Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில்

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

249869.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் நுவான் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

84 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது 212 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்திருந்தது.

இலங்கை அணி சார்பில் சந்திமல் 60 ஓட்டங்களையும், குசல் பெரேரா 51 மற்றும் உபுல் தரங்க 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

http://www.virakesari.lk/article/14582

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவில் பயிற்சிப் போட்டி; சிறப்பாக ஆடிய இலங்கை டெஸ்ட் அணி

249871-354a49c748ff7306b7b24016e26a409f3201f005.jpg

 

தென்­னா­பி­ரிக்­கா­விற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அந்­நாட்டு கிரிக்கெட் சபையின் அணி­யுடன் 3 நாள் பயிற்சிப் போட்டியில் விளை­யா­டி­யது. இந்தப் போட்டி சம­நி­லையில் நிறை­வ­டைந்­தது. 

இதில் இலங்கை வீரர்கள் சற்று சிறப்­பா­கவே விளை­யா­டி­யி­ருந்­தனர். குறிப்­பாக காயத்­தி­லி­ருந்து மீண்டு வந்த தினேஷ் சந்­திமால் 60 ஓட்­டங்­களை பெற்றுக் கொண்டு ஆட்­டத்தை நிறுத்திக் கொண் டார்.ஆனா லும் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் முதல் இன்­னிங்ஸில் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்தார்.

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி தனது முத­லா­வது இன்­னிங்ஸில் 373 ஓட்­டங்­களைப் பெற்­றது. தென்­னா­பி­ரிக்க அழைப்பு பதி­னொ­ருவர் அணி தனது முத­லா­வது இன்­னிங்ஸில் 289 ஓட்­டங்­களைப் பெற்­றது.

போட்­டியின் இறுதி நாளில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்­டங்­களை பெற்றுக் கொண்­டது. இதன்­படி போட்டி வெற்றி தோல்­வி­யின்றி நிறை­வ­டைந்­துள்­ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-16

  • தொடங்கியவர்

சங்ககரா, மகேலா, தில்ஷன் இடத்தை இளம் வீரர்கள் நிரப்புகிறார்கள்: மேத்யூஸ்

சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றும் தில்ஷன் இடங்களை இளம் வீரர்கள் நிரப்புகிறார்கள் என்று இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியுள்ளார்.

 
 
சங்ககரா, மகேலா, தில்ஷன் இடத்தை இளம் வீரர்கள் நிரப்புகிறார்கள்: மேத்யூஸ்
 
இலங்கை அணியின் முன்னணி வீரர்களாக திகழந்தவர்கள் சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றம் தில்ஷன். இவர்கள் ஓய்விற்குப் பின் அந்த அணியில் அனுபவ வீரர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில், புதுமுக வீரர்களுடன் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை சந்திக்க, அந்த அணியின் சொந்த மண்ணுக்கு சென்றுள்ளது இலங்கை அணி. 26-ந்தேதி முதல் டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டி குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் ‘‘சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றும் தில்ஷன் ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது, அவர்கள் இடம் வெற்றிடமாகத்தான் இருந்தது. ஆனால், இளம் வீரர்கள் அவர்கள் இடத்தை நிரப்பி சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் குசால் மெண்டிஸ் மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா போன்ற இளம் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அணியில் இருப்பதை பார்க்க சிறப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வீழ்த்தியது எளிதான காரியம் அல்ல. நம்முடைய திறமையை சிறப்பான வகையில் வெளிப்படுத்தினால், கடந்த காலங்களில் பெற்றதுபோல் வெற்றிகளை பெற முடியும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/24170739/1058114/Youngsters-filling-vacuum-left-by-Sanga-Mahela-Dilshan.vpf

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா- இலங்கை நாளை பலப்பரீட்சை

 

தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.

 
 
முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா- இலங்கை நாளை பலப்பரீட்சை
 
போர்ட்எலிசபெத்:

இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நாளை தொடங்குகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் தென்ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும். இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும். இரு அணிகள் இதுவரை 22 டெஸ்டில் மோதியுள்ளன.

