Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ?

Featured Replies

ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ?
ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ?

ற்சாகமாகத்தான் இங்கிலாந்து அணி இந்திய அணியை அதன் மண்ணில் எதிர்கொண்டது. புது உத்வேகத்துடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தம்மால் இந்திய அணியை மண்கவ்வ வைக்க முடியும் என்ற நம்பிக்கை முழுக்க முழுக்க இருந்தது. ஐந்து டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் தொடங்கியபோது, இங்கிலாந்து அணி தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

3 சதங்களுடன் இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களைத் தாண்டியபோது, இந்தியாவின் சுழல் பந்து வீச்சுக்கு என்ன ஆயிற்று?அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சதங்கள் தம் மண்ணில் அடித்து நொருக்கும் அளவுக்கு இந்தியாவின் அசத்தும் பந்து வீச்சுக்கு கண்திருஷ்டி விழுந்து விட்டதா என்ற கேள்வியையே பலரும் தமக்குள் கேட்டுக் கொண்டார்கள்.

இங்கிலாந்து 537 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கி நான் உனக்குச் சளைத்தவன் இல்லை என்பதுபோல 488 ஓட்டங்களை எடுத்தது. விஜயும் புஜாராவும் செஞ்சரிகள் அடிக்க, கபில்தேவ் தன் ஆட்டக்காலப் பிற்பகுதியில் ஒரு சகலதுறை ஆட்டக்காரராக மிளிர்ந்ததுபோல, பந்துவீச்சாளர் அஸ்வினும் தன் பங்கிற்கு 70 ஓட்டங்கள் எடுத்து அணிக்குப் பலம் சேர்த்தார். இரண்டாவது இனிங்ஸில் இங்கிலாந்து அணி வேகமாக ஆடி 260 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கட்டுகள் மாத்திரமே இழந்த நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

1481608167_unnamed%20%283%29.jpg

 

இங்கிலாந்து அணித் தலைவர் குக்கின் சதமும், புதிய தொடக்க ஆட்டக்காரரான ஹமீட்டின் 82 ஓட்டங்களும் அணிக்கு நல்லதொரு நிலையை அமைத்துக் கொடுத்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்கள் நடித்த அதிக பட்ச சதங்கள் என்ற வகையில் குக் அடித்த 5வது சதங்கள்அந்தச் சாதனையை நிலைநாட்ட உதவியது. ஆனால் தன் விக்கட்டை உடும்புப்பிடியாக கோலி பிடித்துக் கொண்டு கடைசிப் பந்து வீசும் வரை நின்றதால், இங்கிலாந்தின் வெற்றி கைக்கு வந்தது வாய்க்கு வர முடியாமல் போய்விட்டது.

ஆறு விக்ட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் இந்தியா எடுத்த நிலையில் வெற்றி தோல்வியின்றி முடிந்தது இந்த மோதல், இங்கிலாந்து அணிக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது என்றாலும், இரண்டாவது டெஸ்டில் மேலும் உற்சாகமாக விளையாடும் உத்வேகத்தை இந்த ஆட்ட முடிவு கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இரண்டாவது டெஸ்டும் ஆரம்பமாகியது. கோலியின் ருத்ர தாண்டவமும் ஆரம்பமாயிற்று. தன் பங்கிற்கு இவர் அடித்த 167 ஓட்டங்களும் புஜாராவின் இன்னொரு செஞ்சரியும், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஓட்டநிலையை 455 என்ற பலமான நிலைக்கு உயர்த்தின. பதிலுக்கு துடுப்பபெடுத்தாடிய இங்கிலாந்து அணியோ அஸ்வினின் சுழலில் திணறியது. அஸ்வின் 5 விக்கட்டுகள் எடுக்க 255 ஓட்டங்களுடன் சுருண்டது. மீண்டும் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டாவது இனிங்ஸில் 204 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. கோலிமீண்டும் அபாரமாக ஆடி 81 ஓட்டங்கள் எடுத்திருந்தார்..

