Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி!

Featured Replies

புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி!

 

 
book_madurai_2997701f.jpg
 
 
 

சென்னை புத்தகக் காட்சி-2017 நேற்று தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் கொண்டாட்டம் இது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊடகங்கள் என்று ஒருசேரக் கொண்டாடும் பெருநிகழ்வு! பல ஆண்டுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்த இந்த விழா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக உருவெடுத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான சமூக மாற்றம் என்றே கருத வேண்டும்.

வலைப்பூக்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வருகையும் கூட இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். ஊடகங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்னும் நிலையில், சமூக ஊடகங்கள் பெரிய வரப்பிரசாதமாகவே அமைந்தன. எழுத்தாளர்கள் குறித்தும் படைப்புகள் குறித்தும் புத்தகக் காட்சி குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது அந்தப் பரப்பிலிருந்து நீண்டு ஊடகங்களின் எல்லையைத் தொட்டது. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் புத்தகக் காட்சிகளையும் ஊடகங்கள் பொருட்படுத்தி, முக்கிய இடம் அளிக்க ஆரம்பித்தன. இவையெல்லாம் சேர்ந்து புத்தகக் காட்சிகளைப் பெருவெற்றியடைய வைத்தன.

எனினும் 2016 ஜனவரியில் நடக்கவிருந்த 'சென்னை புத்தகக் காட்சி', 2015 இறுதியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் தள்ளிப்போனதால் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று அனைத்துத் தரப்புக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே, மழை வெள்ளத்தில் புத்தகங்களைப் பறிகொடுத்திருந்த பதிப்பாளர்களுக்கும் விற்பனை யாளர்களுக்கும் புத்தகக் காட்சி தள்ளிப்போனதால் ஏற்பட்ட பாதிப்பு சொல்லில் அடங்காது.

இந்நிலையில், 2016 ஜூன் மாதம் புத்தகக் காட்சி நடைபெற்றது. அப்போதும் இடையிடையே மழை பெய்ய புத்தகக் காட்சியில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. என்றாலும், பெரும்பாலான பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஓரளவு ஆசுவாசத்தை அந்தப் புத்தகக் காட்சி தந்தது.

இதையடுத்து 2016 இறுதியில் பணமதிப்பு நீக்கம், வார்தா புயல் போன்றவற்றால் புத்தக உலகினர் பெரிதும் கலங்கிப்போயிருந்தார்கள். பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் கலக்கத்தை நீக்கும் வகையில் தற்போது புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் புத்தகங்கள் வாங்குவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

புத்தக உலகினரின் கலக்கத்தை நீக்குவது மட்டுமல்ல, இடையறாத அறிவு மரபை முன்னெடுத்துச் செல்வதும் வாசகர்களின் கையில்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கையை வாசகர்கள் நிச்சயம் காப்பாற்ற வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் புடைசூழ புத்தகக் காட்சியை நோக்கிப் படையெடுக்க வேண்டும். முன்னுதாரணமில்லாத ஒரு அறிவு நிகழ்வாக இந்தப் புத்தகக் காட்சியை மாற்ற வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/editorial/புத்துயிர்-ஊட்டட்டும்-2017-புத்தகக்-காட்சி/article9465487.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

வாசகர் திருவிழா 2017 - தொடங்கியது அறிவுலகப் பெருவிழா!

 

 
bookfair_3114581f.jpg
 
 
 

700 அரங்குகள் | 10,00,000 தலைப்புகள் | 1 கோடிப் புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது! 2017-ம் ஆண்டை இதைவிடப் பெரிய கொண்டாட்டத் துடன் வரவேற்க முடியாதல்லவா! தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தகக் காட்சிகள் நடந்தாலும் சென்னை புத்தகக் காட்சிக்குக் கூடுதல் விசேஷம் இருக்கவே செய்கிறது. 2015, 2016 ஆகிய ஆண்டுகளின் வடுக்கள் நெஞ்சில் இருந்தாலும் அவற்றையும் மீறிய உற்சாகத்துடன் சென்னைப் புத்தக காட்சி தொடங்கியிருக்கிறது.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 40-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) நடத்தப்படுகிறது. நேற்று (ஜன-6) தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி ஜன-19 வரை நடக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக வேட்டையாடலாம்!

