Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தானியக்க இலத்திரனியல் இயந்திரங்களிலிருந்து பல மில்லியன் ரூபா பணம் கொள்ளையிட்ட இருவர் கைது

Featured Replies

தானி­யக்க இலத்­தி­ர­னியல் இயந்­தி­ரங்­க­ளி­லி­­ருந்து

 

பல மில்­லியன் ரூபா பணம் கொள்­ளை­யிட்ட இருவர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)

 வெளி­நாட்­ட­வர்­க­ளுடன் இணைந்து போலி கட­னட்­டை­களை பயன்ப­டுத்தி, தனியார் வங்­கி­களின் இலத்­தி­ர­னியல் இயந்­தி­ரங்­களில் இருந்து மில்­லி­யன்­க­ணக்கில் பணம் கொள்­ளை­யிட்டு வந்த திட்ட மிட்ட குற்றக் குழு­வொன்றின் வலை­ய­மைப்பை குற்றப் புல­னாய் வுப் பிரி­வினர் அடை­யாளம் கண்­டுள்­ளனர்.  

அதன்­படி இந்த திட்­ட­மிட்ட குழுவின் உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் தெற்கு பாதாள உலகப் புள்ளி ஒருவர் உள்­ளிட்ட இரு­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் அம்­பா­வி­லவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான

பொலிஸ் பரி­சோ­தகர் பீ.ஏ.என்.பிரி­ய­தர்­ஷ­ த­லை­மை­யி­லான குழு­வி­னரே இந்த வலை­ய­மைப்பை கண்­ட­றிந்து சந்­தேக நபர்­களை கைது செய்­துள்­ள­துடன் மேல­திக விசா­ர­ணை­களை முடக்­கி­விட்­டுள்­ளனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள், இந்த வலை­ய­மைப்பின் உறுப்­பி­னர்­க­ளான இரு­வ­ரையும் கைது செய்யும் போது அவர்­க­ளிடம் இருந்து இரு மைக்ரோ ரக கைத்­துப்­பாக்­கி­களும் 190 போலி கட­னட்­டை­களும், ஹெரோயின் 50 மில்­லி­கி­ராமும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்பட்­டுள்ள ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் இந்த திட்­ட­மிட்ட குற்றக் குழு­வா­னது தனியார் வங்­கி­களில் இருந்து பணத்தை சூட்­சு­ம­மாக கொள்­ளை­யி­டு­வ­தற்கு மேல­தி­க­மாக ஹெரோயின் வர்த்­தகம் உள்­ளிட்ட பல சட்ட விரோத செயல்­களை செய்­து­வந்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 கடந்த 23 ஆம் திகதி, குறித்த தனியார் வங்­கி­யொன்று தமது வங்­கியில் இருந்து போலி கட­னட்டை ஒன்­றூ­டாக 5 மில்­லியன் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளித்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த வங்­கியில் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு பெற்ற சில தர­வு­க­ளுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் இந்த திட்­ட­மிட்ட வலை­ய­மைப்­பா­னது மஹ­ர­கம, பிலி­யந்­தல, மொரட்­டுவ,வெலிப்­பன்ன, அம்­ப­லாந்­தோட்டை, கதிர்­காமம்,வெலி­கம, காலி, மாத்­தறை உள்­ளிட்ட பல பகு­தி­களில் இவ்­வாறு பணக் கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 இந் நிலையில் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் நான்கு வெளி நாட்டு வங்­கி­களின் கட­னட்­டை­களைப் பயன்­ப­டுத்தி மிரிஸ்ஸ பகு­தியின் வங்­கி­யொன்றில் பணம் பெறப்பட்­டுள்­ள­மையும் மோசடி நட­வ­டிக்கை என்­பதும் கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீவிர அவ­தானம் செலுத்தி மேற்­பார்வை மற்றும் உளவு வேலை­களில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன் போது சந்­தே­கத்­துக்கு இட­மான வாகனங்­களின் இலக்­கங்கள் மற்றும் சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்­காக வங்­கி­க­ளுக்கு வந்து செல்வோர் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்பட்டு அந்த தக­வல்கள் அனைத்தும் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டது.

இத­னை­ய­டுத்தே முதல் சந்­தேக நப­ரான தினேஷ் வீர­துங்க என்­ப­வரை பிலி­யந்­தல பகு­தியில் வைத்து பொலிஸார் கைது செய்­தனர்.

