Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை

Featured Replies

முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை

 

சட்டம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்று கூறு­கின்­றார்கள். ஆனால், எந்­த­வொரு  சட்­டமும், இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும்  கிளப்பி மக்கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை  ஏற்­ப­டுத்­தி­யுள்ள பௌத்த மத குருக்­க­ளுக்கு  எதி­ராகப் பாய்­வ­தில்லை. அவர்­க­ளையும்,  அவர்­க­ளு­டைய  செயற்­பா­டு­க­ளையும் அந்தச் சட்­டங்கள் கைகட்டி வாய்­பொத்தி  பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.

 

நாட்டில் பௌத்த மதத் தலை­வர்கள் அர­சியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறி­யோடு நடந்து கொள்­வதை மக்கள் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதே­வேளை, அர­சியல் தலை­வர்­களும் மதம் சார்ந்த மதம்­பி­டித்­த­வர்­க­ளாக இத்­த­கைய பௌத்த மதத் தலை­வர்­க­ளுடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். பௌத்த மதத்தைச் சேர்ந்த எல்லா தலை­வர்­களும் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தில்லை. ஒரு சில பௌத்த மதத் தலை­வர்­களே இன­வா­தத்­திலும், மத­வா­தத்­திலும் தோய்ந்­தெ­ழுந்­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்சு பொறுப்­புக்­களில் உள்ள அமைச்­சர்கள் சிலரும், அர­சியல் கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­க­ளும்­கூட, இவர்­க­ளுடன் அணி சேர்ந்து, இன­வாத, மத­வாத போக்­கிற்கு ஊக்­க­ம­ளித்து வரு­கின்­றார்கள். 

மதமும், அர­சி­யலும் வெவ்வேறா­னவை. ஆயினும், மதத் தலை­வர்கள் அர­சி­யலை வழி­ந­டத்­து­கின்ற போக்கு காலம் கால­மாக இலங்கை போன்ற நாடு­களில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. அதி­கார பலம் கொண்ட அரச தலை­வர்கள் தமது பொறுப்­புக்­களில் இருந்து வழி­த­வறிச் சென்­று­வி­டாமல் தடுத்து நெறிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, மதத் தலை­வர்­களின் அர­சியல் தலை­யீடு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனால், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் இருக்க வேண்­டிய மதத் தலை­வர்­களின் அர­சியல் தலை­யீடு அத்­து­மீறிச் செயற்­ப­டு­கின்ற போக்கு இலங்­கையின் அர­சி­யலில் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து பௌத்த மதத் தலை­வர்கள் முழு­மை­யான அர­சி­யல்­வா­தி­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றார்கள். இவர்கள் பௌத்த மதத் துற­வி­க­ளுக்­கு­ரிய அங்­கி­க­ளுடன் மத குருக்­க­ளா­கவும், அதே­வேளை, முழு நேர அர­சி­யல்­வா­தி­க­ளா­கவும் இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மத குரு­வா­கின்ற ஒருவர், ஆசா­பா­சங்­க­ளையும் லௌகீக வாழ்க்கை முறை­களைத் துறந்­த­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது பௌத்த மதத்தின் விதி­யாகும். உண­வையும் அவர்கள் மற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்தே பெற்­றுக்­கொள்ள வேண்டும்.  அவ­ருக்­கென்று எது­வுமே இல்­லா­த­வ­ராக இருத்தல் வேண்டும். ஆனால் இலங்­கையில் அவர்கள் முற்றும் துறந்­த­வர்­களைப் போன்ற வேடத்தை அணிந்து கொண்டு அர­சி­யல்­வா­தி­க­ளாக, அனைத்து வச­தி­க­ளையும் அனு­ப­விப்­ப­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றார்கள். பௌத்த மதத்தைப் பரப்­பு­வ­தற்­காக எதையும் செய்யத் துணிந்­த­வர்­க­ளாக, எத்­த­கைய ஒரு நிலை­மைக்கும் கீழி­றங்கிச் செல்லக் கூடி­ய­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றார்கள். மதகுரு தோற்­றத்தில் இருந்து கொண்டே, அந்தத் தோற்­றத்­திற்கு எந்­த­வ­கை­யிலும் பொருந்­தாத வகையில் மத ரீதி­யா­கவும், இன ரீதி­யா­கவும் வெறுப்­பூட்­டு­கின்ற பேச்­சுக்­களை பேசு­வதைத் தங்­க­ளுக்­கு­ரிய பண்­பாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

