Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கமானது ஸ்திரமாகவே உள்ளது

Featured Replies

தேசிய அரசாங்கமானது ஸ்திரமாகவே உள்ளது

p18-ceaf95bec7debd5c73a7e1c1f98beb007dd24eed.jpg

 

எம்.பி.பதவியைப் பாதுகாக்க மஹிந்த முயற்சி
(எம்.எம்.மின்ஹாஜ்)

தேசிய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. எமக்குள் பிள­வினை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்கின்­றனர். நானும் ஜனா­தி­ப­தியும் ஐக்­கி­யத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம். எமது அபி­வி­ருத்திப் பய­ணத்தை ஒரு­போதும் தடுத்து நிறுத்த முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தின் ஸ்திரத்தன்மை  தொடர்ந்தும் பாது­காக்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

இந்த வரு­டத்தில் 'எட்கா' ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும். அதே­போன்று சீனா, சிங்­கப்பூர், ஜப்பான் , பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் வர்த்­தக உடன்­ப­டிக்கைகளை கைச்­சாத்­தி­ட­வுள்ளோம். முத­லீட்­டா­ளர்கள் வருகை தராமல் இல்லை. இலங்­கைக்கு முத­லீட்­டா­ளர்கள் வருகை தந்த வண்­ண­முள்­ளனர் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிர­தமர் பத­விக்­காக போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது எம்.பி பத­வியை பாது­காப்­ப­தற்கு போராடி வரு­கின்றார். மேலும் கடனை செலுத்தும் எமது திட்­டங்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்தால் வற் வரியை மேலும் 5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பல­மிக்­கதோர் இலங்கை பொரு­ளா­தார திட்­டத்தை சமர்ப்­பித்து நேற்று அல­ரி­மா­ளி­கையின் திறந்த வெளி அரங்கில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

தேசிய அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி திட்­டத்தின் இரண்டாம் கட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். முதலாவது ஆண்டில் அர­சாங்­கத்தின் ஸ்திர தன்­மையை ஏற்­ப­டுத்­தினோம். அத்­துடன் இரண்­டா­வது ஆண்டில் அதி­க­ள­வி­லான கடன் தொகையை மீள செலுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம். தற்­போது மூன்­றா­வது ஆண்டில் துரித அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். இதன் பிர­காரம் அனை­வ­ருக்கும் நன்மை பயக்கும் பல­மிக்­கதோர் இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப திட்­ட­மிட்­டுள்ளோம்.

இரு பிர­தான விமான நிலை­யங்கள் மற்றும் துறை­மு­கங்­களை கொண்ட நாடாக இலங்­கையை மாற்­ற­வுள்ளோம். வான் மற்றும் கடல் மார்க்­கங்கள் மூல­மாக இலங்­கையை வர்த்­தக கேந்­தி­ர­நி­லை­ய­மாக மாற்­றி­ய­மைக்க உள்ளோம். இலங்கை இந்து சமுத்­தி­ரத்தின் இத­ய­மாகும். இந்த கார­ணியை அடிப்­ப­டை­யாக கொண்டு உலகின் போக்­கு­வ­ரத்து கேந்­திர நிலை­ய­மாக மாற்றி எமது இலக்­கு­களை அடைந்­துக்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அத்­துடன் நிதி­யியல் கேந்­தி­ர­மா­கவும் மாற்­ற­வுள்ளோம்.

இந்த திட்­டத்தின் பிர­காரம் இரண்டு பிர­தான வல­யங்­களை நாம் ஏற்­ப­டுத்­த­வுள்ளோம். தென்­மேற்கு பொரு­ளா­தார வலயம் மற்றும் வட­கி­ழக்கு பொரு­ளா­தார வலயம் ஆகிய இரு பிர­தான வல­யங்­களை உரு­வாக்­க­வுள்ளோம். இதன்­மூ­ல­மாக மெகா பொலிஸ் மாந­கர அபி­வி­ருத்தி திட்டம், நிதி நகரம், கண்டி நகர திட்டம் என்பவற்றை முன்னெடுப்போம். கண்டி முதல் மொன­ரா­கலை வரையில் பொரு­ளா­தார வல­யங்­களை உரு­வாக்­க­வுள்ளோம். மேலும் குறித்த பொரு­ளா­தார வல­யத்தின் ஊடாக தென் மற்றும் மேல் மாகா­ணத்தை இரு விமா­ன­நி­லை­யங்கள் துறை­மு­கங்­களை கொண்­ட­தாக மாற்­ற­வுள்ளோம். அத்­துடன் அதி­வேக பாதை நிர்­மாண பணிகள் மூலம் அபி­வி­ருத்தி இலக்­கு­களை வெற்­றிக்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ளோம். அம்­பாந்­தோட்டை மற்றும் குரு­ணா­கல் பிரதேசங்களில் கைத்­தொழில் பேட்­டை­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். சுற்­றுலா துறையை மேம்­ப­டுத்த கற்­பிட்­டியை சுற்­றுலா வல­ய­மாக மாற்­ற­வுள்ளோம். அநு­ரா­த­புரம் மற்றும் பொலன்­ன­று­வையில் பாரிய திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

அத்­துடன் யுத்­த­த்தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மாகா­ணத்­தில் விசேட வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். இதனை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாக வட­கி­ழக்கு பொரு­ளா­தார வலயம் நிறு­வப்­படும். திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு இந்­தியா, சீனா மற்றும் அமெ­ரிக்­கா­வுடன் பேசி வரு­கின்றோம். விவ­சாய துறையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­த­வுள்ளோம்.

