Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2017

Featured Replies

  • தொடங்கியவர்

சென். ஹென்றிஸ் தேசியச் சம்பியன்

 
 
சென். ஹென்றிஸ் தேசியச் சம்பியன்
 

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் கிண்­ணம் வென்­றது இள­வாலை சென். ஹென்­றிஸ். திருகோணமலை மாவட்டம் கிண்­ணியா வில் நேற்று மாலை நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு சாகி­ராக் கல்­லூரி அணி மோதி­யது.

கோல் கணக்கு இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் எந்த அணி­யா­லும் தனித்து ஆதிக்­கம் செலுத்த முடி­ய­வில்லை. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் எந்த அணி­யும் கோலெ­தை­யும் பெற்­றி­ருக்­க­வில்லை. இத­னால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 6:5 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி.

தேசிய மட்ட கால்­பந்­தாட்­டத்­தைப் பொறுத்­த­வரை வடக்கு மாகாண அணி­கள் தொடர்ந்து ஆதிக்­கம் செலுத்தி வரு­கின்­றன. கடந்த வரு­டம் நடை­பெற்ற 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரிவு கால்­பந்­தாட்­டத்­தில் முதல் மூன்று இடங்­க­ளை­யும் முறையே யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ், இள­வாலை சென். ