Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலப்பு நீதிமன்றம் வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அவசியம்

Featured Replies

கலப்பு நீதிமன்றம் வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அவசியம்

222-45a51e23ce5f6d2425286deb3b6075bbf4b2dcdb.jpg

 

(ரொபட் அன்டனி)
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணி பரிந்துரை  


விசேட வழக்குரைஞர் அலுவலகம்

சர்வதேச குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பது

சட்டவிரோதமானது

சிறுபான்மை மக்கள் குறித்த ஆணைக்குழு

காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவதுடன் அதன் ஒவ்வொரு அமர்விலும் சர்வதேச நீதிபதி ஒருவராவது இடம்பெறவேண்டியது அவசியம் என்று நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்

தறியும் செயலணி பரிந்துரை செய்துள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப் பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.  இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இராஜாங்க அமைச்சர்   

ஏ.எச்.எம். பௌசி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குறித்த அறிக்கையானது மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை செயணியின் தலைவர் மனோரி முருத்தொட்டுகம வெ ளியிட்டுவைத்தார்.

அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு ,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவது அவசியம்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளை தெரிவு செய்யும் முறையானது நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களின் ஆலோசனையுடன் அரசியலமைப்பு பேரவையினால் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அனைத்து விடயங்களும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

தெரிவு செய்யப்படும் நியமங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். போதியளவு எண்ணிக்கையான நீதிபதிகளை நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகளில் ஒருவரோ பலரோ வருகை தராவிடினும் காலதாமதம் ஏற்படாது.

ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளும் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதியும் இருப்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை பொறுத்தவரை எல்லா இனக்குழுக்களினதும் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.

போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் உட்பட பாலியல் வன்முறை குற்றங்களுக்கும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் விசேட நீதிமன்ற ஆணை வழங்கப்பட வேண்டும்.

விசேட வழக்குரைஞர் அலுவலகம் காலதாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களின் பரப்பெல்லை, பாதிக்கப்பட்டோரின் பன்முகத் தன்மை, குற்றம் புரிந்தோரின் வகைகள் என்பவற்றை பிரதிபலித்து வழக்குரைஞர் அலுவலகத்தின் தேர்வு வடிவமைக்கப்பட வேண்டும்.

விசேட வழக்குரைஞர் அலுவலகம் தனக்கென்று சொந்த விசாரணை அலகை கொண்டிருத்தல் வேண்டும். அதன் அலுவலர்கள் சர்வதேச பிரதிநிதிகளாகவும் இருக்க வேண்டும்.

பயங்கரவாத விசாரணை பிரிவு போன்ற அலுவலகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விசாரணை அலகில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது.

யுத்தக்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமலாக்குதல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான மன்னிப்பு சட்டவிரோதமானது என்பதுடன் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட முன்னாள் தமிழ் தீவிரவாத இயங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த முன்னாள் போராளிகளின் நிலைமை பரிசீலிக்கப்பட வேண்டும்.

காணி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும். அரச காணி பகிர்ந்தளிப்பு திட்டத்திற்கு உட்படாத மலையக தமிழர்களும் இதில் உள்ளடங்குவர்.

சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். இந்த ஆணைக்குழுவானது அரசியலமைப்பு பேரவையினால் சிபாரிசு செய்யப்படும் பெயர் பட்டியலிலிருந்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-04#page-1

  • தொடங்கியவர்
போர்க்குற்றச்சாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டு நீதிபதிகள் -நல்லிணக்க அறிக்கையில் பரிந்துரை
போர்க்குற்றச்சாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டு நீதிபதிகள் -நல்லிணக்க அறிக்கையில் பரிந்துரை
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ளாமல் நழுவியுள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 2016 ஜனவரி 26ஆம் திகதி நியமிக்கப்பட்ட, மனோரி முத்தெட்டுவேகம தலைமையி லான இந்த செயலணி 1306 குழுக் கலந்துரையாடல்கள், 4872 பொதுக்கூட்டங்கள், 1048 எழுத்துரு சமர்ப்பித்தல்களின் மூலம் பெற ப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அறிக்கையை தயார் செய்துள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி  தயாரிக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களான 11 பேரும் கையெழுத்திட்டிருந்த இந்த அறிக்கை யை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
 
எனினும், அறிக்கை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி இழுத்தடித்து வந்தார். இறுதியாக நேற்று இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
 
எனினும் நேற்றைய நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. இந்த நிலையில்,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவே அறிக்கையை பெற்றுக் கொண்டார்.
 
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
report-submit-1.jpg
இந்த அறிக்கையில் போர்க்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறிமுறைகள் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும்..
 