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இந்தத் தடவை 158 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. எப்படி இருந்த அணி இப்படி ஆகிப்போனதே என்று எல்லோருமே அதிசயிக்கும் வகையில், இங்கிலாந்து அணிக்கு அரைச் சதமடித்த அணித்தலைவரை விட எவராலும் ஆட்டப்போக்கை திசைதிருப்ப முடியவில்லை. மூன்றாவது டெஸ்டும் ஆரம்பமாயிற்று. இந்தத் தடவை கோலி(62) புஜாரா(51) அடக்கி வாசித்தாலும் இந்திய அணியின் “வால்கள்” அப்படி அடங்கத் தயாராக இல்லை.

ஜடேஜா 90, அஸ்வின் 72, ஜயந்த் 55 என்று இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையாக தம் புஜபலத்தை துடுப்பாட்டத்தில் காட்டி பலரையும் திகைக்க வைத்தார்கள்.. மீண்டும் 400ஐக் கடந்து 417 ஓட்டங்களை முதல் இனிங்ஸில் இந்திய அணி எடுக்க இவர்கள் கைகொடுத்தார்கள். இங்கிலாந்தோ 283 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து 236 ஓட்டங்களுடன் சுருண்டது. 3 விக்கட்டுகளை மாத்திரமே கைப்பற்றி இருந்தாலும் அஸ்வினின் பந்து வீச்சு இவர்களைத் திக்குமுக்காட வைத்தது.

1481608200_unnamed%20%284%29.jpg

தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இந்தியா 2 விக்கட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் என்ற நிலையில் இங்கிலாந்து அணியை 8 விக்கட்டுகளால் தோற்கடித்தது. இங்கிலாந்து அணிக்கு ஹமீட் முதல் இனிங்ஸில் அரைச் சதமடித்து நல்லதொரு ஆரம்பத் துடுப்பாட்டக்காரர் நீண்ட தேடலின் பின்னர் கிடைத்து விட்டார் என்று கொடுத்த மனஆறுதலை, அவர் காயப்பட்டது நிச்சயம் பறித்திருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நாலாவது டெஸ்ட் மோதல், இங்கிலாந்திடம் மீதமிருந்த நம்பிக்கையையும் பிடுங்கிக் கொண்டு அதல பாதாளத்திற்கு தள்ளியிருக்கின்றது.கசப்பான மருந்தை குடித்திருக்கிறார் இங்கிலாந்து அணித்தலைவர். 3-0 என்ற நிலையில் தொடர் பறிபோய்விட்டது.

ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல அடுத்த இறுதி டெஸ்ட் மோதலை கடமைக்காக விளையாடி விட்டு செல்ல வேண்டிய நிலை இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இங்கிலாந்தின் புதிய ஆரம்ப ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் ஒரு செஞ்சரி அடித்து உதவி , 400 ஓட்டங்களை இங்கிலாந்து அஸ்வினின் சுழல் பந்து வீச்சுக்கு எதிராகத் தட்டுத் தடுமாறி எடுத்த போது, இங்கிலாந்து உருப்படியாக எதையாவது செய்யும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் கோலியின் இரட்டை சதம் விஜயின் சதம், பந்து வீச்சாளர் ஜயந்தின் சதம் என்று அடுக்கப்பட்டு இந்தியா 631 ஓட்டங்கள் எடுத்த போது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் கையாலாகத்தனம் வெளிப்டையாகவே தெரிந்தது.

2014இல் இந்திய அணியினரை தன் மண்ணில் பந்தாடிய அன்டர்சனை இந்தத் தடவை இந்திய துடுப்பாட்டக்காரர்கள் பந்தாடினார்கள் . சுழல் பந்து வீச்சாளர் ரஸிட் தவிர ஏனையவர்களால் இந்திய துடுப்பாட்ட வீரர்களை பெரிதாக மிரட்ட முடியவில்லை. மொத்தம் 12 விக்கட்டுகளை இரண்டு இனிங்ஸிலும் எடுத்த அஸ்வின் இவர்களுக்கு தலைவலியாக மாறியதே இந்தப் படுதோல்விக்கான காரணம்.