2015 டிசம்பரில் சென்னை மழை வெள்ளத்தைத் தொடர்ந்து 2016 ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடத்த முடியாததால், ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டோ வழக்கம்போல் ஜனவரி மாதமே புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. சுமார் 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகள், 1 கோடிப் புத்தகங்கள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிகள்

நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்துத் தலைமை உரையாற்றினார் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி செட்டி, திரைப்பட இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பபாசி டைரக்டரியின் முதல் பிரதியைக் கல்வி அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். பபாசி செயலாளர் க.சு. புகழேந்தி நன்றியுரை வழங்கினார்.

விருதுகள்

தொடக்க நிகழ்ச்சியில், சிறந்த தமிழறிஞருக்கான 'பாரி செல்லப்பனார் விருது' கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான 'ஆர்.கே. நாராயண் விருது' பேராசிரியர் எஸ்.ஏ.சங்கர நாராயணனுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான 'நெல்லை சு. முத்து விருது' டாக்டர் எஸ்.நரேந்திரனுக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான 'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது' ப்ரியா பாலுவுக்கும், சிறந்த பதிப்பாளருக்கான 'பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது' அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கும், சிறந்த விற்பனையாளருக்கான 'பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது' மெட்ராஸ் புக் ஹவுஸுக்கும், 'சிறந்த நூலகர் விருது' கு. தாமோதரனுக்கும் வழங்கப்பட்டன.

புத்தகக் கலாச்சாரம் செழுமைப்படுவதற்கு புத்தகக் காட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதம் முதல் நாளிலேயே வாசகர்கள் திரண்டு வந்தது ஊக்கமூட்டும் காட்சி! வாருங்கள் வாசகர்களே பெரு வெற்றியடையச் செய்வோம் இந்தப் புத்தகக் காட்சியை!

*

'தி இந்து' அரங்கு: 43 & 44

இந்தப் புத்தகக் காட்சியில் 'தி இந்து' அரங்கு (எண்:43 & 44) வாசகர்களை பெருமகிழ் வுடன் வரவேற்கிறது. 'ஆங்கிலம் அறிவோம்', 'பெண் எனும் பகடைக்காய்', 'தொழில் ரகசியம்', 'வீடில்லா புத்தகம்', 'வேலையை காதலி', 'கடல்', 'மெல்லத் தமிழன் இனி', 'காற்றில் கலந்த இசை' போன்ற நூல்களுடன் புதிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாமின் இறுதி நூலான 'என் வாழ்வில் திருக்குறள்', அசோகமித்திரனின் 'மவுனத்தின் புன்னகை', கருந்தேள் ராஜேஷின் 'சினிமா ரசனை', ஆயிஷா நடராஜனின் 'என்னைச் செதுக்கிய மாணவர்கள்' போன்ற புதிய வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 'தி இந்து'வின் ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

0001_3114582a.jpg

0002_3114583a.jpg

0003_3114584a.jpg

0004_3114585a.jpg

 

http://tamil.thehindu.com/opinion/columns/வாசகர்-திருவிழா-2017-தொடங்கியது-அறிவுலகப்-பெருவிழா/article9465477.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

புத்தக வெளிச்சத்தில் விழித்திருந்த நள்ளிரவு

 

 
book1_3111965f.jpg
 
 
 

நவம்பரில் பண மதிப்பு நீக்கம், டிசம்பரில் வார்தா புயல் என மாதந்தோறும் ஏதாவதொரு தாக்குதலில் சிக்கிய மக்களை மெல்ல மீட்டெடுத்து, அறிவியக்கத்தின் பக்கமாய் அழைத்துவர 'தி இந்து' தமிழ் நாளிதழ் இரண்டாம் ஆண்டாய் முன்னெடுத்ததே 'புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்'.

'தி இந்து' சென்ற ஆண்டே விடுத்த அழைப்பை ஏற்று, பதிப்பகங்களும் புத்தகக் காதலர்களும் சேர்ந்து புத்தக இரவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டும் அப்படியான 'புத்தக இரவு உண்டா?' என்கிற வாசகர்களின் எதிர்பார்ப்பு பொய்க்காமல், சென்னையிலும் தமிழகத்தின் சில முக்கிய நகரங்களிலும் பல்வேறு புத்தகக் கடைகள் விடிய விடிய திறந்திருந்தன. வாசகர்களும் ஏராளமானோர் வந்திருந்து புத்தகங்களை ஆர்வமாய் வாங்கிச் சென்றனர். பல புத்தக நிலையங்களில் புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், வாசகர் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளும் சேர்ந்தே களைகட்டின.