 சந்­தேக நபர் வீட்டில் இருந்து தனது காரில் வெளி­யேற முற்­பட்ட போதே பொலிஸார் கைது செய்­தனர். இத­னை­ய­டுத்து அவ­ரது காருக்குள் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் 78 போலி கட­னட்­டை­களைக் கைப்­பற்­றினர். இத­னை­ய­டுத்து அவ­ரது வீட்டை பொலிஸார் சோத­னை­யிட்­டனர். இதன் போது அந்த வீட்டில் ஒரு அறை பூட்­டப்பட்­டி­ருந்­துள்­ளது. அந்த அறை காலியைச் சேர்ந்த இந்த கட­னட்டை மோசடி, கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய நபரின் உடை­யது என உறுதிப் படுத்­திய பொலிஸார் அந்த அறை­யையும் சோதனைச் செய்ய நட­வ­டிக்கை எடுத்­தனர்.

 இத­னை­ய­டுத்து காலி, உன­வட்­டுன பகு­தியில் வைத்து சந்­தேக நப­ரான சுரேஷ் மது­ரங்கவை பொலிஸார் கைது செய்­தனர்.

இதன்போது சந்­தேக நபரின் காலி வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது, அங்­கி­ருந்து 9 மில்­லி­மீற்றர் ரக மைக்ரோ ரக கைத்­துப்­பாக்கி ஒன்று, 6 தோட்­டாக்கள் மற்றும் 30 கிராம் ஹெரோயின் என்­பன கைப்­பற்­றப்பட்­டன. இத­னை­ய­டுத்து பிலி­யந்­த­லையில் உள்ள வீட்டில் அவ­ரது பூட்­டப்பட்ட அறை­யினை பொலிஸார் சோதனை செய்­தனர். இதன் போது, 9 மில்லி மீற்றர் ரக மைக்ரோ ரக துப்பாக்கி, 57 வெள்ளை நிற போலி கடனட்டைகள், தங்க நிற கடனட்டைகள் 33, பண கொள்ளைக்கான தகவல்களை களவாட பயன்படுத்தப்பட்ட கோர்டர் இயந்திரம் மற்றும் 10 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைதான நபர் தெற்கு பாதாள உலகத்தவர் என வெளிப்படுத்திய பொலிஸார், தெற்கு பாதாள உலகத்தவர்களுடன் இணைந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நிலையில் சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-28#page-1

  • தொடங்கியவர்

தானி­யக்க இலத்­தி­ர­னியல் இயந்­தி­ரங்­களில் இருந்து பணக் கொள்ளை:

 

4 பல்­கே­ரி­யர்கள் இர­க­சிய பொலி­ஸாரால் கைது  ஏ.ரி.எம்.களில் இர­க­சிய உப­க­ரணம் கண்­டு­பி­டிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

தனியார் வங்­கி­களின் இலத்­தி­ர­னியல் இயந்­தி­ரங்­களில் இருந்து மில்­லி­யன்­க­ணக்கில் பணம் கொள்­ளை­யிட்டு வந்த திட்ட மிட்ட குற்றக் குழு­வொன்றின் வலை­ய­மைப்பில் இணைந்து செயற்­பட்ட நான்கு வெளி­நாட்­ட­வர்­களை குற்றப்புல­னாய்வுப் பிரி­வினர் கைதுசெய்­தனர்.   

பல்­கே­ரிய நாட்டைச் சேர்ந்த நால்­வ­ரையே இவ்­வாறு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வினர் கைது செய்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந்த திட்­ட­மிட்ட குழுவின் உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் தெற்கு பாதாள உலகப் புள்ளி ஒருவர் உள்­ளிட்ட இரு­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வினர் ஏற்­க­னவே கைது செய்து தடுத்து வைத்து விசா­ரணை செய்து வந்த நிலை­யி­லேயே மேற்­படி நான்கு வெளி­நாட்­ட­வர்­களும் கைது செய்­யப்பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் அம்­பா­வி­லவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பீ.ஏ.என். பிரி­ய­தர்­ஷ­ த­லை­மை­யி­லான குழு­வி­னரே இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இந்த திட்­ட­மிட்ட குற்றக் குழு­வா­னது இலங்கை மற்றும் இந்­தி­யாவில் இத்­த­கைய கட­னட்டை தக­வல்­களை திருடி பணம் கொள்­ளை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளதும், தக­வல்­களை திருட ஏ.ரி.எம். நிலை­யங்­களில் விஷேட கருவி ஒன்­றினை இவர்கள் பொருத்­தி­யுள்­ள­மையும் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ள­தாக புல­ன­ாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

கைதான வெளி­நாட்­ட­வர்கள் ஏ.ரி.எம். நிலை­யங்­களில் பணம் திருடும் போதே கைது செய்­யப்பட்­ட­தாக குறிப்­பிடும் பொலிஸார், அவர்­க­ளி­டமும் இந்த மோசடி குற்றக் குழுவின் வலை­ய­மைப்பு தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அறி­வித்­தனர்.

