Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சத்தை ஏற்படுத்தும் விபத்துக்கள்

Featured Replies

அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் விபத்­துக்கள்

 

நாட்டில் வாகன விபத்­துக்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்லும் போக்கை காண­மு­டி­கின்­றது. குறிப்­பாக அண்­மைக்­கா­ல­மாக மிகவும் கோர­மான விபத்­துக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. வாகன விபத்­துக்­களை தடுக்கும் நோக்­கிலும் அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சாங்க மட்­டத்தில் எந்­த­ள­வான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் வாகன விபத்­துக்­களும் அதனால் உயி­ரி­ழக்­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையும் குறைந்­து­செல்­வதை காண­மு­டி­ய­வில்லை.

 அந்­த­வ­கையில் யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி – சங்­கத்­தானைப் பகு­தியில் நேற்று முன்­தினம் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்­ஸொன்றும் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து சுற்­று­லா­விற்கு வந்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன், இந்த கோர விபத்தில் ஐந்­து பேர் படு­கா­ய­ம­டைந்­துள்ள நிலையில் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். மேலும் 10 பேர் வரையில் சிறி­ய­ளவில் காய­ம­டைந்­தி­ருந்­தனர்.

சாவ­கச்­சேரி – சங்­கத்­தானை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அண்­மை­யி­லேயே இந்த விபத்து இடம்­பெற்­றது. தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வந்த குறித்த வேன் வேகக்­கட்­டுப்­பாட்டை இழந்து வந்­து­கொண்­டி­ருந்த­தா­கவும், அதனை அவ­தா­னித்த பஸ் வண்­டியின் சாரதி பஸ்ஸை வீதி­யோ­ர­மாக நிறுத்திவைத்­தி­ருந்­த­தா­கவும், எனினும் வேன் கட்­டுப்­பாட்டை இழந்து பஸ் வண்­டி­யுடன் மோதி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றெ­னினும் இந்த விபத்­துக்­கான முழு­மை­யான காரணம் வெளி­வ­ர­வில்லை. அந்­த­வ­கையில் அண்­மைக்­கா­லத்தில் பதி­வா­கிய மிகப் பாரிய விபத்­தாக இந்த சம்­ப­வத்தை குறிப்­பி­டலாம். அது­மட்­டு­மன்றி, அண்­மையில் வாதுவைப் பகு­தியில் ரயி­லுடன் கார் ஒன்று மோதி­யதில் ஐந்­துபேர் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் அண்­மைக்­கா­ல­மா­கவே நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் விபத்துச் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது வீதியில் பய­ணிப்­ப­தற்கு பொது­மக்­க­ளுக்கு அச்சம் ஏற்­படும் வகையில் இந்த விபத்துச் சம்­ப­வங்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் வாகன விபத்துச் சம்­ப­வங்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்தே செல்­கின்­றன. குறிப்­பாக நாளுக்கு நாள் இடம்­பெறும் விபத்­துக்­களின் அகோ­ரத்­தன்­மை­யா­னது பயங்­க­ர­மாகக் காணப்­ப­டு­கின்­றது. வாகன விபத்துச் சம்­ப­வங்கள் மக்­களின் வாழ்க்­கையை அச்­சு­றுத்தும் வகை­யி­லேயே தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. வாக­னத்தில் பய­ணிப்­ப­தற்கும் மக்­க­ளுக்கு அச்சம் ஏற்­ப­டு­கின்ற அதே­வேளை வீதியில் நடந்து செல்­வதும் ஒரு அபா­ய­மான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. மஞ்சள் கட­வை­களில் கடக்­கின்ற பாத­சா­ரிகள் வாக­னங்­க­ளினால் மோதப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­ப­வங்­களை அடிக்­கடி கேள்­விப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 2400க்கும் மேற்­பட்டோர் வாகன விபத்துச் சம்­ப­வங்­க­ளினால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அது­மட்­டு­மன்றி, ஆயி­ரக்­க­ணக்­கானோர் இந்த வாகன விபத்துச் சம்­ப­வங்­க­ளினால் காய­ம­டைந்து வரு­கின்­றனர். தின­மொன்­றுக்கு நாட்டில் வாகன விபத்துச் சம்­ப­வங்­க­ளினால் 7 பேர் வரையில் உயி­ரி­ழப்­ப­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன. அத்­துடன் வரு­ட­மொன்­றில் இடம்­பெறும் விபத்துச் சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­லு­கின்­ற­மையையே அவ­தா­னிக்க முடி­கின்­றது. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வாகன விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கிலும் அவற்றைத் தடுக்கும் ரீதி­யிலும் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தாலும் விபத்துச் சம்­ப­வங்­க­ளினால் இடம்­பெ­று­கின்ற உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­ரித்தே செல்­கின்­றன. குறிப்­பாக அர­சாங்­க­மா­னது வாகன விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் ஏழு­வ­கை­யான குற்­றங்­க­ளுக்கு 25 ரூபா ஆயிரம் தண்­டப்­ப­ணத்தை அற­விடும் தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தது. முற்­று­மு­ழு­தாக வாக­ன­ வி­பத்­துக்­களால் ஏற்­படும் உயி­ரி­ழப்­புக்­களை கருத்தில்கொண்டே அவற்றைத் தடுக்கும் நோக்கில் இந்த தண்­டப்­பண அதி­க­ரிப்பு தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக அர­சாங்­கத்தின் சார்பில் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்த 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பண அதி­க­ரிப்­புக்கு எதி­ராக தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சில வாரங்­க­ளுக்கு முன்னர் நாட­ளா­வி­ய ­ரீ­தியில் பாரிய வேலை­நி­றுத்தப் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தனர். இதனால் நாட்டின் போக்­கு­வ­ரத்­துத்துறை பாதிக்­கப்­பட்­ட­துடன் பொது­மக்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்­தனர்.

