Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசப்பான வரலாறு

Featured Replies

கசப்­பான வர­லாறு

Page-04-787ad1dbfebf497f1a14842e696b3eeb30ffc207.jpg

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த எதிர்ப்­புகள் நாட்டு மக்­க­ளி­டையே வலுப்­பெற்று காணப்­ப­டு­கின்­றன. எல்லா இன மக்­க­ளி­னதும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தோடு நாட்டில் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஒரு அர­சியல் தீர்­வி­னையும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று நாட்டு மக்­களின் பர­வ­லான கருத்­துக்கள் எதி­ரொ­லித்­தன. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து வெளி வரு­கின்ற கருத்­துக்கள் இப்­போது திருப்திக­ர­மா­ன­தாக இல்லை. குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரின் கோரிக்­கைகள் உரி­ய­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்ப்பு செய்­யப்­ப­டா­தி­ருப்­ப­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்­களில் இருந்து செய்­திகள் வெளி­வந்த வண்­ண­முள்­ளன. இந்­நி­லையில் மலை­யக மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள கோரிக்­கைகள் தொடர்பில் மீட்டிப் பார்ப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாக உள்­ளது.

இலங்­கையின் கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­புகள் மிகுந்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கின்­றமை தொடர்பில் நீங்கள் நன்­க­றிந்­தி­ருப்­பீர்கள். அர­சி­ய­ல­மைப்பு என்­பது ஒரு நாட்டின் எழுச்­சிக்கும் ஐக்­கி­யத்­துக்கும் வித்­திட வேண்டும். இத­னா­லேயே சாத­க­மான விளை­வுகள் பலவும் ஏற்­படும். எனினும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு நிலை மாறி முரண்­பா­டு­க­ளுக்கும் குழப்ப சூழ்­நி­லை­க­ளுக்கும் வித்­திட்­ட­தாக பல்­வேறு முன்­வைப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. நாட்டு மக்கள் அர­சி­ய­ல­மைப்பின் மீது நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றனர். எனவே, புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்­டுக்கு தேவை என்று பலரும் வலி­யு­றுத்தி இருந்­தனர். இத­ன­டிப்­ப­டையில் நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை உரு­வாக்கும் பணியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை என்று ஏற்­றுக்­கொள்ளும் சிலர் அர­சாங்கம் அவ­சர அவ­ச­ர­மாக இப்­பு­திய அர­சி­ய­ல­மைப்­பினை திணிக்க முனை­வ­தனை ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை.

வீரத்­திற்­கான சர்­வ­தேச பெண்கள் விரு­தினை வென்­றவரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான திரு­மதி. கிஷாலி பின்ரோ ஜய­வர்­தன இது­பற்றி கூறு­கையில், நாட்டு மக்கள் கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­பு­களில் நம்­பிக்கை இழந்­துள்­ளனர். இவற்­றோடு சம­கால அர­சி­ய­ல­மைப்பில் நாம் பல தட­வைகள் திருத்­தங்­களை மேற்­கொண்­டி­ருக்­கிறோம். இத்­தி­ருத்­தங்கள் அனைத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­த­ினையே வலி­யு­றுத்­து­வ­தாக உள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து நான் திருப்தி­ய­டை­ய­வில்லை. உண்­மையில் மக்­களின் கருத்­த­றியும் நட­வ­டிக்­கைகள் இன்­னு­மின்னும் விஸ்­த­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். பொது மக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் போது­மா­ன­தாக இல்லை. தென் ஆபி­ரிக்­காவில் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதில் மக்­களின் வகி­பாகம் அதி­க­மாக இருந்­தது. கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் விவா­தங்கள் என்­பன அதி­க­மாக இடம்­பெற்­றன. எனினும் நமது நாட்டில் அத்­த­கைய ஒரு நிலை­யினைக் காண முடி­ய­வில்லை. இது குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மாக உள்­ளது என்­கிறார் கிஷாலி. உண்­மையும் இதுதான். ஒரு நாட்டை பொறுத்த வரையில் அர­சி­ய­ல­மைப்பு என்­பது ஒரு முக்­கி­யத்­துவம் மிக்க ஆவ­ண­மாகும். நாட்டு மக்­களின் தேவைகள், விருப்­பங்கள் என்­ப­ன­வற்றை அது பிர­தி­ப­லிக்க வேண்டும். இது இல்­லா­த ­வி­டத்து பாதக விளை­வு­களே மிஞ்சும். அர­சியல் நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி அவ­ச­ரத்தில் கொண்டு வரப்­படும் அர­சி­ய­ல­மைப்­புகள் எதிர்­பார்த்த சாத­க­மான விளை­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­குமா? என்­பது சந்­தே­கமே.