இதில் தென்ஆப்பிரிக்கா 11 டெஸ்டிலும், இலங்கை 5 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 டெஸ்ட் `டிரா' ஆனது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/25122152/1058196/first-test-south-africa-sri-lanka-play-tomorrow.vpf

  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்காவு­ட­னான 2011 வெற்­றியை போன்று மீண்டும் ஒரு வெற்­றியை சுவைக்­குமா இலங்கை?
2016-12-26 11:20:13

(நெவில் அன்­தனி)

 

அவுஸ்­தி­ரே­லியா, ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ராக கடை­சி­யாக விளை­யா­டிய ஐந்து டெஸ்ட் போட்­டி­களில் வெற்­றி­களை ஈட்டி தனது முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­திய இலங்கை, இன்று ஆரம்­ப­மாகும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ளது.

 

21420_Untitled-1.jpg

 

பொது­வாக தென் ஆபி­ரிக்­காவில் உப கண்ட நாடு­க­ளான இந்­தியா, பாகிஸ்தான். இலங்கை ஆகிய மூன்று நாடு­களும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வந்­துள்­ளதை சக­லரும் அறிவர். எனினும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் தில­க­ரட்ன டில்­ஷானின் தலை­மையில் டேர்பன் விளை­யாட்­ட­ரங்கில் தென் ஆபி­ரிக்­காவை 208 ஓட்­டங்­களால் இலங்கை வெற்­றி­கொண்­டி­ருந்­ததை மறக்க முடி­யாது. 

 

அதே போன்ற ஒரு வெற்­றியை தென் ஆபி­ரிக்க மண்ணில் இலங்கை மீண்டும் சுவைக்­குமா? என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

 

அந்த வெற்­றியில் அங்கம் வகித்த ஏஞ்­சலோ மெத்யூஸ், ரங்­கன ஹேரத், தினேஷ் சந்­திமால் ஆகிய மூவரே தென் ஆபி­ரிக்கா விஜயம் செய்­துள்ள தற்­போ­தைய அணியில் இடம்­பெ­று­கின்­றனர்.

 

டேர்­பனில் வெற்­றி­பெற்ற போட்­டியில் ரங்­கன ஹேரத் ஆட்ட நாய­க­னாகத் தெரி­வா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான தொடர் வெற்றி உட்­பட கடந்த 5 டெஸ்ட் போட்­டி­களில் ஈட்­டிய வெற்­றிகள் இலங்கை அணிக்கு நம்­பிக்கை ஊட்­டு­வ­தாக அமை­கின்­றது என ரங்­கன ஹேரத் தெரி­வித்தார்.

 

எனினும் தென் ஆபி­ரிக்க ஆடு­க­ளங்­க­ளுக்கு ஏற்ப இலங்கை அணி­யினர் தங்­களை தயார்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சியம் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 

தென் ஆபி­ரிக்க ஆடு­க­ளங்கள் பந்தை எகி­றிப்­பாயச் செய்­யக்­கூ­டிய வேக­மான ஆடு­க­ளங்­க­ளாகும். எனவே இலங்கை வீரர்கள் அதற்­கேற்ப தங்­க­ளது துடுப்­பாட்ட நுட்­பங்­களை சரி­செய்­து­கொள்­ள­வேண்­டிய கட்­டாய நிலையில் இருக்­கின்­றனர்.

 

எவ்­வா­றா­யினும் தென் ஆபி­ரிக்கத் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு சோதனை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் இலங்கை அணியில் இருப்­ப­தாக செய்தியா­ளர்­க­ளிடம் ரங்­கன கூறி­யுள்ளார்.

 

சுரங்க லக்மால், நுவன் பிரதீப், உபா­தை­யி­லி­ருந்து மீண்டு வந்து தஷ்­மன்த சமீர ஆகியோர் வேக­மான ஆடு­க­ளங்­களில் சாதிக்­கக்­கூ­டி­ய­வர்கள். எனவே இவர்கள் இலங்­கையை பல­மான நிலைக்கு இட்டுச் செல்ல உத­வுவர்.

 

அதே­வேளை, அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், உதவி அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் ஆகி­யோரும் மீண்டும் இணைந்­தி­ருப்­பது அணியை மேலும் பலப்­ப­டுத்­து­கின்­றது. எனவே தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டி­களில் சிறப்­பாக செயற்­பட முடியும் என நம்­பு­கின்றேன் என்றார்.

 

இது இவ்­வா­றி­ருக்க, அணியில் இடம்­பெறும் இளம் வீரர்கள் பலர் தென் ஆபி­ரிக்­காவில் புதிய அனு­ப­வத்தைப் பெற்று தங்­க­ளது திற­மையை மேம்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிப்பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் தென் ஆபி­ரிக்கா மீள் பிர­வேசம் செய்து 24 வரு­டங்கள் ஆன நிலையில் சரி­யாக 10 டெஸ்ட் போட்­டி­களில் இலங்கை அங்கு விளை­யா­டி­யுள்­ளது. அவற்றில் ஒரு வெற்­றியை மாத்­தி­ரமே இலங்கை சுவைத்­துள்­ளது.

