Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நின்று கொல்லும் சோடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நின்று கொல்லும் சோடா – Dr.சி.சிவன்சுதன்

soda-620x264.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 

“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம் முன்னோர்களிடமிருந்தும், அனுபவரீதியாகவும் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், நஞ்சு அன்று கொல்லும். சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஓர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றோம்.

பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகிறார்கள்.

சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்சிதைவும், பல் சம்பந்தமான நோய்களும், எலும்பு பலவீனமடைதலும், மூட்டு சம்பந்தமான நோய்களும், உடல் நிறை அதிகரிப்பு, சலரோகம், குருதியில் PH மட்டத்தில் ஏற்படும் மாறுபாடுகள், குருதி அமுக்க நோய், குருதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இருதய நோய்கள், ஒஸ்ரியோ போறோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படும்.

இவ்வாறான ஆபத்தான பானங்கள் திருமண வீடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் ஏன் நோயாளர்களுக்குக்கூட பரிமாறப்பட்டுவருகின்றன என்பது ஒரு வேதனையான விடயமாகும். இளம் வயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு, நிறை அதிகரிப்பு போன்றவை ஏற்படுவதற்கு அதிகரித்த சோடாப் பாவனை ஒரு முக்கியமான காரணமாக விளங்குகின்றது.

அற்புதமான உணவுகளான முட்டையையும் பாலையும் குடிக்கப் பயப்படும் நம்மவர்களுக்கு ஆபத்தான சோடா வகைகளை போத்தல் போத்தலாக வாங்கிக்குடிக்கும் துணிவு எங்கிருந்து வந்தது? அனைவரும் சுகமாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை உள்ள எமக்கு பிறருக்கு சோடா கொடுக்க எப்படி மனம் வந்தது? வேலைச் சுகத்துக்காகச் சோடாவைக் கொடுத்து உடற்சுகத்தைக் கெடுத்துக் கொள்வதா? எங்கும் எதற்கும் சோடா கொடுக்கும் பழக்கத்தைப் பார்க்கும்போது “வை திஸ் கொலைவெறி” என்னும் பாடல்தான் ஞாபகம் வருகிறது.

நாள் பார்த்து; நட்சத்திரம் பார்த்து; முழுவியளம் பார்த்து; சகுனம் பார்த்து; மங்கலகரமாகச் செய்யும் சுபகாரியங்களுக்கும்கூட இந்த ஆபத்தான சோடா வகைகளைப் பரிமாறும் பாரம்பரியம் எங்கிருந்து வந்தது? சோடா குடிக்க வேண்டாம் என்று சொன்னால் “அப்போ தாகத்துக்கு எதைக் குடிப்பது?” என்று கேட்பவர்களுக்கு பதிலாக எதைச் சொல்வது? எம் சந்ததியின் சுகத்துக்காக நாம் சிந்திக்கவேண்டி இருக்கிறது.

காலம் காலமாக நாம் பாவித்துவந்த இயற்கையான பாதுகாப்பான குடிபான வகைகளை நாம் மீண்டும் பாவிக்க முயலுவோம். நின்று கொல்லும் பானமான சோடாவைக் குடிப்பதையும் கொடுப்பதையும் நிறுத்துவோம். இயற்கையான பானங்களான பழரசம், இளநீர், தேசிக்காய்த் தண்ணீர், மழைநீர், மோர், குத்தரிசிக்கஞ்சி, வீட்டிலே தயாரித்த கூழ், சுட்டு ஆறிய நீர், பால், சீனி சேர்க்காத தேநீர், தோடம்பழத்தண்ணீர், ரசம், குடிநீர், சூப் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது.

அதிகளவு சீனிச் சத்தும் இரசாயனப் பதார்த்தங்களும் சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்பட்டு பல்வேறு வகையான விளம்பரங்களுடன் விற்பனையாகும் சோடா வகைகளிடம் நாம் ஏமாறப்போகிறோமா? வருத்தத்தை விலை கொடுத்து வாங்கப்போகிறோமா? இளம் வயதில் எமது பிள்ளைகளை நீரிழிவு நோயாளியாகப் பார்க்க ஆசைப்படுகிறோமா? எலும்பு, மூட்டு நோய்களுக்கு ஆளாகி நோவால் அவதிப்படப்போகிறோமா? சோடாவை வாங்கும் முன் இவற்றைச் சிந்திப்போம். அமங்கல பானமான சோடாவை மங்கலகரமான நிகழ்வுகளிற் பரிமாறுவதை நிறுத்துவோம். பொது நிகழ்வுகளில் சுலபமாகப் பரிமாறக்கூடிய ஆரோக்கியமான பானங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்குவோம்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ். போதனா வைத்தியசாலை

http://www.thamilhealth.com/2014/10/01/நின்று-கொல்லும்-சோடா-dr-சி/

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für feesh lime juice   Bildergebnis für feesh lime juice