வர­லாறு எமக்கு பாடம் கற்றுக் கொடுத்­துள்­ளது. மக்­களின் கருத்­துக்­களை உரி­ய­வாறு பெற்­றக்­கொள்­ளாது முன்­வைக்­கப்­பட்ட கடந்­த­கால, சம­கால அர­சி­ய­ல­மைப்பின் விளை­வு­க­ளையே நாம் இப்­போது அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். இதனை மறந்து இனியும் செயற்­ப­டுதல் கூடா­தென நினைக்­கிறேன். இதற்­கி­டையில் நடை­மு­றையில் இருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் முக்­கிய விடயம் மாற்­றப்­பட்டு, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­கையில் அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அவ்­வாறு அர­சி­ய­ல­மைப்பின் தன்மை மாற்­றத்தை தீர்­மா­னிக்கும் வாய்ப்பை மக்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று பிர­தி­ய­மைச்சர் எரான் விக்­கிர­ம­ரத்ன தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கி­லான செயற்­பா­டுகள் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக மேற்­கொள்­ளப்­படும் என்ற நம்­பிக்­கையில் நாட்டு மக்கள் இருந்­தனர். எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்வு கிடைக்­காது என்ற ரீதி­யிலும் சிலர் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­வ­த­னையும் இங்கு கூறி­யாதல் வேண்டும். தமிழ்க் கட்­சிகள் சமஷ்டி மூல­மான தீர்­வினை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வலி­யு­றுத்தி இருந்­தன. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாத நிலையே இப்­போது காணப்­ப­டு­கின்­றது. ஒற்­றை­யாட்­சிக்கு உட்­பட்ட தீர்வே முன்­வைக்­கப்­பட உள்­ளது. பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை என்ற அம்­சமும் மாற்­றப்­ப­டாது. செனட் சபை போன்று இரண்­டா­வது சபை ஒன்­றினை அமைப்­ப­தற்­கான யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்­டிக்கு இட­மில்லை என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்­லவும் ஏற்­க­னவே வலி­யு­றுத்தி இருந்தார். பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து இன­வாத மற்றும் மத­வாத அர­சியல் நடத்த முனை­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் கிரி­யெல்ல மேலும் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் தொடர்­பி­லான விவா­தங்கள் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 09 ஆம் 10 ஆம் 11 ஆம் திக­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட உள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவும் தனது நிலைப்­பாட்­டினை பின்­வரு­மாறு வலி­யு­றுத்தி இருக்­கின்றார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் மாகாண சபைகள் மாகாண அர­சு­க­ளாக உரு­வாக உள்­ளன. முழு­மை­யான நிதிக் கையா­ளுகை அதி­காரம், பொலிஸ் அதி­காரம், காணி அதி­காரம் என்­பன மாகாண சபைகளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்று புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான பரிந்­து­ரை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­ற­போது முத­ல­மைச்சர் ஒரு இன­வா­தி­யாக இருப்­பா­ராயின் அவ­ருக்கு சார்­பாக இயங்கும் பொலி­ஸாரை உரு­வாக்கிக் கொள்ள முடியும்.

