Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆலோசனையை ஏற்கும் நிலையில் மஹிந்த இருக்கவில்லை

Featured Replies

இந்­தி­யாவின் ஆலோ­ச­னையை ஏற்கும் நிலையில் மஹிந்த இருக்­க­வில்லை

 

இந்­திய முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன்

லியோ நிரோஷ தர்ஷன்

அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்­கு­மான தலை­வ­ராக வர­வேண்டும் என்றால், அர­சியல் அதி­கா­ரங்­களை பகிர்ந்து, மனித உரி­மை­களை நிலை­நாட்டி, வெற்­றி­பெற்­றவர், தோற்­க­டித்­தவர் என்ற கௌர­வத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மஹிந்த ராஜ­ப­க் ஷ ­விடம் இந்­தியா தெரி­வித்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்­பாட்டில் அவர் இருக்­க­வில்லை போர் வெற்­றியின் பின்னர் அர­சாங்­கமும், சிங்­ களப் பெரும்­பான்­மை­யி­னரும், உண்­மை­யான அமை­திக்குத் தேவை­யான பெருந்­தன்­மையை வெளிப்­ப­டுத்த வில் லை என இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன் தகவல் வெளி­யிட்­டுள்ளார். 

சிங்­கள சமூகம் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்­டது, தமிழ் சிவில் சமூகம் தலை­மை­யி­ழந்து, சரி­யான திசையை அறி­யாது, நம்­பிக்­கை­யி­ழந்து போனது என சிவ்­சங்கர் மேனன் எழு­திய நூலி­லேயே இந்த தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

போரின் இறு­திக்­கட்­டத்தில் பிர­பா­க­ரனைக் காப்­பாற்­று­வ­தற்கு அமெ­ரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்­கொண்ட முயற்­சி­களை இந்­தியா தீவி­ர­மாக எதிர்த்­தது . போர் வல­யத்­திற்குள் சிக்­குண்­டி­ருந்த பொது மக்­களைப் பாது­காப்­ப­தற்கும் இதுவே சந்­தர்ப்­ப­மாகக் கரு­தப்­பட்­டது . இந்­திய அரசின் நிலைப்­பாட்­டுக்கு தமிழ்­நாட்டின் பிர­தான அர­சியல் தலை­மைகள் ஆத­ரவு அளித்­தன.

தமிழ்­நாட்டின் தலை­வர்கள் அர­சியல் ரீதி­யாகப் பிள­வு­பட்­டி­ருந்­தாலும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனைக் காப்­பாற்­று­வ­தற்கு அமெ­ரிக்கா, நோர்வே எடுத்த முயற்­சி­க­ளுக்கு எதி­ராக இந்­தியா எடுத்­தி­ருந்த நிலைப்­பாட்­டுக்கு தனிப்­பட்­ட­மு­றையில் ஒரு­மித்த ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் பிரணாப் முகர்­ஜி­யி­னதும், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ண­னி­னதும் கடு­மை­யான உழைப்பின் விளைவே இது. நான் தனி­யாக சென்­னையில் தமிழ்­நாட்டின் மூத்த அர­சியல் தலை­வர்­களை இர­க­சி­ய­மாகச் சந்­தித்த போது, இதனைக் கண்டு கொண்டேன்.

இந்­தி­யாவில் உள்ள தமிழ்த் தலை­வர்­களை பௌதிக ரீதி­யாக அழிப்­பதன் மூலமே பிர­பா­க­ரனால் தமி­ழீ­ழத்தை அடைய முடியும் என்று தமிழ்­நாட்டு அர­சியல் தலை­வர்கள் அறிந்­தி­ருந்­தார்கள். இலங்­கையில் இருந்த தமிழ்த் தலை­வர்­களும் அவ்­வாறே கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள்.

ராஜீவ்­காந்தி கொலைக்­குப்­பின்னர் விடு­தலைப் புலிகள் தொடர்­பாக முழு இந்­தி­யா­வி­னதும் அணு­கு­முறை ஒரே வித­மா­ன­தா­கவே இருந்­தது. அது இலங்கை அர­சாங்­கத்­தையும் ஒரே கோட்­டுக்குள் கொண்டு வந்­தது.

