Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள்

Featured Replies

காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள்

 

யுத்­த­கா­லத்தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப்­பெ­ற­மு­டி­யாது பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக திண்­டா­டி வரு­கின்­றனர். மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை புதிய அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் கூட காணிகள் விடு­விப்பில் விரை­வுத்­தன்­மையை காண­மு­டி­ய­வில்லை.

யுத்­த­கா­லத்தில் இவ்­வாறு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பொது­மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள், உற­வி­னர்கள், நண்­பர்கள் இல்­லங்­க­ளிலும் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தனர். இந்­நி­லையில் தமது காணி­க­ளையும் வீடு­க­ளையும் மீளப்­பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­போ­திலும் காணி­களை விடு­வித்துக் கொள்­வது என்­பது ஒரு கடி­ன­மான விட­ய­மா­கவே காணப்­பட்டு வரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­மென பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் கடந்த அர­சாங்­கத்­தினால் அதற்­கான முயற்­சிகள் ஆக்­கபூர்­வ­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வந்­தது. பொது­மக்கள் தமது சொந்த காணிகள் அப­க­ரிக்­கப்­பட்ட நிலையில் அவற்­றையே மீள வழங்­கு­மாறு கோரி­வ­ரு­கின்­றனர். எனவே, அர­சாங்கம் பாது­காப்புத் தரப்­பி­ன­ரிடம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் காணி­களை மீள்­வ­ழங்­கு­வதில் தாம­திக்­கக்­கூ­டாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் படிப்­ப­டி­யாக வடக்கின் சில இடங்­களில் குறிப்­பி­டத்­தக்க காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. தொடர்ந்து பொது­மக்­களின் அனைத்து காணி­களும் விடு­விக்­கப்­ப­டு­மென அர­சாங்­கத்­தினால் உத்­த­ர­வாதம் அளித்­துள்­ள­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் விரை­வாக இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற தெல்­லிப்­பழை பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்­புக்­ கு­ழுக்­ கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா யாழ்ப்­பாணம் வலி. வடக்கு உயர் ­பா­து­காப்பு வல­யத்தில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களில் மேலும் சில காணிகள் அடுத்­த­வ­ருடம் அளவில் விடு­விக்­கப்­ப­டு­மென நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்தார். அத்­துடன் வலி. வடக்கு காணி­வி­டு­விப்பு மற்றும் வடக்கில் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள காணி­களை விடு­வித்து அப்­ப­கு­தி­களில் மீள் குடி­யேற்றம் செய்­வது தொடர்பில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட தலை­வர்­க­ளுடன் காணி விடு­விப்பு தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு வரு­கி­றது எனவும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மேலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் காணி விடு­விப்பு தொடர்பில் இரா­ணுவக் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்­தை­ நடத்தி வரு­கிறோம். இரா­ணு­வத்­துடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்தை தொடர்பில் நாங்கள் வெளியில் கருத்­துக்­களை தெரி­விப்­ப­தில்லை. அவ்­வாறு கருத்­துக்­களை வெளி­யிட்டால் தேவை­யற்ற விமர்­ச­னங்கள் எழும். இலங்கை அர­சாங்­கத்­து­டனும் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டனும் நடத்­தப்­படும் பேச்­சு­வார்த்­தைக­ளிலும் காணி­வி­டு­விப்பு தொடர்பில் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்­றது என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் தொடர்ச்­சி­யாக இவ்­வாறு காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு­ வ­ரு­கின்­றனர். எனினும் காணி விடு­விப்பு என்­பது தொடர்ந்து தாம­த­மா­கவே இருந்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி அடிக்­கடி வடக்கு மாகா­ணத்­திற்கு செல்­லும்­போது பொது­மக்­களின் காணிப்­பி­ரச்­சினை தொடர்பில் கருத்து வெளி­யிட்டு வரு­கின்றார். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட பொது­மக்கள் காணி­களை இழந்த நிலையில் பாரிய துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­வ­தா­கவும் எனவே காணி­களை இழந்­துள்ள மக்­களின் பிரச்­சி­னைக்கு விரை­வாக தீர்வு வழங்­க­வேண்­டி­யது அவ­சியம் என்றும் ஜனா­தி­பதி அடிக்­கடி சுட்­டிக்­காட்­டி­வ­ரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ஒரு­முறை யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்­த­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருக்­கின்ற தற்­கா­லிக முகாம் ஒன்­றுக்கு சென்று அந்த மக்கள் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­களை நேரில் பார்த்­தி­ருந்தார். அது­மட்­டு­மன்றி அந்த மக்­களின் அவ­லங்­களை நேரில் கண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வாக அவர்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள விசேட செய­ல­ணி­யையும் நிய­மித்­தி­ருந்தார். ஆனால், குறிப்­பிட்ட காலத்­திற்குள் அந்த செய­லணி வடக்கு மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனக் கூறப்­பட்­டி­ருந்த போதிலும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­களின் அனைத்து காணி­களும் விடு­விக்­கப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக வடக்­குக்கு சென்று வந்­ததன் பின்னர் தென்­னி­லங்­கையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்கு மக்கள் தம்­மி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளையே மீண்டும் கேட்­கின்­றனர் என்றும் அவ்­வாறு மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அத்­துடன் உங்­க­ளது காணி­களை இழந்­து­விட்டு முப்­பது வரு­டங்­களாக உங்­களால் காத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யுமா? எனவும் தென்­னி­லங்கை மக்­க­ளிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அந்­த­வ­கையில் வடக்கு மக்­களின் அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீண்டும் அவர்­க­ளிடம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி மிகவும் அக்­க­றை­யாக இருக்­கின்றார் என்­பது தெளி­வா­கின்­றது. ஆனால், அதற்­கான பொறி­முறை உரிய வேகத்தில் நடை­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் மக்­களின் காணி விடு­விப்பு விட­யத்தில் ஆக்­கபூர்­வ­மான சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. படிப்­ப­டி­யாக வடக்கின் சில பகு­தி­களில் காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தது. சில பிர­தே­சங்­களில் காணிகள் விடு­விக்­கப்­பட்டு மக்கள் அப்­ப­கு­திக்கு செல்­வ­தற்கும் அனு­ம­திக்­கப்­பட்­டனர். ஆனால், இன்னும் பாரிய அள­வி­லான காணிகள் வடக்கின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ளன.

