றுவிடவில்லை. தமிழீழம், தமிழகம் போன்றே வங்கதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருப்பவர்கள் ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ எழுச்சி சிங்களப் பேரினவாத அடக்கு முறையால் எழுந்தது. தமிழ் நாட்டு விடுதலை இந்திய வல்லதிக்கத்தின் சமூக பொருளாதார அடக்கு முறையால் எழுந்தது. ஒன்றைப் பார்த்து ஒன்று எழவில்லை.

ஆனால் இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதுடன் நூற்றுக்கு நூறு நியாமானவைகளே!

எனது பேரன்பிற்குரிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மிக அழகாக இப்பச் சொல்லுவார்

சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது சாட்டையடி அதன் வலியை அவர்கள் நேரடியாகவே உணர்ந்து கொண்டதால் அதை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் இந்தியம் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கொடுத்தது மயக்க ஊசி. அதனால் அவர்கள் போராட வேண்டும் என்ற உணர்வே அற்று மயங்கிக் கிடக்கிறார்கள்.

தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுத்தள்ளுதே! நம்ம இந்தியா ஏங்க கைகட்டி வேடிக்கை பார்க்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுத்தள்ளுதே! நம்ம இந்தியா ஏங்க கைகட்டி வேடிக்கை பார்க்குது.

ஏனென்றால் அவர்களும் தமிழர்கள். எங்களை விடுங்கள் உங்களுக்கும் இந்திய அரசு செய்வது பச்சைத் துரோகமே. இது புரியமல் இந்தியன் என்று சொல்வதில் பெருமையடைகிறார்கள் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழ் நாட்டவர்கள்

ஏனென்றால் அவர்களும் தமிழர்கள். எங்களை விடுங்கள் உங்களுக்கும் இந்திய அரசு செய்வது பச்சைத் துரோகமே. இது புரியமல் இந்தியன் என்று சொல்வதில் பெருமையடைகிறார்கள் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழ் நாட்டவர்கள்

இப்படி எழுதப்போய் இநிய தேசியத்தை கேவல்ப்படுதிறம் என பழிச்சொல்லு வரும்

பிரிந்திருப்பதை விட சேர்ந்திருப்பதே பலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எழுதப்போய் இநிய தேசியத்தை கேவல்ப்படுதிறம் என பழிச்சொல்லு வரும்

பிரிந்திருப்பதை விட சேர்ந்திருப்பதே பலம்

தமிழ்நாட்டினதும், ஈழத்தினதும் சுயநிர்ணய உரிமைக்கான தேவைகளை ஒரே அலகால் அளக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

எமது இருப்பு பிழைப்பதற்கு இனவாதத்தால் விட்டுவைக்கப் பட்ட ஒரேவாசல் தான் இது.

தவிர ஏன் இந்தியாவுக்கு மானிலங்கள் இணைந்த அரசமைப்பே சிறந்தது என காரணங்களை வரிசைப்படுத்தினால், அவற்றில் ஒன்று கூட, இலங்கையின் ஒன்றுபட்ட அரசமைப்பின் சாதிப்பு எல்லைக்குள் அடங்காதவையாகவே இருக்கும்.

இனவெறி எம்மீது சுமப்பித்த மனித அவலங்களின் அளவினாலும். காலம் காலமாக அரசவாதம் கடைப்பிடிக்கும் நம்பிக்கையின் முதுகில் குத்தும் போக்கும், எமது தமிழீழக் கோரிக்கையை நியாயப் படுத்தப் போதுமானதாகிறது.

தானே போகமாட்டாத மூஞ்சூறுக்கு எதுக்கு உலக அரசியலின் உழவாரம் எல்லாம்.

வக்கணையாய் பதிவுகளில் காட்டும் புரட்சிகரம் எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா?

இந்திய சக்தி எமக்கு நன்மையே செய்தது, நன்மையே செய்து கொண்டிருக்கிறது என்ரு சொல்ல வரவில்லை. பாதகத்தையே புரிந்தது, பாதகத்தையே தொடர்ந்த வண்ணமும் உள்ளது இதுவரைக்கும். இதுவே உணமை. இந்தியாவின் செயலை எமக்கு சார்பாக மாற்றுவதே எமது முயற்சி. இது தமிழ் நாட்டு மக்களின் மனங்களை வெல்வதாலேயே எமக்கு கிட்டும். தவிர புறணிபாடுவதாலோ, அவர்கள் உள்வீட்டு விடயங்களுக்கு பௌகுத்தறிவு புகட்டுவதாலோ அல்ல.

