Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை துறைமுகத்தின் அனைத்து எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கே

Featured Replies

திரு­மலை துறை­மு­கத்தின் அனைத்து எண்ணெய் குதங்­களும் இந்­தி­யா­வுக்கே

 

அமைச்சர் சந்­திம வீரக்­கொடி கூறு­கிறார்

(பா.ருத்­ர­குமார்)

திரு­கோ­ண­மலை துறை­முகம் தொடர்பில் 2002ஆம் ஆண்டில் இந்­ தியா­வுடன் கைச்சாத்­தி­டப்பட்ட ஒப் பந்தத்தின் பிர­காரம் அத்­து­றை­மு­கத் தின் அனைத்து எண்ணெய் குதங்­களும் இந்­தியா வசமே உள்­ளன. முன் னைய அர­சாங்கங்­களும் அத­னை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தன. அதனால் எமது நாட்­டி­லுள்ள குறித்த துறை­முக அபி­வி­ருத்­திக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி அதி­லி­ருந்து வரும் ஐம்­பது வீதத்­தி­லான லா­பத்­தினை இலங்­கைக்கு பெற்­றுக்­கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார். பெற்­றோ­லிய வள அமைச்சின்  

அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில்

கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

 தற்­போது வரட்சி குறித்து பேசப்­ப­டு­கின்­றது. கடந்த காலத்தில் குறை­வான மழை­வீழ்ச்சி பதி­வா­னதால் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­கூடும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்ள வறட்சி ஏற்­பட்­டாலும் அந்த சம­யத்தில் தடை­யின்றி மின்­சார வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்கள் சக்தி அமைச்சி நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது.

அதற்­கான அனைத்து உத­வி­க­ளையும் வழங்கும் பொறுப்பு எமது அமைச்­சினை சாரந்­துள்­ளது. குழாய் வெடிப்பு சிக்கல் கார­ண­மாக தற்­போது எண்ணெய் தாங்கி பவு­சர்கள் ஊடாக இந்த உத­வி­களை அமைச்சு முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதனால் கடந்த நாட்­களில் முத்­து­ரா­ஜ­வல பகு­தியில் பாவ­னை­யின்றி கிடந்த எண்ணெய் குழா­யினை சீர­மைத்து எண்ணெய் கப்பல் ஒன்றின் ஊடாக வந்த எண்­ணெ­ணாைய இறக்­கு­மதி செய்தோம்.

எதிர்­கா­லத்­திலும் அவற்றை பயன்­டுத்த முடியும். அதே போன்று திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எண்ணெய் குழாய்­க­ளையும் சீர­மைத்து அப்­ப­கு­தியில் உள்ள மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளுக்கும் எண்­ணெயை பகிர்ந்­த­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அம்­பாந்­தோட்­டை­யிலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுப்­பதால் தடை­யின்றி மின்­சாரம் வழங்­கப்­படும்.

அதனால் அந்த அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் திட்­ட­மிடல் குழுவின் ஒத்­து­ழைப்பும் கிடைக்கும். அதே­நேரம் சப்­பு­கஸ்­கந்த எண்ணை சுத்­தி­ரிப்பு நிலை­யத்­தினை கனி­ய­வள முகா­மைத்­துவம் தொடர்­பி­லான நிலை­ய­மாக மாற்றி பண்­டா­ர­நா­யக்க பயிற்சி நிலை­யலம் என்ற பெயரில் திறந்து வைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இங்கு பயிற்சி பெறு­கின்­ற­வர்கள் அரபு நாடு­களில் உள்ள தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் வெளி­நாடு செல்லும் பெண்­களின் தொகை­யினை நாம் கட்­டுப்­ப­டுத்த முயற்­சிக்­கின்றோம். நாட்­டிலும் செழிப்பு ஏற்­படும்

திரு­மலை விவ­காரம்

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்திற் சென்ற பெற்­றோலி வளக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் அதி­கா­ரிகள் 20 பேர் இந்­திய இந்­திய அதி­கா­ரிகள் சிலரால் தடுத்து வைக்­கப்­பட்­டமை குறித்த விவ­காரம் அண்­மையில் பெரி­தாக பேசப்­பட்­டது.

 எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூடும் என்று எதிர்வு கூறப்­படும் வறட்­சியின் போது எவ்­வாறு எண்ணெய் வழங்கல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் ஆரா­யவே அவர்கள் அங்கு சென்­றி­ருந்­தார்கள். அதன் போது தான் அறி­யா­மையால் அந்த தவறு நேர்ந்­தது. அதற்கு தற்­போது தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் இந்த துறை­முகம் இந்­தி­யா­விற்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறப்­ப­டு­வது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தீர்­மானம் அல்ல இது 2002 ஆண்டே இந்­தி­யா­விற்கு கைய­ளிக்­கப்­பட்­டு­விட்­டது. அதன் பின்னர் இரு அர­சாங்­கங்கள் ஆட்சி செய்­தன. இந்த மூன்று அர­சு­களும் குறித்த இந்­தி­யா­வு­ட­னான குறித்த ஒப்­பந்­தத்­தினை ஏற்­றுக்­கொண்­டுதான் செயற்­பட்­டது.

இதனை நாம் தற்­போது பாதிக்கு பாதி அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் பங்­கேற்று நூற்­றுக்கு 50 வீத்­தி­லான லபாத்­தினை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றோம். எவ்வாறாயினும் 2002 ஆம் ஆண்டு ஒப்பந்த்தின் பிரகாம் திருமைலயில் உள்ள அனைத்து எண்ணெய் தாங்கிகளுக்கும் இந்தியாவிடமே கையளிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் நாம் இந்தியா,சீனா,அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயற்பட்டாலும் நட்புநாடுகள் என்ற கண்ணேட்டத்தில் பார்த்தாலும் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை இலங்கை அரசாங்கமே எடுக்கும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.