Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பொது வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடுகள் - மக்கள் விசனம்

Featured Replies

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற அதிகளவான மலசலகூடங்கள் மக்களால் பாவிக்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி 4இல் அமைந்துள்ள மலசலகூடங்களில் உள்ள மனிதக் கழிவுகள் நோயாளர் விடுதிக்கு வெளியே பாதையோரங்களில் தேங்கி கிடப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியூடாக நோயாளர் விடுதிக்கு செல்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற மலசலகூடங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக நோயாளர்களும், மக்களும் மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் பல தடவைகள் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகளை இது வரை மேற்கொள்ளவில்லை என அறிவித்துள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகமான சுத்த பணியாளர்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலையாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுவதோடு,கழிவுகள் அகற்றும் பணிக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களும் கடமையாற்றுவதாகவும் இந்த நிலையிலே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது.

இது தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான யூட் ரதனி தெரிவிக்கையில், இப்பிரச்சினை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியெறியுள்ள மனிதக்கழிவுகளை உடனடியாக அகற்ற துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/128558?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.