Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் விருப்பத்தை மீறி பொருத்து வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படாது

Featured Replies

மக்­களின் விருப்­பத்­தை மீறி பொருத்து வீட்­டுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டாது

p6-146b0fe4847fdff91fbf3b10577a32d5e8551e4c.jpg

 

பிர­தமர் உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக கூறு­கிறார் அமைச்சர் மனோ  
(பா.ருத்­ர­குமார்)

வடக்கு மக்கள் ஏற்­றுக்­கொண்டால் மட்­டுமே பொருத்து வீட்­டுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக அபி­விருத்தித் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டாது எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்­னிடம் உறு­தி­ய­ளித்த­தாக தேசிய சக­வாழ்வு நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரு­மங்கள் தொடர்­பான அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். மக்­க­ளுக்கு பொருத்­த­மில்­லாத திட்டங்­களை திணிக்கக் கூடாது.

அத­ன­டிப்­ப­டையில் மலை­ய­கத்தில் குறித்த பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை மேற்­கொள்ள பரீட்­சார்த்த நட­வ­டிக்­கை­களை மட்­டுமே மேற்­கொண்டோம். இந்­நி­லையில் மலை­ய­கத்­துக்கு குறித்த திட்டம் பொருத்­த­மற்­ற­தாக உள்­ள­மையால் அதனை கைவிட்­டுள்ளோம். எதிர்­வரும் காலங்­களில் நிரந்­தர கல்­வீ­டு­களே மலை­யக மக்­க­ளுக்கு அமைத்­துக்­கொ­டுக்­கப்­படும் எனவும் உறு­தி­ய­ளித்தார். 

பொருத்து வீட்­டுத்­திட்டம் தொடர்பில் அமைச்­ச­ரிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,

வடக்கு மக்கள் பொருத்து வீட்­டுத்­திட்டம் வேண்டாம் என ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொண்­டு­வரும் நிலையில் குறித்த விட­யத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ளேன். நேற்று முன்­தினம் அவ­ரு­ட­னான சந்­திப்பின் போது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்­க­ளுக்கு இவ்­வீட்­டுத்­திட்டம் அமைக்­கப்­ப­டு­வது தொடர்­பிலும் மக்­களின் நிலைப்­பாடு தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டினேன்.

இதன்­போது அவர் வடக்கு மக்கள் ஏற்­றுக்­கொண்டால் மட்­டுமே பொருத்து வீட்­டுத்­திட்டம் அமைக்­கப்­படும் என என்­னிடம் உறு­தி­ய­ளித்தார். அத்­தோடு மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக எந்­த­வொரு வீட்­டுத்­திட்­டமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டா­தெ­னவும் அதற்கு தான் உத்­த­ர­வாதம் தரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

எனவே இது தொடர்பில் நாம் கவ­லைப்­பட தேவை­யில்லை என நினைக்­கின்றேன். யுத்­தத்­தினால் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்த மக்­க­ளுக்கு அவர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை கொண்டு அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஏனைய மக்­க­ளைப்­போன்று சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யான வாழ்க்­கையும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். அதுவே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டா­கவும் உள்­ளது.

பொருத்து வீட்­டுத்­திட்டம் வடக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. அவ்­வீட்­டுத்­திட்­டத்­துக்கு மக்கள் எதிர்ப்பு தெரி­விப்­பார்­க­ளாயின் நிச்­சயம் அது தொடர்பில் அர­சாங்­கமும் வடக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­களும் கவனம் செலுத்த வேண்டும்.

மலை­ய­கத்­திற்­கான வீட­மைப்­புத்­திட்டம்  சிலர் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை மலை­ய­கத்தில் அமைக்­க­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். ஆனால் அவ்­வீட்­டுத்­திட்­டத்தை அமைக்க பரீட்­சார்த்த நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவ்வீட்டுத்திட்டம் மலையகத்துக்கு பொருத்தமற்றதாக உள்ளமையால் நிரந்தர கல்வீட்டை அமைக்க தீர்மானித்தள்ளோம். எனவே மக்களுக்கு பாதமான அல்லது மக்களின் விருப்பத்துக்கு மாறான விடயங்களை திணிப்பதால் அம்மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படபோவதில்லை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.