உலகின் பல நாடு­க­ளிலும் பல்­வேறு இன மக்­களால் பௌத்த மதம் பின்­பற்­றப்­பட்டு, அதனை அந்த மக்கள் பேணி வரு­கின்ற போதிலும், இலங்­கையில் உள்ள பௌத்­தர்கள் மட்­டுமே இந்த மதத்­திற்கு உரித்­து­டை­ய­வர்கள், அதனை அவர்கள் மட்­டுமே பேணி பாது­காக்க வேண்­டிய கடப்­பாட்­டையும் பொறுப்­பையும் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற பாவ­னையில் செயற்­ப­டு­கின்­றார்கள். தாங்கள் இல்­லா­விட்டால், தாங்கள் செயற்­ப­டா­விட்டால் பௌத்த மதமே அழிந்­தொ­ழிந்து போய்­விடும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் உள்­ளிட்­ட­வர்­களின் இத்­த­கைய செயற்­பா­டுகள், உண்­மை­யி­லேயே புனிதம் நிறைந்த பௌத்த மதத்­திற்கு இழுக்­கையும் அவப்­பெ­ய­ரையும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கே வழி வகுத்­தி­ருக்­கின்­றன என்­பதை அவர்கள் உணரத் தவ­றி­யுள்­ளார்கள். 

அல்­லது அதனை உணர்ந்து, வேண்­டு­மென்றே அந்த சம­யத்­திற்கு முர­ணான வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது அவர்­களின் சுய­லாபம் கரு­திய கப­டத்­த­ன­மன செயற்­பாட்­டையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. பௌத்த மத குருக்கள் அல்­லது பௌத்த மதத் தலை­வர்கள் என்ற பொறுப்­பான நிலையில் உள்ள ஒரு சிலரே இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மாகும். 

பௌத்த மதத்தின் உன்­ன­த­மான கொள்­கை­களைப் பின்­பற்றி, நெறி தவ­றாமல், மனி­தா­பி­மான பண்பு நிறைந்த எத்­த­னையோ பௌத்த மத குருக்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் தாம் வாழ்­கின்ற பிர­தே­சங்­களில் உள்ள எல்லா இன மக்­க­ளு­டைய மனங்­க­ளிலும், உயர்­வான ஓரி­டத்தில் இருக்­கத்­தக்க வகையில் பணி­யாற்றி வரு­கின்­றார்கள்.  அவர்­க­ளு­டைய உண்­மை­யான செயற்­பா­டு­க­ளுக்கு, இன­வாத மத­வாத அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களின் போக்கு உண்­மை­யி­லேயே இழுக்கை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. 

மத­வாதம் கொண்ட அர­சி­யல்­வா­திகள்

 

  அர­சி­யல்­வா­திகள் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் வழங்­கு­கின்ற ஆத­ரவு, இன­வாத, மத­வாத கடும்­போக்­கா­ளர்­க­ளான பௌத்த மதத் தலை­வர்­களின் போக்­கிற்கும் மேலும் மேலும் ஊக்­க­ம­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளது. நாட்டின் இரு­பெரும் அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன எவ்­வ­ள­வுதான் மக்­க­ளு­டைய அர­சியல் ஆத­ரவைப் பெற்­றி­ருந்­தா­லும்­கூட, பௌத்த மத அமைப்­புக்­களின் சிந்­த­னை­க­ளுக்கு ஏற்ற வகையில் செயற்­ப­டு­கின்ற வழி­மு­றை­யையே பின்­பற்றி வரு­கின்­றார்கள்.  