இதனாலேயே இந்திய சத்தி என்ற பாம்பு எமது போராட்டத்தை தீண்டத், தீண்ட அதை தள்ளி விடுகிறோமே அன்றி அதை கொல்ல முயற்சிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே நாம் ஒரே அலகால் அளக்க நினைக்கிறோம்?!

இரண்டும் வேறு வேறு தளங்கள் என்று விளக்கியிருக்கிறேனே!

நாளை தமிழீழம் மலர்ந்தால் அது ஒரு போதும் தமிழ் நாட்டு விடுதலைக்கு வழி சமைக்காது. அதேநேரம் தமிழ் நாட்டு விடுதலையின் நியாயங்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. இந்நிய அடக்கு முறை, காவேரிச் சிக்கல், பொருளாதார சமநின்மை இப்படி பல்வேறு சமுக பொருளாதார காரணிகள் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு மானில ரீதியான தனிநாடு வளங்கப் பட்டால், அதன் எதிர்காலம், அமெரிகா! போன்ற வன்சக்திகளுக்கு தங்கள் சுயாதீனத்தை தாரைவார்த்து ஒரு முதுகெலும் பில்லாத அரசுகளாகத்தான் இருந்து தொலைக்க முடியும்.

எதிர்காலத்தில் மானிலங்களின் உணர்வுகளை, உரிமைகளை கௌரவப் படுத்தும் வண்ணம் மத்தியின் அரசமைப்பு திருத்தம் பெறவேண்டும். முன்னோடியாக மானிலங்களின் நிர்வாகம் ஊழல் சுத்திகரிப்பு பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் மத்தியின் முன்னேற்றத்துக்கு கூட இத்தகைய மானிலங்களின் சுயாதீனப் போக்கு இடைஞ்சலாகிவிடும்.

இல்லையேல் விடுதலையின் புண்ணியம் மற்றவனுக்கு குண்டிகளுவுவதாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு மானில ரீதியான தனிநாடு வளங்கப் பட்டால், அதன் எதிர்காலம், அமெரிகா! போன்ற வன்சக்திகளுக்கு தங்கள் சுயாதீனத்தை தாரைவார்த்து ஒரு முதுகெலும் பில்லாத அரசுகளாகத்தான் இருந்து தொலைக்க முடியும்.

இந்தியா தற்போது எப்படி மாறிவிட்டது தெரியுமா? முழுக்க முழுக்க ஒரு அமரிக்க அடிவருடியாக.

அதாவது அமதிரிக்காவிலுள்ள மாநிலங்களான அரிசோனா, கலிபோர்னியா, மிஸிஸிப்பி போன்று இந்தியாவும் ஒரு மாநிலம்தான். அமரிக்கா எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறதோ அந்தப் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு திரும்பிப் பார்க்கும் ஒரு நாடுதான் இந்தியா.

தேசிய இனங்களின் ஒட்டு மொத்த எழுச்சியும் அவர்களுக்குள் ஏற்படும் கூட்டுறவும்தான் ஏகாதிபத்தியத்தை விழுத்தும் வல்லமை படைத்தவை.

1980 களில் இந்தியவின் அயலுறவுக் கொள்கை வேறு. பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. அப்போது சோவியத் யூனியன் உலக வல்லரசாக விளங்கியது. இந்தியா என்னதான் தன்னைத் தான் அணிசேரா நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்திராகாந்தி தன்னை அணிசேரா நாடுகளின் தலைவி என்று கூறிக் கொண்டிருந்தாலும் இந்தியா சோவியத் யூனியனின் தயவோடுதான் இயங்கியது.

தற்போது நிலைமை வேறு.

Edited by இளங்கோ

  • 2 weeks later...

தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கும்

கொடிய சிங்களரோடு குலாவும் இந்தியா

- இலெனின் தங்கப்பா

இந்திய அரசைப் போன்ற கடைந்தெடுத்த கயவாளித் தனமான அரசு உலகில் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. சொல்லப்போனால் இலங்கையில் ஆட்சி நடத்தும் கொடிய இனவெறியரசாகிய சிங்கள அரசைவிட இந்திய அரசு இன்னும் கீழ்த்தரமானது. உண்மையாளர் நெஞ்சில் அருவருப்பை எழுப்பக்கூடியது.

