Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புாிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள்

Featured Replies

இலங்கையில் புாிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள்

 

கடந்த 7 வரு­டங்­க­ளுக்குள் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைப் பேணி வளர்ப்­பதை நோக்­காகக் கொண்டு அர­சியல் ஒழுங்கை அமைப்­பியல் ரீதி­யாக மறு­சீ­ர­மைப்புச் செய்­வ­தற்கு இலங்­கைக்கு இரு­வாய்ப்­புகள் கொடுக்­கப்­பட்­டன. 2009 மே மாதம் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­த­போது முதல் வாய்ப்பும். 2015 ஆம் ஆண்டில் புதிய கூட்­ட­ர­சாங்கம் பத­விக்கு வந்­த­போது இரண்­டா­வது வாய்பும் கிடைத்­தன. போரின் முடிவு மிகவும் முக்­கி­ய­மான ஒரு திருப்­பு­மு­னை­யாகும். ஏனென்றால் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் வீழ்ச்­சி­யுடன் அதி­காரப் பர­வ­லாக்­க­லுக்கும் இனங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­துக்கும் இருந்த முக்­கி­ய­மான தடை­களில் ஒன்று இல்­லாமற் செய்­யப்­பட்­டது. 

விடு­தலைப் புலிகள் இயக்கம் அதன் இரா­ணுவ வல்­லமை தொடர்பில் அதீத நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்­க­ளுக்­கான தனி­நாடு என்ற இலக்கை வன்­மு­றையின் மூல­மாக சாதிக்க முடி­யு­மென்று அந்த இயக்கம் நம்­பி­யது. அதனால் பல சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கு­பற்­றிய போதிலும் கூட விடு­த­லைப்­பு­லிகள் அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்­கான எந்­த­வொரு திட்­டத்­தை­யுமே எதிர்த்­தார்கள். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பிரச்­சி­னையின் மற்­றைய அரைப்­ப­குதி தொடர்ந்து நிலைத்து நின்­றது. ராஜபக் ஷ நிர்­வாகம் இன­நல்­லி­ணக்­கத்தை விடவும் இனக்­கு­ழுமப் பெரும்­பான்­மை­வா­தத்தை வலுப்­ப­டுத்­து­வ­தி­லேயே கூடு­த­லான அள­வுக்கு கவ­னத்தைச் செலுத்­தி­யது. எனவே முத­லா­வது வாய்ப்பு பாழாக்­கப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டில் ராஜபக் ஷ நிர்­வாகம் உறு­தி­யான முறையில் தோற்­க­டிக்­கப்­பட்­டது. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான கூட்­டணி நல்­லாட்சி மற்றும் நல்­லி­ணக்கம் என்ற சுலோ­கங்­களின் அடிப்­ப­டையில் தேர்­தல்­களில் வெற்­றி­பெற்­றது. இந்தக் கூட்­ட­ணிக்குப் பிர­தான தமி­ழ்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அந்­த­ரங்­க­மான ஆத­ரவு இருந்­தது. அதனால் புதிய அர­சாங்கம் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­ப­தையும் ஓரங்­க­மாகக் கொண்ட அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த செயன்­மு­றை­களை முன்­னெ­டுத்­தது. இலங்கை பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­ட­துடன் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் மக்­களின் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. அக்­குழு அதன் அறிக்­கையை அர­சாங்­கத்­திற்கு ஏற்­க­னவே கைய­ளித்து விட்­டது. எனவே சமூ­கங்­களை மீள ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் கிடைத்­தி­ருக்கும் இரண்­டா­வது வாய்ப்பை அனு­கூ­ல­மான முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான முயற்­சி­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன்­மு­றை­க­ளுக்கு உதவும் முக­மாக கலா­நிதி லக்­சிறி பெர்­னாண்­டோவின் “இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கலின் விவாதப் பொருள்கள் இன நல்­லி­ணக்­கத்தை நோக்கி” (Issue of new constitution Making in Sri lanka Towards Ethnic Reconciliation இலங்கை விநி­யோ­கஸ்­தர்கள் லேக்­ஹவுஸ் புத்­தக நிலையம்) என்ற புதிய நூல் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