 

எவ்­வா­றா­யினும் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் 1993 முதல் 2014 வரை நடை­பெற்­றுள்ள 22 டெஸ்ட் போட்­டி­களில் 5 வெற்­றி­களை இலங்கை ஈட்­டி­யுள்­ள­துடன் 11 தோல்­வி­களைத் தழு­வி­யுள்­ளது.

 

இந்தப் பெறு­பே­று­களின் அடிப்­ப­டை­யிலும் அண்­மைக்­கால இலங்­கையின் வெற்­றி­களின் அடிப்­ப­டை­யிலும் இன்று ஆரம்­ப­மாகும் 3 போட்­டிகள் கொண்ட தொடரில் இலங்கை பிர­கா­சிக்கும் என பெரும்­பாலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

நடந்து முடிந்த தென் ஆபி­ரிக்க அழைப்பு அணி­யு­ட­னான பயிற்சிப் போட்­டியும் இதனை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 

எனினும் தென் ஆபிரிக்காவு­ட­னான நடப்பு தொடரில் பொறுமை, பொறுப்­பு­ணர்வு, திறமை, அர்ப்­ப­ணிப்பு, விடா­மு­யற்சி ஆகிய அனைத்­தையும் ஒருங்கே பிர­யோ­கித்து இலங்கை வீரர்கள் விளை­யா­டினால் தென் ஆபி­ரிக்­காவை வீழ்த்த முடியும் என்­பது பல­ரது அபிப்­பி­ரா­ய­மாகும்.

 

போர்ட் எலி­சபெத் விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மாகும் கைவி­சேட நாள் (பொக் ஷிங் டே) டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணியில் இடம்பெறக்கூடிய வீரர்கள்:

 

திமுத் கருணாரட்ன, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெதயூஸ், உப்புல் தரங்க அல்லது குசல் ஜனித் பெரேரா அல்லது தனஞ்செய டி சில்வா, டில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, நுவன் ப்ரதீப் அல்லது லஹிரு குமார. இவர்களை விட இலங்கை குழாமில் புதுமுக வீரர் விக்கும் சஞ்சயவும் இடம்பெறுகின்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21420#sthash.2eHUDuJB.dpuf
  • தொடங்கியவர்

தெ. ஆபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

தெ. ஆபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

 
 
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=86404

  • தொடங்கியவர்
South Africa 267/6 (90.0 ov)
Sri Lanka
  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

 

  • தொடங்கியவர்

இலங்கையின் ஆதிக்கம் இன்றும் தொடருமா?

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

256754.jpg

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க அணி 267 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டுமினி 63 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்ததுடன், டி கொக் 25 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், டெஸ்ட் பந்துவீச்சின் அவரது சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினத்தை போல் இன்றும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு இலங்கை அணி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/14802

  • தொடங்கியவர்
South Africa 286/10 (98.5 ov)
Sri Lanka
  • தொடங்கியவர்

286 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா ; துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

 

 

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 286 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

C0nNopkWQAAcv6z__1_.jpg

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க அணி 267 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்று 19 ஓட்டங்களுக்குள்  மீதமிருந்த 4 விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் லக்மால் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 1 விக்கட்டினை இழந்து 19 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/article/14804

  • தொடங்கியவர்

துடுப்பாட்டத்தில் தடுமாறுகிறது இலங்கை

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை 181 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்துள்ளது.

256795.jpg

இலங்கை அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சற்று நிலைத்தாடிய மெத்தியுஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் பில்லென்டர் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய நாளுக்கான ஓவர்கள் மீதமிருந்த நிலையில், மைதானத்தில் போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது.

http://www.virakesari.lk/article/14821

  • தொடங்கியவர்

150711_11.jpg

150711_1.jpg

150711_10.jpg

150711_3.jpg

150711_4.jpg

150711_8.jpg

  • தொடங்கியவர்

205 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

256796.jpg

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பில்லென்டர்  5 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை 81 ஓட்டங்கள் முன்னிலையில்இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள தென்னாபிரிக்க அணி விக்கட்டிழப்பின்றி 39 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/article/14844

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-மாவது எல்.பி.டபிள்யூ அவுட்: ஆம்லாவை வீழ்த்திய நுவான் பிரதீப்

 
 
டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது எல்.பி. விக்கெட்டாக அவுட் ஆனார் ஹஷிம் ஆம்லா. | படம்.| ஏஎப்பி.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது எல்.பி. விக்கெட்டாக அவுட் ஆனார் ஹஷிம் ஆம்லா. | படம்.| ஏஎப்பி.
 