எவ்­வா­றெ­னினும் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்ட பின்னர் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவி­டப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி, 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் அதி­க­ரிக்­கப்­பட்ட ஏழு­வ­கை­யான குற்­றங்­களில் இரண்டு குற்­றங்­க­ளுக்­கான தொகை குறைக்­கப்­ப­டு­மென அர­சாங்கம் தனியார் போக்­கு­வ­ரத்து உரி­மை­யாளர் சங்­கத்­திற்கு உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும், இதன் கார­ண­மா­கவே வேலை­நி­றுத்தம் கைவி­டப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் சட்­ட­திட்­டங்­களை கடு­மை­யாக்­கு­வ­தற்கு முற்­ப­டும்­போதும் அதற்­கான தண்­டப்­ப­ணங்­களை அதி­க­ரிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­ற­போதும் பாரிய எதிர்ப்­புக்கள் எழு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஆனால் தற்­போது நாடளா­வி­ய ­ரீதியில் இடம்­பெ­று­கின்ற அகோ­ர­மான விபத்து சம்­ப­வங்­களைப் பார்க்­கின்­ற­போது போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல் தொடர்­பான சட்­ட­திட்­டங்கள் கடு­மை­யாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்ற எண்­ணக்­கரு பொது­வா­கவே நாட்டு மக்கள் மத்­தியில் உரு­வா­கி­றது. இது­தொ­டர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் ஆழ­மாக சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

விபத்துச் சம்­ப­வங்­க­ளுக்­கான கார­ணங்­களை நாம் ஆரா­யும்­போது போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறி வாக­னங்­களை செலுத்­துதல், அனு­ம­திக்­கப்­பட்ட வேகத்தை தாண்டி மிக­வே­க­மாக வாக­னங்­களை செலுத்­துதல், தொலை­பே­சியில் உரை­யா­டிக்­கொண்டு செல்­லுதல், குடி­போ­தையில் வாக­னங்­களை செலுத்­துதல் மற்றும் சார­திகள் நித்­திரையாகி­விடும் நிலைமை போன்­ற­வையே இந்த விபத்­துக்கள் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ணங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

