Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட்

Featured Replies

அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட்

 

ராகுல் டிராவிட் 

Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia

— Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016

இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றபோது ‛என் தலைவனை மட்டும் எப்படி தவிர்க்கலாம்’ என போர்க்கொடி தூக்கினர் டிராவிட் ரசிகர்கள். ‛பொறுமை, பொறுமை... இந்தியா - ஏ மற்றும் அண்டர் -19 அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களைக் கண்டறிந்து தேசிய அணிக்கு அனுப்புவது அவர் பொறுப்பு’ என அப்போது பி.சி.சி.ஐ. செயலராக இருந்த அனுராக் தாக்கூர் பதில் சொன்னார். இப்போது புரிகிறதா? அனுராக் ஏன் டிராவிட்டை பாராட்டினார் என்று.

‛ஒப்புக்குச் சப்பாணி பதவி இது’ என திருப்தியில்லாமல்தான் இருந்தனர் டிராவிட் ரசிகர்கள். ஆனால் அந்த பணியை அவ்வளவு அனுபவித்து செய்தார் டிராவிட். இதோ... இரண்டே ஆண்டுகளில் தேசிய அணியில் விளையாடுவதற்கு தகுதியுடைய வீரர்களை இறக்கிக் கொண்டே இருக்கிறார்.  ரகானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் டிராவிட்டிடம் பாலபாடம் பயின்றவர்கள் என்பது கிரிக்கெட் உலகம் அறிந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட்டில் ஒன்பதாவது இடத்தில் இறங்கி சதம் அடித்த ஜெயந்த் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா ஆகியோரை, தேசிய அணியில் ஜொலிக்கும் வகையில் செதுக்கியது டிராவிட்டின் கைவண்ணம். இன்னும்... ரிஷப் பன்ட் போன்ற அவர் வார்ப்பில் உருவான நட்சத்திரங்கள் எந்நேரத்திலும் ஜொலிக்க காத்திருக்கின்றனர்.

rahul_19353.jpg

கருண் நாயர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மூவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். டிராவிட் சொல்லி கருண் நாயரை டெஸ்ட் அணியில் கும்ப்ளே சேர்த்துக் கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. இதை ஊர்ப்பாசம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், கும்ப்ளே, டிராவிட்டின் மனநிலைக்கு நேர் எதிர் கேரக்டர், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். டிராவிட் சொல்லும் வீரர்களை கும்ப்ளேதான் பயன்படுத்தப் போகிறார் என்றாலும், அந்த வீரர்களை தேர்வு செய்வதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது எம்.எஸ்.கே.பிரசாத். ஸோ... ஊர்ப்பாசம் தவிர்த்து, வீரர்களிடம் திறமை இருந்தால்தான் வேலைக்கு ஆகும்.  அப்படி திறமையானவர்களை டிராவிட் கண்டறிந்தார் என்பதற்கு சமீபத்திய பெஸ்ட் உதாரணம் ஜெயந்த் யாதவ். 

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டி மெல்போர்னில் நடந்தது. அதில், ஜெயந்த் யாதவ் மூன்று இன்னிங்சில் அடித்த ரன்கள் 11,46, 28. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த ரன்கள் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். இவை அனைத்தும் அணி ஆறு விக்கெட்டை இழந்து தள்ளாடியபோது, லோயர் ஆர்டரில் இறங்கி ஜெயந்த் அடித்தவை. அதை விட, பிரிஸ்பேன் ஆடுகளத்தில்,  கேன் ரிச்சர்ட்சன், ஜேக்சன் பேர்ட் பெளன்சர்களாக வீசிய வேகத்தைப் பார்த்து மிரளாமல், அநாயசமாக எதிர் கொண்டார் என்பதால் டிராவிட்டின் குட்புக்கில் இடம்பிடித்தார் ஜெயந்த். அதோடு ஃபீல்டிங்கில் கல்லியில் நிற்பதிலும் பக்கா. ஆஃப் ஸ்பின்னர் என்பது கூடுதல் பலம். இது எல்லாவற்றையும் விட அவரது ஆட்டிட்யூட் டிராவிட்டுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. 'அஷ்வினுக்கு மாற்றாக எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்’ என ஜெயந்த் பற்றி கும்ப்ளே காதில் போட்டு வைத்தார் டிராவிட்.  அடுத்த சில நாட்களில் இந்திய அணியில் சேர்ந்தார் ஜெயந்த்.

