Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னைய தவறை உணர்ந்து ஆதரவு வழங்கவேண்டும்

Featured Replies

முன்­னைய தவறை உணர்ந்து ஆத­ரவு வழங்­க­வேண்டும்

 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் 48 மாத­கால ஆட்­சியின் போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான வேலைத்­திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் அந்தக் காலப்­ப­கு­தியில் உலகில் எங்­குமே இடம்­பெ­றாத சில வேலைத்­திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுத்தோம் என்று பொது எதி­ர­ணியின் உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எமது ஆட்­சியில் 13 ஆவது திருத்த சட்­டத்தை வலு­வி­ழக்கச் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான தக­வ­லாகும். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாங்கள் 13 பிளஸ் என்ற விட­யத்தை முன்­வைத்தோம். அது­மாத்­தி­ர­மன்றி பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பொறுத்­த­வ­ரையில் சிறி­ய­ள­வி­லான அதி­கா­ரங்­களை மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் இருந்தோம். ஆனால், அதற்­கான கால அவ­காசம் எமக்கு கிடைக்­க­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் சரி­யான முறையில் பார்த்தால் 48 மாதங்­களில் மஹிந்த ராஜ­ப­க் ஷ நாட்டை ஆட்சி செய்தார். அக்­கா­லப்­ப­கு­தியில் நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் நாங்கள் கொண்­டு­சென்றோம். 3 இலட்சம் இடம்­பெயர்ந்த மக்­களை மீளக்­கு­டி­யேற்­றினோம். 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­களை சமூ­க­ம­யப்­ப­டுத்­தினோம். வடக்­கிற்­கான ரயில் பாதையை அமைத்தோம் என்றும் முன்னாள் அமைச்சர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல கூறினார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஊட­கத்­துறை அமைச்­ச­ரா­கவும் பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளுக்­கான பேச்­சா­ள­ரா­கவும் அமைச்சர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல பதவி வகித்­தி­ருந்தார். இறுதி யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் பாது­காப்பு விவ­காரம் தொடர்பில் இவரே அர­சாங்­கத்தின் சார்பில் அறி­விப்­புக்­களை விடுத்து வந்தார். இவ்­வாறு முக்­கிய பத­வி­களை வகித்த அமைச்சர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல தற்­போது யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான 48 மாத­கால ஆட்­சியின் போது இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னைய அர­சாங்கம் துரி­தப்­ப­டுத்­த­வில்லை என்ற தவறை ஒத்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இறுதி யுத்­தத்தின் போது மூன்று இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் இடம்­பெ­யர்ந்து அக­தி­ மு­காம்­களில் வாழும் நிலை ஏற்­பட்­டது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­களின் உயிர்­களை காவு­கொண்ட இந்த கொடூர யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் இனி­யா­வது தமக்கு தீர்­வொன்று வழங்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால், யுத்­தத்தை வெற்­றி­கொண்ட அர­சாங்­க­மா­னது இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுக்­க­வே­யில்லை.

யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து அன்­றைய ஜனா­தி­ப­தி­யான மஹிந்த ராஜ­

ப­க் ஷ இந்­தி­யா­விற்கு உத்­தி­யோ­கபூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டார். அன்று இந்­தி­யாவில் காங்­கிரஸ் அர­சாங்கம் ஆட்சி புரிந்­தது. பிர­த­ம­ராக இருந்த மன்­மோகன் சிங் உட்­பட பல தலை­வர்­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்த விஜ­யத்தின் போது 13 ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண தயார் என்று மஹிந்­த ­ரா­ஜப­க் ஷ அறி­வித்­தி­ருந்தார்.

இதேபோல், யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து ஐ.நா.வின் முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இவ­ரது வரு­கையின் போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற வாக்­கு­று­தி­யையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ அளித்­தி­ருந்தார். இந்­தி­யா­விற்கும் ஐ.நா. விற்கும் வாக்­கு­றுதி அளித்த அவர் அந்த வாக்­கு­று­தி­களைக் கூட நிறை­வேற்ற உரிய வகையில் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை.

2011 ஆம் ஆண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த முன்­வந்­தி­ருந்­தது. 2011 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரையில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு குழு­வி­ன­ருக்கும் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மை­யி­லான அர­சாங்க தூதுக்­கு­ழு­வி­ன­ருக்­கு­மி­டையில் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. இதன்­போதும் அர­சியல் தீர்வு தொடர்­பான திட்­ட­வ­ரைவொன்­றி­னையும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­திடம் கைய­ளித்­தி­ருந்­தனர்.