எனவே, இந்­தக்­கா­ர­ணங்­களை கண்­ட­றிந்து அவற்றைக் கட்­டுப்­ப­டுத்தி வாகன விபத்­துக்­களை குறைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். வாக­னங்­களின் இறக்­கு­மதி தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­கின்­ற­மையும் அதற்­கேற்­ற­வ­கையில் வீதிக்­கட்­ட­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டா­மையும், விபத்­துக்கள் அதி­க­ரிப்­ப­தற்கு மற்­று­மொரு முக்­கிய கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­க­மா­னது அண்­மைக்­கா­ல­மா­கவே விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் சில வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. குறிப்­பாக போக்­கு­வ­ரத்து விதி­மீ­றல்கள் தொடர்­பான சட்­ட­திட்­டங்கள் கடு­மை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அது­மட்­டு­மன்றி, சட்­டங்­களை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்­களும் அவை தொடர்பில் அதி­க­ளவில் கவனம் செலுத்தும் நிலைமை ஏற்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும் துர­திஷ்­ட­வ­ச­மாக விபத்து சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இந்த விபத்துச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது அல்­லது குறைப்­பது என்று வரும்­போது நாட்டின் அர­சாங்கம் மாத்­தி­ர­மன்றி அனைத்து தரப்­பி­னரும் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

விசே­ட­மாக வாகன சார­திகள் தாம் வாக­னங்­களை செலுத்­தும்­போதும் மிகவும் பொறுப்­புடன் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை பின்­பற்றி அவற்றை செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தம்மை நம்பி வாக­னத்தில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான மக்கள் பய­ணிக்­கின்­றனர் என்­பதை வாக­ன ­சா­ர­திகள் எப்­போதும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தான்­ வி­டு­கின்ற சிறு­ த­வ­றுகள் கார­ண­மா­க பாரிய அள­வி­லான உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதை சாரதி கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனவே அர­சாங்­கத்தின் மீது மட்டும் இந்த விட­யத்தில் குற்றம் சுமத்­தாது அனைத்துத் தரப்­பி­னரும் இதில் பொறுப்­புடன் செயற்­ப­டு­வது மிகவும் அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இல்­லா­விடின், வாகன விபத்­துக்­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தவிர்க்க முடியாத அபாயம் ஏற்பட்டுவிடும்.

குறிப்பாக தற்போது இந்த ஏழுவகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அரசாங்கம் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை அறிவித்த­தும் அதுதொடர்பில் பாரிய எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலையில் எவ்வாறாவது இந்த விபத்துச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றனர்.

எனவே அரசாங்கமானது இந்த விடயத்தில் பரந்துபட்ட ரீதியில் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியமாகின்றது. மேலைத்தேய நாடுகளில் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நவீன முறைமைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து ஆராய்ந்து அந்த திட்டங்களை இலங்கைக்கு ஏற்றவகையில் உருவாக்குவதும் சாதகமாக இருக்கும். எவ்வாறெனினும் தற்போது அதிகரித்துச் செல்லும் வீதிப் பயங்கரவாதத்தை தடுத்துநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அதுமட்டுமன்றி, வாகன சாரதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தில் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்படவேண்டியது அவசியமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-19#page-4

  • தொடங்கியவர்

கவ­ன­மாகப் போகா­த­வர்கள்

p8-b0a321320425d4e43581c9436b30426623b98b59.jpg

 

சொல்­வதைச் சொல்­லுங்கள்; செய்­வதைச் செய்வோம் என்ற கோட்­பாட்டில் பலர் நடக்க முற்­ப­டு­வ­த­னால்தான் விளை­வு­களை விலை­கொ­டுத்து வாங்­கிக்­கொள்­கி­றார்கள். இவ்­வி­ளை­வு­க­ளுக்கு அவர்கள் மாத்­தி­ர­மின்றி பலரும் பலி­யாக்­கப்­ப­டு­கி­றார்கள்.