 

பௌத்த மத பீடா­தி­ப­திகள் கூறு­கின்ற கருத்­துக்கள் அல்­லது அவர்கள் விரும்­பு­கின்ற அர­சியல் போக்கு நாட்டின் முன்­னேற்­றத்­திற்குப் பொது­வான நன்­மைக்கு உகந்­த­தாக இல்­லா­தி­ருந்­தா­லும்­கூட, அவற்றை மறுத்­து­ரைத்துச் செயற்­ப­டு­வ­தற்கு அவர்கள் ஒரு­போதும் முனை­வ­தில்லை. துணி­வ­து­மில்லை. பௌத்த மத பீடா­தி­ப­திகள் மட்­டு­மல்ல. ஞான­சார தேரர் போன்ற தீவிரச் செயற்­பா­டு­டைய தனிப்­பட்ட அல்­லது அமைப்பு ரீதி­யான செயற்­பாட்டு வல்­லமை கொண்­ட­வர்­களின் கருத்­துக்­க­ளையும் அவர்கள் ஒரு­போதும் புறந்­தள்­ளு­வ­தில்லை. அவர்­க­ளு­டைய மனம் கோணாத வகையில் நடந்து கொள்­வ­தையே மரபு ரீதி­யான நடை­மு­றை­யாக சிங்­கள அர­சியல் தலை­வர்கள் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்கள். 

இது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு மோச­மான யுத்­தத்­தினால் சீர­ழிந்­துள்ள நல்­லி­ணக்கம், சகிப்புத் தன்மை என்­ப­வற்றை மேலும் மோச­ம­டை­வ­தற்கே வழி­வ­குத்து வந்­துள்­ளது. அடி­மட்­டத்தில் உள்ள மக்கள் மத ரீதி­யா­கவோ அல்­லது இன­ரீ­தி­யா­கவோ பிள­வு­பட்ட மனப்­பாங்கைக் கொண்­ட­வர்கள் அல்ல. அவர்கள்  வேறு வேறு மொழியைப் பேசி, வெவ்வேறு மதங்­க­ளையும் கலா­சா­ரங்­க­ளையும் பின்­பற்றி வந்­த­போ­திலும், சாதா­ரண மக்கள் என்ற ரீதியில் ஐக்­கி­ய­மா­கவும் தங்­க­ளுக்குள் இணங்கிச் செல்­ப­வர்­க­ளா­கவும், ஒரு­வரை ஒருவர் புரிந்து கொண்டு இணைந்து வாழ்ந்து வரு­கின்­றார்கள். 

ஆனால், அவர்­களின் இந்த சாதா­ர­ண­மான மனி­தா­பி­மா­னத்­துடன் கூடிய வாழ்க்கை முறையை அர­சி­யல்­வா­தி­களும், சுய­நலப் போக்கு கொண்ட மத­வா­தி­க­ளுமே குழப்­பி­ய­டித்து, அந்தக் குழப்­பத்தில் அர­சியல் ரீதி­யாகக் குளிர்­காய்ந்து வரு­கின்­றார்கள். ஊர் இரண்­டு­பட்டால் கூத்­தா­டி­க­ளுக்குக் கொண்­டாட்டம் என்­பார்கள். ஆனால், இனங்கள் பிள­வு­பட்டால் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கே கொண்­டாட்டம் என்ற ரீதியில் சுய­லாப நோக்கம் கொண்ட அர­சியல் பண்பு ஒன்று நாட்டில் தலை­யெ­டுத்து படிப்­ப­டி­யாக வளர்ந்­தோங்கி வரு­கின்­றது. 

அமைச்­ச­ரு­டைய  விஜ­யத்தின் நோக்கம் 

 

 

பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ரை­ய­டுத்து, மட்­டக்­க­ளப்பில் உள்ள அம்­பிட்­டியே சும­ண­ரத்­ன தேரர் அர­சி­யலில் இன்று பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கின்றார். தமிழ், முஸ்லிம் இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தத்தைக் கிளப்­பு­வ­திலும், வெறுப்­பூட்­டு­கின்ற கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோகம் செய்து வசை­பா­டு­வ­திலும் முன்­ன­ணியில் இருக்­கின்றார். 

