Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Featured Replies

வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
 
 
வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
முதற்கட்டமாக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விண்ணப்பிக்குமாறு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தத்தமது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்வரும் ஜனவரி - 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் பயனாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 
விண்ணப்பங்கள் தமது கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி, அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவறுத்தியுள்ளது. 
 
விண்ணப்பத்தின் ஒரு பிரதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்புமாறும் பயனாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
மேற்படி வீடுகள் இரண்டு அறைகள், சமையலறை, கழிவறை மற்றும் மேலதிகமாக இரு அறைகளுடன் 550 சதுர அடி பரப்பளவைக்கொண்டதாக அமைந்துள்ளளன.
 
சூரிய சக்தி மின்சாரம், குழாய்க்கிணறு உட்பட சமையல் அடுப்பு, சமையலறை அலுமாரிகளும் வழங்கப்படும்  என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

http://www.onlineuthayan.com/news/21743

  • தொடங்கியவர்

ஜனவரி 15 இற்கு முன்னர் வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பியுங்கள்

(ஆர்.ராம்)

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டதிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

D.-M.-Swaminathan.jpg

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கில் முதற்கட்டமாக அமைக்கபடவுள்ள பத்தாயிரம் வீட்டத்திட்டற்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் விண்ணப்பிக்க முடியும். கடந்த காலத்தில் எமது அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே விண்ணபித்திருந்தாலும் கூட இத்திட்டத்திற்கு மீண்டும் அம்மக்களும் விண்ணபிக்காதவர்களும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.

இத்திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற விரும்பும் பயனாளிகள் ஆறு இலட்சம் ரூபா கொடுப்பனவு செய்ய வேண்டும் என சில தரப்பினர் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர். இக்கருத்தும் தவறானதாகும்.

 இவ்வீடுகளுக்கு விண்ணப்பிப்தற்கான விளம்பரம் பல பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவ்வீடுகளை பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும்.

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எவரும் முயலக்கூடாது என்பதோடு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14698

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வடக்கு மாகாணசபையின் தீர்மானம் – சீ.வி.கே.

 

பொருத்து வீடுகள் வடக்கு மாகாணத்துக்கு பொருத்தமற்றவை என்பதே வடக்கு மாகாண சபையின் தீர்மானம் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு மாகாணசபைக்கு பொருத்து வீடுகள் பொருத்தமற்றவையென வடக்கு மாகாணசபை உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அந்தத் தீர்மானம் மீளவும் உறுதிசெய்யப்படுகின்றது. மாகாணசபையின் தீர்மானமும் இதுவேயாகும். மற்றைய உறுப்பினர்களுக்கும் தீர்மானமாக இதுவே கூறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்குக் கிழக்கில் பொருத்து வீடுகள் தேவையானவர்களை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=52548

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.