Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா?

Featured Replies

தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா?

 

வடக்கு கிழக்கில் உள்ள தொல்­பொருள் வல­யங்­களைப் பாது­காக்கப் போகிறோம் என்ற போர்­வையில் அர­சாங்கம் இன­வாத சக்­தி­களின் துணை­யுடன் பாரிய ஆக்­கி­ர­மிப்பு வேலைத்­திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா எனும் சந்­தேகம் கடந்த சில வாரங்­க­ளாக வலுப்­பெற ஆரம்­பித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ, ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்­திய கூட்­டங்­களும் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளுமே இந்த சந்­தேகம் வலுப் பெறக் கார­ண­மாகும்.

அண்­மையில் நீதி­ய­மைச்­சரும், புத்த சாசன அமைச்­ச­ரு­மான விஜே­தாச ராஜ­பக் ஷ ஞான­சார தேர­ரு­டனும், அண்மைக் கால­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் அமை­தியை சீர்­கு­லைத்­து­வரும் அம்­பிட்­டிய சுமணரத்ன தேரரு­டனும் இணைந்து பொலிஸ் பாது­காப்­புடன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பதுளை வீதியில் அமைந்­துள்ள காணி ஒன்றைப் பார்­வை­யிட்­டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் தற்­கா­லிக பொலிஸ் முகாம் ஒன்று அமைக்­கப்­பட்டு அந்த இடம் தொல்­பொருள் ஆய்வுப் பிர­தே­ச­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் விஜே­தா­சவின் மட்­டக்­க­ளப்பு விஜ­யத்தைத் தொடர்ந்து கடந்த 22.12.2016 அன்று கொழும்பில் ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் விசேட கூட்டம் ஒன்று நடை­பெற்­றது. நாட்­டி­லுள்ள தொல்­பொருள் தலங்­களைப் பாது­காத்தல் என்­பதே இக் கூட்­டத்தின் கருப்­பொ­ரு­ளாக அமைந்­தி­ருந்­தது.

இக் கூட்­டத்தில் தொல்­பொருள் பெறு­ம­தி­வாய்ந்த வர­லாற்றுத் தலங்­களைப் பாது­காப்­ப­தற்கு ஒன்­றி­ணைந்த நிகழ்ச்­சித்­திட்டம் அவ­சியம் என்று ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

தற்­போது அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் பாது­காப்­பற்ற நிலையில் உள்ள தொல்­பொருள் பெறு­ம­தி­வாய்ந்த இடங்­களை கண்­ட­றிந்து அவற்றை தொல்­பொருள் முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்­பாக இங்கு விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

புத்­த­சா­சன அமைச்சு, கலா­சார அமைச்சு, சட்­டமும் ஒழுங்கும் தொடர்­பான அமைச்சு, பாது­காப்பு அமைச்சு, உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு ஆகிய அமைச்­சு­களின் பிர­தி­நி­திகள், மாவட்ட செய­லா­ளர்கள், பிர­தேச செய­லா­ளர்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கிய ஒரு குழுவின் மூலம் இந்­நி­கழ்ச்­சித்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்ச்­சித்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது சகல மக்கள் பிரி­வி­ன­ரையும் பங்­கு­பற்­றச்­செய்­வதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­திய ஜனா­தி­பதி, இன வேறு­பா­டு­க­ளின்றி இலங்­கை­யர்கள் என்ற வகையில் எமது கீர்த்­தி­மிக்க மர­பு­ரி­மை­களைப் பாது­காத்து எதிர்­கால தலை­மு­றைக்கு வழங்­கு­வது தொடர்­பாக அனைத்து இனங்கள் மத்­தி­யிலும் உளப்­பாங்கு ரீதி­யான மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னு­டனும் மேற்­கொள்­வ­தற்குத் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை அபி­வி­ருத்­தி­செய்­வது தொடர்­பா­கவும் விசேட கவனம் செலுத்­தப்­பட்­ட­தாக தெரிய வரு­கி­றது.