முறை­யற்ற வகையில் சிங்­களக் குடும்­பங்கள் காணி­களைக் கைப்­பற்ற முயற்­சித்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்த தமிழ் கிராம சேவை அதி­கா­ரி­யிடம் முறை­கே­டாக நடந்து கொண்­ட­துடன், தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­யொன்றில் அடா­வ­டி­யாக பௌத்த விகாரை அமைப்­ப­தற்கும் அவர் முயன்­றி­ருந்தார். அவ­ரு­டைய செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற பொலிஸா­ரி­டமே கட்­டுப்­பா­டற்ற முறையில் நடந்து கொண்­டி­ருந்தார். பகி­ரங்­க­மான அவ­ரு­டைய இந்தச் செயற்­பா­டு­களை சட்டம் எது­வுமே செய்­ய­வில்லை. 

நாட்டில் சட்டம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்று கூறு­கின்­றார்கள். ஆனால், எந்­த­வொரு சட்­டமும், இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கிளப்பி மக்கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பௌத்த மத குருக்­க­ளுக்கு எதி­ராகப் பாய்­வ­தில்லை. அவர்­க­ளையும், அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளையும் அந்தச் சட்­டங்கள் கைகட்டி வாய்­பொத்தி பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இதில் முக்­கிய விடயம் என்­ன­வென்றால், அம்­பிட்­டியே சும­ண­ரத்­ன தேரரின் செயற்­பா­டு­க­ளினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டி­ருந்த பதற்ற நிலை­மையை சீர்­செய்­வ­தற்­காக நீதி அமைச்­சரும், புத்த சாசன அமைச்­ச­ரு­மா­கிய விஜே­தாஸ ராஜ­பக் ஷ அங்கு சென்­றி­ருந்தார். பதற்ற நிலை­மையைத் தணித்து, சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருந்த அச்­சத்தைப் போக்­கு­வதே அவ­ரு­டைய விஜ­யத்தின் நோக்கம் என்று கரு­தலாம். 

ஆனால், அவர் அங்கு சென்­ற­போது, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் துச்­ச­மாக மதிப்­ப­வரும்,  இன­வா­தத்­திற்கும் மத­வா­தத்­திற்கும் தூண்­டு­கோ­லாக இருப்­ப­வ­ரு­மா­கிய ஞான­சார தேர­ரையும் அமைச்சர் தம்­முடன் அழைத்துச் சென்­றி­ருந்­தமை, அமைச்­ச­ரு­டைய விஜ­யத்தின் உண்­மை­யான நோக்கம் என்ன என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது என்றே கூற வேண்டும். 

முறை­யற்ற விதத்தில் சும­ண­ரத்­ன தேரர் நடந்து கொண்­டி­ருந்­ததை நாடும் உல­கமும் அறிந்­தி­ருந்த போதிலும், அவ­ரு­டைய செயலை நியா­யப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்­ ஷவின் கருத்­துக்கள் அமைந்­தி­ருந்­தன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறு­பான்­மை­யி­ன­ராக உள்ள சிங்­கள மக்­களைப் பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எவரும் இல்­லாத கார­ணத்­தினால், அந்த மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் சும­ண­ரத்­ன தேரர் நடந்து கொள்­வ­தாக அமைச்சர் கூறி­யி­ருக்­கின்றார். இந்தக் கருத்தை, சும­ண­ரத்­ன தேரர் எந்த வகையில் நடந்து கொண்­டி­ருந்தார் என்­பதை நன்­க­றிந்­துள்ள நாட்டு மக்­களும் நியா­ய­மாக சிந்­திப்­ப­வர்­களும் எந்த வகையில் நோக்­கு­வார்கள் என்­பது சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. 

நல்­லாட்சி அர­சாங்கம் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முனைப்­புடன் செயற்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. மோச­மான யுத்­தத்­தினால் நலி­வ­டைந்­துள்ள இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை சீர்­செய்­வ­தற்கு நல்­லி­ணக்கம் அவ­சியம் என்­பதை உணர்ந்­துள்ள அர­சாங்கம், அதற்­காகப் பல்­வேறு திட்­டங்­களை வகுத்துச் செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த வகையில் வரு­டந்­தோறும் ஜன­வரி மாதத்தில் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை­யி­லான ஒரு வாரத்தை தேசிய ஒரு­மைப்­பாட்டு நல்­லி­ணக்க வார­மாகக் கொண்­டாட வேண்டும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது. எதிர்­வரும் ஜன­வரி மாதம் இது ஆரம்­ப­மா­க­வுள்­ளது. நாட்டு மக்கள் மத்­தியில் சமா­தானம், ஒற்­றுமை, சகோத­ர­த்­து­வத்தை மேம்­ப­டுத்­து­வதே இதன் முக்­கிய நோக்­க­மாகும். 

