Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பின் பின்னர் பிரிந்துசெல்லலாம்

Featured Replies

புதிய அரசியலமைப்பின் பின்னர் பிரிந்துசெல்லலாம்

P5-116ccf45175d7530f119182d2563ba570b4b8f9f.jpg

 

சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கு மனோ கணேசன் அறிவுரை

(க.கம­ல­நாதன்)

நீண்­ட ­கா­ல­மாக இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்ற தேசிய பிரச்­சி­னைக்கு நிரந் தர தீர்வை காண­வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தெரிவுசெய்து தேசிய அர­சாங்­கத்­தி­னையும் அமைத்தோம். எனவே அர­சாங்­கத்தின் உள்­ளி­­ருந்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­வர்கள் நாட்டை ஒன்­று­ப­டுத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட பின்னர் பிரிந்து செல்­லலாம் என்று தமிழ் முற்­போக் குக் கூட்­ட­ணியின் தலை­வரும் தேசிய சக­­வாழ்வு கலந்துரையாடல், நல்­லி­ணக்கம் மற் றும் அரசகரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். 

நாம் இந்த தேசிய அரசை உருவாக்கியது, தேங்காய் துருவுவதற்கு அல்ல; அரசியலில் விளையாடவும் அல்ல. இந்த நாட்டில் புரையோடிபோயுள்ள தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவே தேசிய அரசை உருவாக்கினோம் என்பதை டிலான் பெரேரா, எஸ்.பி. திஸாநாய க்க போன்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச் சர்கள் மனதில் கொள்ளவேண்டும். 

புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு , அதன் பிறகு  அவசியமானால்,  நாம் வெவ்வேறு திசைகளில் விலகி செல்வோம். முடியுமானால், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசை அமைக்கட்டும். ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் தங்கள் தலைமையிலான அரசை அமைக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய முடிவை அப்போது எடுக்கும். அல்லது புதிய பொது தேர்தலுக்கே செல்வோம். நாம் எதற்கும் தயார். ஆனால் இப்போது தேசிய அரசு நீடிக்க வேண்டும். அதை உடைத்து மஹிந்தவுக்கு உதவிசெய்து டீல் டிலான் ஆக வேண்டாம் என நண்பர் டிலான் பெரேராவை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மலை­நாட்டு புதிய கிராமங்கள் ,தோட்ட உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் ஏற்­பாட்டில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், தற்­போது ஜன­வரி 8 ஆம் திகதி நாம் பெற்­றுக்­கொண்ட வெற்­றியை மறு­பக்கம் திருப்பும் முயற்­சியில் குழு­வொன்று மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. அந்த குழு அர­சாங்­கத்தின் உள்­ளேயே செயற்­பட்டு வரு­கின்­றமை வேத­னை­ய­ளிக்­கின்­றது. 

சுதந்­திர கட்­சியில் சிலர் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தா­னது ஏற்­று­கொள்ள கூடிய விட­ய­மல்ல. இவ்­வாறு யார் செயற்­ப­டு­கின்­றார்கள் என்று பார்க்­கின்ற போது அவர்கள் கடந்தவருடம் ஜன­வரி 8 ஆம் திகதி புரட்­சியின் போது எதிர்­த­ரப்பில் அமர்ந்­தி­ருந்­த­வர்களாகவே உள்ளனர்.

தற்­போது அவர்­க­ளுக்கு எமது ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது அதீத பற்று ஏற்­று­பட்­டு­விட்­டது. இவர்கள் ஜனா­தி­ப­திக்கு தவ­றான உப­தே­சங்­களை வழங்கி அவரை வீழ்த்த முயற்­சிக்­கின்­றனர்.அவரை வீழத்­து­வது கடி­ன­மான செயல் இருப்­பினும் நாம் இது­கு­றித்து பேச வேண்­டி­யது அவ­சி­ய­மகும்.

காரணம் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்கு வித்­திட்­டது. கடந்த தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமை­வாக 100 க்கு 55.83 வீத­மான வாக்­கு­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பெற்­றுக்­கொண்டார். 43.40 வீதத்­தி­லான வாக்­கு­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­கொண்டார். இந்­நி­லையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தினை எடுத்­துக்­கொண்டு பார்க்­கையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 100 க்கு 63 வீத வாக்­குகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்­தது. இது தேசிய மட்­டத்தில் கிடைத்த வாக்கு வீத்­தினை பார்க்­கிலும் அதி­க­மா­னது.

மத்­திய கொழும்­பிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 75.8 வீத­மான வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டி­ருந்தார். எனவே நாம் தேசிய மட்­டத்­துடன் ஒப்­பிட்டு பார்க்­கின்ற போது அதனை பார்க்­கிலும் அதி­க­மான வாக்­கு­வீத்­தனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நாம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம்.

இவ்­வாறு நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விக்கு அதி­க­ப­டி­யான வாக்­கு­களை பெற்­றுக்­கொ­டுத்து வெற்­றி­பெறச் செய்­ததன் பிர­தான நோக்கம் இந்­நாட்டில் நீண்­ட­கா­ம­ல­மாக தொடரும் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண­வேண்டும் என்­ப­தாகும். வர­லாற்­றிலும் இவ்­வா­றான தீர்­வினை காண்­ப­தற்கு பல முயற்­சி­களை இரு கட்­சி­களும் மேற்­கொண்­டன அந்த சந்­தர்ப்­பத்தில் மற்­றைய கட்சி காலை பிடித்து இழுத்து அந்த முயற்­சியை முறி­ய­டித்து விடும்.