இது­வ­ரையில் இந்­நாட்டு நீதி­மன்ற கட்­ட­மைப்பில் இன­வாதம் இருக்­க­வில்லை. ஆனால், தற்­போது உரு­வாக்­கப்­பட உள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்தில் மூவி­னத்­தையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நீதி­ப­திகள் அவ­சியம் என்று குறிப்­பிட்­டுள்­ளது. இது நீதி கட்­ட­மைப்­புக்­குள்ளும் இன­வா­தத்­தினை திணிக்கும் செய­லாகும். தற்­போ­தைய நீதி­ய­ர­சரை நாம் தமிழர் என்று கரு­து­வ­தில்லை. அவரை நீதி­ய­ரசர் என்றே பார்க்­கின்றோம். ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது வேறு­பா­டு­க­ளுடன் கலந்த சிந்­த­னை­களை தூண்­டு­வ­தாக அமையும் என்று தன் உள்ளக் குமு­றலை விமல் வீர­வன்ச வெளிப்­ப­டுத்தி இருக்­கிறார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கூறி இருப்­பதைப் போல அர­சி­ய­ல­மைப்பு என்­கிற பிள்ளை பிறப்­ப­தற்கு முன்­ன­தா­கவே பலரும் இப்­போது பிள்ளை தொடர்­பாக ஜாதகம் கூறத்­தொ­டங்கி இருக்­கின்­றனர். ஜாத­கத்தின் பலா­ப­லன்­களை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டி இருக்­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்­மை­யினர் முன்­வைத்த கோரிக்­கைகள் பல உள்­ளீர்ப்பு செய்­யப்­ப­ட­வில்லை என்ற ஒரு கருத்தும் நில­வு­கின்­றது. இதற்­கி­டையில் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஓர­ளவு வலுச்­சேர்த்­தி­ருப்­ப­தா­கவும் இன்னும் சற்று முன்­னேறிச் சென்­றி­ருக்க முடியும் என்ற போதும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை என்று முக்­கி­யஸ்­தர்கள் சிலர் கருத்து தெரி­வித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்­நி­லையில் சிறு­பான்­மை­யினர் என்ற ரீதியில் மலை­யக மக்­களும் அர­சியல் கட்­சி­களும் தமது உரி­மையை அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு கடந்த காலத்தில் பல்­வேறு முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டனர். அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான பொது­மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் பல்­வேறு வித­மான கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. மலை­ய­கத்தில் உள்­ள­வர்­களும் மலை­ய­கத்­துக்கு வெளியே இருப்­ப­வர்­களும் மலை­ய­கத்­த­வர்­களின் நலன் கருதி கோரிக்­கைகள் பல­வற்­றையும் முன்­வைத்­தி­ருந்­தனர். இந்தக் கோரிக்­கைகள் தொடர்­பாக நாம் உற்று நோக்­குவோம்.

இலங்கை பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாடாக இருக்­கின்­றது. எனவே, இலங்­கை­யானது மதச்­சார்­பற்ற ஒரு ஜன­நா­யகக் குடி­ய­ர­சாக இருக்க வேண்டும். இலங்­கையில் நான்கு பிர­தான இனங்கள் இருப்­ப­தாக யாப்பில் வரை­ய­றுத்து கூற வேண்டும். சிங்­க­ள­வர்கள், வடக்கு கிழக்கு தமி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யக மக்கள் என்­ப­னவே அவை­யாகும். மலை­யக மக்­க­ளுக்­கென்று தனி­யாக ஒரு மாவட்டம் மேலும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதன் மூலம் மாவட்­டங்­களின் எண்­ணிக்கை 26 ஆக மாற்­ற­ம­டையும். வரை­ய­றுக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளுடன் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­துக்குப் பொறுப்பு சொல்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். அதே­வேளை, சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்­கென்று மூன்று உப ஜனா­தி­ப­திகள் இருத்­தலும் வேண்டும். மலை­யக மக்கள், வடக்கு, கிழக்கு தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என்­கிற மூன்று சாரா­ரையும் இவர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்தல் வேண்டும்.

செனட் சபை, பிர­தி­நி­திகள் சபை என்று இரண்டு சபைகள் இடம்­பெ­றுதல் வேண்டும். மத்­திய, ஊவா, சப்­ர­க­முவ போன்ற பகு­தி­களில் இந்­திய வம்­சா­வளி மக்கள் அதி­க­மாக வாழு­கின்­றனர். எனவே, இந்த பகு­தி­களில் எல்லை மீள்­நிர்­ணயம் செய்து தனி­யான ஒரு அதி­கார அலகு ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். நிலத்­தொ­டர்­பற்ற முறையில் இதனை ஏற்­ப­டுத்த முடியும். தேர்தல் முறை­மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் மலை­யக மக்­களின் ஜனத்­தொகை விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப அவர்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் எண்­ணிக்­கையும் மலை­யக மக்­களின் ஜனத்­தொகை விகி­தா­சா­ரத்­துக்­கேற்ப ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். சகல ஆணைக்­கு­ழுக்­க­ளிலும் மலை­யக மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் இடம்­பெ­றுதல் வேண்டும். சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை பேணும் விதத்தில் செனட் சபையில் ஐம்­பது சத­வீதம் சிறு­பான்மை இனத்தின் பிர­தி­நி­தி­க­ளாக இருத்தல் அவ­சி­ய­மாகும். சிறு­பான்மை ஆணைக்­குழு ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். மொழி உரி­மையை அடிப்­படை உரி­மை­யாக குறிப்­பிட்டு அதனை மீறு­ப­வர்­க­ளுக்கு தகுந்த நட­வ­டிக்­கை­யினை எடுக்க வேண்டும்.