பொருட்­சு­ருக்கம்

இந்நூல் மிகவும் பொருத்­த­மான தரு­ண­மொன்றில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது என்று இரு கார­ணங்­க­ளுக்­காகக் கூற­மு­டியும். இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் என்­பது இயல்­பா­கவே சிக்­க­லா­னதும் எளிதில் கையா­ள­மு­டி­யா­த­து­மான ஒரு பணி­யாகும் என்­பது முதல் காரணம். இப்­ப­ணிக்கு பரந்­து­பட்ட பங்­கா­ளர்­களின் ஆத­ரவு தேவை. இலங்­கையில் புத்­தி­ஜீ­விகள் மிகுந்த ஊக்­கத்­துடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­முறை தொடர்பில் மிகவும் துடிப்­பான விவா­தங்­களும் ஆலோ­சனை கலப்­பு­களும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த விவா­தங்­க­ளுக்கு லக்­சிறி பெர்­னாண்­டோவின் சிந்­த­னைகள் நிச்­ச­ய­மாக ஒரு ஊக்­கி­யாகச் செயற்­படும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் மற்றும் விட்­டுக்­கொ­டுப்பின் அடிப்­ப­டை­யி­லான கொள்­கை­களை ஆத­ரிக்­கின்­ற­வர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது அவற்றை எதிர்ப்­ப­வர்­களின் குரல் மிகவும் ஓங்கி ஒலிக்­கின்­றது என்­பது இரண்­டா­வது கார­ண­மாகும். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­தக்­கூ­டிய புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்று பெர்­னாண்டோ உறு­தி­யாக வாதி­டு­கின்றார். இது விட­யத்தில் கூடு­த­லான மித­வாதக் குரல்கள் இலங்­கைக்குத் தேவை.

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு ஆட்சி முறையின் பரி­ணாம வளர்ச்சி பின்­கா­ல­னித்­துவ அர­சியல் மற்றும் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­மு­றை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்கள் மீதான செழு­மை­யா­ன­தொரு தகவல் வள­மு­மா­கவும் பகுப்­பாய்­வா­கவும் பெர்­னாண்­டோவின் நூல் அமைந்­தி­ருக்­கி­றது. இது மூன்று பரந்த பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முத­லா­வது பகுதி அர­சி­ய­ல­மைப்பு விவா­தப்­பொ­ருள்கள் தொடர்­பான பொது­வான அக்­க­றை­களைப் பற்­றி­யது. இரண்­டா­வது பகுதி பிர­தா­ன­மாக மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழு­வுக்கு பெர்­னாண்­டோ­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு யோச­னை­களை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கி­றது. மூன்­றா­வது பகுதி தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­மு­றை­களை ஆராய்­கி­றது. அர­சியல் அமைப்­புக்­கான 13 ஆவது திருத்தம், புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்­கான நியா­யப்­பாடு, மனித உரி­மைகள் நில­வரம், ஜன­நா­யகம், உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள், தேர்தல் முறைச் சீர்­தி­ருத்தம் மற்றும் இன நல்­லி­ணக்கம் போன்ற முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களை இந்த நூல் பகுப்­பாய்வு ரீதி­யாக கையா­ளு­கின்­றது. அதி­காரப் பர­வ­லாக்கல் மற்றும் நல்­லி­ணக்கம் என்ற இரு தொனிப்­பொ­ருள்­களும் நூலின் ஊடாக இழை­யோ­டி­யி­ருக்­கி­றது.

அதி­காரப் பர­வ­லாக்கல்

அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய விளக்­கத்தின் அடிப்­ப­டையில் நோக்­கும்­போது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்புச் சீர்த்­தி­ருத்தச் செயன்­மு­றைகள் மூன்று பிரத்­தி­யே­க­மான துறை­களை இலக்­காகக் கொண்­டி­ருக்­கி­றது் (1) அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல். (02) தேர்­தல்­முறைச் சீர்­தி­ருத்தம். (03) நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை மறு­சீ­ர­மைத்தல். அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­மு­றையின் அடிப்­படை அம்­ச­மா­கவும் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தைக் கரு­த­மு­டியும். அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தைப் பற்றி பொருத்­த­மான இரு கருத்­துக்­களை பெர்­னாண்டோ முன்­வைக்­கிறார். (01) இன நல்­லி­ணக்­கத்தைப் பொறுத்­த­வரை அதி­காரப் பகிர்வு என்­பது ஏனைய கார­ணி­க­ளுக்கு மத்­தியில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. (02) அதி­காரப் பகிர்­வுக்­கான (Power Sharing ) மாற்­றீ­டாக கூட்­டாகப் பொறுப்­பு­களைக் (Shared Responsibility) கையா­ளு­கின்ற செயன்­முறை அமைய முடியும்.