புத்தகப் புத்தாண்டே வருக…

சென்னை மயிலாப்பூரிலுள்ள பரிசல் புத்தக கடையில் மாலை 6 மணிக்கே 'புத்தக இரவு' கலை, இலக்கிய, திரைப்படச் சந்திப்பரங்கமாகத் தொடங்கிவிட்டது.

'பேசும் புத்தகங்கள்' எனும் தலைப்பில் பத்திரிகையாளர் ஞாநியின் உரையோடு தொடங்கிய 'புத்தக இரவு' நிகழ்வில், இயக்குநர் பா.ரஞ்சித், சைதை ஜெ உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். வண்ணதாசன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்கள் நடைபெற்றன. 'தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு' எனும் தலைப்பில் 'தி இந்து' இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் உரையாற்றினார். ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் கவிதாபாரதி, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் ஆகியோர் கலந்துரையாடினர். கி.அ.சச்சிதானந்தன் 'இடைவெளி' காலாண்டிதழை வெளியிட்டு பேசும்போது, “இந்த புத்தக இரவு எனும் நிகழ்வு எனக்கு இளைஞர்கள்மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சந்திப்புகளைப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்தே செய்ய முன்வந்திருப்பது நல்ல தொடக்கம்” என்றார். கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவகாந்தன், இயக்குநர் ஜெ.வடிவேல், மோகன், பொன்.சுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 'பரிசல்' செந்தில்நாதன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

book2_3111966a.jpg

உயிர்ப்பான எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு

உயிர்மை பதிப்பகத்திலும் புத்தாண்டு புத்தகக் கொண்டாட்டம் களை கட்டியது. சாருநிவேநிதா, தமிழச்சி தங்கபாண்டியன் விநாயக முருகன், அபிலாஷ், சரவணன் சந்திரன், வெய்யில், ஷங்கரராம சுப்பிரமணியன், பிரபு காளிதாஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் வந்திருந்தனர். வாசகர்கள் எழுத்தாளர்களோடு உரையாடியதோடு, அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்களிலும் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர்.

“இந்த 'புத்தகங்களோடு புத்தாண்டு' எனும் சொல்லா டலை முன்மொழிந்து, அதை ஒரு இயக்கமாக்கிய 'தி இந்து'வுக்கு நன்றி” என்றார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

book3_3111963a.jpg

நட்பின் பரிசாக புத்தகங்கள்…

“நண்பர்களையும் அழைத்து வந்து, நீ என்ன புத்தகம் வேணும்னாலும் வாங்கிக்க. இது என்னோட புத்தாண்டுப் பரிசு என்று பலரும் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது…” என்றார் 'டிஸ்கவரி புக் பேலஸ்' உரிமையாளர் வேடியப்பன்.

நாச்சியாள் சுகந்தியின் கவிதை நூல், பிரபஞ்சனின் கட்டுரை நூல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர் நாவல் வெளியீடு என்று தொடர்ந்தன நிகழ்வுகள். முதல் நாள் மாலை 3 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுகள், புத்தாண்டு விடியலில் காலை 4 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தன.

மற்றொரு இரவல்ல இது…

பொள்ளாச்சி எதிர் வெளியீடு புத்தகக் கடையும் விடியும்வரை திறந்திருந்தது. எழுத்தாளர் ராஜன்குறை, கவிஞர் பெருந்தேவி ஆகியோர் வருகை தந்தனர்.

“கடந்த இரண்டு நாட்களாகவே வாசகர்கள் இந்த வருஷமும் கடை திறந்திருக்குமான்னு கேட்க ஆரம்பிச் சிட்டாங்க. சில நண்பர்கள் போன்லேயே ஆர்டர் கொடுத் தாங்க. வாசகர்கள் கூட்டம் கூட்டமா நள்ளிரவில் வந்து புத்தகம் வாங்கிக்கிட்டுப் போனாங்க. ஒரே நாள் இரவில் 52 ஆயிரம் ரூபாய்க்கு நூல்கள் விற்றன என்பது சாதாரண நிகழ்வல்ல” என்றார் அனுஷ்.

கவிதையால் வரவேற்பு…

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயத்தில் கவிஞர்கள் இரா.தெ.முத்து, தமிழ் மணவாளன், நா.வே.அருள், பாரி கபிலன் ஆகியோர் கவிதையாலேயே புத்தாண்டை வரவேற்றனர்.

“இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டின் முதல் நாள் சிறப்புத்தள்ளுபடியாக 50 சதவீத தள்ளுபடியில் நூல்களை வழங்கினோம். முதல் நாளே ரூ.2 லட்சத்திற்கும், புத்தக இரவில் மட்டும் ரூ.1 லட்சத்திற்கும் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன…” என்றார் பாரதி புத்தகாலய உரிமையாளர் க.நாகராஜன்.

புதிய வாசலும் புதிய பயணமும்…

“சென்னையில் அம்பத்தூர், ஸ்பென்ஸர் பிளாசா ஆகிய இரு இடங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் என்சிபிஹெச்.சின் கிளைகள் இரவு முழுக்க திறந்திருந்தன. எல்லா ஊர்களிலும் பல்லாயிரம் வாசகர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். 'தி இந்து' தொடங்கியிருக்கும் இந்த அறிவுக் கொண்டாட்டத்தில் நாங்களும் எப்போதும் இணைந்திருப்போம்…” என்றார் என்சிபிஹெச் பொதுமேலாளர் இரத்தினசபாபதி.

அறிவுத்தீ எங்கும் பரவட்டும்

பாரதி புத்தகாலயம், உயிர்மை, டிஸ்கவரி புக் பேலஸ் என பல இடங்களில் நடைபெற்ற புத்தக இரவு நிகழ்வுகளிலும் சுற்றிச் சுழன்றபடி பங்கேற்றுப் பேசியுள்ளார் இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார்.

”புத்தாண்டின் முதல் நாளை புத்தகங்களோடு கொண்டாடுவோம்; புத்தகங்களோடு தொடங்குவோம் என்று 'தி இந்து' முன்னெடுத்த இந்த முயற்சி வீண்போகவில்லை. அறிவின் தேக்கத்தை, தயக்கத்தை உடைக்கும் ஒரு நிகழ்வாக இந்த 'புத்தக இரவு' மாறியிருக்கிறது. ஒரு சமூக விழிப்புணர்விற்கான தூண்டுதலை இந்த புத்தாண்டு புத்தகக் கொண்டாட்டம் தந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவர் சார்பாகவும் 'தி இந்து'வுக்கு நெகிழ்வான நன்றி…” என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.

சென்னையில் மட்டுமல்ல, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, விழுப்புரம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் நள்ளிரவிலும் புத்தகக் கடைகள் திறந்திருந்தன. புத்தாண்டின் சிறப்புத் தள்ளுபடியாக 10 முதல் 50 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.

வலிய தீயை காற்று வளர்க்கும்

எந்த ஒரு நல்ல செயலுக்குமான வரவேற்பென்பது தாமதமாகத்தான் கிட்டும் என்று சொல்வார்கள். ஆனால், 'தி இந்து' முன்னெடுத்துள்ள இந்த 'புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்' தொடங்கிய இரண்டாம் ஆண்டிலேயே வாசகர்களாலும், எழுத்தாளர்களாலும், பதிப்பகங்களாலும் இவ்வளவு பெரிய வரவேற்பினைப் பெற்றிருப்பது நல்ல மாற்றமாக அமைந்திருக்கிறது.

மகாகவி பாரதி எழுதினான்:

“காற்று மெலிய தீயை அவித்து விடுவான்.

வலிய தீயை வளர்ப்பான்” என்று.

இந்த அறிவுத்தீயை காற்று மட்டுமல்ல; மக்களும் சேர்ந்தே வளர்த்தெடுப்பார்கள்.

http://tamil.thehindu.com/general/literature/புத்தக-வெளிச்சத்தில்-விழித்திருந்த-நள்ளிரவு/article9454528.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் - 1

 

 
கோப்பு படம்
கோப்பு படம்
 
 

விடுதலையின் பாதைகள் - அருட்தந்தை ச.தே. செல்வராசு அடிகளார், தொகுப்பு: அ.மார்க்ஸ் ரூ. 160, உயிர்மை வெளியீடு.

ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை - மிக்கேயில் ஃபெரியே (தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்), விலை: ரூ. 200, தடாகம் வெளியீடு.

1084-ன் அம்மா - மகாஸ்வேதா தேவி (தமிழில்: சு. கிருஷ்ணமூர்த்தி), ரூ. 130, பரிசல் வெளியீடு

போக புத்தகம் (குறுங்கதைகள்) - போகன் சங்கர், விலை: ரூ. 350, கிழக்கு வெளியீடு.

