Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல : ஜனாதிபதி

Featured Replies

புதிய அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல : ஜனாதிபதி

 

 

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் உறுதியளித்தார்.

my3.jpg

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும் அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்திற்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது என்பதுடன், அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அஸ்கிரி மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்குத் தாம் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு ஒருபோதும் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒரு ஆவணமாகவன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள் மற்றும் பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்திற் கொண்டே தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது மக்களின் கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிந்திருக்கவில்லை என இதன்போது மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மழைவேண்டி நாடளாவிய ரீதியில் பிரித் பாராயணம் செய்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் உரிய காலத்தில் மழை கிடைக்கப்பெற்று வரட்சி நிலை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது என்றும் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

புத்தாண்டை முன்னிட்டு பிரித் பாராயணம் செய்து மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினார். 

அதன் பின்னர் மல்வத்தை விகாரைக்கு விஜயம்செய்த ஜனாதிபதி, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்தை மகாநாயக்க தேரருக்கு விளக்கியதுடன், கடந்த இரண்டு வருட காலமாக தற்போதைய அரசாங்கம் பின்பற்றிவந்த நட்பு ரீதியான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்தி பிரச்சினை தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இதற்கான தீர்வுகளைக் கண்டடைவதற்காக ஏனைய நாடுகளைப் போல இலங்கையும் தயாராகவுள்ளதாகவும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டுக்குத் தேவையான பல்வேறு சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த போதும் அது தொடர்பாக மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்தப்படாத காரணத்தினால் பிரச்சினைகள் எழுவதாகக் குறிப்பிட்ட மகாநாயக்க தேரர், அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி; முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பாராட்டிய மகாநாயக்க தேரர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்புகளையும் பாராட்டினார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையை போதைப் பொருளில் இருந்து விடுவித்து ஆரோக்கியமான ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பிறக்கும் புத்தாண்டை முன்னிட்டு மல்வத்தை மகாநாயக்க தேரரும் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

http://www.virakesari.lk/article/14955

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.