16 சுற்றுப் பேச்­சுக்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற போதிலும் அர­சாங்கத் தரப்­பானது அர­சியல் தீர்வு விட­யத்தில் எத்­த­கைய நிலைப்­பாட்­டிற்கும் வர­வில்லை. 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் பேச்­சு­வார்த்­தைக்­காக காத்­தி­ருந்த நிலையில் அர­சாங்­கத்­த­ரப்­பினர் பேச்­சு­ வார்த்தை மேசைக்கு வரு­கை­த­ர­வில்லை. பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்த அரச தரப்பு பிர­தி­நி­திகள் வில­கிக்­கொண்­டி­ருந்­தனர். இதனால் நடை­பெற்­று­வந்த பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்­தி­ருந்­தது.

பின்னர் அர­சாங்­க­மா­னது பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்­து­விட்டு அந்த தெரி­வுக்­கு­ழுவில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அங்கம் வகித்தால் மட்­டுமே பேச்­சு­வார்த்தை என்­பது சாத்­தியம் என்று அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்போ இனப்­பி­ரச்­சினை விவ­காரம் தொடர்பில் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷ தலை­மை­யி­லான அர­ச­ த­ரப்­புடன் நேர­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்கம் காணப்­பட்ட பின்­னரே தெரி­வுக்­கு­ழுவில் பங்­கேற்­பது குறித்து தீர்­மா­னிக்க முடியும் என்று அறி­வித்­தி­ருந்­தது. இதனால் இரு­த­ரப்­பிற்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்தை தொடர்ச்­சி­யாக இடம்­பெ­ற­வே­யில்லை.

பேச்­சு­வார்த்தை இடை­நி­றுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அன்­றைய அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷ உட்­பட சில அமைச்­சர்கள் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­புடன் ஒரு­வ­ரு­ட­மாக இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யா­னது அர­சாங்­கத்­திற்கும் கூட்­ட­மைப்­பிற்­கு­மி­டையில் இடம்­பெ­ற­வில்­லை­யென்றும் அது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்­ற­மை­யினால் அதனை அரச தரப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யெனக் கூற­மு­டி­யாது என்றும் அறி­வித்­தி­ருந்­தனர்.

இத்­த­கைய அறி­விப்­புக்­க­ளா­னது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பை மேலும் சினம்­கொள்ள வைத்­தது. இவ்­வாறு இரு­த­ரப்­பிற்­கு­மி­டை­யி­லான பேச்­சுக்கள் முறி­வ­டைந்த போதிலும் அதனை மீள ஆரம்­பிப்­ப­தற்கு இந்­தியா முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தது. அந்த முயற்­சிகள் கூட பய­ன­ளிக்­க­வில்லை.

முன்­னைய அர­சாங்­கத்தின் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. மூன்று தசாப்­த­கால மித­வாத தமிழ் தலை­வர்கள் அஹிம்­சை­ வ­ழியில் போரா­டிய போதிலும் அந்தப் போராட்­டங்கள் பய­ன­ளிக்­க­வில்லை. அதன் பின்னர் மூன்று தசாப்­த­காலம் தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி போரா­டி­ய­போதும் அந்தப் போராட்­டமும் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் போரை வெற்றி­கொண்ட முன்­னைய அர­சாங்­க­மா­னது பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் எதிர்­பார்த்த தீர்வை வழங்க தவ­றி­ய­மை­யி­னா­லேயே இந்த அதிருப்தி மேலோங்­கி­யது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த அன்­றைய அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண இதய சுத்­தி­யுடன் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் அன்று ஏற்­பட்ட சர்­வ­தேச நெருக்­க­டி­களைக் கூட தடுத்­தி­ருக்க முடியும். ஆனால், சர்­வ­தேச அழுத்­தங்­களைக் கூட கணக்­கி­லெ­டுக்­காத அன்றைய அரசாங்கமானது அரசியல் தீர்வுக்கான முன்முயற்சிகளை எடுத்திருக்கவில்லை. தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தபோதிலும் அதனை அரசாங்கத் தரப்பானது கண்டுகொள்ளவேயில்லை.

இதனால்தான் அரசியல் தீர்வுகாணும் நடவடிக்கையானது தற்போதுவரை இழுத்தடிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்கும் நிலைமை முன்னைய ஆட்சிக் காலத்தில் நிலவியது. இவ்வாறான நிலையில்தான் தற்போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமது ஆட்சி இழைத்த தவறு தொடர்பில் தற்போது ஒத்துக்கொண்டிருக்கிறார்.

எனவே, இனியாவது முன்னைய தவறை உணர்ந்து தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எடுக்கும் அரசியல் தீர்வுக்கான முன் முயற்சி களுக்கு மஹிந்த அணியினர் ஆதரவு வழங்கினால் அது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.