Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் பெரும்பான்மையின குழு ஒன்றின் தாக்குதலால் உயிருக்குப் போராடும் தமிழ் இளைஞர் :

Featured Replies

வவுனியாவில் பெரும்பான்மையின குழு ஒன்றின் தாக்குதலால் உயிருக்குப் போராடும் தமிழ் இளைஞர் :

vavuniya-boy.png

வவுனியாவில்  தமிழ் இளைஞர் ஒருவர்மீது பெரும்பான்மையின குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயத்திற்கு உள்ளான குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் உயிருக்குப் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 26 வயதான தர்மலிங்கம் சுபராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தப்பட்ட பேருந்து ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தர்மலிங்கம் சுபராஜ் வவுனியா உணவகம் ஒன்றில் கடமை புரிகிறார். நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்பான்மையினரை சேர்ந்த ஆறு இளைஞர்கள் கொண்ட குழுவொன்று உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

உணவகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி மறுத்தமையின் காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை  தொடர்ந்தே குறித்த தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் நோக்கிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞரை உணவகத்திற்குள் வைத்து தாக்கிய குழு தனியார் பேருந்து ஒன்றை கடத்தி, அதில் குறித்த இளைஞரை கடத்திச் சென்று கொலை தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கொலை முயற்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா மூன்றுமுறிப்பில் உள்ள பூனாவ என்ற குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் அமித் விக்கிரமசிங்க மற்றும் உபாலி சேனநாயக்கா ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://globaltamilnews.net/archives/11239

  • தொடங்கியவர்

வவுனியாவில் இளைஞன் மீது கொடூர தாக்குதல் ; சந்தேக நபர்கள்  நால்வர் கைது

Published by Pradhap on 2016-12-23 12:05:32

 

வவுனியாவில்  உணவகமொன்றின் உரிமையாளரின் மகனை தாக்கிய சம்பவம் தொடர்பில் உணவகத்தில் இரவு கடமையில் பணியாற்றியவர்கள் மற்றும் அதில் ஒருவரின் சகோதரர் உட்பட  4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

unnamed__1_.jpg

 உணவகத்தில் இரவுக்கடமையில் பணியாற்றிய  3 பேர் மற்றும்  பணியாற்றியவர்களில் ஒருவரின் சகோதரர் ஆகிய நால்வரையும்  விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed__2_.jpg

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதில் சந்தேகத்தில் பெயரில் பஸ் சாரதி, நடத்துநர், ஆகிய இருவரையும் கடத்துதலுக்கு பயன்படுத்திய பஸ் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் பிரபல உணவகத்தின் உரிமையாளரின் மகன் தனது உணவகத்தில் இருந்தபோது ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து இரவு குறித்த இளைஞன் இரண்டாம் குறுக்குத் தெருவிலிருக்கும் தனியார் பஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த 8 பேரடங்கிய குழுவினர்  இளைஞர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டதுடன் இளைஞன் மீது டீசலை ஊற்றியுள்ளனர்.

unnamed__3_.jpg

இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞனை பஸ் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சூடுவெந்தபுலவிற்கு சென்றுள்ளனர்.  

இச்சம்பவத்தினை அறிந்த குறித்த இளைஞனின் சகோதரன் குறித்த பஸ் வண்டியினை பின்தொடர்ந்து பஸ்ஸில் ஏறியபோது  தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான  தர்மலிங்கம் சுபராஜ் வயது (26) பூந்தோட்டம், ஸ்ரீநகரில் வசித்துவரும்  இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

unnamed__4_.jpg

http://www.virakesari.lk/article/14674

19 hours ago, நவீனன் said:

 உணவகத்தில் இரவுக்கடமையில் பணியாற்றிய  3 பேர் மற்றும்  பணியாற்றியவர்களில் ஒருவரின் சகோதரர் ஆகிய நால்வரையும்  விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட இளைஞரை காப்பாற்றியவர்களை கைது செய்த சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தின் சிங்கள போலீஸ் பயங்கரவாதிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.