Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்தமான, நீண்டகால தீர்வு திட்டம் அவசியமாகும்

Featured Replies

பொருத்­த­மான, நீண்­ட­கால தீர்வு திட்டம் அவ­சி­ய­மாகும்

 

தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் வர­லாறு முழு­வதும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்த முயற்­சிகள் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. விசே­ட­மாக தீர்வு காணும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­கும்­போது ஏதோ ஒரு வழியில் அதற்கு எதி­ரான சக்­திகள் உரு­வாகி தீர்வுத் திட்­டங்கள் வெற்­றி­ய­டை­யாமல் போகும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

1987 ஆம் ஆண்டு பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­ட­மா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­போதும் அது தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தாக அமை­ய­வில்லை. இறு­தி­வரை 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்ட காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் எதுவும் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யி­லேயே தற்­போது நாட்டில் புதிய அர­சியல் சூழல் ஒன்று உரு­வா­கி­யுள்ள நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு சாத­க­மான சூழல் அமைந்­துள்­ள­தாக அனைத்து தரப்பு மட்­டத்­திலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதன்­படி தற்­போது நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது அர­சி­ய­ல­மைப்பில் முக்­கிய மூன்று விட­யங்­க­ளாக தேர்தல் முறை மாற்றம், இனப் பிரச்­சி­னைக்­கான அதி­காரப் பகிர்வு மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் என்­பன காணப்­ப­டு­கின்­றன.

இந்த இடத்­தி­லேயே தற்­போது சிக்கல் நிலைமை தோன்­றி­யுள்­ளது. அதா­வது தேர்தல் முறை மாற்­றத்­தையும் அதி­காரப் பகிர்வு முறை­மை­யையும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் கொண்டு வந்தால் அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார். அதே­நேரம் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதன் தலை­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்­பதை விரும்­பு­கின்­றனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு மூலம் தீர்­வு ­காணப்­பட வேண்டும் என்று கோரு­வ­தற்கு ஒரு பிர­தான காரணம் உள்­ளது. அதா­வது தமிழ் பேசும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் தீர்வுத் திட்­ட­மா­னது நாட்டின் அனைத்து தரப்­பி­ன­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என்­பதை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­பு­கி­றது.

எனவே அனைத்து தரப்­பினர் மத்­தி­யிலும் இணக்­கப்­பாடு ஏற்­படும் வகை­யி­லான தீர்வுத் திட்­ட­மொன்­றிற்கு செல்­வதே பொருத்­த­மாக அமையும் என கூட்­ட­மைப்பு கரு­து­கி­றது. ஆனால் தென்­னி­லங்­கையில் அதி­காரப் பகிர்­வினை முழு­மை­யாக ஆத­ரிக்கும் பெரும்­பான்மை அர­சியல் தலை­வர்கள் சிலர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வது அபா­ய­க­ர­மா­ன­தாக முடிந்­து­விடும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இது தொடர்பில் ஆரம்ப காலத்தில் இருந்தே அர­சியல் தீர்வு மற்றும் அதி­காரப் பகிர்வை வலி­யு­றுத்தி வரு­கின்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா, புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால் அது தோற்க­டிக்­கப்­படும் அபாயம் மிக அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

எனவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் உயர்ந்த பட்ச அதி­கார பகிர்­வினை மேற்­கொள்­­வ­துதான் பொருத்­த­மா­ன­தாக அமையும். மக்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் போது ஒரு­போதும் கேட்­கின்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்க மாட்­டார்கள். மாறாக அர­சி­யல்­ரீ­தி­யா­கவே சிந்­திப்­பார்கள். அவ்­வாறு அர­சியல் ரீதி­யாக சிந்­தித்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வாக்­க­ளிக்க மக்கள் முற்­பட்டால் அது தோல்­வி­யி­லேயே முடி­வ­டையும். பிரிட்­டனில் நடந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும் எனவும் டிலான் பெரேரா தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அதே­போன்று இந்த யதார்த்­தத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் புரிந்து கொள்­ளாமல் இருக்­கின்­றமை எமக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக ஆரம்ப காலத்­தி­லி­ருந்து அதி­காரப் பகிர்­வினை வலி­யு­றுத்­து­கின்ற என் போன்­ற­வர்கள் கூறு­கின்ற இந்த யதார்த்­தத்தை கூட்­ட­மைப்­பினர் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறி­யுள்ளார்.

