Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் வழக்கு தீர்ப்பில் உடன்பாடு இல்லை : ராஜித

Featured Replies

ரவிராஜ் வழக்கு தீர்ப்பில் உடன்பாடு இல்லை : ராஜித

 

 

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை  பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Untitasdasdled-8.jpg

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ரீதியாக வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளதாக தோன்றுகிறது.

குறித்த வழக்கினை மேன்முறையீடு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கைக்கு ஏற்ப குறித்த வழக்கு விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப் போவதில்லையெனவும், வெளிநாட்டு நீதிபதிகளின் தொழினுட்பம் பயன்டுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/15070

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பில் எனக்கும் பிரச்சினையுள்ளது – ராஜித சேனாரத்ன

 

 

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பில் எனக்கும் பிரச்சினையுள்ளது – ராஜித சேனாரத்ன
 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.
கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலைத்தீர்ப்பை அடுத்து வெளிநாட்டு நீதிபதிகளின் தலைமையில் இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

ராஜித சேனாரத்ன: இல்லை. சர்வதேச விசாரணை தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பில் எனக்கும் பிரச்சினை காணப்படுகின்றது. அது தொடர்பில் சட்ட மா அதிபருக்கும் கூறியிருக்கின்றேன். இந்த வழக்கு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு சட்ட மா அதிபரும் நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டின் சட்ட மா அதிபரே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என மேன்முறையீடு செய்வதற்கு முன்வந்துள்ள நிலையில் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

கேள்வி: இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை காணப்படுகின்றது?

ராஜித சேனாரத்ன: இந்த தீர்ப்பின்படி யாரும் கொலை செய்யப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் படி, ரவிராஜ் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். அவரது மெய்க்காவலர்களையும் சுட்டுக்கொன்றுள்ளார். இதுதான் எனக்குள்ள பிரச்சினை.

 

 

http://newsfirst.lk/tamil/2017/01/ரவிராஜின்-கொலை-வழக்கு-தீ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.