குற்­றங்­க­ளையும் குற்றச் செயல்­க­ளையும் தடுப்­ப­தற்கும், நோய்­க­ளையும் நோய்­களை ஏற்­ப­டுத்தும் ஏதுக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், விபத்­துக்­க­ளையும், அவ்­வி­பத்­துக்­க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களை தடுப்­ப­தற்­கும், கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் எனப் பல்­வேறு சட்ட ஏற்­பா­டு­களும் திட்­டங்­களும் வகுக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டாலும், விழிப்­பு­ணர்வுச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தாலும் அவை வெற்­றி­பெ­று­வது அல்­லது இலக்கை எட்­டு­வது என்­பது நமது இலங்­கையைப் பொறுத்­த­வரை முயல்­கொம்பு நிலையில் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

குற்றச்செயல்­களும், டெங்­கு­போன்ற நோய்­களும், வீதி விபத்­துக்­களும் தீர்ந்­த­பா­டில்லை. அதனால் ஆபத்­துக்­களும் உயிரிழப்­புக்­களும் தொடர்ந்த வண்­ணம்தான் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான பல திட்­டங்கள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­ன்றன. அத்­திட்­டங்­க­ளின்பால் மக்­க­ளையும் வாகனம் செலுத்­து­ப­வர்­க­ளையும் அறி­வூட்­டு­வ­தற்­காக விழிப்­பு­ணர்வு விளம்­ப­ரங்­களும், விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களும் ஊட­கங்கள் வாயி­லாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால், அவை எதிர்­பார்க்கும் அள­வுக்கு இன்னும் சென்­ற­டை­ய­வில்லை என்­பதை நாளாந்தம் இடம்­பெறும் வீதி விபத்­துக்கள் புடம்­போட்டுக் காட்­டு­கின்­றன.

வீதி விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­காக இலங்கை ஒளிப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னமும் பொலிஸ் திணைக்­க­ளமும் இணைந்து மேற்­கொண்­டு­வரும் ‘கவ­ன­மாகப் போய் வாருங்கள்’ என்ற திட்டம் நடை­மு­றையில் உள்­ள­போ­திலும் கவ­ன­மின்றி பய­ணிப்­ப­தனால், கவ­ன­மாகப் போகா­த­த­னால், வாக­னங்­களைச் செலுத்­து­வ­தனால் தொடர்ச்­சி­யாக பலரின் உயிர்கள் பாதிப்பய­ணத்­தி­லேயே பறிக்கச் செய்­யப்­ப­டு­கி­ன்றன.

ஒவ்­வொரு ஆத்­மாவும் மர­ணிப்­பது நிச்சயம். அம்­ம­ரணம் எந்தக் கோணத்தில் அப்­பிக்­கொள்ளும் என்­பதை யாரும் அறியார். வாழ்­வி­யலின் இன்­பத்­துக்­காக எதிர்­கொள்ளும் போராட்­டங்­க­ளுக்கு எதிர்­நீச்­ச­ல­டித்து வாழ்க்கை வண்­டியை ஓட்டிச் செல்லும் ஒவ்­வொ­ரு­வரும் அவர்­க­ளது இறுதிமூச்சு நல்ல சகு­னத்தில் முடிய வேண்டும் என்­கின்ற அவாவைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அவ்­வா­றான அவா­வோடு வாழும்­போது, மர­ண­மா­னது எதிர்­பார்க்­காத விதத்தில் கோர­மாக சிலரை வந்­த­டை­கி­றது. சம­கா­லத்தில் கொலை­யென்றும், தற்­கொ­லை­யென்றும், விபத்­துக்கள் என்றும் இடம்­பெறும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிகழ்­வு­க­ளினால் பெறு­ம­தி­மிக்க உயிர்கள் பறிபோய்க் கொண்­டி­ருக்­கின்­றன அல்­லது பறி­த்தெடுக்­கப்­பட்டும் கொண்­டி­ருக்­கின்­றன. பெறு­ம­தி­மிக்க மனித வளம் இவ்­வா­றான கார­ணங்­க­ளினால் குறிப்­பாக விபத்­துக்­க­ளினால் தினமும் பறி­த்தெடுக்­கப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­வதும் தவிர்க்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