பாதுகாக்கப்பட்ட துயரம் - களந்தை பீர்முகம்மது, விலை: ரூ. 190, காலச்சுவடு வெளியீடு.

http://tamil.thehindu.com/opinion/columns/கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்-1/article9466519.ece?ref=relatedNews

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் - 1

விடுதலையின் பாதைகள் - அருட்தந்தை ச.தே. செல்வராசு அடிகளார், தொகுப்பு: அ.மார்க்ஸ் ரூ. 160, உயிர்மை வெளியீடு.

ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை - மிக்கேயில் ஃபெரியே (தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்), விலை: ரூ. 200, தடாகம் வெளியீடு.

1084-ன் அம்மா - மகாஸ்வேதா தேவி (தமிழில்: சு. கிருஷ்ணமூர்த்தி), ரூ. 130, பரிசல் வெளியீடு

போக புத்தகம் (குறுங்கதைகள்) - போகன் சங்கர், விலை: ரூ. 350, கிழக்கு வெளியீடு.

பாதுகாக்கப்பட்ட துயரம் - களந்தை பீர்முகம்மது, விலை: ரூ. 190, காலச்சுவடு வெளியீடு.

http://tamil.thehindu.com/opinion/columns/கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்-1/article9466519.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

5 கேள்விகள் 5 பதில்கள் - படைப்பில்தான் என்னால் எதிர்வினை ஆற்ற முடியும்: பெருமாள்முருகன்

 

 
 
பெருமாள்முருகன்
பெருமாள்முருகன்
 
 

நவீனத் தமிழ் இலக்கிய மாபெரும் சர்ச்சைகளில் ஒன்றான ‘மாதொருபாகன்’ சர்ச்சை இலக்கியக் களத்தின் வரம்புகளை உடைத்துக்கொண்டு, வன்மமான முகத்தைக் காட்டியபோது எழுத்துக்கே முழுக்குப்போட்டார் அந்த நாவலின் ஆசிரியர் பெருமாள்முருகன். அது தொடர் பான வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத் தாளருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், “எழுத்தாளர் உயிர்பெற்று எழுந்து, தான் சிறந்து விளங்கும் செயலில் எழுதுவதில் மீண்டும் ஈடுபடட்டும்” எனத் தீர்ப்பளித்திருந்தார். அதன்படி மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கும் பெருமாள்முருகன் ஒரு கவிதைத் தொகுப்பு (கோழையின் பாடல்கள்), ஒரு நாவல் (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை) என மீண்டும் இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறார்.

மீண்டும் எழுதத் தொடங்கும் உணர்வு எப்படி உள்ளது?

மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கெங்கோ அலைக்கழிந்த சிட்டுக்குருவி தன் சொந்தக் கூட்டை வந்தடைந்துவிட்ட காட்சிப் பிம்பம் மனத்தில் தோன்றுகிறது.

புதிய நாவலைப் பற்றிய குறிப்பைப் பார்க்கும்போது உங்களுக்கு எதிரான சர்ச்சைகளுக்கான எதிர்வினை போலத் தெரிகிறதே?

எதற்குமே படைப்புரீதியாகத்தான் என்னால் எதிர்வினை ஆற்ற முடியும் என்று தோன்றுகின்றது.

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

கொஞ்ச காலம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தேன். அதன்பின் கவிதைகள் என்னை எழுத வைத்தன. ‘கோழையின் பாடல்க’ளாக அவை உருக்கொண்டன. என் மனைவி, பிள்ளைகளோடு நேரம் செலவிட்டேன். மாணவர்களோடும் ஏதேதோ உரையாடினேன். நிறையத்தூங்கினேன். தொடர்பயணத்தின் தொந்தரவுக்கும் ஆட்பட்டேன். ‘சும்மா இருப்பதன் சுகம் அற்புதம்’ என்பதை உணர வாய்த்ததை இக்காலத்தின் பேறாகக் கருதுகிறேன்.

படைப்பு புண்படுத்துதல் குறித்த விவாதங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அத்தகைய விவாதத்தைத் தவிர்க்க இயலாது; விவாதம் அவசியமானதும்கூட. விவாதங்களைக் கடந்து வன்முறை உருக்கொள்வதைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றித்தான் ஆழமாக யோசிக்க வேண்டும்.

நெருக்கடியான காலகட்டத்தில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்த படைப்புகள், ஆளுமைகள்?