சிங்கள அரசின் இனவெறியும், ஈழத்தமிழர்களுக்கு அது இழைத்துவரும் கொடுமைகளும் அவர்களை ஒடுக்குவதற்காக அது பரப்பிவரும் பொய்களும் மேற்கொள்ளும் அரசியல் விரகாண்மைகளும், சில கயவர்களைக் காவுகொடுத்து விலைக்கு வாங்கும் மட்டமான நடைமுறைகளும் உலக வரலாற்றையே கறைப்படுத்தும் தன்மை வாய்ந்தவை; உண்மைதான். ஆனால் சிங்கள அரசு ஈழத்தமிழரைத் தன் எதிரியாகக் கருதி அவர்களை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டி அத்திட்டத்தைத் தான் பல்வேறு வகையில் செயல்படுத்தி வருகின்றது. உலகின் எல்லாப் பேரின வெறி அரசுகளும் தம் கீழிருக்கும் சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்கித் தம் மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்ளும் வன்முறையையும் சூழ்ச்சிகளையுமே சிங்கள அரசும் செய்து வருகின்றது. கொடியவன் கொடியவனாகத்தான் இருப்பான். வெளிப்படையாகவே தன் கொடுமைகளையும் அவன் செய்கின்றான்.

ஆனால் நல்லவன் போல் நடித்துக்கொண்டு எவன் ஒருவன் கொடியவனாக இருக்கின்றானோ, அவனே வெளிப்படையான கொடியவனைவிட மிகமிகக் கொடியவன். அதனால்தான் வள்ளுவர் கூறினார்.

"வாள்போற் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக

கேள் போற் பகைவர் தொடர்பு.

என்று!

அமெரிக்கா போன்ற அடாவடி அரசும் இசுரேல் போன்ற இனவெறி நாடும் பிற இனங்களை அடக்கியும் ஒடுக்கியும் படுகொலை புரிந்தும் செய்யும் அட்டுழியங்கள் உலகறிந்தவை. ஆனால் 'புண்ணிய பூமி', 'ஞானபூமி' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்திய நாட்டின் நடுவணரசு, காந்தியடிகள் அடி நின்று அன்புவழி நடப்பதாகப் பீற்றிக் கொள்ளும் தில்லி அரசு மாந்த நேயமற்றதும், பிறரை அழித்தொழித்துத் தன்னை நிலை நாட்டிக் கொள்கின்றதுமான ஓர் அரசாக இருப்பதுதான் அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது. தன் பிழையான அரசியல் கோட்பாடுகளால் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்கின்றது.

அமெரிக்கா, இசரேல் போன்ற கொடிய நாடுகள் உட்பட உலகிலுள்ள வல்லாட்சி நாடுகள் பிற நாடுகளுக்குத் தீங்கிழைக்கின்றனவே தவிரத் தம் சொந்தக் குடிகளைப் பேணிக் காப்பதில் மிக மிக அக்கறை காட்டி, மிக மிக உறுதியாக நடந்துகொள்கின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒருவன் வேறெந்த நாட்டிலோ சிக்கலில் மாட்டிக் கொள்கின்றான் என்றால் உடனே அமெரிக்கா பதறித் துடிக்கின்றது. விரைந்துபோய் அவனுக்கு உதவி செய்கின்றது. ஆனால் இந்தியா தன் சொந்தக் குடிகளாகிய தமிழ் மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?

ஒரு நாட்டின் குடிமகன் வேறொரு நாட்டில் குற்றம் செய்து தண்டனை பெறும் நிலைகளில் இருந்தால்கூட அந்த நாடு தலையிட்டு அவனை விடுவிக்கவோ அல்லது தண்டனையைக் குறைக்கவோ உடனடி நடவடிக்கை மேற்கொள்வதைக் கண்முன் நடைமுறையில் காண்கின்றோம்.

ஆனால் தன் சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு எதிராக அண்டை நாட்டுடன்

கூட்டுச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இந்தியாவைத் தவிர உலகில் வேறெதுவும் இருக்க முடியாது!

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் பல ஆண்டுகளாகவே அல்லல்கட்கு ஆளாகின்றனர். சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதுவரை சிங்கள இன வெறியரால் சுடப்பட்டு மாய்ந்த தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கை 300 ஐயும் தாண்டிவிட்டது. தன் குடிமக்களைக் காக்கவேண்டிய பொறுப்புள்ள இந்திய அரசு பதறவில்லையே; துடிக்கவில்லையே? கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு கல்நெஞ்சத்தோடு கவலையின்றி நடமாடுகிறதே! உலகிலேயே இத்தகைய அருவருப்பான செயலை வேறெந்த நாடாவது செய்திருக்குமா?

இந்திய அரசு தமிழனைத் தனக்கு முற்றிலும் அயலானாகவே கருதுகின்றது என்பதைத் தவிர வேறெந்த வகையில் இதற்கு அமைவுகூற முடியும்?