 

குற்றப்பொறுப்பும் நீதி வழங்கும் பொறுப்பும் 

இந்த அறி­வித்தல் வெளி­யா­கி­யுள்ள சந்­தர்ப்­பத்­தி­லேயே நீதி அமைச்­சரும், புத்தசாசன அமைச்­ச­ரு­மா­கிய விஜே­தாஸ ராஜ­பக் ஷ, இன­வாதச் செயற்­பாட்டில் முன்­னணி வகிக்­கின்ற பௌத்த பிக்­கு­களின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மட்­டக்­க­ளப்பில் சென்று ஆராய்ந்­துள்ளார். அங்கு மட்­டக்­க­ளப்பு சும­ணரத்­ன தேரரின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­து­கின்ற வகையில் அவர் அங்கு கருத்து வெளி­யிட்­டுள்ளார். பௌத்த பிக்­கு­களின் செய்­பா­டு­களே அங்கு இனங்­க­ளுக்­கி­டையில் பதற்றத்தை உரு­வாக்­கி­யது என்­பதைத் தெரிந்து கொண்­டும்­கூட, அது குறித்து கவ­லைப்­படும் வகை­யிலோ அல்­லது அதனை ஏற்­றுக்­கொள்ளும் வகை­யிலோ அவர் கருத்து வெளி­யி­ட­வில்லை. அவ­ரு­டைய விஜ­யத்தின் போது ஒரு கட்­டத்தில் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஒரு நிகழ்வில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்கக் கூடாது என தெரி­வித்து, அவர்­களை வெளி­யேற்­றி­யி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. 

 

அமைச்­சரின் இந்தச் செய­லா­னது, பௌத்த பிக்­கு­களின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் நில்­லாமல், மட்­டக்­க­ளப்­புக்­கான அவ­ரு­டைய விஜயம் குறித்து மேலும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ரு­க்­கின்­றது. மட்­டக்­க­ளப்பில் வசிக்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்­கென பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் இல்­லாத நிலையில், சிங்­கள மக்­க­ளுக்­காகக் குரல் கொடுக்­கின்ற பௌத்த பிக்­குகள் இன­வாத, மத­வாத ரீதியில் செயற்­ப­டு­வ­த­னால்தான் இங்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தாக நாட்டில் ஒரு­வித மாயத் தோற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ கூறி­யி­ருக்­கின்றார்.

புத்தசாசன அமைச்சர் என்ற ரீதியில் இன­வாத, மத­வாத நோக்கில் செயற்­பட்­டி­ருந்­தா­லும்­கூட அவ்­வாறு செயற்­ப­டு­கின்ற பௌத்த பிக்­கு­களைப் பாது­காக்க வேண்­டிய கடமைப் பொறுப்­புக்­காக அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கலாம். ஆனால் இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அவ­ரு­டைய இந்தக் கருத்து விநோ­த­மா­கவும், நேர் விரோ­த­மா­க­வுமே அமைந்­தி­ருக்­கின்­றது. 