மலை­ய­கத்தில் இருந்து பதி­னைந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இடம்­பெறும் வண்ணம் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இலங்கை பாரா­ளு­மன்றம் இரண்டு சபை­களை கொண்­ட­தாக இருக்­கின்ற நிலையில் இரண்­டா­வது சபையில் அந்­தந்த சமூ­கங்கள் சம்­பந்­த­மான விட­யங்கள் வரும்­பொ­ழுது அந்­தந்த சமூ­கத்தின் அங்­கத்­தி­னர்­களின் அனு­ம­தி­யு­ட­னேயே சட்­டங்கள் இயற்­றப்­படல் வேண்டும். மலை­யக மக்­களின் நலன்­க­ருதி விசேட திட்­டங்கள் பலவும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் தனித் தேசிய இன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். தோட்­டங்கள் இன்று பல­வ­ழி­க­ளிலும் பின்­தங்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன. இதனை கருத்தில் கொண்டு கூட்­டு­ற­வுத்­துறை தோட்­டங்­களை நிர்­வ­கிக்கும் வண்­ண­மாக வழி­வ­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். நிலம், முதல், முயற்சி, உழைப்பு என்ற இந்த நான்கு விட­யங்­களும் மக்­க­ளுக்கு சொந்­த­மாக்­கப்­ப­டுதல் வேண்டும். தேயிலை உற்­பத்தி மற்றும் தேயிலை வர்த்­தகம் என்­ப­னவும் இம்­மக்­க­ளா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். கூட்டு ஒப்­பந்தம் என்­கிற போர்­வையில் தொழி­லா­ளர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மறு­பக்­கத்தில் கூட்டு ஒப்­பந்தம் இல்­லா­விட்­டாலும் பிரச்­சி­னைகள் மேலெ­ழும்பக் கூடிய சாத்­தி­ய­முள்­ளது. எனவே இது குறித்தும் உரிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் மலை­யக மக்கள் பின்­தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தனை காண்­கிறோம். இன­வா­திகள் இம்­மக்­களை ஆட்­சி­ய­தி­காரம் உள்­ளிட்ட சகல துறை­க­ளிலும் இறக்கம் காணச் செய்­வ­தனை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளனர். எனவே, ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் மலை­யக மக்­க­ளுக்கு உரிய பங்­கினை வகிக்க இட­ம­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும். ஆட்­சி­ய­தி­காரம் பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் மட்­டுமே இருக்க வேண்­டி­ய­தில்லை. ஜன­நா­யக ரீதியில் அது மலை­யக மக்­க­ளுக்கும் பகி­ரப்­ப­டுதல் வேண்டும். மாகாண சபை­க­ளுக்கு உரிய பல அதி­கா­ரங்­க­ளையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மாகாண சபைகள் அதி­க­மான நன்­மை­யினை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு உரு­வாகும். தன்­னைத்­தானே ஆட்சி செய்­கின்ற அதி­காரம் மாகாண சபை­க­ளுக்கு அத்­தி­ய­ாவ­சி­ய­மா­ன­தாகும். கீழ்­மட்டக் குடி­ய­ரசு என்று சொல்­லப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்சி விட­யங்கள் தொடர்­பிலும் கூடிய கவனம் செலுத்­தப்­ப­டுதல் வேண்டும். கிராம இராஜ்­ஜி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் சேவை விஸ்­த­ரிக்­கப்­படல் வேண்டும். மலை­யக மக்­களின் பௌதிக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சியல் அமைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். எல்லா மதங்­க­ளுக்கும் சம வாய்ப்பு அளிக்­கப்­பட வேண்டும். தொழில் வாய்ப்பு நிலை­மை­களில் மலை­யக இளைஞர், யுவ­திகள் பின்­தள்­ளப்­பட்ட நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றனர். இந்­நி­லையில் மலை­ய­கத்­த­வர்­களின் விகி­தா­சா­ரத்­துக்­கேற்ப சலு­கைகள் வழங்­கப்­படல் வேண்டும். கல்வி மற்றும் சுகா­தார மேம்­பாடு கரு­திய விசேட முன்­வைப்­பு­களும் மலை­யக மக்­களை பொறுத்­த­மட்டில் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது. மலை­ய­கத்தின் கல்­வித்­துறை இன்னும் மேம்­பா­ட­டை­வதால் பல நன்­மை­களும் உரு­வாகும்.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்­பு­களில் மலை­யக மக்­களின் எழுச்சி கருதி உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இம்­மக்கள் தொடர்­பாக உறு­தி­யான சில கட்­ட­மைப்­பு­களை மேற்­கொள்ளல் வேண்டும். வீட்டு வச­தி­க­ளிலும் காணி தொடர்­பான விட­யங்­க­ளிலும் கவனம் செலுத்த வேண்டும். லயத்துச் சிறை­க­ளுக்குள் நீண்­ட­கா­ல­மாக எம்­ம­வர்கள் முடங்கிக் கிடக்­கின்ற நிலையில் தனி­வீட்டுக் கலா­சா­ரத்தை துரி­த­மாக மேற்­கொள்ளும் வண்ணம் நட­வ­டிக்­கைகள் உள்­ள­டக்­கப்­படுதல் வேண்டும்.