அத்துடன் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள், காணாமற்போதல், பாலியல் வல்லுறவு போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு அளித்தல், சட்டவிரோதமானது.
 
பாதிக்கப்படட மக்களுக்கு நீதிவழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
 
உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளை தெரிவுசெய்யும் முறையானது நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களின் ஆலோ சனையுடன் அரசியலமைப்பு பேரவையினால் வகுக்கப்பட வேண்டும்.
 
குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை பொறுத்தவரை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆலோசனை பெறப்பட வேண்டும்.
 
அனைத்து விடயங்களும் மக்களுடன் பகிரப்பட வேண்டும் என்பதோடு தெரிவுசெய்யப்படும் நியமங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
 
தாமதங்களை தவிர்ப்பதற்காக போதியளவு எண்ணிக்கையான நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும்.  
 
நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பொறுத்தவரை எல்லா இனக்குழுக்களினதும் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.
 
போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் உட்பட பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கும், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் விசேட நீதிமன்ற ஆணை வழங்கப்பட வேண்டும.
 
விசேட வழக்குரைஞர் அலுவலகம் காலதாமதமின்றி அமைக்கப்பட வேண்டும்.
 
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சர்வதேச குற்றங்களின் பரப்பெல்லை, பாதிக்கப்பட்டவர்களின் பன்முகத்தன்மை, குற்றம் புரிந்தோரின் வகைகள் என்பவற்றை பிரதிபலித்து, வழக்குரைஞர்கள் அலுவலகத்தின் தேர்வு வடிவமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
விசேட வழக்குரைஞர் அலுவலகம் தனக்கென்று சொந்த விசாரணை அலகை கொண்டிருத்தல் அவசியம் என்பதோடு அதன் அலுவலர்கள் சர்வதேச பிரதிநிதிகளாகவும் இருத்தல் வேண்டும்.
 
பயங்கரவாத விசாரணைப் பிரிவு போன்ற அலுவலகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விசாரணை அலகில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது.
 
போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள், சித்திரவதைகள், திட்டமிடப்பட்டு காணாமல் போகச்செய்தல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான மன்னிப்பு சட்டவிரோதமானது என்பதுடன் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட முன்னாள் தமிழ் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகொண்டிருந்த முன்னாள் போராளிகளின் நிலைமை பரிசீலிக்கப்பட வேண்டும்.
 
காணி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும். அரச காணி பகிர்ந்தளிப்பில் சேர்க்கப்படாத மலையகத் தமிழர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும்.
 
சிறுபான்மையினருக்கான உரிமைகளை உறுதிப்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழுவானது அரசியலமைப்புப் பேரவையினால் சிபாரிசு செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் இருந்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.
 
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை, இணையத்தளத்திலும் மும்மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22238

  • தொடங்கியவர்

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் அமைக்க குழு பரிந்துரை: ஏற்க மறுக்கும் அரசு

கொழும்பு

 

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி, அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற, சர்வதேச குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாக கருதப்படும் வகையில், இலங்கை சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட இந்த செயலணி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாகவும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் மக்களிடம் ஆலோசனை நடத்தியது. மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான அந்தக் குழுவின் இறுதி பரிந்துரைகள், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிர, எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் முன்னிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

அதில் பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்து, அரசின் மீதும், அரசு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றங்களாகிய போர்க்குற்றம், மானுடத்திற்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறிய குற்றம், சித்திரவதை, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களாகும். இவற்றுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானதாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொருத்தவரை, முற்றிலும் உள்நாட்டு விசாரணை நடைமுறைகள் நம்பிக்கைக்குரியதாக இருக்காது என தீவிரமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மற்ற பகுதிகளிலும், படையினரிடமும் நடத்திய விசாரணையில், சர்வதேச விசாரணைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பிரிவுகளில் உள்நாட்டு நிபுணத்துவம் குறைவாக உள்ள நிலையில், சர்வதேச நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் 

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு, இலங்கை அரசின் அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச பங்களிப்புக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதையும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்த செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு, அரசு தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் என்பதைவிட, கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற வகையில் தங்கள் பரிந்துரைகள் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுதவிர, குறிப்பாக, காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், இழப்பீடு வழங்க நடவடிக்கை, விசேட நீதிப்பொறிமுறை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தங்கள் பரிந்துரைகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரையை ஏற்க முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என்று சித்ரலேகா மெளனகுரு தெரிவித்தார். இருந்தபோதிலும் தங்களுக்கு இன்னும் ஒரு நம்பிக்கைக் கீற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38508400

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.