டிராவிட் இளம் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதும் சென்னையில் இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் மோதிய நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் தொடர் நடந்தன. இதில் இந்தியா சொதப்பிய நாட்களில் எல்லாம், பிரஸ் மீட்டுக்கு வந்தார் டிராவிட்.  பயிற்சியாளராக உங்கள் பணி என்ன எனக் கேட்டதும் 'உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்பது என் குறிக்கோள் அல்ல. பிராசஸ். இந்திய அணியில் விளையாடவல்ல வீரர்களை அடையாளம் காண்பதே என் பணி. இங்குள்ள இளம் வீரர்களில் பலர், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். எனவே, அவர்களுக்கு சின்ன சின்ன கரெக்சன்கள் சொல்வதோடு சரி. மற்றபடி எல்லோருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவர்கள் ஆட்டத்தை மாற்ற ஒருபோதும் நிர்பந்திக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை மனதளவில் பெரிய இன்னிங்ஸ் விளையாடத் தயார்படுத்துவதே என் வேலை’ என்றார்  இந்திய அணியின் சுவர். '50 ரன்கள் அடித்தபின் அதை சதமாக மாற்றவும், அதற்கு மேலும் ரன் அடிக்கவும் காரணம், என் ஆதர்ச நாயகன் ராகுல் டிராவிட் சொன்ன அறிவுரைதான் ’ என்றார், 2014-15 ரஞ்சி சீசனில், தமிழ்நாட்டின் சிறந்த வீரர் விருது வென்ற விஜய் சங்கர். இதைப் பல வீரர்கள் வழிமொழிவர். 

rahul_dravid_watching_young_players_bowl

டிராவிட் அப்படி சொன்னாரே தவிர, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் ஆட்டத்தைப் பற்றியும் நன்கு கணித்து வைத்திருந்தார். விராட் கோஹ்லி என்னதான் அடித்து நொறுக்கினாலும், இன்னும் அவருக்கு  ட்ரைவ் போல ஸ்வீப் வசப்படவில்லை.  கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன், சென்னையில் நடந்த போட்டியில் இந்தியா ஏ  அணியினருடன் இணைந்து விளையாடினார் கோஹ்லி. போட்டி சீக்கிரமே முடிந்து விட்டதால் மதிய நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர் இந்திய வீரர்கள். 
அப்போது டிராவிட் தனியாக கோஹ்லிக்கு ஸ்வீப் அடிக்க கற்றுக் கொடுத்தார். ஸ்வீப் செய்யும்போது முன்னங்கால் எப்படி இருக்க வேண்டும், எந்தளவு பெண்ட் செய்ய வேண்டும், பேட்டை எந்த கோணத்தில் பிடித்திருக்க வேண்டும், முகம் எப்படி திரும்ப வேண்டும் என விலாவரியாக விவரித்த தருணத்தை, ஃபோட்டோகிராபர்கள் மிஸ் செய்யாமல் க்ளிக்கினர்.  மறுநாள் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஸ்போர்ட் ஸ்பக்கத்தில் அந்த செய்திதான்  ஹைலைட். இலங்கை புறப்படும் முன் கோஹ்லியிடம்  ‛நேற்று டிராவிட் உங்களுக்கு ஸ்வீப் ஆடக் கற்றுக் கொடுத்தது போல தெரிந்ததே...’ என நிருபர்கள் கேட்க  'ஆமாம், டிராவிட் சில நுணுக்கங்களை சொன்னார். ரகானே, ராகுல், ரோகித் என எல்லோருக்குமே ஸ்வீப் நன்றாக வருகிறது. நானும் கூடுதலாக ஒரு ஷாட் தெரிந்து வைத்திருந்தால் நல்லதுதானே’ என விளக்கினார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன். 