அது­மட்­டு­மின்றி தற்­போது நாட்டில் இடம்­பெறும் விட­யங்­களை பார்க்­கும்­போது எங்கே இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாத நிலைமை ஏற்­பட்டு விடுமோ என்ற கவ­லையும் எங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் காலத்­தி­லேயே இனப்பிரச்­சி­னைக்கு தீர்வை கண்­டு­விட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போ­தைய நிலை­மை­களை நோக்­கும்­போது சம்­பந்தன் இல்­லாத ஒரு மேடையில் தீர்வு காண்­பது என்­பது மிகவும் கடி­ன­மாகும் என்றும் சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா எடுத்துக் காட்­டி­யி­ருக்­கிறார்.

இந்த விட­யங்­களை பார்க்­கும்­போது இரண்டு பக்­கங்­க­ளிலும் ஒரு நியா­ய­மான கார­ணம் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. அதா­வது நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் இணக்­கப்­பா­டின்றி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்­காது என்­பதால் அனை­வரும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய தீர்வுத் திட்­டத்­திற்கு செல்ல வேண்டும் என பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எண்­ணு­கி­றது. இதிலும் நியா­ய­மான விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அதே­வேளை சர­்வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் தீர்வுத் திட்­டத்தை முன்­வைத்து அதனை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்­வதே தற்­போ­தைய நிலை­மையில் யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது பொருத்­த­மாக இருக்கும் என தென்­னி­லங்கை மித­வாத தலை­வர்கள் கூறு­வ­திலும் ஒரு கருத்­தியல் நியாயம் உள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

ஆனால் எது எப்­ப­டி­யி­ருப்­பினும் எதிர்க்­கட்சித் தலைவர் கூறு­வதைப் போன்று நாட்டின் அனைத்து தலை­வர்­களும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய ஒரு தீர்வுத் திட்­டத்­திற்கு செல்வதே நீண்டகால ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு பொருத்தமாக அமையும். எனவே இதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது தென்னி லங்கை மிதவாத அரசியல்வாதிகளின் பொறுப்பாகவும் கடமை யாகவும் இருக்கின்றது. மேலும் தமிழர் தரப்பும் பல யதார்த்தங்களை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இறுதியாக தற்போது கிடைத்துள்ள சாதகமான மற்றும் தீர்க்கமான அரசியல் சூழலில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டம் ஒன்றிற்கு செல்வதே பொருத்தமாக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தரப்பினரும் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-20#page-4

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் மனிதத்துவத்திற்கான தேவைகளும்

 

5c9665800c1c4edc8044d1dea1b35c04_6-e1482128603795-270x220.jpg

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கைக்குப் MOU (Memorandum of Understanding) பின் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறவும், மனிதத்துவத்துடன் வாழவும் சர்வதேச உதவிகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஈழத்தமிழர்கள் தமது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு, இராஜதந்திர ரீதியில் கிடைக்கப் பெற்றுள்ள மூன்றாம் தரப்பு ஆவணங்கள்:

  1. 1987ஆம் ஆண்டில் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தம்.
  2. 2002ஆம் ஆண்டில் நோர்வே அனுசரணையில் உருவான அமைதி உடன்படிக்கையும், தமிழீழ விடுதலைப் புலிகளுனான 5 சுற்றுப் பேச்சு வார்த்தைகளும், இதன்போது உருவாக்கப்பட்ட SLMM (Sri Lanka Monitoring Mission).
  3. ஐ.நா. செயலாளர் நாயகம், இலங்கை ஜனாதிபதியின் 2009ஆம் ஆண்டு கூட்டான பிரகடனம் (மஹிந்த பான் கீ மூன் பிரகடனம்).
  4. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (UNSG expert Panel Report) ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்குழு அறிக்கை – 2013
  5. ஐ.நா. மனித உரிமை அவையின் தொடர் தீர்மானங்களும் 2017ஆம் ஆண்டின் 34ஆவது கூட்டத் தொடரில் எதிர்பார்க்கப்படும் தீர்மானமும்.
  6. 2010இல் Dublin Permanent People’s Tribunal தீர்மானம். Dublin Permanent People’s Tribunal 2010 தீர்மானத்தில் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டுகள், மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
  7. 2013 மார்ச் 27 தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம். மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டது. அதில் இந்தியா, இலங்கையை நட்பு நாடான நிலையை நீக்கி, பொருளதாரத்தடைகளை விதித்து, இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் இராஜதந்திர நகர்விற்கு மேற்கூறிய 7 சர்வதேச தீர்மானங்கள் மிகவும் ஆணித்தரமான மூலங்களாகும். இதனை எமது இளம் சந்தியினர் முற்றாகக் கற்றறிதல் வேண்டும். அடுத்து ஐ.நா. மனித உரிமை அமர்வின் 34ஆம் கூட்டத்தொடர் எதிர்வரும் பங்குனி மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் நாடாளுமன்ற கட்சி அரசியலுக்கு அப்பால், எமக்குத் தேவைப்படும் மனிதத்தைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத மனிதம்