கடந்த இரண்டாண்டுகள் என்னால் வாசிக்கவே இயலாத காலம். என் மனநிலையைப் புரிந்துகொண்டு என் குடும்பமும் நண்பர்களும் வாசகர்களும் பல்வேறு வழிமுறைகளில் பெரும் ஊக்கம் கொடுத்தனர்.

http://tamil.thehindu.com/opinion/columns/5-கேள்விகள்-5-பதில்கள்-படைப்பில்தான்-என்னால்-எதிர்வினை-ஆற்ற-முடியும்-பெருமாள்முருகன்/article9466514.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பளிச்! - அட்டைகளில் ஆங்கிலமும், தமிழும்

 

 
bookfair_3114944h.jpg
 

புத்தகக் காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தேடுபவர்கள் கவனத்தை ‘பளிச்’ என்று ஈர்க்கும்படி ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்கள் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பகத்தார். அட்டைகளில் விலங்குகள், காய், கனிகள், வாகனங்கள், அடிப்படைச் செயல்கள் என்று தனித்தனியாக அச்சிட்டு, அந்த அட்டைகளின் பின்பக்கத்தில் அந்தப் படத்தில் இருக்கும் விஷயத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் தனது கூந்தலைச் சீவுவது போல் ஒரு படம்; அந்த அட்டைக்குப் பின்னால் ‘COMB’ என்ற ஆங்கிலச் சொல்லும் அதற்குக் கீழே ‘தலைவாரு’ என்ற தமிழ்ச் சொல்லும் கொடுத்திருக்கிறார்கள். இரு மொழிகளையும் குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லித்தருவதற்கு அருமையான முயற்சி இது!

 

http://tamil.thehindu.com/opinion/columns/பளிச்-அட்டைகளில்-ஆங்கிலமும்-தமிழும்/article9466504.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

இருநூறு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு கண்டிருக்கும் முதல் திருக்குறள்!

 

 
thirukural_3115357f.jpg
 
 
 

தமிழர் வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இலக்கியங்களில் திருக்கு றளுக்கு இணையே இல்லை என்று சொல்லி விடலாம். அத்தகைய திருக்குறள்தான் தமிழில் முதன் முதலில் அச்சான செவ்விலக்கியம் என்பது பலரும் அறியாத தகவல். 1812-ல் திருக்குறள் முதன்முத லில் அச்சேறியது. அந்தத் திருக்குறள் பதிப்புக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. புள்ளியில்லா மெய் யெழுத்துக்களுடன் அச்சிடப்பட்ட பதிப்பு அது. இத் தனைக்கும் வீரமா முனிவர் தமிழ் மெய்யெழுத்துக் களுக்குப் புள்ளியை அறிமுகம் செய்ததற்கு பிந்தைய காலகட்டம் அது. ‘திருககுறள’ என்றுதான் அதில் அச்சிடப்பட்டிருக்கும். ‘அகரமுதலவெழுததெலலா மாதி பகவன முதறறெயுலகு’ என்பதுபோல்தான் குறள்கள் அந்தப் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தன.