அவ்­வாறு நடக்­க­கூ­டாது என்­ப­தற்­கா­கவே தற்­போது தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­கினோம். எனவே முதலில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு பின்­புதான் மற்ற விட­யங்கள் என்­பதே எமது நிலைப்­பாடு. இவ்­வா­றான நிலையில் சிலரின் கருத்­துக்கள் வேடிக்­கை­யாக உள்­ளது. அமைச்சர் டிலான் பெரேரா போன்­ற­வர்கள் ஐக்­கிய தேசிய கட்­சியில் உள்ள அமைச்­சர்கள் பாவ­ப்பட்­ட­வர்கள் என கூறு­கின்­றனர்.

அவர்­களின் கருத்­துக்கள் வேடிக்­கை­யாக உள்­ளன. காரணம் பாவப்­பட்­ட­வர்கள் யார் என்­பதை இந்­நாட்டு மக்கள் அறி­வார்கள். அவர்கள் பாவம் பார்த்து வழங்­கப்­பட்ட அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொண்­ட­வர்களாவர். எமக்கு அவ்­வா­றான நிலை­யில்லை. நாம் மக்கள் பலத்தில் வந்­த­வர்கள். தற்­போது நாம் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் இணைந்து செயற்­ப­டு­வதற்கான பிர­தான நோக்­கமும் இது­வாகும். காரணம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­ப­தாகும்.

அதற்­க­மைய உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்ற அர­சி­ல­மைப்­பினை சிலர் மர­ணப்­பொறி என்று கூறு­கின்­றனர். நாட்டை பிரிக்கும் செயற்­பாடு என்று கூட்டு எதி­ர­ணியின் விமல், உதய கம்­மன்­பில உள்­ளிட்­ட­வர்கள் கூறு­கின்­றனர். நாடு இரண்­டாக பிரி­யாது என்று சக­லரும் அறிவர். இருப்­பினும் இதனை காட்டி நாட்­டினை பிரிப்­பதே இவர்­க­ளது முயற்­சி­யாகும். டிலான் பெரேரா உள்­ளிட்­ட­வர்­களும் இதனை அறிவர். அர­சி­லை­மைப்பு புத்­து­ரு­வாக்க குழுவில் அவரும் அமர்ந்­துள்ளார். எனவே அவர் நாடு பிள­வு­ப­டாது என்றும் பெளத்த மதத்தின் முக்­கிய இடம் தகர்க்­கப்­ப­டாது என்பதையும் அறிவார், அதனை நாட்­டிற்கு எடுத்து கூற வேண்­டிய கடமை அமைச்சர் டிலா­னுக்கு உள்­ளது.

நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் மர­ணப்­பொ­றி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு இருக்­காது என்று கூறு­வ­தற்கு பதி­லான டிலான் போன்­ற­வர்கள் கூட்டு எதி­ர­ணிக்கு தமது கருத்­துக்­களை வலு­வாக பதிவு செய்­வ­தற்­கான வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்கும் வகையில் நடந்­துக்­கொள்­கின்­றனர். விமல், கம்­மன்­பில ,ஞான­சார தேரர் போன்­ற­வர்­களை விமர்­சிக்­கின்றார்.

டிலானுக்குத்தான் டீல்

பஷில் ராஜபக்ஷவுடன் ஐ.தே.க.வுக்கு டீல் இருப்பதாக அமைச்சர் டிலான் சொல்லி வருகிறார். ஆனால், பார்க்கப்போனால் அவருக்கு தான் அங்கே டீல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. அவர் தான் டீல் டிலானோ என்று கேட்க விரும்பு கிறேன். டிலான் பொதுவாக சிறுபான்மை மக்கள் தொடர்பில் அக்கறை உள்ளவராக தன்னை காட்டிக்கொள்கிறார். அது நல்லது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வைக்கூட அவர் வலியுறுத்தியுள்ளார். அதுவும் நல்லது. ஆனால், நடைமுறையில் புதிய அரசியலமைப்பு வரும்வரைக்கும் கூட இந்த இந்த அரசை விட்டு வைக்க அவர் தயார் இல்லை. இப்போது இருக்கின்ற இந்த அரசும் போய் விட்டால், இனி எந்த அரசாலும் தீர்வு ஒன்றை கொண்டு வரமுடியுமா? அதனால்தான், நாம் இந்த அரசை காப்பாற்ற விளைகிறோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட ஐக்கிய தேசிய முன்னணிக்கே பாராளுமன்றத்தில் ஆசனம் அதிகம். ஆகவே அவர்களுக்குதான் தனியாக ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், நாம் அதை இப்போது விரும்பவில்லை என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறோம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் ஒற்றாக இருந்தால்தான் அரசியல் சித்து விளையாட்டுகள் நின்று புதிய அரசியலமைப்பு வர வாய்ப்பு ஏற்படும். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா போன்றோர் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும்.

 இன்றைய உங்கள் கட்சி தலைவரை நாம்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளோம். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நாம் இந்த புரட்சியை ஏற்படுத்திய போது நீங்கள் வேலியின் அந்த பக்கத்தில் இருந்தீர்கள். இப்போது உள்ளே வந்து திடீர் பாசத்தை ஜனாதிபதியின் மீது பொழிகிறீர்கள். இதை மறந்துவிட வேண்டாம்.   அதனால் இந்த நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரையிலாவது இந்த அரசாங்கம் ஒருமித்த நிலைப்பாட்டில் பயணிக்க வேண்டும்.அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டால் நீங்கள் விலகிச் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ தனித்து ஆட்சிய மைத்துக்கொள்ள முடியும். தற்போது நாம் தேசிய கொள்கையுடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இணைந்துள்ளோம். நாம் மக்கள் பலத்தை பெற்ற மக்களை வெற்றி பெறச் செய்தவர்கள் என்பதை டிலான் போன்றவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.