Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவை சரியான பாதையில் வழி நடத்துவது பிரதமரின் பொறுப்பு

Featured Replies

விஜ­ய­க­லாவை சரி­யான பாதையில் வழி நடத்­து­வது பிர­த­மரின் பொறுப்பு

01-6422aef68e8b8dfe7b60ffdccb2d68f0e2c7a3ee.jpg

 

சுதந்­திரக் கட்சி கூறு­கி­றது 

(ஆர்.யசி )

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புலி­களை புகழ்ந்து பேசு­வதும் பிர­பா­க­ரனை உச்ச இடத்தில் வைப்­பதும் நாட்­டுக்கும் அர­சாங்­கத்­திற்கும் பொருத்­த­மா­ன­தல்ல. பிர­பா­கரன் எத்­தனை தமி­ழர்­களை கொன்று குவித்தார் என்­பதை சிந்­தித்து பார்க்­க­வேண் டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளரும் இராஜாங்க அமைச்ச ருமான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

விஜயகலாவை சரி­யான பாதையில் வழி­ந­டத்த வேண்­டி­யது பிர­தமர் ரணிலின் பொறுப்பு எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர், இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அண்­மையில் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் தொடர்பில் வெளி­யிட்ட கருத்து தென்­னி­லங்கை அர­சியல் வாதிகள் மத்­தியில் முரண்­பட்ட கருத்­துக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் மேலும் கூறு­கையில், விடு­தலைப் புலிகள் இயக்கம் ஒரு­சில தமி­ழர்­க­ளுக்கு நல்­ல­தாக தென்­ப­டலாம். ஒரு­சில அர­சியல் வாதி­க­ளுக்கு சரி­யாக தெரி­யலாம். ஆனால், இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட ஆயுத இயக்கம். அதேபோல் சர்­வ­தேச நாடு­க­ளிலும் தடை­செய்­யப்­பட்ட ஆயுத இயக்­க­மாக உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் நாட்டின் மூவின மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சாங்­கதின் ஒரு அமைச்­ச­ராக உள்ள விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்­வைத்­துள்ள கருத்­துக்கள் அர­சாங்­க­மாக கண்­டிக்­கப்­பட வேண்­டியவையாகும்.  

விஜயகலா அவ­ரது கணவர் தி.மகேஸ்­வரன் கொல்­லப்­பட்­ட­வுடன் அவரை பிர­தி­நி­தித்­துவ படுத்தும் வகையில் அர­சி­ய­லுக்கு வந்­த­வ­ராவார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்கம் வகிக்கும் இளம் உறுப்­பி­னர்­களை சரி­யாக வழி­ந­டத்த வேண்­டிய பொறுப்பு கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கே உள்­ளது. ஆகவே, ஐக்­கிய தேசியக் கட்சி இந்த சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும்.

மேலும் பிர­பா­கரன் சிங்­கள மக்­களை கொன்றார், முக்­கிய தலை­வர்­களை கொன்­றவர் என்­பது எல்லாம் ஒரு­புறம் இருந்­தா லும் அவரால் எத்­தனை தமிழ் மக்கள் தமிழ்த் தலை­வர்கள் கொல்­லப்­பட்­டனர் என்­பதை இவர்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். இன்று முக்­கிய தமிழ்த் தலை­வர்கள் அனை­வ­ரையும் இழந்து தமிழ் மக்­களின் சரி­யான வழி­காட்டல் இல்லாமல் போனமைக்கு பிரபாகரனே காரணமாகும்.ஆகவே, அவற்றை தற்போதைய பிரதிநிதிகள் சிந்தித்து அதற்கமைய செயற்பட வேண்டும். தற்போதைய சூழலில் நாட்டை குழப்பும் கருத்துக்களை முன்வைப்பது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பொருத்தமான ஒன்றல்ல என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.