Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி

Featured Replies

சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி
 
 
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி
ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில்  அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி   பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற   அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் உடுத்துறை ஆழிப்பேரலை நினைவாலய வளைவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது
 
யாழ்ப்பாணத்தில்
1482733412_download%20%2813%29.jpg
download%20%2815%29.jpg
1482733448_download%20%2814%29.jpg
1482733484_download%20%2811%29.jpg1482733484_download%20%2810%29.jpg1482733484_download%20%2812%29.jpg
 
மட்டக்களப்பில்  
 
1482733550_download%20%283%29.jpg1482733550_download.jpg1482733550_download%20%281%29.jpg1482733550_download%20%285%29.jpg1482733550_download%20%282%29.jpg1482733551_download%20%286%29.jpg1482733552_download%20%287%29.jpg1482733552_download%20%288%29.jpg
 
1482733593_26-12-2016%2011.12.9%207.jpg1482733593_26-12-2016%2011.12.36%209.jpg1482733594_26-12-2016%2011.12.41%206.jpg1482733593_26-12-2016%2011.12.26%2011.jpg1482733594_26-12-2016%2011.12.14%205.jpg1482733595_26-12-2016%2011.12.47%2012.jpg1482733595_26-12-2016%2011.12.57%2010.jpg1482733595_26-12-2016%2011.12.56%203.jpg1482733596_26-12-2016%2011.12.14%208.jpg1482733595_26-12-2016%2011.12.50%204.jpg
 
மன்னாரில்
1482734002_26-12-2016%2011.12.49%2013.jpg
 
26-12-2016%2012.12.2%2015.jpg26-12-2016%2012.12.43%2014.jpg
 
வவுனியாவில் 
download%20%2816%29.jpg

http://www.onlineuthayan.com/news/21836

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலை அடித்த தருணங்கள்!

tsunami-3jpg.jpg

 
வழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது.  அந்தக் கொடுந் துயரம் நடந்தேறி இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்து விட்டன.
 
தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பகுதி கடற்கரை சுனாமியினால் நிர்மூலமாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பின்வருமாறு,
 
அம்பாறை: 5000
யாழ்ப்பாணம்: 1256
முல்லைத்தீவு: 2902
கிளிநொச்சி: 32
திருகோணமலை: 984
மட்டக்களப்பு: 2975
 
இலங்கையில் மொத்தமாக 30,196 பேர் சுனாமியால் காவு கொள்ளப்பட்டனர். ஒரு சில நிமிடத்தில் ஊருக்குள் நுழைந்த கடல் உயிர்களை, உடைமைகளை எல்லாம் இழுத்துச் சென்றது. கடல் நீரில் சனங்களின் உடல்கள் மிதந்தன. பலரது உடல்கள் மீட்கப்படவே இல்லை. போரினால் பல பத்து ஆண்டுகளாக உயிரையும் உடைமைகளையும் ஊரையும் இழந்த மக்களை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையால் ஈழத் தமிரை மிதித்தது ஆழிப்பேரலை.
 
20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.
 
சுனாமி என்பது!
 

சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை  என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும்.

நிலநடுக்கம்,  மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் “துறைமுக அலை” என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது.

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

 
சுனாமியின் பாதிப்பு வடக்கு கிழக்கில் இன்னமும் தீரவில்லை. சுனாமியில் பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த  பெற்றோரும், சகோதரர்களை, நண்பர்களை இழந்தவர்களும் இன்றைய நாளில் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துவதை காண முடிகின்றது. போரால் மிதிக்கப்பட்டவர்களை சுனாமியும் மிதித்தது. சுனாமியால் மிதிக்கப்பட்டவர்களை மீண்டும் போர் மிதித்தது. இயற்கையை புரிந்து, இயற்கையை வணங்கி, இயற்கையை வென்று எம் வாழ்வை உயிர்ப்போடும் உறுதியோடும் கட்டமைப்போம்.

http://globaltamilnews.net/archives/11668

  • தொடங்கியவர்
இயற்கை அனர்த்த இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்-யாழ் அரச அதிபர்
 
 
இயற்கை அனர்த்த இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்-யாழ் அரச அதிபர்
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும்  அநாவசிய உயிரிழப்புகள் மற்றும்  உடமைச் சேதங்களை கட்டுப்படுத்தக்கூடிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றும்
போதே அவர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர்  தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் 
 
2004ம் ஆண்டு  ஏற்பட்ட சுனாமி  அனர்த்தத்தினால் 30000ற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. லட்சக் கணக்கானோரின் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய நாளை  தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி இருக்கிறது. ஆழிப் பேரலையினாலேயே எமது மாவட்டத்திலும் 3000 பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.
 