சோடா கொடுப்பது... அந்தஸ்தின் அடையாளம் என்று, நினைக்கிறார்களோ தெரியவில்லை. :rolleyes:
கலியாண, சாமத்திய வீடுகளில்....  தேசிக்காய்த் தண்ணீர் கொடுப்பது நல்ல யோசனை.
செய்வதும் சுலபம்,  விலையும்... சோடா வாங்குவதை விட குறைவானது, தாகத்தையும் தீர்க்கக் கூடியது.:)

'குழந்தைகளுக்கு வேண்டாம்!' கோலா விளம்பரத்திலேயே அதிர்ச்சி வாசகம் #MustKnowFact

 

கோலா

 

பிரியாணி, பீட்சா, சாண்ட்விச் என எந்த உணவாக இருந்தாலும் 'காம்போ பேக்’ எனும் ஆஃபரில் உடன் ஒட்டிக்கொள்வதில், குளிர்பானங்களுக்கே முதல் இடம். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் வெல்கம் டிரிங்க்காக இடம் பெறுகின்றன, இந்த கோலா பானங்கள். டி.வி, இன்டர்நெட், செய்தித்தாள், ஃப்ளெக்ஸ் பேனர்கள்... என எங்கெங்கும் கோலாகலமாக கோலா மயம். இப்போதேல்லாம், மேல்நாட்டு கலாசாரம் உள்ள உணவகங்களில், எந்த உணவு வாங்கினாலும், அதனுடன் சேர்த்து கோலாவையும் தருகின்றனர். குடிக்க தண்ணீருக்கு பதிலாக கூல்டிரிங்க்ஸ்தான் என மறைமுகமாகச் சொல்கின்றனர்.


ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை உடல் வெளியிடுகிறது. நம் உடலுக்கே ஆக்சிஜன்தான் தேவை, கார்பன் தேவை இல்லை என்று தெரியும். அப்படி இருக்கையில், நாம் காசு கொடுத்து கார்பனேட்டட் டிரிங்க்ஸை வாங்கி குடிக்க வேண்டுமா..?

'பழங்களைக் கடி, பழச்சாறுகளைக் குடி’ என்பதுதான் நம் வழக்கம். உடலே வேண்டாம் என வெளியிடும் கார்பனை, புதுப் புது பெட் பாட்டில்களில் அடைத்து விற்றால் மட்டும் ஒப்புக்கொள்ளுமா என்ன? ஒவ்வொரு குளிர்பானத்தின் லேபிளில் பார்த்தாலே தெரியும்... `குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது’, 'மரபியல் பிரச்னை இருப்பவர்களுக்கு தரக் கூடாது’ எனும் வாசகத்தை சிறிய எழுத்துகளில் அச்சிட்டு இருப்பார்கள். அதை நாம் கவனிக்கத் தவறுகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

 

குளிர்பானங்கள் நம்மை எப்படி பாதிக்கும்?


நம் உடலில் இரண்டு நரம்பு மண்டலங்கள் உள்ளன. ஒன்று செயல் நரம்பு மண்டலம், கையை மடக்குவது, காலை நீட்டுவது போன்ற வேலைகளைச் செய்யும். உணர்வு நரம்பு மண்டலம் என்பது தொட்டால் புரிந்துகொள்ளும் தன்மை. இந்த வேலைகளைச் செய்யக்கூடியது நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள். இவை ரத்தம், சருமம், எலும்பு, நகம் என அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒவ்வொரு செல்லுக்கும் இணைப்பு பாலமும் இதுதான். இது ஒரு புரோட்டீன். குளிர்பானங்கள் குடிப்பதால், இந்த நியுரோட்ரான்ஸ்மிட்டர்கள் பாதிக்கும். அதாவது, ஒரு மாதத்துக்குத் தொடர்ந்து குளிர்பானங்களைக் குடித்தாலே, நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் பாதிக்கப்படுவது நிச்சயம். இதன் உயிர் வேதிப்பொருட்களின் உருவ அமைப்பு மற்றும் வேதிக் கட்டமைப்பு மாறிவிடும். ஒரு சுவரில் நடுவில் உள்ள இரண்டு செங்கற்களை எடுத்துவிட்டால் என்ன நிலையோ அந்த நிலைதான் ஏற்படும். அதாவது உடல் என்கிற சுவர் பொலபொலவென உதிர்ந்துவிடுவது போல உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தொடுதல், உணர்தல் போன்ற திறன்களும் பாதிக்கப்படும்.