இந்­தி­யாவின் கொள்கைத் தெரி­வுகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. போர் வெற்­றியின் பின்னர் மஹிந்த ராஜ­பக்ஷ இந்­தி­யாவில் தங்­கி­யி­ருக்­க­மாட்டார் என்­ப­தையும், இந்­தி­யா­வுக்கு குறைந்­த­ள­வுக்கே பதி­ல­ளிப்பார் என்­ப­தையும் புது­டில்லி நன்கு அறிந்­தி­ருந்­தது.

இரா­ணுவம் உள்­ளிட்ட அதி­கா­ரத்தில் மாத்­திரம் ராஜ­பக்ஷ உறு­தி­யான பிடியைக் கொண்­டி­ருக்­க­வில்லை. சீனா, பாகிஸ்தான், மற்றும் அமெ­ரிக்­கா­வி­னது பின்­புல ஆத­ரவும் அவ­ருக்கு இருந்­தது.

புல­னாய்வு மற்றும் இரா­ணுவப் பயிற்­சிகள் விட­யத்தில் ராஜ­பக்­க்ஷ­விற்கு உதவ அமெ­ரிக்கா விரும்­பி­யது. ஆனால், மனித உரி­மைகள் விட­யத்தில் கரி­ச­னை­களை எழுப்­பி­யது.

இந்­நி­லையில் , கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முடி­வுக்கு வந்த உள்­நாட்டுப் போரினால் இலங்கை சுமார் 200 பில்­லியன் டொலர் இழப்பை எதிர்­கொண்­டது என இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன் மேலும் தகவல் வெளி­யிட்­டுள்ளார்.

பாது­காப்பு நிபு­ணர்­களின் தக­வல்­களின் படி, இலங்கை உள்­நாட்டுப் போரில், 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை 80 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சம் வரை­யானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இவர்­களில், 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரை­யானோர் பொது­மக்­க­ளாவர். 27,693 விடு­தலைப் புலிகள் இயக்கப் போரா­ளி­களும், 23,790 படை­யி­னரும், 1,155 இந்­திய அமை­திப்­ப­டை­யி­னரும் இந்தப் போரில் கொல்­லப்­பட்­ட­வர்­களில் அடங்­கி­யுள்­ளனர்.

காணா­மற்­போ­தல்கள், கொலைகள், சித்­தி­ர­வதை, தடுப்­புக்­காவல், போரில் எல்லாத் தரப்­பி­ன­ராலும் பர­வ­லாக மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் என்­ப­ன­வற்­றினால், இலங்­கையின் ஜன­நா­யகம் குற்­ற­மி­ழைத்­த­தாக மாறி­யது.

பொது­மக்கள் இரா­ணுவ உறவு திரி­ப­டைந்­தது, சிங்­கள சமூகம் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்­டது, தமிழ் சிவில் சமூகம் தலை­மை­யி­ழந்து, சரி­யான திசையை அறி­யாது, நம்­பிக்­கை­யி­ழந்து போனது.அதே­போல, போரின் விளை­வினால் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்­கான அறி­கு­றி­களும் தென்­ப­ட­வில்லை.

போர் முடி­வுற்­றதன் பின்னர், அமை­தியை ஏற்­ப­டுத்த இலங்கை தவ­றி­விட்­டது.

போரில் வெற்­றி­யீட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ அரசும், சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரும், உண்­மை­யான அமை­திக்குத் தேவை­யான பெருந்­தன்­மையைக் காண்­பிக்­க­வில்லை. அது­போ­லவே தமிழ்ச் சமூ­கத்­திலும், அமை­தியை ஏற்­ப­டுத்தும் தலைமை இருக்கவில்லை.

எல்லா இலங்கையர்களுக்குமான தலைவராக வர வேண்டும் என்றால், அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து, மனித உரிமைகளை நிலைநாட்டி, வெற்றிபெற்றவர், தோற்கடித்தவர் என்ற கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ராஜபக்ஷவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

ஆனால் ராஜபக்ஷவினால் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியவில்லை. எனினும், தமிழர் தரப்பில் தன்னுடன் இணைந்து பணியாற்ற யாரும் இல்லை என்று ராஜபக்ஷ இந்தியாவுக்கு கூறியது சரியாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-18#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.