இக் கூட்­டத்தில் பங்­கேற்ற நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ தமது மட்­டக்­க­ளப்பு விஜயம் பற்­றியும் அதன்­போது தனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட தொல்­பொருள் இடங்கள் பற்­றியும் கருத்து வெ ளியிட்டார்.

'' அண்­மையில் நான் செங்­க­ல­டிக்கு விஜயம் செய்தேன். அங்கு பௌத்த கோபுர பிர­தே­ச­மொன்று முஸ்லிம் ஒரு­வ­ரினால் சட்­ட­வி­ரோ­த­மாக கையா­ளப்­பட்டு காணி உறுதி எழு­தப்­பட்டு தமிழர் ஒரு­வ­ருக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் காணியை கொள்­வ­னவு செய்த தமிழர் டோசர் பண்­ணி­யுள்ளார். இதனால் பௌத்த கோபுரம் அழிக்­கப்­பட்­டுள்­ளது. கோபு­ரத்தின் அரை­வாசி டோசர் பண்­ணப்­பட்­டுள்­ளது. கோபு­ரத்­துக்கு நடு­விலே வேலியும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பொலிஸார் அவ்­வி­டத்தில் காவ­லரண் அமைத்து பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான பல பிர­தே­சங்­களை பௌத்த குரு­மார்கள் இனங்­கண்­டுள்­ளார்கள். தொல்­பொருள் ஆய்வுத் திணைக்­களம் இவ்­வா­றான பிர­தே­சங்­களை வேலி­ய­மைத்து பாது­காக்க வேண்டும். அப்­பி­ர­தே­சங்கள் புரா­தன தொல்­பொருள் பிர­தே­சங்கள் என அறி­விப்புச் செய்து அதற்­கான அறி­விப்புப் பல­கைகள் தொங்­க­வி­டப்­பட வேண்டும். தொல்­பொருள் திணைக்­களம் தனது கட­மை­களை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இவ்­வாறு திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு, வவு­னியா மாவட்­டங்­களில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என்றும் கூறினார்.

இக் கூட்­டத்தில் பங்­கேற்ற தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் செனரத் திஸா­நா­யக்க கருத்து தெரி­விக்­கையில், வடக்கில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் இனங் காணப்­பட்டு அவற்றை பாது­காக்க சட்­ட நவ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. கிழக்கில் அம்­பா­றையில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு தொல்­பொருள் பிர­தே­ச­மென அறி­விப்புப் பலகை இட வேண்­டி­யுள்­ளது என்றார்.

இக் கூட்­டத்தில் பங்­கேற்ற ஞான­சார தேரரும் தனது பங்­குக்கு கருத்து வெளி­யிட்டார். அவ­ரது கருத்து முழுக்க முழுக்க முஸ்­லிம்கள் மீது குற்­றம்­சாட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தது எனலாம்.

அதே­போன்று இக் கூட்­டத்தில் ஆரம்பக் கைத்­தொழில் அமைச்­சரும் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா கம­கேவும் பங்­கேற்­றி­ருந்­தமை கவ­னிப்­புக்­கு­ரி­ய­தாகும். அண்­மையில் இறக்­காமம் மாணிக்­க­ம­டு­வில தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கும் சொந்­த­மான பகு­தியில் திடீ­ரென புத்தர் சிலையை வைத்து அப் பகுதி சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­ரி­யது என சில பிக்­குகள் உரிமை கோரி­யி­ருந்­தனர். இதன் பின்­ன­ணியில் அமைச்சர் தயா கமகே இருக்­கிறார் எனும் குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந் நிலை­யில்தான் தொல்­பொ­ருட் தொடர்பில் ஆராயும் கூட்­டத்தில் தயா கமகே பங்­கேற்­றமை மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. இதற்­கி­டையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்­திலும் அமைச்சர் தயா கமகே அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள தொல்­பொ­ருட்­களைப் பாது­காக்க வேண்டும் எனவும் அப் பகு­தி­களை எல்­லை­யிட வேண்டும் என்றும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதற்கு -முன்னர் நடை­பெற்ற அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்­திலும் கல்­முனை தொடக்கம் பொத்­துவில் வரை­யான 12 ஆயிரம் ஏக்கர் கரை­யோரக் காணிகள் தீக­வாபி புனித பூமிக்­குட்­பட்­டவை எனக் குறிப்­பி­ட்­டி­ருந்­த­மையும் பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­தி­ருந்­தது.