 யுத்­தத்­தினால் கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய இழப்­புக்­களை சந்­தித்­தி­ருக்­கின்­றனர். இந்த நிலையில் அந்த மக்­களின் காணி­களும் பாது­காப்புத் தரப்­பி­னரால் யுத்­த­கா­லத்தில் அப­க­ரிக்­கப்­பட்­டன. எனவே யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அந்­தக் ­கா­ணிகள் மக்­க­ளிடம் விரை­வாக மீள­ளிக்­கப்­படும் என பர­வ­லாக எதிர்பார்க்­கப்­பட்­டது. ஆனால், அதற்­கான ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் இந்த விட­யத்தில் நட­வ­டிக்கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென மக்கள் பாரிய அளவில் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர்.

புதிய அர­சாங்கம் இந்த விட­யத்தில் குறிப்­பி­டத்­தக்க அளவு சாத­க­மாக செயற்­பட்­டாலும் மக்­களின் காணிகள் விடு­விப்பில் விரை­வான முன்­னேற்றம் தென்­ப­ட­வில்லை. எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கிரம­ சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் வடக்கில் மக்­களின் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விரை­வாக மீளப்­பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். மக்­களின் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள் வழங்கும் செயற்பாடானது எக்காரணத்தைக் கொண்டும் தாமதிக்கப்படக்கூடியதல்ல. அனைத்தையும் இழந்து பாரிய வேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் அவர்களின் சொந்தக்காணிகளையாவது விரைவாக மீளப்பெற்றுக்கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அந்த மக்கள் அரசாங்கத்திடம் இலவசமாக எதனையும் கேட்கவில்லை. மாறாக தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையே விரை வாக பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் அந்தக் கோரிக்கை நியாயமானதாகும். இந்த விடயத்­தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசிய­­­­மாகும். குறிப்பாக தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு­கள் முன்வைக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையிலேயே வடக்கு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர் அந்த அடிப்படைப் பிரச்சினைகளில் காணிப் பிரச்சினை என்பது பிரதானமானதாகும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் விரைவாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.