Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி நாடு மிஞ்சுமா.? மஹிந்த கேள்வி

Featured Replies

mahinda-rajapaksa-reuters_650x400_81439909591.jpg

இரு தரப்பு பிரச்சினையை அரசியலாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்சியை சர்வதேசம் முன்னெடுத்தது. இதன் விளைவாக இலங்கை இன்று இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் தீவிர ஆக்கிரமிப்பிற்குள் காணப்படுகின்றது. இனி நாடு மிஞ்சுமா என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார். 

ஆட்சி மாற்ற சூழ்ச்சிக்கு எமது அரசாங்கத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர்கள் நல்லாட்சியிலும் அமைச்சர்களாக உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது தேசியத்துவத்தை பாதுகாக்கும் கொள்கையுடையது. அதற்கு எதிராக செல்லும் தற்போதைய ஆட்சியார்களுக்கு காலம் கடந்து தேர்தல் வைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14540

அம்­பாந்­தோட்­டையில் சீனா திரு­ம­லையில் அமெ­ரிக்கா

 

நாடு எஞ்­சுமா? மஹிந்த ராஜ­பக் ஷ கேள்வி    
(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு தரப்பு பிரச்­சி­னையை அர­சி­ய­லாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்­சியை சர்­வ­தேசம் முன்­னெ­டுத்­தது. இதன் விளை­வாக இலங்கை இன்று இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் சீனாவின் தீவிர ஆக்­கி­ர­மிப்­பிற்குள் காணப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் இனி நாடு எஞ்­சுமா என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கேள்­வி­யெ­ழுப்­பினார்.

ஆட்சி மாற்ற சூழ்ச்­சிக்கு எமது அர­சாங்­கத்தில் இருந்து ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்கள் நல்­லாட்­சி­யிலும் அமைச்­சர்­கா­ளக உள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி என்­பது தேசி­யத்­து­வத்தை பாது­காக்கும் கொள்­கை­யு­ட­டை­யது. அதற்கு எதி­ராக செல்லும் தற்­போ­தைய ஆட்­சி­யார்­க­ளுக்கு காலம் கடந்து தேர்தல் வைத்­தாலும் மக்கள் பாடம் புகட்­டு­வார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அம்­பந்­தோட்டை மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

நிலை­யான பொரு­ளா­தார இலக்­கு­களை மையப்­ப­டுத்தி அம்­பந்­தோட்­டையில் எமது ஆட்­சியில் பாரிய பொரு­ளா­தார வல­யங்­களை அமைத்தோம். ஆனால் இன்று அவை வீண் விர­யங்கள் என உள் நாட்டில் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எமது திட்­டத்­திற்கு அமை­வாக அங்கு பாரிய தொழிற்­சா­லைகள் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் பட்­சத்தில் நிச்­ச­ய­மாக எமது நாட்டில் உள்ள இளைஞர் யுவ­திகள் அங்கு பணி­யாற்­று­வ­தற்கு போதாமல் போயி­ருக்கும். . அந்­த­ளவு தொழில் வாய்ப்­புகள் காணப்­பட்­டி­ருக்கும்.

எவ்­வா­றா­யினும் எமது ஆட்­சியில் அம்­பந்­தோட்­டையில் அமைக்­கப்­பட்ட துறை­முகம் மற்றும் விமான நிலையம் தொடர்­பாக உள்­நாட்டில் போலி பிர­சா­ரங்­களை செய்யும் அர­சாங்கம் சர்­வ­தே­சத்தில் அந்த திட்­டங்­களை கூறியே முத­லீட்­டா­ளர்­களை அழைக்­கின்­றது . 7.5 வீதத்தில் தேசிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகத்தை எம்மால் முன்­னெ­டுக்க முடிந்­தது. அர­சாங்­கத்­தினால் அதனை நெருங்க கூட முடி­ய­வில்லை.

இந்­தி­யாவின் நிலப்­ப­ரப்பு பெரி­தாக உள்­ளதே தவிர அதன் அபி­வி­ருத்தி இலக்­குகள் குறு­கி­ய­வை­யா­கவே காணப்­பட்­டன. எனது அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் பொரு­ளா­தா­ரத்தில் போட்­டி­யிட்டு முன்­னோக்கி சென்­றது. இறு­தியில் சூழ்ச்சி செய்­தனர். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான கொள்­கையில் தற்­போ­தைய அர­சாங்கம் உள்­ளது. பலஸ்­தீன முஸ்லிம் மக்­க­ளுக்­காக அன்று நாங்கள் குரல் கொடுத்தோம்.

அதே போன்று சர்­வ­தே­சத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சினை என்றால் நாங்கள் குரல் கொடுத்தோம் . ஆனால் இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான கொள்­கையில் அர­சாங்கம் உள்­ளது.

தனிப்­பட்ட இரு தரப்பு பிரச்­சி­னையை அர­சி­ய­லாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்சி வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. சர்­வ­தேசம் மிகவும் நுட்­ப­மான முறையில் முன்­னெ­டுத்­தது. இதற்கு தேவை­யான ஒத்­து­ழைப்­புகள் எமது அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் வழங்­கப்­பட்­டன. அவர்கள் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளா­கவும் உயர் பத­வி­க­ளிலும் உள்­ளனர்.

இதன் தாக்­கங்கள் நாட்டு மக்­க­ளுக்கு இன்று வெளிப்பட தொடங்கியுள்ளன. அம்பாந்தோட்டையில் சீனாவும் திருகோணமலையில் அமெரிக்காவும் பலாலி மற்றும் காங்கேசன்துறையில் இந்தியாவும் வியாபித்துள்ளனர் . தலைநகர் கொழும்பில் அனைவரும் உள்ளனர். நாடு எஞ்சுமா ? ஆகவே எந்தவொரு நேரத்தில் வைத்தாலும் அடுத்து வெற்றிப்பெற போவது நாங்கள் தான் என அவர் தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.