முத­லா­வது கருத்தைப் பொறுத்­த­வரை உண்மை ஆணைக்­கு­ழு­வொன்று அல்­லது உண்­மை­களைக் குழு பாணி­யி­லான பொறி­மு­றை­யொன்று நல்­லி­ணக்­கத்­துக்­கான பிர­தான கரு­வி­யாக இருக்க வேண்டும் என்று நம்­பு­கின்ற சிந்­தனை முறை­யொன்று (School of thought) இருந்து வரு­கி­றது. இந்தச் சிந்­தனை முறையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­ன்ற­வர்கள் உண்மை நல்­லி­ணக்­கத்­துக்கு வழி­வ­குக்கும் என்று நம்­பு­கின்­றார்கள். அவர்கள் விளை­வு­களைப் பற்றி தெரிந்தோ தெரி­யா­மலோ அதி­காரப் பர­வ­லாக்­கலின் முக்­கி­யத்­து­வத்தை குறைத்து மதிப்­பி­டு­கி­றார்கள். தமிழ் மக்­களின் அர­சியல் மனக்­கு­றை­களை அர­சி­ய­ல­மைப்பு வழி­மு­றை­களின் ஊடாக தீர்த்து வைக்­காமல் இலங்­கையில் இன நல்­லி­ணக்­கத்தைச் சாதிக்க முடி­யாது என்ற கருத்தை நான் இடை­ய­றாது வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறேன். அர­சி­ய­ல­மைப்பு வழி­மு­றை­களின் ஊடாக தங்­க­ளது அர­சியல் பிரச்­சி­னைகள் தீரக்­கப்­ப­ட­வில்­லை­யானால் தமி­ழர்கள் தொடர்ந்து போரா­டவே செய்­வார்கள் என்­பது இப்­போது மிக­மிகத் தெளி­வாகத் தெரி­கி­றது. எனவே அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கான திட்­ட­மொன்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும். உண்­மை­களைக் குழு பாணி­யி­லான பொறி­மு­றை­யொன்று இன நல்­லி­ணக்­கத்­துக்­கான துணை நிறை­வான (Supplementing) தந்­தி­ரோ­பா­ய­மாக உத­வக்­கூடும்.

கூட்டுப் பொறுப்பு

ஆனால் பொறுப்­புக்­களைப் பகிர்ந்­து­கொள்­வது அல்­லது கூட்­டாக பொறுப்­புக்­களைக் கையா­ளு­வது என்­பது பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தொரு யோச­னை­யா­கவே அமை­யலாம். லக்­சிறி பெர்­னாண்டோ மிகவும் பொருத்­த­மான முறையில் கூறி­யி­ருப்­பதைப் போன்று ஐக்­கிய அர­சாங்­கங்கள் கூட்­ட­ர­சாங்­கங்கள் அல்­லது ஐக்­கிய முன்­ன­ணிகள் கூட்டுப் பொறுப்பை உரு­வ­கப்­ப­டுத்­து­ப­வை­யாக இருக்­க­மு­டியும். அவ்­வா­றானால் அது அடிப்­ப­டையில் ஒரு அர­சியல் ஏற்­பா­டே­யாகும். அர­சியல் ஏற்­பா­டுகள் தேர்தல் யதார்த்­தங்­களைச் சார்ந்­தி­ருப்­ப­வை­யாகும். இலங்­கையைப் பொறுத்­த­வரை ஒரு தீர்வு என்ற வகையில் கூட்டுப் பொறுப்புக் கோட்­பாடு பல அடிப்­படைப் பிரச்­சி­னை­களைக் கொண்­ட­தாக இருக்­கி­றது. முத­லா­வ­தாக அது தமிழ் மக்­க­ளுக்கு எதையும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வ­தாக இல்லை. ஏனென்றால் அது அமைப்­பியல் ரீதி­யான (Structural Arrangement) ஏற்­பாடு அல்ல. தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண்­ப­தற்கு தமி­ழர்கள் அமைப்­பியல் ரீதி­யான ஏற்­பாட்­டையே கோரி வந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதே எனது புரி­த­லாகும். அதனால் கூட்டுப் பொறுப்பை தமி­ழர்கள் சூழ்ச்­சித்­த­ன­மான ஒன்று என்று பெரும்­பாலும் நிரா­க­ரித்­து­வி­டு­வார்கள்.