எதிர்­கால கன­வுகள் பல­வற்­றுடன் நிகழ்­காலத்தை நகர்த்திச்செல்லும் பாத­சா­ரி­க­ளும், வாக­னங்­களில் பய­ணிப்­போரும், வாகன சார­தி­களும் என பல­த­ரப்­பினர் அன்­றாடம் இடம்­பெறும் வீதி விபத்­துக்­க­ளுக்கு ஆளாகி காயப்­ப­டு­வ­தையும், அங்க உறுப்­புக்­களை இழந்து அங்­க­வீ­ன­மா­­வ­தையும், மீளப் ­பெறமுடி­யாத இன்­னு­யிர்­களை இழப்­ப­தையும் காண்­கின்றோம்.

கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பாணம் – சாவ­கச்­சேரிப் பிர­தே­சத்தில் பொதுப் போக்­கு­வரத்து பஸ்ஸுடன் தனியார் சுற்­றுலா வான் ஒன்று மோதுண்­ட­தானல் 10 பேர் ஸ்தலத்தில் கொல்­லப்­பட்டும் 15க்கு மேற்­பட்­டோர் படு­கா­ய­ம­டைந்­து­முள்­ளனர். சார­தியின் கவ­னக்­குறைவே இக்­கோர­வி­பத்­துக்குக் கார­ண­மெனக் கூறப்­ப­டு­கி­றது.

விபத்­துக்­களும் விளை­வு­களும்  விபத்து என்­பது விரும்­பத்­த­காத, தேவை­யற்ற, எதிர்­பா­ராத நிகழ்­வாகும். வீதிவிபத்­துக்கள் வீதி­களில் வாக­னங்கள் வாக­னங்­க­ளுடன் மோது­வ­தாலும், வாக­னங்கள் மனி­தர்­க­ளுடன் அல்­லது சொத்­துக்­க­ளுடன் மோது­வ­தாலும் ஏற்­ப­டு­கின்றன. 

வீதிவிபத்­துக்­களில் அதிகம் தொடர்­பு­பட்­டவை துவிச்­சக்­க­ர­வண்டி, மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி, மோட்­டார்கார், வான், லொறி, பஸ்கள் அவற்­றுடன் பாத­சா­ரி­க­ளையும் குறிப்­பி­டலாம்.

2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இடம்­பெற்ற வீதி விபத்­துக்கள் தொடர்­பான பொலிஸ் திணைக்­க­ளத்தின் வீதிப் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பிரிவின் அறிக்­கை­யின்­படி, 2006இல் 35,763 விபத்­துக்­களும் 2007ஆம் ஆண்டில் 31,982 விபத்துச் சம்­ப­வங்­களும், 2008ஆம் ஆண்டில் 29,864 விபத்­துக்­களும் 2009இல் 33,094 விபத்­துக்­களும் 2010ஆம் ஆண்டு 37,653 விபத்­துக்­களும் 2011இல் 37,000 வீதி விபத்­துக்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இவ்­வி­பத்­துக்­க­ளினால் உயிரிழந்­த­வர்­களின் எண்­ணிக்­கையை அவ­தா­னிக்­கின்­ற­வேளை 2006இல் 2,238 பேரும் 2007இல் 2,402 பேரும் 2008இல் 2,328 பேரும் 2009இல் 2,413 பேரும் 2010ல் 2,721 பேரும் 2011ல் 2500 பேரு­மாக ஆறாண்­டு­களில் மொத்தம் 14,602 பேர் வீதி விபத்­துக்­க­ளினால் உயிர் இழந்­துள்­ளனர். மேலும் கடந்த 2015இல் வீதி விபத்­துக்­க­ளினால் உயிர் இழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 2,801 ஆகக் காணப்­ப­டு­கி­றது. அதுதவிர, ஒவ்­வொரு மூன்­றரை மணித்­தி­யா­லத்­திலும் ஒருவர் வீதி விபத்­தினால் உயிரிழக்­கின்றார் என்ற தக­வல்கள், இந்த வீதி விபத்­துக்­க­ளி­லி­ருந்து மனித வளம் காவுகொள்­ளப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கான வினைத்­தி­றன்­மிக்க பொறி­மு­றைகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மென்­பதை வலி­யு­றுத்­து­கி­றது.