இன்றைய தினத்தில் சுனாமியால்  நாடு முழுவதும்  இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம். அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். இந்த சுனாமியின் பின்னரே எமது நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பின்னரே தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டது.
 
இன்று அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் இயங்கிக் கொண்டு வருகிறது. எமது மாவட்டத்தை பொறு த்த வரையில் சுனாமியை விட வெள்ளம் வறட்சி ,மின்னல், புயல் போன்ற  இயற்கை அனர்த்தங்களாலேயே பொதுமக்கள்  இழப்பு  அதிகமாக  ஏற்படுகிறது. 
 
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களால் அநாவசியமான உயிரிழப்புகள்  ஏற்படுவதையும் உடைமைச் சேதம்  ஏற்றபடுவதை தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். எமது மாவட்டத்தில் உயிர் இழப்புகள், உடைமைகள் அழிவதையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
 
எமது மாவட்டதில் சிறிதளவான மழைவீழ்ச்சிக்கு   கூட பெரும்பாலானோர் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படு கிறது. பின்னர் நிவாரணத்திற்காக அரசாங்கம் பெருமளவான நிதியினை செலவு செய்ய வேண்டி உள்ளது.
 
எமது மாவட்டதில் கடற்தொழிலிற்கு செல்பவர்களின் இழப்பே அதிகமாக உள்ளது. இந்த வருடத்தில் நான்கு மீனவர்கள் இறந்திருக்கி றார்கள். இவ்வாறான உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

http://www.onlineuthayan.com/news/21848

  • தொடங்கியவர்

பல்லாயிரம் உறவுகளின் கண்ணீரில் கரைந்தது முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்.!

Published by RasmilaD on 2016-12-26 15:36:55

 

2004ஆம் ஆண்டு இதே நாளில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் முல்லைத்தீவு  மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

IMG_2674.JPG

அந்த வகையில், முல்லைத்தீவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கூடி அஞ்சலி செலுத்தி சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

IMG_2614.JPG

கடல்கோள் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியானாலும் அதன் நினைவலைகள் இன்றும் அந்த உறவுகளை விட்டு அகன்றதாக தெரியவில்லை. இதேவேளை, முல்லைத்தீவு  கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அதிகளவான மக்கள் சுனாமியால் காவுகொள்ளப்பட்டார்கள். 

IMG_2607.JPG

DSC_0676.JPG

DSC_0663.JPG

http://www.virakesari.lk/article/14777

  • தொடங்கியவர்

சுனாமி நினைவுத் தூபி, புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டது:-

Tusnami.jpg

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், சுனாமி நினைவுத் தூபி திறந்தவைக்கப்பட்டுள்ளது.  இன்று (திங்கட்கிழமை)) இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத வழிபாடுகளும் மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது, யுத்த காலத்தில் இராணுவத்தால் அழிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு, சுனாமி ப் பேரழிவு ஏற்பட்டு 12 வருட நினைவுதினமான இன்று திறந்துவைக்கப்பட்டது.

சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள குறித்த இடத்தில், இன்றைய தினம் அவர்களது உறவுகள் மலரஞ்சலி செலுத்தினர்.

image_2.jpg

image_6.jpg

You may also like

http://globaltamilnews.net/archives/11688

  • கருத்துக்கள உறவுகள்

26.02.2014 ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

  • தொடங்கியவர்

சுனாமி பேபியின் இல்லத்தில்
 
 

article_1482746755-1.jpg

-வடிவேல் சக்திவேல்

சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் நினைவாக மட்டக்களப்பு, குருக்கள்மடத்தைச் சேர்ந்த 'சுனாமி பேபி 81' ஜெயராசா அபிலாஷின் இல்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி இன்று (26)  திறந்து வைக்கப்பட்டது.

சுனாமி அனர்த்தத்தின்போது, பிறந்து இரண்டரை மாதங்களேயான அபிலாஷ் என்ற குழந்தை காணாமல் போய் மீட்கப்பட்ட நிலையில், அக்குழந்தையை பலர் தமது குழந்தை என்று உரிமை கோரினர்.

இந்நிலையில், மருத்துவப்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அக்குழந்தை  ஜெயராசா தம்பதியினரின் குழந்தை  அடையாளம் காணப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல்  'சுனாமி பேபி 81'  இச்சிறுவன் அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

article_1482746768-2.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/188652/ச-ன-ம-ப-ப-ய-ன-இல-லத-த-ல-#sthash.YxAOgtIe.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சுனாமி பேபிக்கு உரிமை கோரிய ஒன்பது தாய்மார்கள்
சுனாமி பேபிக்கு  உரிமை கோரிய ஒன்பது தாய்மார்கள்
“சுனாமி பேபி 81“என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.
 
