Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் நடமாடும் சேவை

Featured Replies

புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் உத­வி­யுடன் நட­மாடும் சேவை

 

வட மாகாண  சுகா­தார  அமைச்சர்

 

இலங்­கையில் வேறெந்த மாகா­ணத்­திலும் நடை­மு­றையில் இல்­லாத படுக்­கை­யி­லி­ருக்கும் நோயா­ளி­களை வீடுேதடி சென்று சிகிச்சை அளிக்கும் நட­மாடும் மருத்­துவ சேவை வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சினால் அண்­மையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது யுத்­தத்­தினால் காய­ம­டைந்து நட­மா­ட­மு­டி­யாது படுக்­கை­யி­லி­ருக்கும் நோயா­ளி­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாகும் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் டாக்டர் பத்­ம­நாதன் சத்­தி­ய­லிங்கம் தெரிவித்தார். இது தொடர்­பாக வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்வியின் விபரம் வருமாறு,

கேள்வி-: வடக்கு மாகா­ணத்தில் சுகா­தாரத்துறையின் நிலைமை எவ்­வா­றுள்­ளது?

நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையின் எமது மாகா­ணத்தின் சுகா­தா­ரத்­தேவை சற்று வித்­தி­யா­ச­மா­னது. இலங்­கையின் ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான சுகா­தார சேவை­யைப்­போன்று எமது மாகா­ணத்தின் தேவையை பூர்த்­தி­செய்­ய­மு­டி­யாது. இதனால் வழ­மை­யான திட்­டங்­க­ளுக்கு அப்பால் மாகா­ணத்­திற்கு தேவை­யான விசேட செயற்­றிட்­டங்­க­ளையும் ஆரம்­பிக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி : கடந்த காலங்­களில் வடக்கு மாகா­ணத்தில் பிரத்­தி­யே க­மான சில செயற்­றிட்­டங்­களை வடக்கு சுகா­தார அமைச்சு ஆரம் பித்­துள்­ளதா? அது­தொ­டர்­பாக விளக்­க­மு­டி­யுமா?

ஆம், சென்ற வருடம் அவ­சர அழைப்­புக்­கான அம்­பியூலன்ஸ் சேவை­யொன்றை ஆரம்­பித்­தி­ருந்தோம். இந்த மாதி­ரி­யான சேவை இலங்­கையில் எந்­த­வொரு மாகாண சுகா­தார அமைச்­சி­னாலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்­காக புதி­தாக நாங்கள் அம்­பியூலன்ஸ்­களை கொள்­வ­னவு செய்­ய­வில்லை. எம்­மிடம் ஏற்­க­னவே சேவையில் ஈடு­படும் அம்­பியூலன்ஸ் வண்­டி­களை நவீன தொடர்­பாடல் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி அவ­சர அழைப்­பு­க­ளுக்கு சேவை வழங்­கக்­கூ­டி­ய­தாக மாற்றி அமைத்­துள்ளோம்.

கேள்வி : கடந்த மாதம் கிளி நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங் களில் ஆரம்­பிக்­கப்­பட்ட படுக்­கை யி­லி­ருக்கும் நோயா­ளி­க­ளுக் கான நட­மாடும் மருத்­துவ சேவை தொடர்பில் உங்கள் கருத்து?

நிச்­ச­ய­மாக இந்த செயற்றிட்டம் போரினால் பாதிக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்­காக விசே­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற செயற்­றிட்­ட­மாகும். வடக்கு மாகா­ணத்தில் 42000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் விசேட தேவைக்­கு­ரி­ய­வர்­க­ளாக இருப்­ப­தாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இதில் சுமார் 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் யுத்தம் கார­ண­மா­கவும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவும் சுய­மாக நட­மா­ட­மு­டி­யாது படுக்­கையில் உள்­ளார்கள். தொடர்ச்­சி­யாக படுக்­கையில் இருப்­பதால் படுக்­கைப்புண் போன்ற உபா­தை­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். இவர்­களின் வீடு தேடிச்சென்று ஆரம்ப சிகிச்சை வழங்­கு­வதே இந்த திட்­டத்தின் நோக்­க­மாகும்.

யுத்­தத்­தினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் இந்த செயற்றிட்­டங்கள் கடந்த மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய மாவட்­டங்­க­ளுக்கும் விரைவில் இந்த திட்­டத்தை விஸ்­த­ரிக்­க­வுள்ளோம்.

கேள்வி : இவ்­வா­றான விசேட செயற்றிட்­டங்­க­ளுக்கு மாகாண அல்­லது மத்­திய அரசின் நிதியா பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது?

இரண்­டுமே இல்லை என்­ப­துதான் உண்மை. வெளிநா­டு­களில் மருத்­து­வர்­க­ளாக பணி­பு­ரி­கின்ற எமது உற­வுகள் மற்றும் புலம்­பெயர் அமைப்­பு­களின் நிதி­யு­த­வி­யி­லேயே இந்த செயற்றிட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு மாவட்­டத்­தையும் ஒவ்­வொரு குழு­வினர் பொறுப்­பேற்­றுள்­ளனர். உதா­ர­ண­மாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு கனே­டிய தமிழர் தேசிய அவை மற்றும் கிளி­நொச்சி மாவட்­டத்­திற்கு கனே­டிய புலம்­பெயர் அமைப்­பான செந்­தில்­கு­ம­ரனின் நிவா­ர­ணம்­ஆ­கிய நிறு­வ­னங்கள் நிதி­யு­தவி வழங்­கு­கின்­றன. இலங்­கையில் பதி­வு­செய்­யப்­பட்ட உள்ளூர் அர­ச ­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் மாகாண சுகா­தார திணைக்­களம் இந்த செயற்­றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது

கேள்வி : தொடர்ச்­சி­யாக வெளிநாட்­டி­லுள்­ள­வர்கள் இந்த திட்­டத்­திற்கு நிதி­யு­தவி வழங்­கு வார்­களா?

இல்லை. அப்­படி எதிர்­பார்க்­க ­மு­டி­யாது. ஆஸ்­தி­ரிய, நெதர்­லாந்து நாடு­களின் நிதி­யு­த­வி­யுடன் வடக்கு மாகா­ணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளோம். இந்த திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் வடக்கு மாகாணத்திற்கான புனர்வாழ்வு வைத்தியசாலையொன்று அமைக்கப்படவுள்ளது. இதனை 2020 களில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியும். அதுவரை படுக்கைப்புண்ணுடன் அவதியுறும் நோயாளிகளை பராமரிப்பதற்காகவே இவ்வாறாக புலம்பெயர் மக்களின் நிதியுதவியில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020 இற்கு பின்னர் மாங்குளம் புனர்வாழ்வு வைத்தியசாலையில் இதற்கான சேவையை பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.