Jump to content

Recommended Posts

கனடா பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுடன் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு, அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாணத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியிருந்தார்.

இதன்போது வடக்கில் முள்ளதண்டு பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/special/01/131403?ref=morenews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரொன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்துடன் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய நால்வருக்கும் புள்ளிகள் இல்லை!
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.