Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் விசேட ஊடக சந்திப்பை மேற்கொண்ட வட மாகாண முதலமைச்சர்

Featured Replies

கனடாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர். அந்நாட்டு ஊடகங்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்கள் தொடர்பாகவும், விசா கோரிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களையும் இதன்போது ஊடகங்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு கனடாவின் ஒத்துழைப்பின் அவசியம், கனடாவுடன் மேற்கொள்ளவுள்ள இரட்டைநகர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இதன்போது விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

http://www.tamilwin.com/politics/01/131008?ref=home

  • தொடங்கியவர்

பதவிகளை தமிழர்கள் துறந்தால் நினைத்ததைச் செய்துவிடும் அரசு..! சி.வி.விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பதவிகளை நாம் துறந்தால் அரசு, தான் நினைத்ததைச் செய்துவிடும் எனவும் அந்தப் பதவிகள் முக்கியம் எனவும் கனடாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று வினா தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், பதவி துறப்பதில் ஒரு விதமான பிரச்சினையும் இல்லை. கடந்த 1972ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பதவி துறந்தார்.

அவரது தொகுதியில் 1975ஆம் ஆண்டு தான் தேர்தல் வைத்தார்கள். இடைப்பட்ட காலத்தில் அரசு தான் நினைத்ததைச் செய்து முடித்தது.

அத்துடன், பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களைப் பதவிகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதற்காகவே அரசு சில வேலைகளைச் செய்யும்.

மேலும், உடனடியாக உணர்ச்சிகரமான தீர்மானத்தை நாங்கள் எடுக்கக் கூடாது. நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும்.

கேட்டால், அவர்கள் தானே பதவியைத் துறந்தார்கள் என்று சொல்வார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/131259

  • தொடங்கியவர்

தேர்தலில் போட்டியிட யார் காரணம்..? மீண்டும் முதலமைச்சராக போட்டியிடுவாரா விக்கி..?

வடக்கு மாகாண சபையின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த பதவிக் காலத்துக்கு முதலமைச்சராகப் போட்டியிடுவீர்களா?

போட்டியிட்டால் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர்கள்? என்ற கேள்விக்கு, கனடாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பதிலளித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

காலம் இருக்கின்றது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதம் முன்னம் வரையில் நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருக்கவில்லை.

உங்களது அரசு (கனேடிய) செய்த காரியத்தினால்தான் நான் போட்டியிட வேண்டி வந்தது. 2013ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கு ஒரு மாதம் முன்னதாக, கனடாவில் ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக நுழை விசைவுக்கு (விசா) விண்ணப்பித்திருந்தேன்.

கனேடிய அரசு எனது நுழை விசைவை நிராகரித்துவிட்டது. இதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் எனக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். அதனடிப்படையில் போட்டியிட்டேன்.

மீண்டும் அப்படியொரு அதிஷ்டம் கிடைத்தால் பார்ப்போம். அடுத்த தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/special/01/131261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.