Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கை ட்ரயல் அட் பார் முறையில் விசாரித்திருக்க வேண்டும்

Featured Replies

ரவிராஜ் கொலை வழக்கை ட்ரயல் அட் பார் முறையில் விசாரித்திருக்க வேண்டும்

 

எஸ்.கே, ஜெ.ராஜன்

நட­ராஜா ரவி­ராஜின் கொலை­வ­ழக்கை ட்ரயல் அட் பார் முறை­யி­லேயே விசா­ரித்­தி­ருக்க வேண்டும். விசேட ஜூரி ­களை அமர்த்தி இந்த வழக்கை விசா­ரித்­தி­ருக்கக் கூடாது. ட்ரயல் அட் பார் முறையில் மூன்று நீதி­ப­திகள் விசா­ர­ணை­ களை மேற்­கொண்டு அவர்கள் அதற்­கான தீர்ப்பை வழங்­கு­வார்கள். அத்­துடன் குற்­ற­வா­ளியா அல்­லது சுற்­ற­வா­ளியா என்ற கார­ணத்­தையும் விளக்­கு­வார்கள்.

மேலும் இந்தக் கார­ணத்­துக்­காகத் தான் இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது என்றும் கூறு­வார்கள். ஆனால் விசேட ஜூரிகள் அவ்­வா­றல்ல என வடக்கு

மாகாண சபையின் முத­ல­மைச்­சரும் முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி. விக்­னேஸ்­வரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ணலில் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்

மறைந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது பாது­கா­வ­ல­ரான பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் லொக்­கு­வெல்ல முரகே லக் ஷ்மன் படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கை விசா­ரிப்­ப­தற்கு விஷேட ஜூரிகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு விசேட ஜூரிகள் நிய­மிக்­கப்­பட்டு நடத்­தப்­படும் வழக்கில் ஒரு­வேளை ஜூரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டால் அவர்கள் நடு­நி­லை­யி­னின்று தீர்ப்­ப­ளிக்­காமல் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக பயந்து தீர்ப்­ப­ளிக்கும் வாய்ப்பு உள்­ளது. அத்­துடன் ரவிராஜ் வழக்கில் நிய­மிக்­கப்­பட்ட விஷேட ஜூரிகள் அனை­வரும் சிங்­க­ள­வர்­களே. அவர்­களில் ஒருவர் கூட தமிழ் ஜூரி இல்லை. ஆன­ப­டியால் ஜூரிகள் ஒரு­வேளை அடி­ப­ணிந்து தமது விருப்­பத்­திற்­கேற்ப தீர்ப்பு வழங்­கி­யி­ருந்­தி­ருக்­கலாம்.

மேலும் ஜூரிகள், குறிப்­பிட்ட நபர் குற்­ற­வா­ளியா அல்­லது சுற்­ற­வா­ளியா என்­றுதான் கூறு­வார்­களே தவிர தீர்ப்பு வழங்­கி­ய­தற்­கான கார­ணத்தை கூற மாட்­டார்கள். ஒரு­வேளை தீர்ப்பை மீளவும் ஆரா­யும்­படி யாரா­வது கேட்டால் மாத்­திரம் தீர்ப்பை மீளாய்வு செய்­வார்கள். குமா­ர­புரம் படு­கொ­லைக்கு ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, தீர்ப்பை திரும்ப ஒரு­முறை ஆராய்ந்து பாருங்கள் என்று கூறி­ய­தற்கு ஜூரிகள் குறு­கிய ஒரு கால அவ­கா­சத்தில் தீர்ப்பை ஆராய்ந்து பின்னர் இல்லை தீர்ப்பு சரி­யா­னது எனக் கூறி­விட்­டனர்.

ஆகவே இவ்­வ­ழக்கை ட்ரையல் அட் பார் முறை மூலமே விசா­ரித்­தி­ருக்­க­வேண்டும். ட்ரையல் அட் பார் முறை என்று சொல்­லப்­ப­டும்­போது அங்கு மூன்று நீதி­ப­திகள் சாட்­சி­களை விசா­ரித்து அத­ன­டிப்­ப­டையில் தீர்ப்­ப­ளிக்கும் முறை­யாகும். அத்­துடன் ட்ரையல் அட்பார் முறையில் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்­தையும் கூற வேண்டும். அதா­வது, இந்த குற்­றங்­களைப் புரிந்­தது நிரூ­ப­ண­மான கார­ணத்­தினால் தான் நாங்கள் குறிப்­பிட்ட நபரை குற்­ற­வா­ளி­யாகக் காண்­கின்றோம் என்று தீர்ப்­பிற்­கான விளக்­கத்­தையும் இறு­தியில் கூற வேண்டும்.

இலங்­கையில் இந்த முறையில் பல வழக்­குகள் விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்­பு­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. உதா­ர­ண­மாக லியன ஆராச்சி வழக்கில் கூட நான் பது­ளையில் இருந்து வர­வ­ழைக்­கப்­பட்டே வழக்கு விசா­ரிக்­கப்­பட்­டது.

நடராஜ் ரவி­ராஜின் கொலை­வ­ழக்கு ஒரு முக்­கி­ய­மான வழக்கு. நட­ராஜா ரவிராஜ் தமிழ் மக்­க­ளுக்­காக அளப்­ப­ரிய சேவை­க­ளாற்­றிய ஒரு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர். அத்­துடன், அவர் எனது மாண­வரும் கூட . ஆகவே அவ­ரு­டைய மரணம் அல்­லது கொலை சம்­பந்­த­மான வழக்கை ட்ரையல் அட்பார் முறையில் விசா­ரித்­தி­ருக்­கலாம் என்றார்.

இவ்­வ­ழக்கை மேன்­மு­றை­யீடு செய்­வது தொடர்பில் கேட்­ட­போது,

இவ்­வ­ழக்கை மேன்­மு­றை­யீடு செய்தால் தீர்ப்பில் சட்­டப்­படி ஏதும் தவ­றுகள் இருந்தால் அதை ஆராய்ந்­து­பார்த்து தவ­று­களை புறந்­தள்ளி இன்­னொ­ரு­த­டவை வழக்கை நடத்தச் சொல்­வார்கள். அவ்­வாறு வழக்கை மீள விசா­ரிக்­கும்­போது சாட்­சிகள், சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் எவ்­வா­றான வேறு மன­நி­லையில் இருக்­கக்­கூடும். அவர்கள் பயமுறுத்தப்பட்டிருக்கலாம். அல்லது வெளிநாட்டிற்கு தப்பியோடியிருக்க ௬டும்.

இவ்வாறான போக்குகளால் இலங்கையின் நீதித்துறை ஒரு கேள்விக்குறியாக இருப்பதால்தான் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோருகின்றோம் என்றும் அவர் மேலும் விளக்கினார்.

நேர்காணலின் ஏனைய பகுதி சமகாலம் 8 ஆம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.