டிராவிட்டிடம் கேட்டபோது ‛ரொட்டேட் தி ஸ்ட்ரைக் ரொம்ப முக்கியம். ட்ரைவ்களில் நீங்கள் திறமைசாலி எனில், எளிதாக உங்களை கட்டம் கட்ட முடியும். நீங்கள் அடிக்கடி ட்ரைவ் செய்தால் எதிரணியினர் அந்த இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்தி உங்களை திணறடித்து விடுவர். கூடுதலாக ரன் எடுக்க வேண்டுமானால், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்றார். 'அதேநேரத்தில் இன்றைய இளைஞர்கள் சுழற்பந்தை ஆரம்பத்தில் இருந்து அடித்து  ஆட முயல்கின்றனர். அது தவறு.  Sometimes we need to give the ball the respect it deserves’  என்றார் ஆபத்தான பந்தை தொடாமல் விடுவதில் வல்லவரான டிராவிட்.  

Dravid_19431.jpg

இப்படி டெக்னிக்கல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய டிராவிட், உளவியல் ரீதியாக, மனரீதியாக வீரர்களை தயார்படுத்தியது தனிக்கதை. ‛As long as rahul dravid is at other end, india will not lose... முதல் பதினைந்து நிமிடங்களில் டிராவிட் விக்கெட்டை எடுக்க முயற்சி செய். முடியவில்லையா, அவருக்கு எதிர்முனையில் இருப்பவரை ஆட்டமிழக்கச் செய்...’ என்பது, டிராவிட் விளையாடிய காலத்தில் நிலவிய கருத்து. அதையே இன்று, தன் வீரர்களுக்கு சொல்லி வருகிறார் டிராவிட். ‛போனவுடன் அடித்து ஆடாதே. சில சமயங்களில் நாம் ஆட்டம் மோசமாக இருக்கலாம். பெளலர் ஏற்கனவே வியூகங்களுடன் தயாராக இருக்கலாம். முதலில் சூழலையும், பெளலரின் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் என பல நுணுக்கங்களைச் சொன்னார் டிராவிட். ஒவ்வொரு முறையும் பயிற்சியின்போது புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயம் சொல்வார். டெக்னிக்கல் ரீதியாகவும், மனரீதியாகவும்  அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம் ஏராளம்.  இந்திய ஏ அணியில் இருந்து வரும் ஒவ்வொரு வீரரும் இதை உணர்வர்’’ என்றார் சஞ்சு சாம்சன்.

ஜூனியர்கள் மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் சீனியர்களும் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்டு நின்றனர். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்கு புஜாரா தலைமை ஏற்றிருந்தார். ஏனெனில் அப்போது அவர் இந்திய அணியில் தடுமாறிக் கொண்டிருந்தார். தன்  ஆட்டம் குறித்து புஜாரா கேட்டதும் ‛‛டெக்னிக் ரீதியாக உங்கள் ஆட்டத்தில் குறை ஏதும் இல்லை. ரன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு  உள்ளது. ஸ்பின்னர்களுக்கு எதிராக அபாரமாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதால், கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதும். உங்கள் இயல்பான ஆட்டம் வெளிப்படும்’ என, புஜாராவுக்கு டிராவிட் அறிவுரை சொன்னார். 

டிராவிட்டிடம் இளம் வீரர்கள் அதிசயிக்கும் இன்னொரு விஷயம், அவரது எளிமை. ஒருமுறை ஃபீல்டிங் பயிற்சி முடித்து விட்டு வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் திரும்பிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட சப்போர்ட்டிங் ஸ்டாஃப் முதல் வீரர்கள் வரை எல்லோருமே மைதானத்தில் இருந்து புறப்பட்டு விட்டனர். ஆனால், டிராவிட் பயிற்சியின்போது ஆங்காங்கே சிதறிக் கிடந்த பந்துகளை எல்லாம் ஒன்று விடாமல் சேகரித்து, அதை அதற்குரிய பெட்டியில் போட்டு விட்டு நகர்ந்தார்.  அவர் கை அசைத்திருந்தால், அதை எடுத்து வைக்க நூறு பேர் இருக்கின்றனர். டிராவிட் அப்படிச் செய்யவில்லை. அதான் டிராவிட். 

பனைமரத்தில் எதுவும் வீண் போகாது. போலவே, கிரிக்கெட்டுக்கு ராகுல் டிராவிட்.

http://www.vikatan.com/news/sports/75803-rahul-dravid-behind-indias-bench-strength.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.