ஒரு இன்னிங்ஸ் 36 ஓட்டங்களால் தோல்வி. எப்படி ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் நான்காவது டெஸ்டுடன் என்ன நிலையில் முடிந்துள்ளது பார்த்தீர்களா? மும்பாயில் நடந்து முடிந்த நான்காவது டெஸ்டின் பின்னர் 17 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி பெறாமல் நீடிப்பது ஏற்கனவே இருந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. செப்டெம்பர் 1985- மார்ச் 1987 காலகட்டத்தில் 17 டெஸ்ட் போட்டிகள் தோல்விகாணாது விளையாடப்பட்டுள்ளன. இதில் 4 வெற்றி.12 வெற்றி தோல்வி காணாத நிலை. ஒன்று சமன்செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுதோ 13 வெற்றி.4 வெற்றி தோல்வியற்ற நிலை.இப்படி ஆறு அணிகள்தான் 17க்கு மேல் வந்துள்ளன .

1481608224_unnamed%20%282%29.jpg

 

என்றாலும், 80களில் 27 மோதல்களில் தோல்வி கண்டிராத மே.இந்திய அணியின் சாதனை முன்னணியில் நிற்கின்றது. இந்த 4வது டெஸ்ட் முடிவில் 24வது தடவையாக 5 விக்கட்டுகளை கைப்பற்றி உள்ளார் அஸ்வின். 5 தொடரான டெஸ்ட் வெற்றிகளும் இந்தியாவுக்கு சாதனைதான்.2008-10 காலகட்டத்தில் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடியும் நியூசிலாந்து பங்களாதேஷ் நாடுகளுக்குச் சென்று விளையாடியும் இப்படி வென்றுள்ளார்கள்.

இதில் தொடராக 9 வெற்றிகளைச் சம்பாதித்து சாதனையாளராக இருப்பது இங்கிலாந்து. முதல் இனிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ஒட்டங்களை எடுத்து இனிங்ஸ் தோல்வி காண்பதென்பது 1930இலும் 2010இலும் இடம்பெற்றள்ளது.

பத்து விக்கட்டுகளை வீழ்த்துவதை அனில் கும்ப்ளே.(8தடவைகள்) செய்து சாதனையாளராக இருக்கிறார். அஸ்வினுக்கு (7 தடவைகள்) இன்னொரு தடவை இப்படிச் செய்ய முடிந்தால் சாதனையை சமன்செய்ய முடியும். இதற்காக அஸ்வின் 43 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார்.24 தடவைகள் 5 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் கபில் தேவின் சாதனையை மிஞ்சியுள்ளார். கும்ளே(35), ஹர்பஜன்சிங்கிற்கு (25) அடுத்ததாக மூன்றாம் இடத்தில் அஸ்வின் நிற்கிறார் 12-167 என்று அஸ்வின் விக்கட்டுகளை வீழ்த்தியிருப்பது உலகில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும்.1980இல் இங்கிலாந்தின் இயன் பொத்தம் மாத்திரமே 13- 106 விக்கட்டுகளை எடுத்திருந்தார். தொடரும் இரண்டு கிரிக்கட் சீஸன்களில் 15 தடவைகள் 5 விக்கட்டுகள் வீழ்த்தி இருப்பது அஸ்வின் ஒருவரால்தான் செய்ய முடிந்துள்ளது. முரளிதரன் இரு தடவைகள் இப்படி 14 விக்கட்டுகளை எடுத்திருந்தார்.

(2000-01) (2006-07) ஒரு டெஸ்ட் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுப்பது, விராட் கோலிக்கு முன்பு அணித் தலைவராக சுனில் கவஸ்கரால் மாத்திரமே இரு தடவைகள் சாதிக்கப்பட்டுள்ளன. அதே போல ஒரு வருடத்தில் 1000 ஓட்டங்கள் என்ற சாதனையை கோலிக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 1997இலும் ராகுல் டிராவிட் 2006இலும் சாதித்திருந்தார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் விளையாடப்பட இருக்கின்றது. இந்த மோதல் “ரண்மெஷின்” என்று செல்லமாக அழைக்கப்படும் கோலிக்கு மேலும் பல ஓட்டங்களை எடுத்து சாதனைப் பட்டியலை நீட்டவும், துடுப்பாட்டக்காரர்களை சுழற்றும் அஸ்வினின் சாதனை மேலும் நீளவும் களமாக அமையப்போவதே யதார்த்தம். என்ன புதிதாகச் செய்யப்போகின்றது இங்கிலாந்து அணி? காத்திருந்துதான் பார்ப்போமே. 

http://onlineuthayan.com/article/262

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.