 

டெஸ்ட் கிரிக்கெட் இன்று 10,000-வது எல்.பி.டபிள்யூ. தீர்ப்பைக் கண்டுள்ளது.

போர்ட் எலிசபத் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

அந்த அணியின் ஹஷிம் ஆம்லா, தேநீர் இடைவேளைக்கு முன்னர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000-மாவது எல்.பி.அவுட் ஆகும். நுவான் பிரதீப்பும் ஹஷிம் ஆம்லாவும் புள்ளிவிவரப்பட்டியலில் இதன் மூலம் இடம்பெற்றனர்.

தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 286 ரன்களை எடுக்க, சுரங்க லக்மல் அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 205 ரன்களுக்குச் சுருண்டது, அந்த அணியில் அதிகபட்சமாக டி.எம்.டிசில்வா 43 ரன்களை எடுத்தார். வெர்னன் பிலாண்டர் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, மஹராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

81 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது, தொடக்க வீரர் ஸ்டீபன் குக் 108 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-கிரிக்கெட்டின்-10000மாவது-எல்பிடபிள்யூ-அவுட்-ஆம்லாவை-வீழ்த்திய-நுவான்-பிரதீப்/article9447960.ece?homepage=true

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்தும் முனைப்புடன் இலங்கை

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணி களுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

256857.jpg

முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 286 ஓட்டங்களை பெற்ற நிலையில், இலங்கை அணி 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது  இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி 315 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளதுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையானது 432 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் குக் 117 ஓட்டங்கள பெற்று ஆட்டமிழந்துள்ளதுடன்,  டி கொக் 42 ஓட்டங்கள் மற்றும் டுபிளசிஸ் 41 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், ஓட்டங்களை கட்டுப்படுத்தும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/14875

  • தொடங்கியவர்

488 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

Published by Pradhap on 2016-12-29 14:33:52

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

256867.jpg

351 ஓட்டங்களுடன் இன்றைய நாளின் ஆட்டத்தை ஆரம்பித்த  தென்னாபிரிக்க அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டி கொக் அரைச்சதத்தை பூர்த்திசெய்து 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்காவுடனான டெஸ்டில் இலக்கு 488; 5 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை
2016-12-29 21:47:21

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 488 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும்  இலங்கை அணி போராடி வருகிறது.

 

21498lanka-vs-south-africa.jpg

 

ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களான திமுத் கருணாரட்னவும் கௌஷால் சில்வாவும் திறமையாக துடுப்பெடுத்தாடி 87 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது திமுத் கருணாரட்ன 43 ஓட்டங்களுடன் ரன் அவுட்முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் ஜனித் பெரேரா தவறான அடி தெரிவின்மூலம் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து களம் விட்டகன்றார்.  கௌஷல் சில்வா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது எல்.பி.டபிள்யூமுறையில் ஆட்டமிழந்தார்.

 

அதன்பின்  குசல் மெண்டிஸும் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் இலங்கை அணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.  குசல் மெண்டிஸ் தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தைக் கடந்தார்.  அவர் 58 ஓட்டங்களைப் பெற்றார். தினேஷ் சந்திமால் 8 ஓட்டங்ளுடன் ஆட்டமிழந்தார்

 

இன்றைய ஆட்டமுடிவின்போது  இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு  240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.   ஏஞ்சலோ மெத்யூஸ் 58 ஓட்டங்களுடனும் தனஞ்செய டி சில்வா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

முன்னதாக, போட்டியின் நான்காம் நாள் காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, 406 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 6ஆவது விக்கட்டை இழந்ததுடன் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.


இன்று காலை தமது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், குவின்டன் டி கொக் ஆகிய இருவரும் அரைச் சதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 6ஆவது விக்கட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21498#sthash.I6FcT64j.dpuf
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா அணி 206 ஓட்டங்களால் வெற்றி

 

 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 206 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபத்  கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலாவது இனிங்ஸில் முதலாவது துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, அனைத்து விக்கட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்று கொண்டது.