எத்தனையோ செய்திகளில் இந்திய அரசு இந்தி வெறி அரசாகவும், வடக்கர்களின் தன்னல அரசாகவும் இருந்து கொண்டு தமிழர்க்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தமிழனைக் காலின் கீழிட்டு மிதிக்கின்றது. இழிவுபடுத்துகின்றது. செம்மொழிச் செய்தியில் அது நடந்துகொண்ட அருவருக்கத்தக்க முறை ஒன்றே போதும் - அது தமிழுக்கெதிரான அரசு என்பதைக் காட்டுவதற்கு. இனி இவை எல்லாவற்றையும் விடத் தமிழ் மீனவர் செய்தியில் அது நடந்துகொள்ளும் முறைதான் அதன் போலி முகத்திரையைக் கிழித்து உண்மை உருவத்தை வெளியுலகுக்கு அப்பட்டமாய்க் காட்டி நிற்கின்றது.

தன் சொந்தக் குடிமக்களை அண்டைநாட்டு அரசின் அடாவடித்தனமான வன்முறையிலிருந்து காக்கவேண்டிய கடமையைக்கூட மறந்து, உலக நாடுகளிடையே தன் பெயர் கெட்டுப்போவது பற்றிக் கூடக் கவலைப்படாமல் தன் முகத்தில் தானே கரிபூசிக் கொள்ளுமளவுக்கு இந்திய அரசின் தமிழினப் புறக்கணிப்புப் போக்கு இருந்து வருகின்றது என்பதை நடுநிலையாளர் எவரேனும் மறுக்க முடியுமா?

உலகிலுள்ள வேறு எந்த நாடும் கூட இந்திய அரசின் இந்த அருவருக்கத்தக்க போக்கைச் சுட்டிக்காட்டவோ கடிந்துரைக்கவோ முன்வரவில்லை என்பதற்கு - தமிழ் மீனவர் படுகொலை வெளி உலகின் கவனத்தில் படுமளவுக்கு எடுத்துக்காட்டப்படவில்லை, அல்லது வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்பதைத் தவிர வேறென்ன காரணம் கூற முடியும்?

தமிழ் மீனவர் தமிழ்நாட்டு மக்கள். நூற்றுக்கு நூறு இந்தியக் குடிகள், தன் சொந்தக் குடிகளை அண்டை நாட்டுக் கடற்படை காரணமே இன்றிச் சுட்டுக் கொல்கிறது. இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது. எந்தக் காரணப் பொருத்தத்துக்கும் உட்படுத்த முடியாத வெட்கங்கெட்ட, கயமைத்தனமான செயல் இது என்பதைத் தவிர வேறு என்ன விளக்கம் கூறமுடியும்?

மீன்பிடித்து வயிறு வளர்க்கச் செல்லும் அப்பாவித் தமிழ் மீனவரைக் குற்றம் சொல்ல முடியுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இலங்கைக் கடல் எல்லையை அவர்கள் மீறியதாகத்தான் இருக்கட்டுமே, அதற்காக அவர்கள் உயிரைக் கொள்ளை கொள்வதுதான் தண்டனையா? அப்படியானல் சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு எதற்கு இருக்கிறது? நாடுகளின் இறையாண்மை (தப்பாக இருந்தாலும்) காப்பாற்றப்படவேண்டுமாம்! குடிமக்களின் உயிர் மட்டு:ம காப்பாற்றப்படக்கூடாதாம்! என்ன மக்களாட்சி இது?

இரண்டு நிலைகளை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். ஒருநாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே உள்ள கடல்பகுதி அகன்று விரிந்ததாக இருக்குமானால் சிக்கலுக்கு வழியில்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கடற்பகுதி அப்படியில்லை! 25 கல்லுக்கும் குறைவாகத்தானே உள்ளது. மேலும் கடலின் நடுவில் என்ன குறுக்கே எல்லைச் சுவரா கட்டிவைத்திருக்கிறார்கள்! தப்பித் தவறி எல்லை மீறல் நடக்கத்தான் நடக்கும். அதற்குச் சட்டப்படியான நடவடிக்கைதான் மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு தலையிட்டு முறையான நடவடிக்கைக்கு மாறாக எதுவும் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை இருமுறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டோ சுட்டுக்கொல்லப்பட்டோ போனபொழுது இந்திய அரசு தலையிட்டுத் தட்டிக் கேட்டிருக்குமானால் மேற்கொண்டு சிங்களக் கடற்படை வாலை ஒடுக்கிக்கொண்டு போயிருக்கும். ஆனால் இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை என்பதால்தானே தொடர்ந்து மீனவர்களைக் கொல்லும் துணிச்சல் சிங்கள வெறியர்கட்கு ஏற்பட்டிருக்கிறது! தமிழ் மீனவரின் தொடர் சாவுகட்கும் பிற அல்லல்களுக்கும், சிங்கள அரசன்று, நூற்றுக்கு நூறு இந்திய அரசுதான் காரணம். இந்திய அரசின் கண்மூடி வாய்மூடித்தனந்தான் காரணம்.

