Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் துப்பாக்கி ஊடாகவே ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்

Featured Replies

இரா­ணு­வத்தின் துப்­பாக்கி ஊடா­கவே ரவிராஜ் படுகொலை செய்­யப்­பட்டார்

55-954cad9e0e698dc5f9f6d8c7f914a97de0cf1dea.jpg

 

பிர­தான விசா­ரணை அதி­காரி பிரே­ம­தி­லக சாட்­சியம் 
(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை இரா­ணு­வத்­துக்கு சொந்­த­மான ரீ 56 ரக துப்­பாக்­கியே ரவிராஜ் படு­கொ­லைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக குறித்த விவ­காரம் தொடர்பில் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­யான பிரே­ம­தி­லக அம­ர­வங்ச நேற்று நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­ல­கவின் மேற்­பார்­வையில் சிறப்பு ஜூரிகள் சபை முன்­னி­லையில் அவர் சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு அவர் வழங்­கிய சாட்­சியம் சுருக்­க­மாக வரு­மாறு:

' நான் கடந்த 16 வரு­டங்­க­ளாக குற்றப் புல­னா­யவுப் பிரிவில் கட­மை­யாற்­று­கின்றேன். கடந்த 2006 ஆம் ஆண்டும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­லேயே கட­மை­யாற்­றினேன். ரவிராஜ் படு­கொலை விசா­ர­ணை­களை நானே முன்­னெ­டுத்தேன். 2006.11.10 ஆம் திகதி நான் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு சென்றேன். குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியின் மேற்­பார்­வையில் இவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுத்தேன். 2006.11.10 ஆம் திகதி முதல் இது குறித்த விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில் 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 30 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது. இதன் போது இருவர் கைது செய்­யப்­பட்­டனர். எனினும் அவர்கள் இரு­வரும் நீதிவான் நீதி­மன்­றி­ரினால் விடு­விக்­கப்­பட்­டனர். அவர்கள் கொலை­யா­ளிகள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்­கிளின் இலக்கம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணையில் கைதா­னோ­ராவர். அமோட்டார் சைக்கிள் இலக்கம் போலி­யா­னது என மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது. ரீ.வி.எஸ். மோட்டார் சைக்கிள் இலக்கம் பல்சர் மோட்டார் சைக்­கி­ளுக்கு பொருத்­தப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது. உண்மை இலக்­கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் பொலன்­ன­றுவை வெலி­கந்த பகு­தியில் கருனா குழு­வி­னரின் மோதலில் அழி­வ­டைந்­துள்­ள­மையைக் கண்­ட­றிய முடிந்­தது.

 இந் நிலை­யில்தான் 2015.02.26 அன்று இக்­கொலை விசா­ர­ணை­களில் புதிய திருப்பம் ஏற்­பட்­டது. நார­ஹேன்­பிட்டி பகு­திக்கு நான் நேர­டி­யாக சென்று எனது தனிப்­பட்ட உளவு உத்­தி­யோ­கத்தர் ஊடாக பல்­வேறு தக­வல்­களை சேக­ரித்தேன். இதன் போதே சம்பத் பிரீத்தி விராஜ் எமக்கு வாக்கு மூலம் அளித்தார். இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் 60 பேரிடம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்­ளப்ப்ட்­டது. இதன் போதே கடற்­படை உறுப்­பி­னர்­க­ளான ஹெட்டி ஆரச்சி, பிரதீப் சாமிந்த மற்றும் காமினி சென­வி­ரத்ன ஆகி­யோரை கைது செய்தோம். அத்­துடன் பழனிச் சாமி சுரேஷ், சரன் மற்றும் டூசேன் ஆகீயோர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. சரன் டூசேன் தொடர்பில் சர்­வ­தேச பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கொலைக்கு பயப்ன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்பில் அரச இர­சா­யண பகுப்­பாய்வு ஊடாக விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இதன் போது குறித்த துப்­பா­ககி இலங்கை இரா­ணு­வத்­துக்கு சொந்­த­மா­னது என தெரி­ய­வந்­தது. என சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் பிர­தி­வா­தி­களை அடை­யாளம் கண்டார்.