அரச அதிபர் பிரிவு, கிராம சேவகர் பிரிவு என்­பன மலை­ய­கத்­த­வர்கள் வாழும் பகு­தி­களில் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். சிறு­பான்மை இனத்­த­வர்­களின் உரிமை தொடர்­பான சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பில் இருந்து 29ஆம் சரத்து அதே முறையில் மேலும் வலு­வு­டை­ய­தாக ஆக்­கப்­ப­டுதல் வேண்டும். பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­ப­டு­பவர் பெரும்­பான்மை இனத்தை சார்ந்த ஒரு­வ­ரா­கவே இருப்பார். இந்­நி­லையில் சிறு­பான்­மை­யினரின் நலன் கருதி உப பிர­தமர் பத­வி­கள உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும்.

சகல அரச அலு­வ­ல­கங்­க­ளிலும் அர­ச­க­ரும மொழி­க­ளுக்­கான அதி­காரி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும். இவர் மூன்று மொழி­க­ளையும் அறிந்­த­வ­ராக இருப்­ப­தோடு மக்­களின் மொழிக்­கேற்ப அவர்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும். அர­சி­யலில் பெண்­களின் பிரதி­நி­தித்­துவம் ஐம்­பது சத­வீ­த­மாக காணப்­ப­டுதல் வேண்டும். மலை­யகப் பெண்­களின் வரு­மா­னத்தை உயர்த்­தக்­கூ­டி­ய­வாறு திட்­டங்கள் பலவும் முன்­வைக்­கப்­படல் வேண்டும்.  

பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வரு­டாந்தம் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற மலை­யக மாண­வர்­களின் தொகை மிகவும் குறை­வாக இருக்­கின்­றது. இந்­நிலை தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. எனவே, பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியில் மலை­யக மாண­வர்­க­ளுக்கு விசேட சலு­கைகள் வழங்­கப்­பட வேண்டும். பதிவுப் பிரஜை என்ற நிலையில் மலை­யக சமூ­கத்தில் ஒரு­சாரார் இன்னும் இருந்து வரு­கின்­றனர். இந்த நிலை முற்­றாக நீக்­கப்­ப­டுதல் வேண்டும். சம­மான பிர­ஜை­க­ளாக அனை­வரும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­தலும் வேண்டும்.பரம்­பரை ரீதி­யான பிர­ஜை­க­ளாக அனை­வரும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். சகல துறை­க­ளிலும் மலை­யக மக்­க­ளுக்கு சம­மான உரிமை வழங்­கப்­ப­டு­வது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். அர­சாங்­கத்­துறை மற்றும் பொதுத்­துறை தொழில் வாய்ப்­பு­களில் பார­பட்சம் காட்­டப்­ப­டாது மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கும் இவை உறு­திப்படுத்தப்­ப­டுதல் வேண்டும்.