ஆழிப் பேரலையின் போது ஒன்பது தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருடசம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் சுனாமி இடம்பெற்று 12 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர். 
 
கல்முனை குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஜெயராசா அபிலாஷூக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
 
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு உயிர்பிழைத்த இரண்டரை மாதக் குழந்தையான அபிலாஷூக்கு ஒன்பது தம்பதியினர் உரிமை கோரியிருந்தனர்.
 
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தற்போது குருக்கள் மடத்தில் வசித்துவரும் ஜெயராசா யுனிதா தம்பதிகளின் அயராத முயற்சியின் காரணமாக மரபணு பரிசோதனை மூலமாக நீதிமன்றத்தின் மூலம் தமது குழந்தை என்பதை நிரூபித்தனர்.
 
1482751054_download%20%282%29.jpg
 
கடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் மாத்திரம் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர்.
 
கல்முனையில் கடற்கரையோரப் பகுதியில் பிறந்த இரண்டரை மாதங்களேயான ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது.
 
தென்னை மர வட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச்சென்று வைத்த பின்னர், அடுத்த அலையில் குப்பை மேடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
 
சுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர்.
 
இந்தச் சமயத்தில் தான் அபிலாஷ் என்ற குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
 
இந்தக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது.
 
இந்தக் குழந்தைக்கு உரிமை கோர எவருமில்லை என அறிந்த பலர் அந்தக் குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு, தங்களது குழந்தை எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுத்துச் சென்றனர்.  
 
1482751036_download%20%281%29.jpg
 
ஒரு குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரியதை வைத்தியசாலை நிர்வாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
 
நீதிமன்றத்தின் மரபணு பரிசோதனை மூலம், குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து, குழந்தையை உரிய பெற்றோர்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/21865

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலை நினைவு தினம்

 

 

ஆழிப்பேரலை நினைவு தினம்

 

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தமது உறவுகள் நினைவாக சுடர் ஏற்றி அஞ்சலி செய்தனர்

http://tamil.adaderana.lk/news.php?nid=2329&mode=head

  • தொடங்கியவர்

சுனாமி ரயிலில் ஒரு பயணம்

 

சுனாமி ரயிலில் ஒரு பயணம்

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்த 50 ஆம் இலக்க ரயில், பெரேலியவில் நிறுத்தப்பட்டு, சுனாமி நினைவுத்தூபிக்கு அருகில் விசேட நினைவஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

சுனாமி ரயில் இன்று பயணத்தில் ஈடுபட்டதுடன், பெரேலியவில் அனர்த்தத்திற்குள்ளான ரயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பிரதம ரயில் கட்டுப்பாட்டாளர் வனிகரத்ன கருணாதிலக்க நியூஸ்பெஸ்டுக்கு கருத்துகளை கூறினார்.

தாம் அந்த அனர்த்தத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாகவும், பின்னர் அனர்த்தம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவுசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தொடர்ந்தும் அந்த கோர நினைவலைகளுடன் தாம் ரயிலில் கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://newsfirst.lk/tamil/2016/12/சுனாமி-ரயிலில்-ஒரு-பயணம்/

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் நினைவுதினம் உணர்வுபூர்வமாக வடக்கில் அனுஷ்டிப்பு

 

(வட­ம­ராட்சி, தெல்­லிப்­பழை, கண்­டா­வளை நிரு­பர்கள்)

ஆழிப்­பே­ர­லையால் காவு கொள்­ளப்­பட்­டோரின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் வடக்கின் பல பாகங்­க­ளிலும் நேற்­றைய தினம் உணர்­வு­பூர்­வமாக நினைவுகூரப்பட்­டது. இந்து, கிறிஸ்­தவ ஆல­யங்­களில் விசேட பூஜைகள் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஆத்மா சாந்­தி­ய­டை­வ­தற்­காக இடம்­பெற்­ற­துடன் விசே­ட­மாக அமைக்­கப்­பட்ட சுனாமி நினை­வா­ல­யங்­களில் உற­வு­களை இழந்த மக்கள் தமது உணர்­வு­பூர்­வ­மான அஞ்­ச­லி­யினை செலுத்­தி­யி­ருந்­தனர்.