மற்றொரு வகையிலும் தமிழ் மீனவர் படும் அல்லல்கட்கு இந்திய அரசின் தவறான, போலித்தனமான, தமிழரின் நலம் கருதாத அரசியல் கொள்கையே காரணமாக இருக்கின்றது. கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு. அது முன்னாளில் இந்திரா காந்தி அரசு தமிழர்களுக்கு இழைத்த பெரும் பிழை. ஓரின மக்களைப் பொறுத்தவரை அவர்களின் தாய்மொழி எப்படிப் புனிதமானதோ அப்படியே தாய்மண்ணும் புனிதமானது. இங்கே புனிதம் என்று சடங்குத்தனமாக எதையும் நான் குறிப்பிடவில்லை. மக்களின் உள்ளத்துத் தூய உணர்வுகளைப் போலவே அவர்களின் உயிர்காப்புக்கான சூழலும் மதித்துப் போற்றப்படல் வேண்டும் என்ற பொருளிலேயே கூறுகிறேன்.

கச்சத்தீவு தமிழர்க்குரியது. தமிழ் மண்ணின் ஒருபகுதி. வழிவழியாகத் தமிழ் மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலுக்குத் துணையாகப் பயன்படுத்தி வந்த கடல்நடுத் திட்டு அது. தமிழினத்தின் தலைவர்கள் என்பவர்கள் எப்பொழுதும் தங்கள் சொந்த மக்களின் நலம் கருதாமல் தங்கள் அரசியல் ஆண்டைகளுக்கு வால் குழைப்பவர்களாக இருந்து வந்துள்ளமையாலேயே தமிழர்களின் வழிவழியான, வாழ்வுக்கடிப்படையான தமிழ்மண்ணின் பகுதிகள் ஆங்காங்குப் பறிபோயின. வடவேங்கடத்தை ஆந்திரரும், தேவிகுளம், பீர்மேட்டுப் பகுதிகளைக் கேரளத்தினரும் குறிவைத்தது போலவே தமிழர்க்குரிமையாயிருந்த கச்சத் தீவைச் சிங்களத்தான் குறிவைத்தான். சிங்கள அரசின், சூழ்ச்சித்தன்மை வாய்ந்த கரவுமிக்க அரசியல் தந்திரங்கட்கு ஆட்பட்டு இந்திரா காந்தி காலத்தில் இந்திய அரசு தமிழ் மக்கள் மீது கடுகளவும் அக்கறையற்ற நிலையில் கச்சத்தீவைச் சிங்கள அரசுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அன்றுமுதல் தொடங்கியதுதான் தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படைக் கொடியவர்களின் கையில் இந்த நொடிவரை பட்டுவரும் அவலமும் அழிவும்.

தன்னால் ஏற்பட்ட அவலம் இது என்பது இந்திய அரசுக்குத் கொஞ்சமும் உறைக்கவில்லை. அவ்வாறு உறைக்கும் படி எடுத்துக்கூற நடுவணரசுக்கு வால்பிடிக்கும் எந்தத் தமிழினக் காவலரும் கடுகளவுகூட முயலவும் இல்லை.

வடநாட்டுக்காரனுக்கு வெளிநாட்டில் ஒன்று என்றால் உடனே இந்திய அரசு பதைத்துத் துடிக்கிறது. உதவிக்கு ஓடுகிறது. ஆனால் தன் போலித்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு உட்பட்டுத் தன் கடமையைத்தான் இந்திய அரசு செய்யவில்லை என்றாலும் மாந்தநேய அடிப்படையில் கூடத் தமிழ் மீனவர் உயிர்காக்க முன்வரவில்லையே! தமிழர்களைப் பற்றிய புறக்கணிப்பு இவ்வளவு மட்டமாகவா போகவேண்டும்!

இந்த அரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருப்பதைவிட நாம் ஒட்டுமொத்தமாகச் செத்தே போகலாம்.

"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று"

www.thenseide.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.