Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளை வழிநடத்த தவறும் பெற்றோர்களுக்கு......!

Featured Replies

நேரம் போதவில்லை என்ற வார்த்தையை கூறி எம்மையும், எமது குழந்தைகளையும், சமூகத்தையும் சரியாக வழிநடத்த தவறுகின்றோம் என வடமாகாணசபை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா யாழ். கந்தர்மடம் சைவ பிரகாச மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என இயேசு நாதர் கூறியுள்ளார். ஆனால், எம்மில் எத்தனை பேரால் இவ்வாறு செய்ய முடியும்? இவ்வாறான பக்குவம் எம்மில் உருவாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இந்தப் பக்குவத்தைப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.

பிள்ளைகள் சொல்வதைப் பெரியவர்கள் கேட்கும் சமூகமாக எமது சமூகம் மாற்றமடைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். நிச்சயமாகப் பெற்றோர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்தே பிள்ளைகளுக்கான நல்ல பழக்கவழக்கங்களைச் சரியான வகையில் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

கடந்த காலங்களில் நேரம் போதவில்லை என்ற வார்த்தை எம்மத்தியிலிருந்து வருவதில்லை. எமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவழிக்கலாம் என்று சிந்திக்கும் நிலை காணப்பட்டது. எல்லோரும் தங்களுக்கு நேரம் போதவில்லை என்று கூறிக் கொண்டு நாம் எம்மையும், எமது குழந்தைகளையும், சமூகத்தையும் சரியாக வழிநடத்த தவறுகின்றோம்.

எமது சமூகத்திலுள்ள முதியவர்கள் தம்முடன் கதைப்பதற்கு யாருமில்லையே என ஏங்கும் ஒரு நிலைமையும் தற்போது காணப்படுகின்றது. முதியவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவோ, குழந்தைகள் அதனை ஏற்றுக் கொள்ளவோ ஏற்றதொரு சூழலில்லாமல் எமது வாழ்க்கை முறை மாறிச் செல்கிறது. எனவே, இந்த இடைவெளியினைப் போக்குபவர்களாகப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். முதியவர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான அன்புப்பாலத்தை உருவாக்க வேண்டியவர்களாக பெற்றோர்கள் காணப்பட வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள் தமது அங்கத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒத்த நோக்கமுடையவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதொரு சமூக அமைப்பு. அங்கத்தவர்களின் தேவைகள், அவர்களது விருப்பங்கள் ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சமூகத்திற்கு வெளிப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

மேலும், எமது கலாசாரத்தை, சமூக ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒளி விழாவினை யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் கொண்டாடியிருப்பது வரவேற்புக்குரியது எனவும் மதுமதி தெரிவித்தார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/128650?ref=youmaylike2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.