மூன்று தசாப்த கால­மாக இட­ம்­பெற்ற யுத்­தத்­தினால் உயிரிழந்­த­வர்­களை விடவும் திடீர் விபத்­துக்­க­ளினால் பலி­யா­ன­வர்­களின் தொகை அதி­க­மென சுகா­தாரத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் டாக்டர் பாலித மஹி­பால தெரி­வித்­துள்ளார். வரு­டத்­திற்கு 37,000 பேர் வீதி விபத்­துக்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இதனால் நாளுக்கு நாள் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார்.

இந்­நி­லையில், வீதி விபத்­துக்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சிறார்­களின் விப­ரங்­களை அதா­னிக்­கின்­ற­போது இலங்­கையின் மனித வளம் ஆபத்தை எதிர்­நோக்கி வரு­வதை எடுத்­துக்­காட்­டு­கி­றது. வரு­டந்­தோறும் விபத்­துக்­க­ளினால் 600 சிறார்கள் இறப்­ப­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. இவ்­வாறு இலங்­கையின் மனிதவளத்தின் ஆரோக்­கி­ய­மற்ற நிலையை விபத்­துக்கள் உரு­வாக்கி வரு­வ­தானல் இந்­நிலை இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. தினமும் இடம்­பெறும் விபத்­துக்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வோரின் சிகிச்­சைக்­காக அர­சாங்கம் பெரும் தொகைப் பணத்தை செலவு செய்­கி­றது.

இந்­நி­லையில், வீதிப் போக்­கு­வ­ரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்­கெ­டுப்­பின்­படி, மோட்டார் சைக்கிள், துவிச்­சக்­கர வண்டி, முச்­சக்­கர வண்டி, மோட்­டார்கார், இரு தேவை வான், லொறி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாக­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட விபத்துச் சம்­ப­வங்­களே அதிகம் ஏற்­பட்­டுள்­ளன.

கடந்த 2015 ஆண்டு 10,147 மோட்டார் சைக்கிள் விபத்­துக்­களும், 4,429 லொறி­யுடன் சம்­பந்­தப்­பட்ட விபத்­துக்­களும், இரு தேவை வாக­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட 4,858 விபத்­துக்­களும் தனியார் பஸ் விபத்­துக்கள் 2,877உம் முச்­சக்­கர வண்டி விபத்­துக்கள் 6,871 உம் ஏற்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சின் கணக்­கெ­டுப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­புள்­ளி­வி­ப­ரங்கள் விபத்­துக்­களின் விப­ரங்­களைக் குறிப்­பிட்­டாலும் இவ்­வி­பத்­துக்­க­ளுக்­கான கார­ணங்­களில் அதிக பங்­கா­ளி­க­ளாக இருப்­ப­வர்கள் சார­தி­க­ளாகும். நாட்டில் அதி­க­ரித்­துள்ள வீதி விபத்­துக்­க­ளுக்கு சார­தி­களின் பொறுப்­பற்ற நடத்தை, வீதி ஒழுங்கைப் பேணாமை, கவ­ன­யீனம், மது­போதை, அவச­ர­மாக அதிக வேகத்­துடன் வாகனம் செலுத்­து­துதல் என்­பன பிர­தா­ன­மா­க­வுள்­ளன.

அவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்­பான அறி­வின்மை, வீதியின் தன்மை, நிலை­மையை அறி­யாமை, கால­நி­லையின் தன்­மை­யினைத் தெரிந்துகொள்­ளாமை, வாக­னத்தின் சாதக, பாதக நிலையைக் கண்­டு­கொள்­ளாமை மற்றும் அவற்றைப் பரீட்­சிக்­காமை, மனித தவ­றுகள், மனப்­போ­ராட்டம் மற்றும் மன அழுத்­தத்­துடன் வாகனம் செலுத்­துதல், வீதியில் நடத்தல், வீதிப் புன­ர­மைப்பின் நிலையை தெரிந்துகொள்­ளாமை, திட்­ட­மி­டப்­ப­டாத பிர­யா­ணத்தை மேற்­கொள்ளல், சார­திகள் குறைந்த ஆரோக்­கி­யத்­துடன் வாக­னத்தைச் செலுத்­துதல், வாகனம் செலுத்­து­வ­தற்­கான திறன் மற்றும் முறை­யான பயிற்­சி­யின்றி வாக­னத்தை ஓட்­டுதல், வாக­னத்தின் வலுவை பரி­சோ­திக்­காமை, பாது­காப்பு ஆச­னப்­பட்­டியை அணி­யாமை, வீதிச் சமிக்ஞை­களை கவ­னத்­திற்­கொள்­ளாமை, பாத­சா­ரி­க­ளையும் குடி­மக்­க­ளையும் கவ­னத்­திற்­கொள்­ளாமை, வீதிச்சட்­டங்­களை மதிக்­காது வாக­னங்­களைச் செலுத்­துதல், தூரங்­களைக் கவ­னத்­­திற்­கொள்­ளாமை, சட்ட நட­வ­டிக்­கை­களில் உள்ள வலுக்­கள், பாத­சா­ரிகள் வீதி ஒழுங்­கு­களை சரி­யாகப் பேணி வீதி­களில் செல்­லாமை போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளாலும் வீதி விபத்­துக்கள் நடந்­தே­று­கின்­றன.

சனத்­தொ­கையின் பெருக்­கத்­திற்­கேற்ப தேவை­களும் அதி­க­ரித்­துள்­ளன. குறிப்­பாக மனித வாழ்வில் போக்­கு­வ­ரத்து இன்­றி­ய­மை­யா­த­தொன்று. அப்­போக்­கு­வ­ரத்து இன்று அதிக முக்­கி­ய­மா­ன­தா­கவும் விரை­வா­ன­தா­கவும் மாறிக்­கொண்டு வரு­கி­றது. குறு­கிய நேரத்­துக்குள் குறித்த இடத்தை அடைந்­து­கொள்­வ­தற்­கான எத்­த­கைய மார்க்­கங்கள் இருக்கின்றனவோ அவற்­றையே இன்று ஒவ்­வொரு வாகன சார­தியும் வாகன உரி­மை­யா­ளரும் விரும்­பு­கின்­றனர்.  

கடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட அபி­வி­ருத்­திப்­ப­ணி­களில் வீதி அபி­வி­ருத்தி முக்­கி­ய­மா­ன­தாகும். பல நீண்ட தூரப் பிர­தே­சங்­க­ளுக்­கான வீதிக்கட்­ட­மைப்­புக்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன. இவற்றில் தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் கொழும்பு – கட்­டு­நாயக்க அதிவேக நெடுஞ்­சாலை முக்­கி­ய­மா­ன­தாகும். இதனால் சாதா­ரண பாதை­க­ளி­னூ­டாக பய­ணிப்­ப­திலும் பார்க்க நேரச்சுருக்­கத்­துடன் வேக­மாகப் பய­ணிப்­ப­தையே பலர் விரும்­பு­வதைக் காண்­கின்றோம். இவ்­வாறு அவ­ச­ரத்தினால் அவ­தா­ன­மின்­மை­யினால் இவ்­வீ­தி­க­ளி­னூடாக விபத்­துக்கள் இடம்­பெ­று­கின்­றன. கடந்த வருடம் 500க்கு மேற்­பட்ட விப­த­்துக்கள் இந்த அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் இடம்­பெற்­றுள்­ளன.

