Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பார்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார்

Featured Replies

ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார்

Details
 
Category: விஜயகுமாரன்
11 Dec 2016
Hits: 1396

SoRamaswami.jpg

அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி  மண்டையைப்  போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை.

இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் அலறுகிறார்கள். ஜனசங்கம், இராஸ்டரிய சுயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாக் கட்சி என்னும் இந்து மதவெறி அமைப்புக்களையும், கட்சிகளையும் ஆதரித்தது தான் இவரின் நடுநிலை. ஏழை மக்களையும், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களையும், இந்தியாவின் மதச் சிறுபான்மையினரையும் அவமதிக்கும், கொலை செய்யும் மத வெறியர்களை நல்லவர்கள், வல்லவர்கள், தேச பக்தர்கள் என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பேசியும், எழுதியும் வந்தது தான் இவரது நேர்மை. நால் வருணம், சாதி என்று மக்களைப் பிரிக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை உலகை உய்விக்க வந்த உயர்ந்த தத்துவம் என்று வெட்கமில்லாமல் பொய் சொல்வது தான் மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் துணிச்சல்.

ஊர்களிலே அநியாயம் செய்பவர்களைப் பார்த்து இவனிற்கு உடம்பு முழுக்க விசம் என்பார்கள். பார்ப்பன விசம்; முதலாளித்துவ விசம்; தமிழ், தமிழ் மக்கள் மீதான தீராத வெறுப்பு என்று பல விசங்கள் ஒன்று சேர்ந்த மக்கள் விரோதி இவர். பொதுவுடமை, பகுத்தறிவு, திராவிடம், ஈழம் என்பவற்றை முன்னெடுத்து போராடுபவர்களின் மீது மீது மாறாத பகை கொண்டவர். ஆனால் மொரார்ஜி தேசாய், அத்வானி, வாஜ்பாய், நரேந்திர மோடி என்னும் வலதுசாரிப் பிற்போக்குவாதிகளை, இந்தியாவை அமெரிக்காவிற்கும், முதலாளிகளிற்கும் கூறு போட்டு விற்கும் தரகர்களை, பிழைப்புவாதிகளை தேசபக்தர்கள், நேர்மையின் சிகரங்கள் என்று போற்றிப் பாடுவார்.

ஆளை அடித்துக் கொல்லும் அமெரிக்கா முதலாளித்துவப் பொருளாதார முறையே உலக மக்களிற்கு நன்மை தரும் என்றும்; அமெரிக்கா கட்சன் நதிக்கரையில் ஜனநாயகப் பயிர் வளர்க்கும் புண்ணிய பூமி என்றும்; கொரியா, வியட்நாம் போன்ற தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நாடுகளில் எல்லாம் கொள்ளை அடிப்பதற்காக நடத்திய கொலை வெறியாட்டங்களை எல்லாம் கம்யுனிஸ்டுக்களிடம் இருந்து அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற நடத்திய புனிதப் போர்கள் என்றும் துக்ளக்கில் பக்கம், பக்கமாமக எழுதித் தன் முதலாளித்துவ விசுவாசத்தையும், அமெரிக்க அடிமைத் தனத்தையும் காட்டினார்.

பார்ப்பனியத்தின் உழைக்கும், ஏழை மக்களின் மீதான வன்மத்தையும், இந்து மதத்தின் பிற்போக்குத் தனங்களையும் ஓயாது எதிர்த்துப் போராடியதால் ஈ.வே.ராமசாமியையும், திராவிட இயக்கத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார். கருணாநிதி திராவிடக் கொள்கைகளை என்றோ காற்றிலே கலக்க விட்டாலும் அவ்வப்போது முணுமுணுத்து வந்ததைக் கூட இவரால் சகித்துக் கொள்ள முடியாமல் கருணாநிதியை எப்பொழுதும் எதிர்த்து வந்தார். ஆனால் கருணாநிதி போலவே ஊழல் செய்தாலும் கன்னட அம்மன்களின் பக்தனும், பார்ப்பன அடிமையுமான எம்.ஜி.ஆரையும்; பார்ப்பனத்தி ஜெயலலிதாவையும் அவர்கள் திராவிட இயக்கங்களை சீரழித்த ஒரே காரணத்திற்காக ஆதரித்து வந்தார். கருணாநிதியின் ஊழலைக் கண்டு வெகுண்டெழுந்தவரிற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஊழல்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம். இவர் தான் நடுநிலைமை நேர்மையாளனாம்.

பெண்களிற்கு கல்வி இல்லை; கணவனை இழந்த பெண்களை சிதையிலே எற்றி எரித்துக் கொல்ல வேண்டும்; மொட்டை அடித்து, உப்பில்லா உணவு உண்ணக் கொடுத்து மூலையிலே முடக்கி வைக்க வேண்டும் என்ற இந்து மதத்தின் இருண்ட காலச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக பெண்களிற்கு கல்வியில், வேலையில் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று என்று இந்த புது உலகிலும் தன் அசிங்கமான பெண்ணடிமைத்தனத்தை காட்டினார்.