256928.jpg

இந்நிலையில், முதல் இனிங்ஸில் இலங்கை அணி 205 ஓட்டங்களை பெற்று கொண்டது.85 ஓட்டங்கள் முன்னிலையில் தனது தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி 6 விக்கட்களை இழந்து, 406 ஓட்டங்களை பெற்று கொண்டது.

முதலாவது டெஸ்ஸில் இலங்கை அணிக்கு 488 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அமைந்தது.நேற்றைய தினம் ஆட்ட நிறைவில் 240 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்திருந்த இலங்கை அணியினர் இறுதி நாளான இன்று 248 பின்னிலையில் தனது ஆட்டத்தினை ஆரம்பித்தது.

256961.jpg

ஆரம்பம் முதலே தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 281 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்க அணி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணி சார்பாக இரண்டாவது இனிங்ஸில் சதம் அடித்த ஸ்டீபன் குக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/14925

  • தொடங்கியவர்

ஹெராத்திற்கு பந்து எடுபடாத வகையில் பிட்ச் தயார் செய்த தென்ஆப்பிரிக்கா

ஹெராத்தின் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத வகையில் தயார் செய்ய சொன்னோம். அதை செய்த மைதான ஊழியர்களுக்கு நன்றி என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

 
ஹெராத்திற்கு பந்து எடுபடாத வகையில் பிட்ச் தயார் செய்த தென்ஆப்பிரிக்கா
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 206 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. இதே போன்று இலங்கைக்கு எதிராக நடந்து விடக்கூடாது என்று அந்த அணி கவனமாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஹெராத் சிறப்பாக பந்து வீசுவார். ஆஸ்திரேலியாவை இலங்கை அணி 3-0 என வீழ்த்தி இவரது பந்து வீச்சு முக்கிய பங்காற்றியது.

இதனால் ஹெராத்திற்கு எந்த வகையிலும் வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தென்ஆப்பிரிக்கா கவனமாக இருந்தது. இதனால் ஆடுகளம் ஐந்து நாட்களும் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் தயார் செய்ய தென்ஆப்பிரிக்கா அணி கேட்டுக்கொண்டது. அதன்படி மைதான ஊழியர்களும் தயார் செய்து கொடுத்துள்ளனர். இதனால் டு பிளிசிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர்களும் ஆடுகளத்தை தயார் செய்துள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்றார்.

 

 

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/30193648/1059146/Du-Plessis-praises-groundsman-for-quelling-Herath.vpf

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்கா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

தென்ஆப்பிரிக்கா, இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது.

 
தென்ஆப்பிரிக்கா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
 
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 206 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.

இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது. இதிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.

தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/01122145/1059393/tomorrow-second-test-cricket-south-africa-sri-lanka.vpf

  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்காவுடனான 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்; இலங்கை அணியில் 3ஆம் இலக்கத்தில் மாற்றம் ஏற்படுமா?
2017-01-02 11:52:55

சொந்த மண்ணிலும் ஸிம்பாப்வேயிலும் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இலங்கை, போர்ட் எலிஸபெத் விளையாட்டரங்கில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் தானும் 300 ஓட்டங்களை நெருங்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

 

21547Angelow%20mathews.jpg


இந் நிலையில் கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவை சொற்ப நம்பிக்கையுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.


முதலாவது டெஸ்ட் தோல்விக்கு இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவும் தவறான அடி தெரிவுகளுமே காரணம் என்று கூறினால் தவறாகாது. குறிப்பாக மூன்றாம் இலக்கத்தில் குசல் ஜனித் பெரேரா நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியாமல் போனமை இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்தது எனலாம்.


குமார் சங்கக்காரவின் 3ஆம் இலக்கத்தை நிரப்பக்கூடியவராக டெஸ்ட் அறிமுகம் பெற்ற குசல் மெண்டிஸை நான்காம் இலக்கத்திற்கு தெரிவாளர்கள் மாற்றியமை தவறான ஒரு தீர்மானமாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அவரை ஊக்குவித்து உயரிய நிலைக்குக் கொண்டுவருவதை விடுத்து அவரது துடுப்பாட்ட வரிசையை மாற்றியது இலங்கை அணிக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


அவசரத் துடுக்கையான குசல் ஜனித் பெரேராவை 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வைப்பது எவ்வகையிலும் பொருத்தம் என்று கூறமுடியாது. அவரைவிட குசல் மெண்டிஸ் அவ்விலக்கத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியவர்.