மிகவும் அரிய அந்தப் பதிப்பு உலகிலேயே 5 பிரதிக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ‘அந்தப் பதிப்பைப் பார்க்க முடியாதா?’ என்று ஆசைப்படுபவர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில், சென்னையில் உள்ள ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ அந்தப் பதிப்பை எண்வயப்படுத்தி (digitalize) பார்ப்பதற்கு அப்படியே 1812-ம் ஆண்டு பிரதிபோல் இருக்கும் ஒரு பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது தொடர்பாக ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக’த்தின் இயக்குநர் சுந்தரிடம் பேசினோம். “இந்தப் பதிப்பின் நோக்கமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதே. 200 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட தமிழின் மிக முக்கியமான புத்தகம் எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதும் ஒரு வரலாற்றுக் கடமையல்லவா? இது ஒரு தொடர் ஓட்டம் போல, விட்டுப்போய்விடக் கூடாது. 200 ஆண்டுகள் கழித்து நாங்கள் செய்ததை, இன்னும் ஒரு 200 ஆண்டுகள் கழித்து வேறு யாராவது செய்ய வேண்டும். அப்போதுதான் வரலாற்றுத் தொடர்ச்சியை எதிர்காலச் சந்ததியினர் உணர்ந்துகொள்ள முடியும்” என்றார். இந்தப் பதிப்பில் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்துக் கேட்டதற்கு, “சிக்கலான, செலவுபிடிக்கக் கூடிய வேலை இது. வெகு காலம் நீடித்து நிற்கும் புத்தகமாக இந்தப் பதிப்பை அச்சிட நிறைய செலவுபிடிக்கும் என்று தெரிந்தது. இதற்கு நிதியுதவி கோரினோம். முக்கால்வாசி நிதிதான் கிடைத்தது. புத்தகம் விற்றுக் கிடைக்கும் தொகையைக் கொண்டுதான் இதற்கு ஆன செலவில் உள்ள இடைவெளியை ஈடுகட்ட வேண்டும். 1812-ம் ஆண்டுப் பதிப்பும் இப்படி நிதிதிரட்டி வெளியிடப்பட்டதுதான் என்பது ஆச்சரியமான ஒற்றுமை! அந்தக் காலத்தில் காகிதத்துக்குக் கடும் தட்டுப்பாடு இருந்தது. யாரெல்லாம் புத்தகம் வாங்க விரும்புகிறார்களோ அவர்களிடமே புத்தகப் பிரதியொன்றின் உத்தேச விலையைப் பெற்றுக்கொண்டுதான் புத்தகத்தை அச்சிடுவார்கள். இதனால், அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘இது ……….. பொததகம’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இன்னாரது புத்தகம் என்று அவரது பெயரை எழுதிக்கொள்வதற்கான இடைவெளியுடன் அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கும். இப்படி வரலாற்று ஆய்வுக்குரிய தகவல்களெல்லாம் இதுபோன்ற பழைய புத்தகங்களில் நிறைய புதைந்துகிடக்கின்றன. தற்போதைய பதிப்பு அதுபோன்ற ஆய்வுகளுக்கு மிகவும் உதவக்கூடியது. அது மட்டுமல்லாமல், மேலைநாட்டில் இருப்பது போன்ற ‘சேகரிப்பாளர் பதிப்புகள்’(Collector’s Editions) தமிழில் அநேகமாக இல்லை. தமிழில் அந்தப் போக்குக்கு இந்தத் திருக்குறள் பதிப்பை ஒரு முன்னோடி எனலாம்” என்றார்.

அருமையான முயற்சி! கெட்டி அட்டை, புத்தகத்துக் கான சிறுபெட்டி, 200 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருக்கக் கூடிய ‘சில்க் கோட்டிங்’ கொடுக்கப் பட்ட தாள் என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளக் கூடிய பதிப்பு இது. இந்தத் ‘திருக்குறள்’ பதிப்புபோல முக்கியமான பழந் தமிழ் நூல்கள் பலவற்றுக்கும் ‘சேகரிப்பாளர் பதிப்பு’கள் கொண்டுவருவதைப் பற்றிப் பதிப்பகங்கள் யோசிக்கலாம்!

http://tamil.thehindu.com/general/literature/இருநூறு-ஆண்டுகளுக்குப்-பின்-பதிப்பு-கண்டிருக்கும்-முதல்-திருக்குறள்/article9467657.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

புத்தகக் காட்சி - ஜன.11 | கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 

kavanikka_3115824f.jpg
 
 
 

1. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்

அ. மார்க்ஸ், ரூ. 470, உயிர்மை வெளியீடு.

*

2. அப்போலோவில் ஜெ.

ரூ. 200, நக்கீரன் வெளியீடு.

*

3. டெங் ஷியோ பிங் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி),

ரூ. 220, பாரதி புத்தகாலயம்.

*

4. மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன்

- பா. செயப்பிரகாசம், ரேவதி குணசேகரன்,

ரூ. 300, புலம் வெளியீடு.

*

5. விசாரணை: திரைக்கதை - வெற்றிமாறன்,

ரூ. 250, அதிர்வு வெளியீடு.

http://tamil.thehindu.com/general/literature/புத்தகக்-காட்சி-ஜன11-கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்/article9472528.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சென்னை புத்தகக் காட்சி | கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 

 
 
kavanikka_3115824f.jpg
 
 
 

booknew_3116688a.jpg

book2_3116689a.jpg

book1_3116690a.jpg

 

புத்தகக் காட்சி - ஜன.13 | கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 
 
 

http://tamil.thehindu.com/general/literature/புத்தகக்-காட்சி-ஜன13-கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்/article9477579.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 

 
 
 
gavanam_5_3115370f.jpg
 
 
 

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

அ.மா.சாமி, ரூ. 250, ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு.