நியுரோட்ரான்ஸ்மிட்டரின் வேலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ பிரச்னைதான். அதிகரித்தால் புற்றுநோய் வரலாம். குறைந்தால், வேறு எதாவது உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். மொத்தத்தில், நோயைத் தருவது நிச்சயம்; விளைவுகளை ஏற்படுத்துவதில் முதலிடம்!

 

shutterstock_59821009_16337.jpg


`Contains no fruit. Contains added flavours.'

இது, குளிர்பானத்தில் பழங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. சுவையூட்டிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.


Aspartame

சுவைக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் இது. அஸ்பார்டிக் ஆசிட் மற்றும் பினைலாலனைன் (aspartic acid and phenylalanine) எனும் இரண்டு அமினோ அமிலங்களால் தயாரிக்கப்படும் இந்த ரசாயனம், சர்க்கரையைவிட 200 மடங்கு அதிக இனிப்புத் தன்மையைக் கொடுக்கும் சக்திபெற்றது.

ஆஸ்பார்டேம்-மின் விளைவுகளைப் பற்றி இரண்டுவிதமான ஆய்வுகள் நடந்தன. ஒன்றில், `ஆஸ்பார்டேம் கெமிக்கலால் மூளையில் கட்டி ஏற்படலாம்’ என்றும், இன்னொரு ஆய்வில் `இதனால்தான் மூளையில் கட்டி ஏற்பட்டதா என உறுதிபடுத்த முடியவில்லை’ என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் மாற வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது.


 

Not for phenylketonurics

உலக அளவில் 15,000 பேருக்கு மரபணுக் கோளாறு காரணமாக `பீனைல்கீடொனுரியா’ (Phenylketonuria) எனும் குறைபாடு இருக்கிறது. இவர்களது உடலானது பினைலாலனைன் (phenylalanine) என்ற கெமிக்கலை ஒப்புக்கொள்ளாது. இது தெரியாமல் இவர்கள் இந்த கெமிக்கல் கலந்த உணவுகளை உண்டால், நரம்புகள் பாதிப்பு, மனநல பாதிப்பு, மூளைத் திசுக்கள் பாதிப்படைதல் ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

`எந்த உணவாக இருந்தாலும், அந்த உணவின் லேபிளில், `Phenylketonurics: Contains phenylalanine’ என்ற வார்த்தைகள் இருந்தால், அந்த உணவைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

 

shutterstock_30113512_%281%29_16058.jpg

 

 

Acesulfame potassium

அக்சல்ஃப்ளேம் பொட்டாசியம் - கே (Acesulfame potassium (Ace-K), இந்த ரசாயனத்தால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, மயக்கம், மறதி, குமட்டல், மனஅழுத்தம், கல்லீரல் பிரச்னைகள், நாக்கு எரிச்சல், வீசிங் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

பொதுவாகவே கார்பனேட்டட் பானங்களில் உள்ள கஃபைன், வயிற்றுவலி, வீக்கம், வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறு, உடல் மற்றும் மூளைச் சோர்வு, தூக்கமின்மை, படபடப்பு, சுவாசக் கோளாறு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.


அலெர்ட்!.

அனைவருமே குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பீனைல்கீடொனுரியா (Phenylketonuria) எனப்படும் மரபணுக் கோளாறு உடையவர்கள், இந்த பானங்களை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

 

மாற்றாக என்ன சாப்பிடலாம்?

இளநீர், சூப், நீராகாரம், வெல்லம் சேர்த்த இனிப்பு பானகம், பழச் சாறுகள் ஆகியவற்றைக் குடிப்பது நல்லது.

 

http://www.vikatan.com/news/health/76185-cola-drinks-are-not-recommended-for-children-alerting-ads-by-companies.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.