இரண்­டா­வது பெர்­னாண்டோ வலி­யு­றுத்திக் கூறு­வதைப் போன்று கூட்­டுப்­பொ­றுப்பு என்­பதை அர­சி­ய­ல­மைப்­பினால் விளக்க முடி­யாது அல்­லது அர­சி­ய­ல­மைப்பு அதை விளக்­கக்­கூ­டாது. எனவே இந்த யோசனை அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பி­லான வாதப்­பி­ர­தி­வா­தங்­களில் பெரு­ம­ள­வுக்குப் பொருத்­த­மா­ன­தல்ல. மூன்­றா­வது அமைப்­பியல் ரீதி­யி­லான ஏற்­பாடு ஒன்று இல்­லாத பட்­சத்தில் கூட்­டுப்­பொ­றுப்பு ஏற்­பா­டு­களில் இருந்து தமிழ் அர­சியல் கட்­சிகள் அனு­கூ­லத்தைப் பெறு­வது சாத்­தி­ய­மில்­லாமல் போகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இக்­கட்டு நிலை இதற்குச் சிறந்த உதா­ர­ண­மாகும். 2015 ஆம் ஆண்டில் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருக்க முடியும். ஏனென்றால் தேர்தல் யதார்த்த நிலை கூட்­ட­மைப்­பையும் ஒரு பங்­கா­ளி­யாகக் கொண்டு தேசிய அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­ப­டு­வ­தற்குச் சாத­க­மா­ன­தாக இருந்­தது. உண்­மையில் அர­சாங்­கத்தில் இணை­வதை கூட்­ட­மைப்பின் சில தலை­வர்கள் விரும்­பி­னார்கள் என்­பதே எனது அபிப்­பி­ராயம். ஆனால் அது எதி­ரணி வரி­சையில் இருக்­கவே தீர்­மா­னித்­தது.பாரா­ளு­மன்றில் இப்­போது அது பிர­தான எதிர்க்­கட்­சி­யாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் தீர்­வொன்று இல்­லாத நிலையில் அர­சாங்­கத்தில் ஒரு அங்­க­மாக மாறு­வ­தென்­பது கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை, அடுத்த பொதுத் தேர்­தலில் பெரும் அனர்த்­த­மா­கவே முடியும்.

ஆனால், லக்­சிறி பெர்­னாண்டோ அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தை எதிர்க்­க­வில்லை என்­பது முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய அம்­ச­மாகும். அதி­காரப் பர­வ­லாக்­கத்தை அவர் ஆத­ரிக்­கின்ற அதே­வேளை அந்தப் பர­வ­லாக்கம் சமஷ்டி முறைக்கு நெருக்­க­மா­ன­தாக வர­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­து­கிறார். அந்த விவ­கா­ரத்தில் இலங்கை பின்­னோக்­கியே செல்ல வேண்டும் என்றும் பெர்­னாண்டோ குறிப்­பி­டு­கிறார். இலங்கை அர­சி­யலின் பல முற்­போக்கு அவ­தா­னிகள் இந்த மதிப்­பீட்டை ஆத­ரிப்­பார்கள்.

சமஷ்டித் தீர்­வொன்­றுக்­கான தமி­ழர்­களின் கோரிக்கை ஒற்­றை­யாட்சிக் கட்­ட­மைப்­புக்குள் ஒரு அர­சாங்கம் தங்­க­ளுக்குத் தரு­கின்­ற­வற்றை இன்­னொரு அர­சாங்கம் திரும்பப் பறித்­து­வி­டு­மென்ற அவர்­களின் பீதி­யு­டன்தான் கூடு­த­லான அள­வுக்கு சம்­பந்­தப்­பட்­டதே தவிர, அதி­கா­ரப்­ப­கிர்வின் மட்­டத்­துடன் பெரு­ம­ள­வுக்கு சம்­பந்­தப்­பட்­ட­தல்ல என்­பது கொழும்பில் உள்ள கொள்கை வகுப்­பா­ளர்கள் விளங்­கிக்­கொள்ள வேண்­டிய அடிப்­படைக் கார­ணி­களில் ஒன்­றாகும். ஒன்­றை­யாட்சி அர­சொன்றில் பாரா­ளு­மன்­றமே அதி முதன்­மை­யா­னது என்­பதால், பர­வ­லாக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை சட்டம் ஒன்றின் மூல­மாக திருப்­பி­யெ­டுத்­து­விட முடியும். சமஷ்டி முறை­யொன்­றிலே கோட்­பாட்டு அளவில் மத்­திய அர­சாங்­கமும் சமஷ்டி அல­கு­களும் அரசின் அழிக்க முடி­யாத பகு­தி­க­ளாகும். அதனால், ஒன்றை மற்­றது இல்­லாமல் செய்ய முடி­யாது. இத்­த­கைய ஏற்­பாடு தமிழ் அல­கிற்கும் பர­வ­லாக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளுக்கும் நிரந்­தரத் தன்­மையை உறு­தி­செய்யும் என்று தமி­ழர்கள் நம்­பு­கி­றார்கள். எனவே, சமஷ்டி கட்­ட­மைப்பு அல்­லது அரைச் சமஷ்டிக் கட்­ட­மைப்பு தமி­ழர்­களின் அச்­சங்­களைப் போக்­கக்­கூ­டிய ஆற்­றலைக் கொண்­டி­ருக்­கி­றது எனலாம்.