புத்­த­சா­சன அமைச்சர் என்ற ரீதியில் அவர் பௌத்த மக்­க­ளுக்­காகச் செயற்­பட வேண்­டி­ய­வ­ராக இருக்­கலாம். ஆனால் நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அவர் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் நீதி­யாக நடந்து கொள்ள வேண்டும். நிதி­யான முறையில் கருத்­துக்­களை வெளி­யிட வேண்டும் என்ற தவிர்க்க முடி­யாத கட­மையும் பொறுப்பும் அவரைச் சார்ந்­தி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுக்க முடி­யாது. எனவே, ஒரு விடயம் குறித்து அர­சாங்­கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் கருத்து வெளி­யி­டு­கையில் அது மற்­ற­வர்­க­ளினால் நியா­ய­மா­னது என ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தாக இருக்க வேண்டும். அவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கருத்­துக்கள் நகைப்­பிற்­கி­ட­மா­ன­வை­யா­கவே இருக்கும். அத்­துடன், அத்­த­கைய கருத்­தா­னது சம்­பந்­தப்­பட்­ட­வ­ரு­டைய நம்­பகத்தன்மை மக்கள் மத்­தியில் கேள்­விக்­கு­றி­ய­தாக மாறி­விடும் என்­ப­தையும் கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  பௌத்த பிக்­குகள் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் ஏற்­ப­டுத்தும் வகையில் பெத்த பிக்கு நடந்து கொண்ட சம்­பவம் குறித்து புத்தசாசன அமைச்சர் என்ற வகையில் பொறுப்புக் கூற வேண்­டிய கடப்­பாடு அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்­ ஷ­விற்கு இருக்­கின்­றது. அதே­வேளை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஒரு சூழலில், அதற்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்த கொண்ட சம்­ப­வத்­திற்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய பொறுப்பும் அவரைச் சார்ந்­தி­ருக்­கின்­றது. 

நல்­லி­ணக்கம் என்­பது 

 

 

 எனவே, ஒன்­றுக்­கொன்று முரண்­பட்ட வகையில் மாறு­பட்ட நிலையில் செயற்­ப­டு­வ­தென்­பது, பொறுப்பு கூற வேண்­டி­யதும் நானே, பொறுப்பு கூறப்­பட வேண்­டிய சம்­ப­வத்­திற்கு நீதி வழங்­கு­வதும் நானே என்ற இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்ட நிலையில் அவர் இருப்­ப­தையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது. குற்றம் புரிந்­ததும் நானே, நீதி வழங்­கு­வதும் நானே என்­ற­தொரு நிலையில் தேசிய ஒரு­மைப்­பாட்­டையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வதில் அமைச்­சரின் நட­வ­டிக்கை எந்த வகை­யிலும் உதவப் போவ­தில்லை என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. இந்த நிலை­யி­லேயே, மட்­டக்­க­ளப்பு சம்­ப­வங்கள் தொடர்பில் நீதி அமைச்­சரின் செயற்­பாட்­டையும், அவர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­க­ளையும் நீதி அமைச்­சரின் நீதி­யற்ற செயல் என சுட்­டிக்­காட்டி, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கண்­டனம் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.  

இந்த நாட்டில் இடம்­பெற்ற யுத்­தமும், அதனை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காகக் கையா­ளப்­பட்ட இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­களும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாறாத கசப்பான வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நல்லுறவைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. அது மட்டுமல்லாமல், யுத்தம் ஒன்று மூள்வதற்குரிய காரணங்களை, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து கண்டறிந்து, வெளிப்படையாக அதற்கான பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதனை அந்த அரசு செய்யவில்லை. மாறாக யுத்தத்தில் கிடைத்த வெற்றியையே அரசியலுக்கான முதலீடாக்கி, வெற்றிவாதத்தின் மீது ஆட்சியைக் கொண்டு நடத்தியது. அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசம் செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, யுத்தத்தின் மூலம் கிடைத்த ஆயுத ரீதியான வெற்றியை, அனைத்து மக்களினதும் அரசியல் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும்.

அத்தகைய அரசியல் மூலோபாயச் செயற்பாட்டையும் முன்னைய அரசாங்கம் கோட்டை விட்டிருந்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாக்கி, அவர்களை மேலும் மேலும் மனம் நோகச் செய்கின்ற நடவடிக்கைகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இதன் காரணமாகத்தான் யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எதேச்சாதிகாரப் போக்கில் சென்ற அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கமும், வெற்றிவாதத்தின் நிழலில், இனவாத மதவாத அரசியல் போக்கை ஊக்குவிக்குமானால், இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏட்டளவிலேயே எஞ்சியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அது மட்டுமல்லாமல் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரும்கூட நாளடைவில் பொய்த்து பொல்லாத ஆட்சி நடத்தும் அரசாங்கம் என்ற அவப்பெயருக்கு ஆளாகவும் நேரிடலாம்.

– செல்வரட்னம் சிறிதரன் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.