குறிப்­பாக வட­ம­ராட்சி கிழக்கு (மரு­தங்­கேணி) வட­ம­ராட்சி வடக்கு (பருத்­தித்­துறை) பிர­தே­சங்கள் மற்றும் முல்­லைத்­தீ­வி­லுள்ள ஒட்­டு­சுட்டான், முள்­ளி­ய­வளை போன்ற இடங்­களில் அமைக்­கப்­பட்ட சுனாமி நினை­வா­ல­யங்­களில் மிக உணர்­வு­பூர்­வ­மாக ஆழிப்­பே­ர­லையால் உயி­ரி­ழந்­த­வர்­களின் நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

யாழ்.மாவட்­டத்தில் ஆழிப்­பே­ர­லையால் காவு­கொள்­ளப்பட்ட 782 பேரி­னது சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்ட உடுத்­துறை சுனாமி நினை­வா­ல­யத்தில் உடுத்­துறை கடற்­றொ­ழி­லாளர் கூட்­டு­றவுச் சங்­கத்­தினால் நேற்றுக் காலை 8.45 மணி­ய­ளவில் நினை­வேந்தல் நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கிரா­ம­சே­வை­யாளர் வி.தவ­ராசா தலை­மையில் இடம்­பெற்ற இந் நிகழ்வில் வட­ம­ராட்­சி­ கி­ழக்கு பிர­தேச செயலர் கே.கண­கேஸ்­வரன் சுட­ரினை ஏற்­றி­வைத்தார். தொடர்ந்து நினை­வுத்­தூபி முன்­பாக மக்கள் விளக்­கா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­த­ரனால் ஏற்­றி­வைக்­கப்­பட்­ட­துடன் பிர­தான நினை­வுத்­தூ­பிக்கு மலர்­மாலை அணி­வித்தார். தொடர்ந்து சிறுவர் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா ம­கேஸ்­வரன், வட­மா­கா­ண­சபை எதிர்க்­கட்சித் தலைவர் கே.தவ­ராசா மற்றும் மாகா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் சுனாமி நினைவுச் சிலைக்கு மலர்­மா­லை­களை அணி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஆழிப்­பே­ர­லையால் காவு­கொள்­ளப்­பட்­ட­வர்­களின் நினைவு தினம் பல இடங்­களில் நேற்­றை­ய­தினம் அனுஸ்­டிக்­கப்­பட்­டது. குறிப்­பாக முல்­லைத்­தீவு நகரில் அமைந்­துள்ள சுனாமி நினை­வா­ல­யத்தில் முல்­லைத்­தீவு கத்­தோ­லிக்கத் திருச்­சபைப் பங்கின் ஏற்­பாட்டில் அஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தது.

மேலும் முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யிப்பு ஒட்­டு­சுட்டான் வீதியில் புதி­தாக அமைக்­கப்­பட்ட சுனாமி நினை­வா­ல­யத்­திலும் முள்­ளி­ய­வ­ளையில் அமைக்­கப்­பட்ட சுனாமி நினை­வா­ல­யத்­திலும் மக்கள் ஒன்­று­கூடி தமது உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை தெல்­லிப்­பழை துர்க்­கா­புரம் சிற்­பா­லய கலைக்­கூ­டத்தில் நேற்­றை­ய­தினம் காலை 9 மணி­ய­ளவில் ஆழிப்­பே­ர­லையில் காவு கொண்­ட­வர்­க­ளுக்­கான அஞ்­சலி நிகழ்வும் மறைந்த சிற்­பக்­க­லைஞர் கலா­பூ­சனம் ஏ.வி. ஆனந்­த­னுக்கு அஞ்­சலி நிகழ்வும் சுனாமி சிற்பக் கண்­காட்­சியும் இடம்­பெற்­றி­ருந்­தது.

நிகழ்வில் அருட்­தந்தை இமானுவேல் அடி­களார், யாழ்ப்­பா­ணப்­பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் பேரா­சி­ரியர் எஸ்.சண்­மு­க­லிங்கன், அருட்­ச­கோ­த­ரிகள், பொது மக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு தமது அஞ்­சலியை செலுத்­தினர்.

இவ் அஞ்­சலி நிகழ்­வினைத் தொடர்ந்து ஆழிப்­பே­ரலை, பூமி அதிர்வுகள், வெள்ளப்

பெருக்கு, எரிமலைகளின் சீற்றம், கால நிலை மாற்றம் தொடர்ந்து வரும் இயற்கை அனர்த்தங்களினால் எதிர்வு கூறப்படும் அச்சு

றுத்தல்கள் என்பவற்றுக்கு முகம் கொடுப் பது எப்படி? எம்மை பாதுகாப்பது எவ் வாறு? மீண்டும் எழுவது எவ்வாறு? என் பன தொடர்பான ஆய்வரங்கொன்றும் துறைசார்ந்தவர்களினால் நிகழ்த்தப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-27#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.