Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜின் படுகொலைக்கு நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் காட்டம்!

Featured Replies

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது சுட்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் படுகொலை வழங்கின் தீர்ப்பை இதற்குப் பயன்படுத்தவேண்டாமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா அமர்விலும் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளமுடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குதர்க்கமான கருத்தை முன்வைத்திருந்தார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜெனீவா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பு, இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றபோதிலும், சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் இதற்குத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்.

அத்துடன், சிறீலங்காமீது ஐநாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மீளப்பெறுமாறு, புதிதாக பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்புக்கு கடிதமும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=52875

  • கருத்துக்கள உறவுகள்

உவற்ற காட்டத்தை கண்டு சிங்களவன் கொடுப்புக்க சிரிச்சிட்டு.. தன் வேலைப் பார்த்திக்கிட்டு இருப்பான். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படி கத்துகிறார் என்றால் முன்னமே சிங்களவனிட்டை சொல்லி அனுமதி பெற்று விட்டுத்தான் கத்துவார் இப்படி சவுண்டுக்கு அங்கு எதோ பெரிசா தீர்வில் இல்லை என்றும் அர்த்தபடுத்தலாம்.பின்பு இப்படி ஒருக்கா கத்துவது பிறகு சிங்கள அரசு சார்பாக வெளிநாடுகளில் லாபி செய்வது அந்தக்கதை வெளியில் வந்து இவரிடம் கேள்வி கேட்க்கப்படும்போது நான் அப்பவே எதிர்ப்பு தெரிவிச்சனான் என்று இழுத்து விடுவார் அதுக்குள் இவருக்கு பக்கத்தில் இருக்கும் அல்லக்கைகள் எதோ வெட்டி விழுத்தின மாதிரி கேள்வி கேட்டவனை அடக்கி போடுங்கள் இவரின் கதை இப்படி வரும் நிறம்மாறும் போட்டியில் மனிதர்களிடம் தோற்று விட்டேன் ஆதலால் வெட்க்கத்தில் தற்கொலை செய்தேன் இப்படிக்கு பச்சோந்தி

55 minutes ago, Athavan CH said:

அத்துடன், சிறீலங்காமீது ஐநாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மீளப்பெறுமாறு, புதிதாக பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்புக்கு கடிதமும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம் வந்தவுடன் ஒரே இரவில அமரிக்காவின் வெளிவிவகார கொள்கைகள் மாறிவிடுவதுக்கு அமெரிக்கா கட்டுபெத்தை பாதாள உலக கோஸ்ட்டி லெவலில் ஆ இருக்கிறது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.