 இத­னை­ய­டுத்து பிர­தி­வா­திகள் தரப்பு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யான அனோஜ பிரே­ம­ரத்ன சாட்­சி­யா­ள­ரிடம் குறுக்கு கேள்வி தொடுத்தார். இதன் போது விஷே­ட­மாக ரவிராஜ் கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ரணை தொடர்­பிலும், துப்பாக்கி மறைத்து கறுப்பு பையில் இருந்த இரத்தக் கறையை மையப்படுத்தி அப்பொலிஸார் முன்னெடுத்த டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.

 ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிசாரின் விசாரணைகள் இடை நடுவே தடைப்பட்டதாக சாட்சியாளர் பதிலளித்தார்.

இந் நிலையில் இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-21#page-1

  • தொடங்கியவர்

ரவிராஜ் படுகொலை விசாரணை வெள்ளியன்று நிறைவடையும்

55-3a69dac9930387700efe9e917f475cb559d02c93.jpg

 

(எம்.எப்.ம்.பஸீர்)
மேல்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு

யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்ப் பாது­கா­வலர் லக் ஷ்மன் ஆகி­யோரின் படு­கொலை தொடர்பில் இடம்­பெற்று வரும் வழக்கின் தீர்ப்­பா­னது எதிர்­வரும் வெள்­ளி­யன்று அறி­விக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

விசேட ஜூரிகள் முன்­னி­லையில் இடம்­பெற்­று­வரும் இந்த வழக்கில் நேற்­றைய தினம் அரச சாட்­சி­யான பிரித்தி விரா­ஜுக்கு பிணை கோரப்­பட்ட நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்த மேல்நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தியதிலக, மூன்று நாட்­க­ளுக்குள் வழக்கு நிறை­வ­டை­ய­வுள்­ள­தாக அறி­வித்­தை­ய­டுத்தே வெள்­ளி­யன்று தீர்ப்பு வழங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறித்த படு­கொலை வழக்கின் பிர­தான சாட்­சி­யான பிரித்திவிராஜ் மனம்­பேரி எனும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபில் விளக்­க­ம­றி­யலில் இருக்கும் நிலையில் அவ­ருக்கு பிணை வழங்­கு­மாறு நேற்று முன் தினம் அவ­ரது சட்­டத்­த­ரணி பிரி­ய­தர்­ஷன மன்றைக் கோரினார்.

அது தொடர்பில் நேற்று தீர்­மா­னிப்­ப­தாக நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக ஏற்­க­னவே அறி­வித்த நிலையில் நேற்று ரவிராஜ் கொலை வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது பிணை குறித்து நீதி­பதி அறி­வித்தார்.

' குற்­ற­வியல் சட்­டத்தின் 256 (3) ஆம் அத்­தி­யா­யத்தில் பிணை குறித்து மிகத் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. அதன்­படி வழக்­கொன்று நிறை­வுறும் வரை சாட்­சி­யா­ளரை விளக்­க­ம­றி­யலில் வைக்க முடி­யுமா என்­பது குறித்தும் அத­னுடன் இணைந்­த­தான விட­யங்கள் குறித்தும் நான் ஆராய்ந்தேன்.

இவ்­வ­ழக்கைப் பொறுத்­த­வரை முதலாம் இலக்க சாட்­சி­யாளர் மீள சாட்­சியம் வழங்க அழைக்­கப்­படக் கூடும். அத்­துடன் இன்னும் மூன்று நாட்­களில் இவ்­வ­ழக்கு விசா­ரணை நிறை­வுக்கு வர­வுள்­ளது. எனவே, பிணைக் கோரிக்­கையை நிரா­க­ரிக்­கின்றேன். வழக்கின் இறுதித் தினத்­தன்று இது தொடர்பில் ஆரா­யலாம்.' என அறி­வித்தார்.

இந்த நிலை­யி­லேயே எதிர்­வரும் வெள்­ளி­யன்று ரவிராஜ் படு­கொலை விவ­கா­ரத் தில் தீர்ப்பு அறி­விக்­கப்­ப­டலாம் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் தற்­போது இடம்­பெறும் சாட்சி விசா­ர­ணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந் நிலையிலேயே முறைப்பாட்டாளர் தரப்பு மற்றும் பிரதி வாதிகள் தரப்பு வாதங்களின் பின்னர் இந்த

தீர்ப்பு வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-21#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.