13 ஆவது திருத்தம்

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பான எந்­த­வொரு விவா­த­முமே தவிர்க்க முடி­யாத வகையில் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்­தையும் மாகாண சபை முறை­யையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்­டி­ய­தா­கி­றது. இதற்கு லக்­சிறி பெர்­னாண்­டோவின் ஆய்வும் விதி­வி­லக்­கா­ன­தல்ல. சுதந்­தி­ர­ம­டைந்­த­தற்குப் பிறகு இலங்­கையில் ஜன­நா­யக முறைமை சாதித்­தி­ருக்­கக்­கூ­டிய மிகவும் முற்­போக்­கான கட்­ட­மைப்பு ரீதி­யான மாற்றம் என்றால் அது மாகாண சபை முறைதான் என்று பெர்­னாண்டோ கூறு­கிறார். மாகாண சபை முறை மிகவும் முற்­போக்­கான சாதனை என்ற கருத்து இடை­யு­றவு கொண்ட இரு அம்­சங்­களை உடை­ய­தாகும்.

முத­லா­வது, இதுநாள் வரையில் சாதிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய மிகவும் முற்­போக்­கான கட்­ட­மைப்பு மாற்­றத்­துக்கு இலங்­கை­யர்கள் உரி­மை­கோர முடி­யாது. லக்­சிறி பெர்­னாண்டோ சரி­யாகக் கூறு­வதைப் போன்று, புது­டில்­லி­யி­ட­மி­ருந்து வந்த தீவி­ர­மான நெருக்­கு­தலே மாகாண சபை­களை யதார்த்­த­மாக்­கி­யது. 1987 ஆம் ஆண்டில் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது தமிழ் அர­சியல் சமு­தா­யத்தில் ஒரு பரந்­த­ளவு பிரி­வினர் அது­போ­து­மா­ன­தல்ல என்று நிரா­க­ரித்­தனர். விடு­த­லைப்­பு­லிகள் 13 ஆவது திருத்­தத்­தையும் மாகாண சபை­க­ளையும் நிரா­க­ரித்­தனர். தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் கூட அதை போது­மா­ன­தல்ல. நியா­ய­மா­ன­தல்ல என்று கரு­தி­யது. தெற்கில் ஜனா­தி­பதி ஜெய­வர்த்­தன மாகா­ண­சபை முறைக்கு ஆத­ர­வா­ள­ராக இருக்­க­வில்லை. 13 ஆவது திருத்­தத்­துக்கும் மாகாண சபை­க­ளுக்கும் வகை­செய்த இந்­திய – இலங்கை சமா­தான உடன்­ப­டிக்­கையை அங்­கீ­க­ரிப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களை ஜனதா விமுக்தி பெர­மு­னையும் (ஜே.வி.பி) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கடுமையாக எதிர்த்­தன. உடன்­ப­டிக்­கைக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. எனவே, மாகாண சபை முறைக்கு இலங்­கை­யர்கள் சொந்தம் கொண்­டா­ட­வில்லை. அல்­லது ஆத­ர­வாக இருக்­க­வில்லை. இந்த விட­யத்தில் எமது சொந்­தத்தில் மிகவும் முற்­போக்­கான, முக்­கி­யத்­துவம் வாய்ந்த சாத­னையை நாம் செய்­து­காட்ட வேண்­டிய தருணம் இது­வாகும்.