பெருந்­தோட்ட குடி­யி­ருப்­புகள் உள்­ளூ­ராட்சி அமைப்பில் உள்­வாங்­கப்­ப­டாத நிலைமை இருந்து வரு­கின்­றது. இதனால் எம்­ம­வர்கள் பல அரச உத­வி­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடி­வ­தில்லை. இது ஒரு வருந்­தத்­தக்க பார­பட்­ச­மான நிலை­யாக இருக்­கின்­றது. எனவே, உள்­ளூ­ராட்சி சபையின் முழு­மை­யான அதி­கா­ரத்தின் கீழ் பெருந்­தோட்ட குடி­யி­ருப்­புகள் அனைத்தும் கொண்­டு­வ­ரப்­ப­டுதல் வேண்டும். பொது நிர்­வாக பொறி­மு­றையின் கீழ் இது அமைதல் வேண்டும். அதி­காரப் பகிர்வு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கையில் மலை­யக மக்­களின் செறி­வான பகு­தி­களை ஒன்­றி­ணைத்து ஆளு­மை­மிக்க அலகு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதன் ஊடாக அபி­வி­ருத்தி, சமூக அபி­லா­ஷைகள் என்­ப­வற்றை நிறை­வேற்றிக் கொள்ள வழி­ச­மைத்துக் கொடுத்­தலும் வேண்டும். இது­போன்ற பல கோரிக்­கை­க­ளையும் மலை­யக மக்­களும் ஏனை­யோரும் வலி­யு­றுத்தி இருந்­தனர்.

இதற்­கி­டையில் வட­மா­காண சபை­யா­னது அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரைவு திட்­ட­மொன்­றினை ஏற்­க­னவே தயா­ரித்­தி­ருந்­தது. இத்­திட்­டத்தில் வட, கிழக்கில் மாநில பாரா­ளு­மன்றம், அரச கரு­ம­மொழி, இன­மொ­ழியில் தேசி­ய­கீதம் உள்­ளிட்ட பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்­க­ளையும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. இவற்­றோடு மலை­யக மக்கள் தொடர்­பிலும் கொள்கை வரைவு திட்­டத்தில் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது. சிறு­பான்மை சகோ­த­ரர்கள் என்ற ரீதியில் இது இடம்­பெற்­றி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் மலை­யக தன்­னாட்சி பிராந்­தியம் குறித்து கொள்கை வரைவு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. இந்த நிலையில் மலை­யக தன்­னாட்சி பிராந்­தி­யத்­திற்கு சார்­பா­கவும், எதி­ரா­கவும் கருத்­துக்கள் தற்­போது முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