இவ்­வாறு அர­சாங்கம் தொல்­பொ­ருட்கள் எனும் போர்­வையில் போலி­யான ஆதா­ரங்­களை முன்­வைத்து வடக்குக் கிழக்கில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கும் சொந்­த­மான நிலங்­களைக் கைப்­பற்றி அவற்றை சுவீ­க­ரித்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்ள எத்­த­னிக்­கி­றதா எனும் கேள்வி தொடர்ந்து எழுந்த வண்­ணமே உள்­ளது.

இந்த இடத்­தில்தான் நீதி­ய­மைச்சர் உரிமை கோரிய காணியின் பின்­புலம் பற்­றிய தக­வல்­களும் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. உண்­மையில் செங்­க­ல­டியில் உள்ள மேற்­படி காணி ஒரு முஸ்லிம் பள்­ளி­வா­ய­லுக்கும், தனியார் ஒரு­வ­ருக்கும் சொந்­த­மான இட­மாகும். இதற்­கான சட்ட ரீதி­யான ஆவ­ணங்கள் அனைத்தும் தம்­மி­ட­முள்­ள­தாக காணி உரி­மை­யாளர் குறிப்­பி­டு­கிறார்.

குறித்த காணியின் தற்­போ­தைய சட்ட ரீதி­யான வாரி­சாக இருக்கும் சேகு இஸ்­மாயில் பாத்­துமா அல்­லது செயி­ல­தும்மா என்­ப­வ­ரிடம் இருக்கும் ஆவ­ணங்­களின் அடிப்­ப­டையில் குறித்த காணியின் உரிமை தொடர்­பான விப­ரங்கள் பின்­வ­ரு­மாறு அமை­கின்­றன:

இல:893/4 மைல் போஸ்ட், பதுளை வீதி, இலுப்­ப­டிச்­சேனை,செங்­க­லடி எனும் விலா­சத்தில் அமையப் பெற்­றுள்ள இந்தக் காணியில் ஜனாப் காசிம் பாவா சேகு இஸ்­மாயில் (தற்­போ­தைய உரி­மை­யா­ளரின் தந்தை) என்­பவர் 1939ம் ஆண்டு தொடக்கம் அரச அனு­மதிப் பத்­தி­ரத்­துடன் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்றார். அனு­மதிப் பத்­திர இலக்கம்:2375, திட்ட இலக்கம் (Plan No ): 1237 ஆகும்.

குறித்த காணியின் ஒரு பகு­தியில் ஒரு பள்­ளி­வாயல் அமைக்­கப்­பட்டு அதனை உரி­மை­யாளர் கடந்த 06.03.1962இல் வக்பு சபை­யிடம் கைய­ளித்­துள்ளார். பதிவு இலக்கம்: R /799/BT 74 ஆகும்.

வக்பு சபை என்­பது முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் கீழ் இயங்­கு­கின்ற ஒரு அரச நிறு­வ­ன­மாகும். அதன் பொறுப்­புக்­களும் கட­மை­களும் இலங்கை வக்பு சட்­டத்­தினால் வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் பொறுப்பின் கீழ் வரு­கின்ற சொத்­துக்கள் பொதுச் சொத்­தாகும். இதனை யாரும் உரிமை மாற்றம் செய்­யவோ அல்­லது முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் தவிர்ந்த ஏனைய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தவோ முடி­யாது.

