Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

93212504_002.jpg

கிழக்கு மாகாணத்தில் அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்து ஆலயமொன்றின் விக்கிரகம் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன்  மற்றுமோர் ஆலயத்தின் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர், இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மற்றுமோர் சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை பொறுத்தவரை தமது பகுதியில் இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணியில் நடைபெற்றிருக்கலாம் என உள்ளுர் மக்கள் கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
93212506_001.jpg
கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவமொன்றின் போது வாகனேரி ஸ்ரீ சத்தி வினாயகர் ஆலயமும் தாக்கப்பட்டு பிள்ளையார் சிலை தகர்க்கப்பட்டு உடைக்கப்பட்டும் உடமைகள் சேதமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
BBC

http://globaltamilnews.net/archives/12478

கிழக்கு மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்து ஆலயம் ஒன்றில் சிலை தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் மற்றுமோர் ஆலயத்தில் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்த நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

இந்த நிலையில் இன்று(03) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர் சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை பொறுத்தவரை தமது பகுதியில் இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணியில் நடைபெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவமொன்றின் போது வாகனேரி ஸ்ரீ சத்தி விநாயகர் ஆலயமும் தாக்கப்பட்டு பிள்ளையார் சிலை தகர்க்கப்பட்டு உடைக்கப்பட்டும் உடைமைகள் சேதமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/130396?ref=home

  • தொடங்கியவர்

2 கோவில்களுக்குச் சேதம்
 
03-01-2017 01:09 PM
Comments - 0       Views - 163

article_1483430532-1.jpg-வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவில் இரண்டு கோவில்களுக்கு இனந்தெரியாதோரால் திங்கட்கிழமை (02) இரவு  சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

அடம்போடை வீதியை அண்டி அமைந்துள்ள கூழாவடிப் பிள்ளையார் கோவில் மற்றும் நிலாவெளி 02ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பத்தினி அம்பாள் கோவில் ஆகியவற்றிலேயே சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

கூழாவடிப் பிள்ளையார் கோவிலின் கற்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை  உடைக்கப்பட்டு, அச்சிலை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வீசப்பட்டுக் காணப்பட்டது.

இக்கோவிலுக்கு வழமையாக அதிகாலை வேளையில்; செல்லும் பெண் ஒருவர், பிள்ளையார் சிலைக்கு பூ வைத்து வழிபடுவதுடன், மின்விளக்கையும் அணைக்கும் பணியையும்; செய்துவந்தார்.

அவ்வாறே, இன்று (03) அதிகாலை கோவிலுக்குச் சென்ற இப்பெண், பிள்ளையார் சிலைக்கு பூ வைப்பதற்காகச் சென்றபோது, கற்பகக்கிரகத்தில் இருந்த சிலை காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார். இந்நிலையில், மேற்படி சிலையைத் தேடியபோது, அச்சிலை அருகிலுள்ள பற்றைக்குள் காணப்பட்டது.

இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினருக்கு அப்பெண் தெரியப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பத்தினி அம்பாள் கோவிலின் கோபுரக் கலசம் உடைக்கப்பட்டுள்ளதை வீதியால் சென்ற ஒருவர் அவதானித்துவிட்டு, அக்கோவில் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இக்கோவில்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அக்கோவில்களின் நிர்வாகத்தினர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

- See more at: http://www.tamilmirror.lk/189100/-க-வ-ல-கள-க-க-ச-ச-தம-#sthash.P7Zo9sDS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.