  1. சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை.
  2. தமிழ் குடும்பங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு முறையான இழப்பீடு.
  3. காணாமல் போனவர்களின் விபரங்களை அறிதல்.
  4. காயப்பட்டோர், சித்திரவதைக்கு உட்பட்டோர், உடல் நோய்வாய்ப்பட்டோருக்கான மருத்துவ உதவியும், சமூகப் புனர்வாழ்வும்.
  5. கொல்லப்பட்டவர்களின் நினைவுச்சின்னங்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நிரந்தர உதவிகள்.

சிறை கைப்பப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் முழுவிபரமும் இருட்டடிக்கப்பட்டு உள்ளது. எவ்வித விசாரணையும் இன்றி பல தமிழர்கள் சிறைகளில் 10 வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் மனிதத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச உடன்பாடுகள்

  1. இலங்கை இந்திய ஒப்பந்தம் (1987)
  2. நோர்வே அனுசரணை அமைதி உடன்படிக்கை (2002)
  3. பான் கீ முன் – மஹிந்த பிரகடனம் (2009)
  4. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (2013)
  5. ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானங்கள் (2015)
  6. மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு (2010)
  7. தமிழக சட்டபைத் தீர்மானம் (பங்குனி 27, 2013).

ஈழத்தமிழ் அரசியல் செல்நெறியை முன்னெடுப்பவர்கள் குறிப்பாக இளம் அரசியல் விஞ்ஞானம் கற்போர் தமிழ் மனிதத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைகளை அறிதல் வேண்டும்.

பாரிய இன அழிப்பினை நடத்திய அரசு, அதனை உலக ரீதியில் இராஜதந்திரமாக மறைத்தது போக வரலாற்றில் மறைப்பதற்காக தமிழர் தாயகத்தில் பாரிய சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுக்கின்றது. இதற்காக தமிழ்க் கிராமங்கள் தோறும் புத்தவிகாரைகளை நிறுவுகின்றது. தமிழர் தாயக கடல்வளங்களை காவு கொண்டு உள்ளது. வலிகாமம், வன்னி பெருநிலம் என்பவற்றில் பெருமளவு நிலத்தினை உயர் பாதுகாப்பு வலயமாக தடுத்து வைத்தும் உள்ளது.

எனவே, தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும்,

  1. சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.
  2. பௌத்த விகாரைகள் அமைத்தல் நிறுத்தப்படல் வேண்டும்.
  3. இராணுவ ஆக்கிரமிப்பு முற்றாக விலத்தல் வேண்டும்.
  4. கடல் ஆக்கிரமிப்பு முற்றாக விலத்தல் வேண்டும்.
  5. பொதுவிட ஆக்கிரமிப்பு முற்றாக அகற்றப்படல் வேண்டும்.

இறுதியாக இலங்கை அரசு, ஒற்றை ஆட்சிக்குள் அரசியல் தீர்வை வழங்க முனைவது, முழு இலங்கையையும் சிங்களமயமாக்கலுக்கான திட்டமாகவே தமிழர்களால் கருதப்படும். எனவே, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே தமிழ் மக்கள் விரும்பி நிற்பதாகும். அன்றேல் இலங்கையில் மீளவும் போராட்டங்கள் விடுதலையை நோக்கி தொடர வாய்ப்பு உண்டு.

மருத்துவர் சி. யமுனாநந்தா

 

http://maatram.org/?p=5288

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.