கடந்த 1990 யுத்த காலத்தில் முஸ்­லிம்கள் இவ்­வி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் குறித்த காணியின் உரி­மை­யா­ளரும், அவ்­வி­டத்தில் வாழ்ந்து வந்த தற்­போ­தைய உரி­மை­யா­ளரும் அந்தக் காணி­யி­லி­ருந்து வெளி­யேறி ஏறா­வூரில் குடி­யே­றி­யுள்­ளனர். கடந்த 2008 இல் குறித்த பிர­தே­சத்தில் அமைதி நிலை ஏற்­பட்­டி­ருந்த நிலையில் காணியின் உரி­மை­யாளர் தனது காணிக்கு திரும்­பிய வேளையில் அங்கு பள்­ளி­வா­யலும் தனது உட­மை­களும் முற்­றாக அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தனது கிணறும், பள்­ளி­வா­ய­லுக்கு அருகில் இருந்த இரண்டு அடக்­கஸ்­த­லங்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ளனர்.

பின்­னைய நாட்­களில் தமது காணியை செப்­ப­னி­டு­வ­தற்கும், அழிக்­கப்­பட்­டி­ருந்த பள்­ளி­வா­யலை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கும் முயற்­சிகள் செய்­யப்­பட்­ட­போது அரச அதி­கா­ரி­க­ளாலும் பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளாலும் பல்­வேறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சிலர் மேற்­படி காணி­க­ளுக்குள் அத்­து­மீறி நுழைந்து சேதம் விளை­வித்­த­தோடு மாத்­தி­ர­மல்­லாது பொருட்­க­ளையும் பல­வந்­த­மாக எடுத்துச் சென்­றுள்­ளனர். இது தொடர்­பாக கர­டி­ய­னாறு பொலிஸில் பல்­வேறு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதன் பின்­ன­ரான சில நாட்­களில் பள்­ளி­வாயல் வள­வினுள் அமைந்­தி­ருந்த இரண்டு அடக்­கஸ்­த­லங்­களும் புல்­டோஸர் மூலம் நிர்­மூலம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு பல்­வேறு முட்டுக் கட்­டைகள், அழுத்­தங்கள்,அச்­சு­றுத்­தல்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்த நிலையில் அதனை ஒரு பெண்­ணாக தன்­னந்­த­னி­யாக எதிர்­கொள்ள முடி­யாத நிலையில் தனது பெயரில் இருந்த குறித்த காணியின் பகு­தி­யினை தமிழர் ஒரு­வ­ருக்கு விற்­ப­தற்கு அப் பெண் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.

அந்தக் காணியும், பள்­ளி­வாயல் அமையப் பெற்­றி­ருந்த காணி­யுமே இன்று நீதி அமைச்­ச­ரி­னாலும் பொலி­ஸா­ரினால் தொல்­பொருள் ஆய்வு இட­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. விகா­ரையின் இடி­பா­டுகள் என்று நீதி­ய­மைச்சர் சொல்­வது இடிக்­கப்­பட்ட அடக்­கஸ்­த­லங்­களின் எச்­சங்­க­ளை­யாகும்.

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ மட்­டக்­க­ளப்­புக்கு வரு­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்பு இக்­கா­ணியின் உரி­மை­யா­ள­ரான சேகு இஸ்­மாயில் பாத்­தும்மா என்­பவர் கர­டி­ய­னாறு பொலி­ஸாரால் அழைக்­கப்­பட்டு விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. பின்னர் மட்­டக்­க­ளப்பு காட்டுக் கந்­தோரில் அமைந்­துள்ள பொலிஸ் நிலை­யத்­திலும் இவர் விசா­ரிக்­கப்­பட்­டுள்ளார்.

