Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கடற்பரப்பில் கடந்த வருடம் 136 இந்திய மீனவர்கள் கைது

Featured Replies

வடக்கு கடற்பரப்பில் கடந்த வருடம் 136 இந்திய மீனவர்கள் கைது
 
 

article_1483248891-Arrest-log.jpgசெல்வநாயகம் கபிலன்

கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் 136 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையான 12 மாதங்களில் நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவற்றில் 97 மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதியில் டிசம்பர் 22ஆம் திகதி வரை 7 படகுடன் வௌ;வேறு தினங்களில் கைதான 39 மீனவர்கள் தொடர்ந்தும் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

28 விசைப்படகுகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் படகுகளுடன் 16 மீனவர்களும், மார்ச் மாதம் 5 படகுடன் 20 மீனவர்களுமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 2 படகுடன் நெடுந்தீவில் கடலில் 13 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட அதேவேளை மே மாதம் எந்தவொரு மீனவர்களும் கைதுசெய்யப்படவில்லை. அதேபோல் ஜீன் மாதம் 4 விசைப்படகுடன் பருத்தித்துறை, நெடுந்தீவு கடலில் 16 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

ஜீலை மாதம் 2 படகுடன் 17 மீனவர்கள் பருத்தித்துறை கடலிலும், 2 படகுடன் 10 பேர் நெடுந்தீவு கடலிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதம் 1 படகுடன் 4 மீனவர்களும், ஒக்டோபர் மாதம் 1 விசைப்படகுடன் 5 மீனவர்களும், நவம்பர் மாதம் 2 விசைப்படகுடன் 11 மீனவர்களும், வருடத்தின் இறுதி மாதமான டிசெம்பர் 5 படகுடன் 24 மீனவர்களுமாக மொதம் 136 மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக, உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவ் கைது கடந்த 2015ஆம் ஆண்டினை விட 49 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். கடந்த 2016ஆம் ஆண்டு, நெடுந்தீவுக் கடலிலே அதிகளவான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவற்றில் கடந்த மார்ச் மாதம் 2 படகுகளுடன் மாதகல் கடலில் கடலில் கைதான மீனவர்கள் 8 பேருக்கு வழக்கு தாக்கல் செய்திருந்தாகவும், 23 வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றிலும், 3 வழக்குகள் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் தொடரடப்பட்டிருந்ததாக  தெரிவித்தார். இவற்றில் ஜீலை மாதம் அதிகளவான மீனவர்களாக 27 பேர் கைதுசெய்யப்பட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு 43 வழக்குகளுடன் தொடர்புபட்ட 273 மீனவர்கள் 43 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருந்த அதேவேளை இவ் வருடம் 28 வழக்குகளுடன் தொடர்புபட்டிருந்த 136 மீனவர்கள் 28 விசைப்படகுடன் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் எண்ணிக்கை சரிக்கு அரைவாசி குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/188979/வடக-க-கடற-பரப-ப-ல-கடந-த-வர-டம-இந-த-ய-ம-னவர-கள-க-த-#sthash.tXRQ18eD.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.