முன்­ன­தாக கடந்த 23 ஆம் திகதி, குறித்த தனியார் வங்­கி­யொன்று தமது வங்­கியில் இருந்து போலி கட­னட்டை ஒன்­றினூ­டாக 5 மில்­லியன் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளித்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த வங்­கியில் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவினர் பெற்ற சில தர­வு­க­ளுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் இந்த திட்­ட­மிட்ட வலை­ய­மைப்­பா­னது மஹ­ர­கம, பிலி­யந்­தல, மொரட்­டுவ,வெலிப்­பன்ன, அம்­ப­லாத்­தோட்டை, கதிர்­காமம்,வெலி­கம, காலி, மாத்­தறை உள்­ளிட்ட பல பகு­தி­களில் இவ்­வாறு பணக் கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 இந் நிலையில் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் நான்கு வெளிநாட்டு வங்­கி­களின் கட­னட்­டை­களைப் பயன்­ப­டுத்தி மிரிஸ்ஸ பகு­தியின் வங்­கி­யொன்றில் பணம் பெறப்பட்­டுள்­ள­மையும் அதுவும் மோசடி நட­வ­டிக்கை என்­பதும் கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீவிர அவ­தானம் செலுத்தி மேற்­பார்வை மற்றும் உளவு வேலை­களில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன் போது சந்­தே­கத்­துக்கு இட­மான வாகனங்­களின் இலக்­கங்கள் மற்றும் சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்­காக வங்­கி­க­ளுக்கு வந்து செல்வோர் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்பட்டு அந்த தக­வல்கள் அனைத்தும் பகுப்­ப­ாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டது.

இத­னை­ய­டுத்தே முதல் சந்­தேக நப­ரான தினேஷ் வீர­துங்க என்­ப­வர் பிலி­யந்­தல பகு­தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்­தேக நபர் வீட்டில் இருந்து தனது காரில் வெளி­யேற முற்­பட்டபோதே பொலிஸார் கைது செய்­தனர். இத­னை­ய­டுத்து அவ­ரது காருக்குள் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் 78 போலி கட­னட்­டை­களைக் கைப்­பற்­றினர். அவ­ரது வீட்டை பொலிஸார் சோத­னை­யிட்­டனர். இதன் போது அந்த வீட்டில் ஒரு அறை பூட்­டப்பட்­டி­ருந்­துள்­ளது. அந்த அறை காலியைச் சேர்ந்த இந்த கட­னட்டை மோசடி, கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய நபருடை­யது என உறுதிப் படுத்­திய பொலிஸார் அந்த அறை­யையும் சோதனை செய்ய நட­வ­டிக்கை எடுத்­தனர். 

இத­னை­ய­டுத்து காலி, உன­வட்­டுன பகு­தியில் வைத்து சந்­தேக நப­ரான சுரேஷ் மது­ரங்கவை பொலிஸார் கைது செய்­தனர். இதன் போது சந்­தேக நபரின் காலி வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது, அங்­கி­ருந்து 9 மில்­லி­மீற்றர் ரக மைக்ரோ ரக கைத்­துப்­பாக்கி ஒன்று, 6 தோட்­டாக்கள் மற்றும் 30 கிராம் ஹெரோயின் என்­பன கைப்­பற்­றப்பட்­டன.

 இத­னை­ய­டுத்து பிலி­யந்­த­லையில் உள்ள வீட்டில் அவ­ரது பூட்­டப்பட்ட அறை­யினை பொலிஸார் சோதனை செய்­தனர். இதன் போது, 9 மில்லி மீற்றர் ரக மைக்ரோ ரக துப்­பாக்கி, 57 வெள்ளை நிற போலி கட­னட்­டைகள், தங்க நிற கட­னட்­டைகள் 33, பண கொள்­ளைக்­கான தக­வல்­களை கள­வாட பயன்­ப­டுத்­தப்பட்ட கோர்டர் இயந்­திரம் மற்றும் 10 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர். 

கைதான நபர் தெற்கு பாதாள உலகத்தவர் என வெளிப்படுத்திய பொலிஸார், தெற்கு பாதாள உலகத்தவர்களுடன் இணைந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நிலையில் சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக நேற்று முன் தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிரிஸ்ஸ பகுதியில் வைத்து மேற்படி வெளிநாட்டவர்களைக் கைது செய்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.