வர்த்­தக உடன்­ப­டிக்­கை­களை கைச்­சாத்­திட்டு முத­லீ­டு­களின் மூல­மாக 4000 மில்­லியன் வரு­மா­னத்தை பெற உத்­தே­சித்­துள்ளோம். கடந்த ஆட்­சியின் போது கடன் அழ­கான முறையில் பெறப்­பட்­டது. ஆனால் இதனால் சிக்­கலில் தவிப்­பது எமது அர­சாங்­க­மாகும். பத்து வருடம் என்ன செய்­தனர். ஒரு குடும்பம் மாத்­தி­ரமே முன்­னே­றி­யது.

அம்­பாந்­தோட்டைடையில் முத­லீட்டு வல­யங்கள் உரு­வாக்­கப்­படும் போது எக்­கா­ரணம் கொண்டு அப்­பி­ர­தேச மக்­களை விரட்­ட­மாட்டோம். விகா­ரை­களை அகற்­ற­மாட்டோம். ஏன் தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். தலதா மாளி­கையை உடைக்க திட்­ட­மிட்­ட­வர்கள், அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடத்தை இல்­லாமல் செய்ய முற்­பட்­ட­வர்கள் தற்­போது விகா­ரைகள் தொடர்பில் பேசு­கின்­றனர். எமது அபி­வி­ருத்தி பணி­களை குள­று­படி செய்­யவே எதி­ர­ணி­யினர் திட்­ட­மிட்டு வரு­கின்­றனர். எந்த குழப்பம் விளை­வித்­தாலும் கோஷ­மிட்­டாலும் எதி­ர­ணி­யினால் எமது பய­ணத்தை தடுத்து நிறுத்த முடி­யாது. அதற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அத்­துடன் முத­லீட்­டா­ளர்­களுடன் நாம் ஒரு­போதும் தரகு பணம் பெறு­வ­தற்­கான டீல் போட­வில்லை.

நாட்டின் கடன் தொகை பாரிய சுமை­யா­கவே உள்­ளது. இதன்­கா­ர­ண­மா­கவே வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு எமது வளங்­களை குத்­தகை அடிப்­ப­டையில் வழங்கி வரு­மா­னத்தை ஈட்டி வரு­கின்றோம். இவ்­வாறு செய்­யாமல் என்ன செய்­வது. வற் வரியை அதி­க­ரிக்க சொல்­கின்­றீர்­களா? இந்த திட்­டங்கள் செய்ய முடி­யா­விடின் வற் வரியை இன்னும் 5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும் என்றார்.

கேள்வி . முத­லீ­டு­கள் பற்றி பேசி­னாலும் இது­வரை எந்­த­வொரு முத­லீட்­டா­ளர்­களும் வருகை தர­வில்லை என எதி­ர­ணி­யினர் கூறு­கின்­ற­னரே?

பதில் . இல்லை. தற்­போ­துதான் நாட்­டிற்கு முத­லீட்­டா­ளர்கள் வருகை தரு­வ­தற்கு தொடங்­கி­யுள்­ளனர். இனி­மேலும் முத­லீ­டுகள் வரும்.

கேள்வி . நாட்டின் ஸ்திர தன்மை கேள்­வி­கு­றி­யா­கி­யுள்­ளதே. இதனால் பாதிப்பு ஏற்­ப­டாதா?

பதில் நாட்டின் ஸ்திர தன்­மைக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. தேசிய அர­சாங்கம் ஸ்திர தன்மை கொண்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது. அதனை நாம் பாது­காப்போம்.

கேள்வி . இவ்­வா­றான திட்­டங்கள் ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டாலும் அது இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லையே?

பதில் . இல்லை. நாம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்றோம். கட்டம் கட்­ட­மாக அபி­வி­ருத்தி ஆரம்­பிக்­கப்­பட்ட வண்­ண­முள்­ளன.எதி­ர­ணி­யினர் குழப்பம் விளை­வித்த வண்­ண­முள்­ளனர். பிர­தமர் பத­விக்­காக போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது எம்.பி பத­வியை தக்­க­வைப்­ப­தற்கு போராடி வரு­கின்றார்.

கேள்வி. தேசிய அர­சாங்­கத்­திற்குள் பிரச்­சி­னைகள் இருக்கும் போது எப்­படி அபி­வி­ருத்தி இலக்­கு­களை வெற்­றிக்­கொள்ள முடியும்?

பதில் . பிரச்சினைகள் உள்ளதாக யார் கூறியது.அப்­படி ஒரு பிரச்­சினை இல்லை. தேசிய அர­சாங்­கத்தில் நாம் ஒற்­று­மை­யு­டனே செயற்­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி. எனினும் இரு பிர­தான கட்­சி­யினர் வெவ்­வேறு முரண்­பா­டான கருத்­து­களை தெரி­வித்த வண்­ண­முள்­ள­னரே?

பதில் . கருத்­துகளை தெரி­விக்­கலாம். கருத்து முரண்­பா­டுகள் இருக்­கலாம். எனினும் நானும் ஜனா­தி­ப­தியும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி . எட்கா ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும்.எட்கா போன்று வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் திட்டம் உள்ளதா?

பதில் .எட்கா ஒப்பந்தம் இவ்வருடத்தில் கைச்சாத்திடப்படும். இதன்மூலமாக பல்வேறு பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று ஆசிய முதலீடுகளை அதிகரிக்கவே ஆர்வம் கொண்டுள்ளோம். அத்துடன் பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாதிட திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி. அமெரிக்காவுடன் வர்த்தக உடன் படிக்கை கைச்சாத்திடப்படுமா?

பதில் . அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியொருவர் பதவிக்கு வந்துள்ளார். அமெரிக்காவின் தற்போதைய கொள்கையை இனங்காண முடியாமல் உள்ளது. அமெரிக்காவின் கொள்கை தொடர்பில் தெளிவு ஏற்பட்ட பின்னர் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பில் ஆராய்வோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.