இரண்­டா­வது, மாகாண சபைகள் மிகவும் முற்­போக்­கான கட்­ட­மைப்பு மாற்றம் என்ற கருத்து இரு விசேட குழுக்­களை குழப்­பத்­திற்கு உள்­ளாக்கும் ஆற்­றலைக் கொண்­டி­ருக்­கி­றது. (1) இன்­னமும் கூட மாகாண சபை­களை எதிர்க்­கின்ற ஒரு சிறிய பிரிவு சிங்­களத் தேசி­ய­வா­திகள். (2) வட பகுதி தமி­ழர்கள் (இன்­னமும் கூட தனி­நா­டொன்றில் நம்­பிக்கை கொண்­ட­வர்­களும் நியா­ய­மான அளவு அதி­காரப் பர­வ­லாக்­க­லுக்­காக குரல்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­ப­வர்­களும் இதில் அடங்­குவர்)

சிங்­களத் தரப்பில் உள்ள எதிர்ப்பைப் பொறுத்­த­வரை, மாகாண சபைக்கு எதி­ரான இயக்கம் பெரு­ம­ள­வுக்கு அருகிப் போய்­விட்­டது. மாகாண சபைகள் யதார்த்­த­மா­கி­விட்­டது என்­ப­தையும், கூடு­தல்­பட்­ச­மான அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் வடி­வ­மாக அது பயன்­பட முடியும் என்றும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக பலர் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு விட்­டார்கள்.

மறு­பு­றத்தில், பல தமி­ழர்கள் மாகாண சபை­களைப் போது­மா­ன­வை­யாகக் கரு­த­வில்லை. அரசின் ஒற்­றை­யாட்சிக் கட்­ட­மைப்­புக்குள் நிறு­வப்­பட்­டதே மாகாண சபைகள் தொடர்பில் இருக்­கின்ற பிர­தான பிரச்­சி­னை­யாகும். உண்­மையில் அர­சி­ய­ல­மைப்பின் ஒற்­றை­யாட்சி திட்ட நிலையில் இருந்து மாகாண சபைகள் விலகிச் செல்­ல­வில்லை என்ற அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே கார­ண­மாகக் கொண்டு 13 ஆவது திருத்­தத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது.

“மாகாண சபைகள் சுயாதீனமான சட்டவாக்க அதிகாரங்களைச் செயற்படுத்தவில்லை. அவை பாராளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டவையாக மட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்க அதிகாரங்களைச் செயற்படுத்துகின்ற துணை அமைப்புகள் மாத்திரமே” என்று உச்ச நீதிமன்றம் பிரகடனம் செய்தது. எனவே 13 ஆவது திருத்தத்தின் மூலமாக சாதிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் நிரந்தரமான ஒன்றாக இல்லாமல் போகக்கூடும் என்ற தமிழர்களின் பீதியை மாகாண சபைகள் தொடரச் செய்தன. உதாரணமாக, முதலமைச்சரின் ஆலோசனையுடனோ அல்லது ஆலோசனையில்லாமலோ ஆளுநர் மாகாண சபையைக் கலைக்க முடியும். அதனால் , மாகாண சபைகளின் நிலைபேறு என்பது பெருமளவுக்கு கொழும்பின் நல்லெண்ணத்திலேயே தங்கியிருக்கிறது. அதிகாரப்பகிர்வின் முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாட்டைப் பேணுவதால் 13 ஆவது திருத்தத்தின் கீழ் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. பொதுப்பட்டியல் (Concurrent list) இதற்கு ஒரு உதாரணமாகும். லக்சிறி பெர்னாண்டோ சுட்டிக்காட்டுவதைப் போன்று பொதுப்பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கம் மாகாண சபைகளின் விவகாரங்களில் சுலபமாகவே ஆக்கிரமிப்புச் செய்ய முடியும். அதனால், மாகாண சபைகளை முற்போக்கான கட்டமைப்புகள் என்று தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

எனவே, லக்சிறி பெர்னாண்டோவின் ஆய்வுகள் முற்போக்கானதும் சிந்தனையைத் தூண்டுகின்றதுமான அனுமானங்களைக் கொண்டிருக்கின்றன எனலாம். இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கத்துடன் சம்பந்தப்பட்ட பல முக்கியமான விடயதானங்கள் குறித்து இவர் ஆராய்ந்திருக்கிறார். இலங்கையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றில் அக்கறையுடையவர்களுக்கு ஒரு தகவல் தேட்டமாக அவரது நூல் பயன்பட முடியும். அந்த முக்கியமான நூலில் லக்சிறி பெர்னாண்டோ முன்வைத்திருக்கும் கருத்துக்களை இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கருத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். 

கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்
(அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தில் முரண்நிலைத் தீர்வு திணைக்களத்தின் தலைவராக பணியாற்றுகிறார்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.