இதுவே மேற்­படி செங்­க­லடி காணி விவ­கா­ரத்தின் உண்­மை­யான பின்­பு­ல­மாகும். மாறாக நீதி­ய­மைச்சர் குறிப்­பி­டு­வது போன்று அங்கு விகாரை அமைந்­தி­ருந்­த­மைக்­கான எந்­த­வித ஆதா­ரங்­களும் இல்லை என காணி உரி­மை­யா­ளரும் பிர­தேச மக்­களும் குறிப்­பி­டு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால் நீதி­ய­மைச்சர் ஏன் இந்த செயற்­பாட்டில் ஈடு­பட வேண்டும் என்ற கேள்வி எழு­கி­றது. இதற்குக் காரணம் அண்மைக் கால­மாக நல்­லி­ணக்கம் என்ற போர்­வையில் இன­வாத தேரர்­களின் கருத்­துக்­க­ளுக்கு நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தலை­சாய்க்கத் தொடங்­கி­யி­ருப்­ப­தே­யாகும். இதன் வெளிப்­பாடே இந்த 'தொல்­பொருள் வல­யங்கள்' எனும் நகர்­வு­க­ளாகும்.

சென்ற வாரம் இப் பத்­தியில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­ததைப் போன்று இன­வாத தேரர்­க­ளுடன் கூட்டுச் சேர்ந்த அரச அனு­ச­ர­ணையில் அவர்­க­ளது திட்­டங்கள் முன்­ன­ரை­வி­டவும் பாது­காப்­பு­டனும் சட்ட, அர­சியல் அங்­கீ­கா­ரத்­து­டனும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­பதே யதார்த்­த­மாகும்.

ஏனெனில் தற்­போது கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்­களைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் ஜன­வரி மாதம் இரண்டாம் வாரத்­தி­லி­ருந்து தொடங்­க­வுள்­ள­தா­கவும் இதற்­காக சிவில் பாது­காப்புப் படை­யினர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர் எனவும் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் செனரத் திஸா­நா­யக்க குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

'' அண்­மையில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது தொல்­பொருள் பிர­தே­சங்­களைப் பாது­காக்­கு­மாறு ஜனா­தி­பதி வேண்­டிக்­கொண்டார்.

அதற்­க­மை­யவே கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கிழக்கில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் அழிக்­கப்­பட்டு வரு­வ­தாக திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­கின்­றன. இப்­பி­ர­தே­சங்­களில் இன,மத பேத­மின்றி நாட்டு மக்கள் பாது­காக்க வேண்­டிய பிர­தே­சங்­க­ளாகும். 

மேலும் தொல்­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தமிழ் மொழியில் உணர்த்தும் நட­வ­டிக்­கை­க­ளையும் தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொள்­ள­வுள்­ளது.`

தொல்­பொருள் பிர­தே­சத்தின் முக்­கி­யத்­து­வத்தை பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து போதிப்­ப­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. தொல்­பொருள் திணைக்­களம் கல்வி அமைச்­சுடன் இணைந்து பாடப்­புத்­த­கங்­களில் இவ்­வி­ட­யங்­களை உட்­பு­குத்­து­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது'' என்றும் திணைக்­கள பணிப்­பாளர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இவை­யெல்லாம் வடக்கு கிழக்கு மக்­களின் காணி­களை மையப்­ப­டுத்­திய விசேட வேலைத்­திட்டம் ஒன்று அர­சாங்க அனு­ச­ர­ணையில் இன­வாத தேரர்­களின் விருப்­பு­க­ளுக்கு அமைய நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­ப­தையே சுட்டி நிற்­கின்­றன.

உண்­மையில் அர­சாங்­கத்தின் இந்த நகர்வு உண்­மையில் சிறு­பான்மை மக்­களை அவ­ம­திப்­ப­தா­கவே அமைந்­துள்­ளது. பல்­வேறு வழக்­கு­க­ளையும் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் எதிர்­கொண்­டுள்ள இன­வாத தேரர்­களை ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­களும் தமக்­க­ருகே ஆலோ­ச­கர்­க­ளாக வைத்துக் கொண்டு அவர்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு செவி­ம­டுப்­பதும் அக் கருத்­துக்­களை ஜனா­தி­ப­தி­யி­னதும் அமைச்­சுக்­க­ளி­னதும் ஊடகப் பிரி­வுகள் மூல­மாக பரப்­பு­வதும் மிகப் பெரிய துர­திர்ஷ்­ட­மான செயற்­பா­டு­க­ளே­யாகும்.