 

மார்வன் அத்தப்பத்து தொடர்ச்சியாக ஐந்து பூஜ்ஜியங்களைப் பெற்றபோதிலும் அவரில் தெரிவாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனை அவர் நிரூபிக்கவும் செய்தார். எனவே குசல் மெண்டிஸுக்கும் 3ஆம் இலக்கத்தில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கி அவரது நம்பிக்கையை வளர்க்க சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும். நான்காம் இலக்கத்தில் சந்திமாலை அல்லது தனஞ்செய டி சில்வாவை துடுப்பெடுத்தாடச் செய்வது சாலச் சிறந்ததாகும்.


ஐந்தாம் இலக்கத்தை ஏஞ்சலோ மெத்யூஸ் நிலையாக வைத்திருப்பது அனைவரும் அறிந்த விடயம். தனஞ்செய 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடினால் 6ஆம் இலக்கத்திற்கு சந்திமால் பொருத்தமானவராவார். 7ஆம் இலக்கத்தில் குசல் பெரேரா அல்லது உப்புல் தரங்கவை களம் இறக்கலாம். எனவே இது குறித்து தெரிவாளர்களும் அணி முகாமைத்துவமும் நன்கு சிந்தித்து முடிவு எடுத்து இன்று ஆரம்பமாகும் நியூலண்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு உரிய அணியைத் தெரிவு செய்யவேண்டும்.


பந்துவீச்சாளர்களைப் பொறுத்த மட்டில் முதல் டெஸ்டில் விளையாடிய ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், துஷ்மன்த சமீர ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என நம்பப்;படுகின்றது.


நியூலண்ட்ஸ் மைதானத்தில் ஆசிய நாடொன்றிடம் தென் ஆபிரிக்கா இதுவரை தோல்வி அடைநததில்லை. அதற்கு முடிவுகட்டும் வகையில் இலங்கை அணியினர் மனோதிடத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவெண்டும் என இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். (என்.வீ.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21548#sthash.z2zHWi48.dpuf
  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 297/6

இலங்கை அணிக்கெதிரான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது.

 
2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 297/6
 

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் இன்று தொடங்கியது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்ததால் இலங்கை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டை இழந்தது. குக் ரன்ஏதும் எடுக்காமல் லக்மல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த அம்லா 29 ரன்னிலும், டுமினி ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக டு பிளிசிஸ் (38), பவுமா (10) ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க, டீன் எல்கர் சதத்தை நோக்கிச் சென்றார்.
5DC1581A-F974-4E8C-B95D-3359B94F61BA_L_s
6-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் டி காக் நிலைத்து நின்று விளையாடினார். டீன் எல்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய எல்கர் 129 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய டி காக் அரைசதம் அடித்தார். இவர் சதத்தால் தென்ஆப்பிரிக்கா அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது.

டி காக் 68 ரன்னுடனும், அப்போட் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் குமாரா 3 விக்கெட்டும், லக்மல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/02221831/1059718/2nd-Test-south-africa-297-for-6-in-1st-day.vpf

  • தொடங்கியவர்

இலங்கை - தென்னாபிரிக்கா டெஸ்ட் ; லஹிரு குமார 6 விக்கட்டுகள்

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான  லஹிரு குமார 6 விக்கட்டுகளை பெற்று தென்னாபிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையினை 392 ஓட்டங்களுக்கு இலங்கை அணியினர் மட்டு படுத்தியுள்ளனர்.

C1PXv3CXgAAkbub.jpg

257158.jpg

தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதற்கமைய நேற்று நாள் ஆட்ட முடிவில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 297 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது.

C1PQqqbXgAAIJmT.jpg

வலுவான நிலையில் 4 விக்கெட்டுக்களை கைவசம் கொண்டு இன்றைய நாள் ஆட்டத்தினை தொடங்கிய தென்னாபிரிக்கா அணியிரை மேலும் 100 ஓட்டங்களை கூட குவிக்க முடியாதவாறு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தங்களின் பந்து வீச்சில் ஈடுபட்டனர்.

C1PXwDHXEAAgORQ.jpg

தென்னாபிரிக்க அணி சார்பில் எல்கர் 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டி கொக் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார 6 விக்கட்டுகளையும் ஹேரத் மற்றும் லக்மால் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த மைதானத்தில் இதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணி 14 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியுற்றிருக்கிறது. அதேபோன்று, இதுவரை இந்த மைதானத்தில் மூன்று போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணி, அவை அனைத்திலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

C1PXv3CXgAAkbub.jpg

http://www.virakesari.lk/article/15027

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.