குஜிலிப் பனுவல்கள்

க.விஜயராஜ், ரூ. 180, நறுமுகை வெளியீடு.

வாங்க சினிமாவைப் பற்றிப் பேசலாம்!

கே.பாக்யராஜ், ரூ. 120, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு.

அவலங்கள்

சாத்திரி, ரூ. 180, எதிர் வெளியீடு.

தமிழ்மொழியின் கட்டமைப்பு: பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாட்டு அணுகுமுறை

சு.சீனிவாசன், ரூ. 250, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.

http://tamil.thehindu.com/general/literature/கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்/article9467706.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கவனிக்க வேண்டிய 5 நூல்கள்

 

 
5_3117806f.jpg
 
 
 

1. தாழப் பறக்காத பரத்தையர் கொடி - பிரபஞ்சன் ரூ. 150, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு.

2. சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை - சுகுணா திவாகர் ரூ. 100, எதிர் வெளியீடு.

3. வினாடிக்கு 24 பொய்கள்: இயக்குநர் மிஷ்கின் - தினேஷ் ரூ. 100, பேசாமொழி வெளியீடு.

4. சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் - கிரிம்ஸ் பிரதர்ஸ் (தமிழில்: ஹேமா பாலாஜி), ரூ. 130, சந்தியா பதிப்பக வெளியீடு.

5. எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு - ஜோ. சம்பத்குமார் ரூ. 130, நெய்தல் பதிப்பக வெளியீடு.

http://tamil.thehindu.com/general/literature/கவனிக்க-வேண்டிய-5-நூல்கள்/article9480579.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கவனிக்க வேண்டிய 5 நூல்கள்

 

5_3117806f.jpg
 
 
 

1. சுயமரியாதை: ஒரு நூற்றாண்டின் சொல்! – சுப. வீரபாண்டியன்

ரூ. 100, நக்கீரன் வெளியீடு.

2. மிஷன் தெரு – தஞ்சை ப்ரகாஷ்

ரூ. 120, வாசகசாலை வெளியீடு.

3. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹின்டன்

(தமிழில்: கி. இரமேஷ்), ரூ. 150, அலைகள் வெளியீட்டகம்.

4. எனது கணவனும் ஏனைய விலங்குகளும் – ஜானகி லெனின் (தமிழில்: கே.ஆர். லெனின்),

ரூ. 90, பாரதி புத்தகாலயம்.

5. சிற்பம் – தொன்மம் – செந்தீ நடராசன்

ரூ. 180, என்.சி.பி.எச். வெளியீடு.

 

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 
 
book_5_2879821f.jpg
 
 
 

1. கல் மேல் நடந்த காலம்

சு. தியடோர் பாஸ்கரன் ரூ. 160, என்.சி.பி.எச். வெளியீடு.

2. அபிப்பிராய சிந்தாமணி

ஜெயமோகன் ரூ. 750, கிழக்கு வெளியீடு.

3. இம்பர் உலகம்

ஞானக்கூத்தன் ரூ. 170, நவீன விருட்சம் வெளியீடு.

4. காவிரிக் கரையில் அப்போது…

- தங்க. ஜெயராமன் ரூ. 180, க்ரியா வெளியீடு.

5. முதல் தலைமுறை மனிதர்கள்

- சேயன் இப்ராஹிம் ரூ. 200, நிலவொளி பதிப்பகம்.

 

 

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

 
 
book_5_2879821f.jpg
 
 
 

1. மேயர்: பதவியல்ல… பொறுப்பு

மா.சுப்பிரமணியன் ரூ.250, எழிலினி வெளியீடு.

2. மொஸாட்

என்.சொக்கன், ரூ.150, கிழக்கு வெளியீடு.

3. தேவாரம்

ஒரு புதிய பார்வை, சிகரம் ச.செந்தில்நாதன் ரூ.150, சந்தியா பதிப்பக வெளியீடு.

(58 ஆண்டுக் கால சிறுகதைகள்) இரு தொகுதிகள் சி. இளங்கோ, ரூ.1,200, அலைகள் வெளியீடு.

4. அ. முத்துலிங்கம் சிறுகதைகள்

5. ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு (தொன்மை-பண்பாடு-அரசியல்)

தொகுப்பாசிரியர்: பாவெல் பாரதி ரூ.150, கருத்து = பட்டறை வெளியீடு.

 

http://tamil.thehindu.com/general/literature/கவனிக்க-வேண்டிய-5-புத்தகங்கள்/article9489039.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.