Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு

Featured Replies

கச்சதீவு அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு
 
கச்சதீவு அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம்  யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராச ஆண்டகையினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
1482477832_download%20%282%29.png
 
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் தலைமையில் காலை 8.30 க்கு விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
 
1482478013_download%20%283%29.png
 
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு அதன் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது.
 
எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
 
1482477869_download%20%281%29.png
 
இந் நிலையிலேயே இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
1482477971_download.png
 
ஆலய திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர் பொது மக்கள், பங்கேற்றவுள்ள நிலையில் அவர்களுக்கான விசேட படகு சேவையை கடற்படையினர் மேற்கொண்டமை  குறிப்பிடத்தக்கது.
 
download%20%284%29.png
 
அதேவேளை, இரோமேஸ்வரத்திலிருந்து 82 மீனவர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
download%20%285%29.png

 

http://www.onlineuthayan.com/news/21735

  • தொடங்கியவர்

தமிழகத்தின் கண்ணாடி

தமிழகத்தின் கண்ணாடி

கச்சத்தீவு அந்தோணியர் ஆலய விழாவில் கலந்து கொள்ள சென்ற மீனவர்களுடன் போலீசாரும் சென்றனர்.

தமிழகத்தின் கண்ணாடி

கச்சத்தீவு அந்தோணியர் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் மீனவர்களின் பட்டியலை சரிபார்த்த அதிகாரிகள். இடம் : ராமேஸ்வரம்.

http://www.dinamalar.com

  • தொடங்கியவர்

கடற்படை முகாம் விரிவாக்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளம்... கச்சத்தீவு 'அப்டேட்' !

 

d1_18049.jpg

ராமநாதபுரம் :  கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் தங்களது முகாமினையும் விரிவு படுத்தி உள்ளதாகவும், ஹெலிகாப்டர் இறங்கு தளம், தொலை தொடர்பு கோபுரம் போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளதாகவும் அங்கு சென்று வந்த பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் தங்கி மீன் பிடித்து, வலைகளை உலர்த்தி வந்த தமிழக மீனவர்கள், நூறு ஆண்டுக்கும் மேலாக தங்களின் மரபு உரிமையாக விளங்கி வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவுக்கு தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பின்னரே சென்று வந்துள்ளனர்.

கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகாமையில் இலங்கை அரசு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய ஆலயம் ஒன்றை கட்டியுள்ளது. கடந்த மே மாதம் இலங்கை கடற்படையினரால் துவக்கப்பட்ட இந்த ஆலய பணிகள் கடந்த நவம்பர் மாத இறுதியில் முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் 7&ம் தேதி இந்த  ஆலய அர்ச்சிப்பு விழாவினை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவினால் விழா ஒத்திவைக்கப்பட்டது.

d6_18233.jpg

ஒத்திவைக்கப்பட்ட விழா இன்று காலை கச்சதீவில் நடந்தது. சுமார் 2400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தினை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞான பிரகாசம் திறந்து வைத்தார். வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோஸ், இலங்கைக்கான இந்திய துணை தூதர் நடராஜன், வடபகுதி கடற்படை தளபதி ரவீந்திர விஜய குண ரத்னே, யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்னம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இவ்விழாவில் இலங்கை நெடுந்தீவு பகுதியை சேர்ந்த சுமார் 100 பக்தர்களும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து 100 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டவர்களில் பங்கு தந்தையர்கள், கன்னியஸ்திரிகள், பக்தர்கள் என் 82 பேர் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகளில் கச்சதீவு சென்றனர்.

பாதுகாப்பு படையினர், சுங்க இலாகாவினர், புலனாய்வு பிரிவினரின் பல்வேறு சோதனைகளுக்கு பின் பக்தர்கள் கச்சதீவுக்கு அனுமதிக்கப்பட்டனர். படகில் சென்ற பக்தர்களின் படகுகளை நடுக்கடலில் நிறுத்திய இந்திய கடற்படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்த பின் அனுமதித்தனர். இதனால் சுமார் 10 மணி அளவில் இந்திய பக்தர்கள் கச்சதீவை அடைந்தனர். ஆனால் இவர்கள் அங்கு செல்லும் முன்னரே புதிய ஆலயம் அர்ச்சிப்பு செய்யப்பட்டு விட்டது. இதனால் பின்னர் அங்கு நடந்த பிரார்த்தனை திருப்பலியில் இவர்கள் பங்கேற்றனர்.

d2_18420.jpg

இந்த திருப்பலியினை தொடர்ந்து இரு நாட்டு பக்தர்களிடையே உரையாற்றிய வட மாகாண கவர்னர் ரெஜினோஸ் ‘‘இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்களும் இந்திய வம்சாவழி வந்தவர்கள்தான். எனவே நமக்குள் மோதல்களில் ஈடுபடவோ ஒருவருக்கு ஒருவர் எதிரியாக பார்க்கவோ வேண்டியதில்லை. கச்சதீவில் வரும் காலங்களில் நடைபெறும் விழாவிற்கு என கூடுதல் ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். இலங்கை அரசு கச்சதீவு மேம்பாட்டிற்கென 6 மில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இனி நாம் ஒற்றுமையாக இருப்போம்’’ என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய ஆயர் ஜஸ்டின் ஞான பிரகாசம் ‘‘கச்சதீவில் உள்ள இந்த புதிய ஆலயத்தினை அமைக்கும் பணியில் இலங்கை கடற்படையினர் பெரும் பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இனி வர உள்ள கச்சதீவு திருவிழாவினை முன்பு போல் 3 நாட்கள் நடத்த விரும்புகிறோம். இதற்கு அரசின் அனுமதியையும் கேட்டு பெற உள்ளோம். இதே போன்று இந்திய அரசிடம் இதற்கான அனுமதியை நீங்கள் பெறுவதற்கு முயலுங்கள். வெறும் யாத்திரை தலமாக இருக்கும் கச்சதீவினை பிரார்த்தனைகளை நிறைவேற்றும் புனித தலமாக உருவாக்குவோம்’’ என்றார்.

d5_18569.jpg

இதையடுத்து கச்சதீவில் இருந்து புறப்பட்ட இந்திய பக்தர்கள் இன்று மாலை 4 மணி அளவில் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
ஒரு பக்கம் அந்தோணியார் ஆலயத்தை புதிதாக கட்டியுள்ள இலங்கை கடற்படையினர் மறுபுறம் கச்சதீவில் உள்ள தங்களது முகாமினையும் விரிவு படுத்தி உள்ளதாகவும், ஹெலிகாப்டர் இறங்கு தளம், தொலை தொடர்பு கோபுரம் போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளதாகவும் அங்கு சென்று வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/coverstory/75778-katchatheevu-church-festival.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.