போக்­கு­வ­ரத்துத் தேவைகள் அதி­க­ரித்­ததன் கார­ண­மாக பாதை­களில் ஓடும் வாக­னங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­து­விட்­டன. முன்­னொரு காலத்தில் குறிப்­பாக கிரா­மங்­களில் மாட்டுவண்­டி­களும் துவிச்­சக்­கர வண்­டி­க­ளுமே போக்­கு­வ­ரத்­துக்­கான வாக­னங்­க­ளாக வீடு­களில் இருந்­தன. ஆனால், இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டர் சைக்­கிள்கள் இருப்­பதைக் காணமுடி­கி­றது. கிரா­மங்­களில் இத்­த­கைய நிலை­யென்றால் நகர்ப்புறங்­களில் எவ்­வாறு இருக்கும் என்­பதைச் சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யதில்லை.

மோட்டார் வாகனப் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்தில் நாளாந்தம் ஏறக்­கு­றைய 2000க்கும் அதி­க­மான வாக­னங்கள் புதி­தாகப் பதிவுசெய்­யப்­ப­டு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு பதிவுசெய்­யப்­படும் வாக­னங்­களின் எண்­ணிக்­கையின் அதி­க­ரிப்­பா­னது போக்­கு­வ­ரத்துத் தேவையின் அதி­க­ரிப்பைச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. ஆனால், போக்­கு­வரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடை­மு­றைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் நகரமட்டம் முதல் கிராமமட்டம் வரை ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முறையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளனவா? அது­மாத்­தி­ர­மின்றி, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்கள் அவற்றை சரி­யா­கவும் நீதி­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­ற­னரா என்­பது கேள்விக்குறி­யாகும்.

வீதி விபத்­துக்­களை ஏற்­ப­டுத்­து­வதாகக் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள கார­ணங்கள் தொடர்­பாக அக்­கா­ர­ணங்­க­ளினால் ஏற்­படும் விபத்­துக்­களைத் தவிர்க்கும் பொருட்டும், சரி­யான முறையில் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட பொறி­மு­றை­யி­னூடான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை அதி­க­ரிக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஒவ்­வொரு காரணம் தொடர்­பிலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட புரி­தல்­மிக்­க­தான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் கிராமப்புறங்­க­ளிலும் நகரப்புறங்­க­ளிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.

இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதிவிபத்துக்களைத் தடுப்பதற்கான நடவ­டிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்­­­துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை­களும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மனிதவளத்தைப் பாதுகாக்க முடியும்.

அந்தவகையில், வீதிப் போக்­கு­வ­ரத்துப் பாது­காப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்­டத்­திற்கு சகல வீதிப் பாவ­னை­யா­ளர்­களும் மதிப்­ப­ளிப்­ப­தோடு, அவற்றைத் தவ­றாது பின்­பற்­று­வ­தோடு பய­ணங்­களின் போது அவ­தா­னமும் கவ­னமும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. கவ­ன­மாகப் பய­ணங்­களை மேற்­கொள்­ளா­த­த­னால்தான் கோர விபத்­துக்­களைச் சந்­திக்க நேரி­டு­கி­றது.

வீதிப்பாது­காப்பு தொடர்பில் சிறுபால­கர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாண­வர்கள், வளர்ந்­த­வர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்­சி­யாக அறி­வூட்டப்படு­வது அவ­சி­ய­மாகும்.

கவ­ன­மாகப் பய­ணிப்­ப­தற்­காக நடை­முறைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விழிப்­பு­ணர்வுத் திட்­டங்­களை பொது­மக்கள் உட்­பட்ட வாகன உரி­மை­யா­ளர்கள், பொதுப் போக்­கு­வ­ரத்து வாக­னங்­களின் சாரதிகள், நடத்­து­னர்கள் முறை­யாகப் பின்­பற்­று­வ­த­னூ­டாக வீதி விபத்­துக்­களால் அப்­பாவி உயிர்கள் காவு­கொள்­ளப்­ப­டு­வது தடுக்கப்படுவது குடும்ப, சமூக, பொருளாதாரப் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-19#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.