அண்­மையில் ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்ட ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத கருத்­துக்­க­ளையே வெ ளியிட்டார். இதனை ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெ ளியிட்­டமை தவறு என சுட்­டிக்­காட்டி ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழு இணைத் தலை­வ­ரு­மான முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

'' கடந்த 22.12.2016 அன்று, தொல்­பொருள் பெறு­ம­தி­வாய்ந்த வர­லாற்றுத் தலங்­களைப் பாது­காப்­பது தொடர்­பாக தங்­களின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் மற்றும் இஸ்­லா­மிய போத­னைகள் தொடர்­பா­கவும் உண்­மைக்கு புறம்­பான இன­வாதக் கருத்­துக்­களை உங்கள் முன்­னி­லையில் வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­நாட்டில் சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மோச­மான நச்­சுக்­க­ருத்­துக்­களை பரப்பி வரும் ஞான­சார தேரர் தொல்­பொருள் பெறு­ம­தி­வாய்ந்த வர­லாற்றுத் தலங்­களை அழிப்­ப­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு இஸ்லாம் போதனை செய்­வ­தாக அபாண்­ட­மான இன­வாத ரீதி­யி­லான கருத்தை அதில் வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்த நாட்டில் வாழும் ஒரு சிறு­பான்மை இனத்­திற்­கெ­தி­ராக ஞான­சார தேர­ரினால் தங்­களின் முன்­னி­லையில் முன்­வைக்­கப்­பட்ட இந்த நச்சுக் கருத்து அடங்­கிய வீடியோ பதிவை தங்­க­ளது ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு சகல ஊட­கங்­க­ளுக்கும் வெளி­யிட்டும் இருக்­கி­றது. நீங்கள் இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் கொண்ட நல்­லாட்­சியை உரு­வாக்க செய­லாற்றும் இத்­த­ரு­ணத்தில் தங்­க­ளது ஊடகப் பிரிவு நல்­லி­ணக்­கத்­திற்கு பங்கம் விளை­விக்கும் ஞான­சார தேரரின் இன­வாதக் கருத்தை நல்­லாட்­சியின் அர­சாங்க வளங்­களைப் பயன்­ப­டுத்தி மக்கள் மயப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது'' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளது போல நல்லாட்சி எனும் போர்வையில் எந்த இனவாதிகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் களமிறங்கியதோ இன்று அதே இனவாதிகளை அருகில் வைத்துக் கொண்டு அவர்களது கருத்துக்களுக்கேற்ப தாளமிடுவது நாட்டின் ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையே கட்டியம் கூறி நிற்கிறது.

'' இன­வாதம் பேசும் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வரும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் அர­சாங்கம் மேற்­கொள்ளும் நிர்­ண­யிக்­கப்­பட்ட சந்­திப்பு செயற்­றிட்­டங்கள் (Engagement Process) பய­னுள்­ள­வை­க­ளாகத் தெரிந்­தாலும் இறு­தியில் தீங்­கி­னையே (Impunity) விளை­விக்கும். தீவி­ர­வாதக் கருத்­துள்­ள­வர்­களை ஜன­நா­யக நீரோ­டைக்குள் கொண்டு வரு­வ­தென்­பது சிர­ம­மான காரி­ய­மாகும். நீதி­மன்­றங்­களில் பல வழக்­கு­களை எதிர்­கொண்­டி­ருப்­ப­வர்கள் நல்­லி­ணக்­கத்­துக்கும் சக­வாழ்­வுக்கும் ஆலோ­சனை கூறு­ப­வர்­க­ளாக இருக்க முடி­யாது'' என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கூறுவது போல அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் நிச்சயம் பயனுள்ளவைகளாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.