சிறு­பான்­மை­யினர் என்­கிற ரீதியில் வட­ப­குதி தலை­வர்கள் மலை­யக மக்­களை கருத்தில் கொள்­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும். மலை­யக தமி­ழர்­களின் உரி­மை­தொ­டர்­பாக இவர்கள் நீண்­ட­கா­ல­மா­கவே சிந்­தித்து வந்­துள்­ளனர். வட­மா­கா­ண­சபை காலத்­திற்­கேற்ற ஒரு கருத்­தினை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. நிறு­வன ரீதி­யாக இக்­க­ருத்து முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பெரும்­பான்மை ஆட்­சி­யா­ளர்­க­ளினால் தமிழ் மக்­களின் உரி­மைகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­மி­டத்து அர­சியல் கொந்­த­ளிப்­புகள் மற்றும் அமை­தி­யற்ற சூழ்­நி­லைகள் என்­பன மேலோங்கும். இந்த நிலையில் மலை­யக மக்­க­ளுக்­கென்று தன்­னாட்சி பிராந்­தியம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து சாதக விளை­வுகள் இன்­னு­மின்னும் அதி­க­மாக இருக்கும். சுதந்­தி­ரத்­திற்­காக ஒன்று சேர்ந்து இலங்­கை­யர்­க­ளாக குரல் கொடுத்­த­வர்கள் சுதந்­தி­ரத்தின் பின்னர் பிரிந்து நின்று செயற்­ப­டு­வது வருந்­தத்­தக்­க­தாகும். மலை­யக மக்கள் இன­வா­தி­களின் நெருக்­கீ­டு­க­ளுக்குத் தொடர்ச்­சி­யாக முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். இம்­மக்கள் உள்ள சுதந்­தி­ரத்­தையும் தற்­போது இழந்து ஓட்­டாண்­டி­யாக உள்­ளனர். இந்த நிலையில் மலை­யக மக்­களின் இயல்பு நிலையை நன்­கு­ணர்ந்த நிலையில் வட­மா­காண சபை தன்­னாட்சி பிராந்­தி­யத்தை வலி­யு­றுத்தி இருப்­பது சாலச் சிறந்­த­தாகும் என்று தன்­னாட்சி பிராந்­திய சபைக்கு ஆத­ர­வா­னவர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் வடக்கில் சுயாட்­சியை வாங்­கிக்­கொண்டு, பின்னர் மலை­யக தன்­னாட்சி பிராந்­தியம் குறித்து இவர்கள் பேசி­யி­ருக்க வேண்டும். வடக்கு மாகாண சபை மலை­ய­கத்­துக்கு குரல் கொடுத்­துள்ள நிலையில் தம்மைப் பற்­றியும் சற்று சிந்­திக்க வேண்­டு­மென்றும் இன்னும் சிலர் தமது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதற்­கி­டையில் மலை­யக அமைப்­புக்­களும், புத்­தி­ஜீ­விகள் பலரும் மலை­ய­கத்­துக்கு தனி­யான அதி­கார அலகு கோரிக்­கையை முன்வைத்திருந்தனர். இது முக்கிய தேவையாகவும் கருதப்பட்டது எனினும், மலையக அரசியல்வாதியொருவர் தனியான அதிகார அலகு தேவையில்லை என்ற பொருள்படக் கூறியிருந்தமை தொடர்பிலும் சர்ச்சைகள் மேலெழுந்தன. எனினும் இக்கருத்து சம்பந்தப்பட்ட கருத்தாகும் என்றும் மலையகத்தின் கருத்தோ அல்லது அவர் சார்ந்த அமைப்பின் கருத்தோ இல்லை என்று பின்னர் சமாதானமும் சொல்லப்பட்டமை உங்களுக்கு நினைவிருக்கக் கூடும்.

மலையக மக்களும், அமைப்புக்களும் ஏனையோரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் அரசியலமைப்பு மாற்றம் குறித்த பொதுமக்கள் கருத்தறியும் குழு அரசாங்கத்திடம் இது குறித்து பரிந்துரைகளை செய்திருந்தது. தன்னாதிக்க அரசியலதிகார அலகு, காணியுரிமை, வீட்டுரிமை, விசேட வசதிகள், பாரபட்சமின்மை தொடர்பான ஆணைக்குழுவின் உருவாக்கம், பகிரங்க சேவை மனக்குறை ஆணைக்குழு என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் மலையக மக்களின் நலன் கருதி அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது. மலையக மக்களின் பரிந்துரைகளை அரசாங்கம் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளுமென்று அரசியலமைப்பின் மாற்றம் குறித்து மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ். விஜயசந்திரனிடம் வினவியிருந்தேன். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய அரசில் மலையகத்தவர்கள் முக்கிய இடம் பிடித்துள்ளனர். பரிந்துரையினூடாக மலையக மக்களின் பிரச்சினைகளை ஒரு தேசிய பிரச்சினையாக உருவாக்கி இருக்கின்றோம். பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். எனவே, அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் விலகிச் செல்ல முடியாது. மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என்று விஜயசந்திரன் என்னிடம் குறிப்பிட்டுக் கூறினார்.

மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை­யினத்தவர்களின் வரலாறு இலங்கையைப் பொறுத்த­வரையில் கசப்பானததாகவே இருந்து வந்துள்ளது. இந்த கசப்பான ஒரு வரலாற்றை இனியும் நாம் முன்னெடுத்துச் செல்லக்கூடாது. சிறுபான்மை மக்களின் கருத்துக்கள் உரியவாறு கிரகிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பில் மலையக மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உரியவாறு உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மிகவும் ஆழமாகவே தனது கட்டுரையொன்றில் வலியுறுத்தி இருக்கின்றார். எவ்வாறெனினும் புதிய அரசியலமைப்பானது எல்லா இன மக்களினதும் உரிமைகளுக்கும் கைகொடுப்பதாக இருக்க வேண்டும். மாறாக சிறுபான்மை மக்களை கை கழுவிவிடுவதாக இருக்கக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.