இந்து மதத்தின் சாதிக் கொடுமையினாலும், வறுமையினாலும் கல்வி மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்களிற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுத் திட்டங்களையும் தன் பார்ப்பன வெறியால் மூர்க்கமாக எதிர்த்தார். வீ.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்த போது ஒடுக்கப்பட்ட மக்களிற்கு இட ஒதுக்கீடு செய்வது குறித்த "மண்டல் கமிசனின்" பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் பார்ப்பன, உயர்சாதி வெறியர்கள் அவரை தமது பிரதான எதிரியாக பிரகடனப்படுத்தினர். வீ.பி. சிங் இறந்து போனபோது, "அவர் இறந்து போனது இந்தியாவிற்கு நன்மை என்றும்; தனக்கு மகிழ்ச்சியான விடயம்" என்றும் சந்தோசப்பட்டவரைத் தான் பண்பாளர் என்று பண் பாடுகிறார்கள் சிலர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் என்னும் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த வேண்டி தமிழ் நாட்டின் பொதுமக்கள், முற்போக்கு அமைப்புக்கள், தமிழ் உணர்வாளர்கள் போராடினார்கள். அதைப் பொறுக்க முடியாமல் அப்போராட்டங்கள் பொதுமக்கள் ஆதரவற்ற அமைப்புக்களினால் நடத்தப்பட்டவை என்று கொச்சைப்படுத்தி கிண்டலடித்தார். மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறுத்த வேண்டி தொடுத்த வழக்கின் போது எட்டு வாரங்களிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. "ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட மரண தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருப்பது தனக்கு ஆச்சரியத்தை தருகிறது" என்று அவர்களை தூக்கில் போடாததினால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், கொலை வெறியையும் காட்டினார்.

பார்ப்பனியம் ஒரு பயங்கரவாதச் சிந்தனை என்றும்; பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள் கொலையாளிகள், கொலை வெறி கொண்டவர்கள் என்றும் ஏன் சொல்கிறோம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கைத் தமிழ் மக்களை மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருந்த போது "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இவனது நேர்காணலைச் சொல்லலாம். "இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று கொண்டு இருக்கும் மகிந்தவின் இலங்கை அரசிற்கு இந்திய அரசு உதவி செய்கிறதே" என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் தொகுப்பாளர். "இந்திய அரசு, இலங்கை அரசிற்கு செய்யும் உதவிகள் போதாது" என்று சொல்லித் தன் கொலை மனச்சாட்சியை கொஞ்சமும் மறைக்காது சொன்னார்.

இலங்கை அரசின் இனப்படுகொலை பற்றிக் கேட்ட போது "பயங்கரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது" என்று மனிதத்துவம் என்ற ஒன்றே இல்லாத தன் கோரமுகத்தைக் காட்டினார். "அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயம் என்று சொல்கிறீர்களா" என்று நேர்காணலை நடத்தியவர் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் இவனைக் கேட்கிறார். எம் மக்களின் மரணங்களை, சம கால உலக வரலாற்றின் மிகப்பெரும் அவலத்தை "வேறு வழி இல்லையே" என்று பார்ப்பனத் திமிருடன் நியாயப்படுத்துகிறார் இந்தப் பயங்கரவாதி. இது தான் பார்ப்பனியம். மனிதாபிமானம், இரக்கம் என்று எதுவும் இல்லாத கொலைத் தத்துவம். தன் இந்திய முதலாளிகளின், ஆட்சியாளர்களின் நலன் களிற்காக எதுவும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் வேண்டும் என்னும் பார்ப்பனியப் பயங்கரவாதம்.

இப்படியான மக்கள் விரோதி மருத்துவ மனையில் இருந்த போது கருணாநிதி போய் நலம் விசாரிக்கிறார். "அய்யா" வீரமணி இவரின் செத்த வீட்டிற்கு போய் கவலை தெரிவிக்கிறார். பகுத்தறிவுக் கொள்கைகளிற்காக, திராவிடச் சிந்தனைகளிற்காக தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த எத்தனையோ போராளிகள் மரணமடைந்த போது இவர்கள் எட்டிப் பார்த்ததில்லை. இவர்களைப் போலவே இணைய வெளிகளிலும், முகப் புத்தகத்திலும் த்மிழ்த் தேசியம் பேசுவோர், ஈழப் போராளிகள் என்னும் சிலரும் இவரிற்கு அஞ்சலி தெரிவிக்கின்றனர். இவர்களைப் பார்த்துச் சொல்வதிற்கு ஈரோட்டுக் கிழவனின் ஒரு சொல் தான் இருக்கிறது. "வெங்காயங்கள்"

http://www.ndpfront.com/index.php/home/135-articles/vijayakumaran/3491-2016-12-11-11-44-20

 

மூலக்கட்டுரையில் ஏக வசனததில் இருபபதை யாழ் களததின் மரியாதை கருதி அவர், இவர் என்று மாறறியுளளேன்.

 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி....  றிங்கோ. :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.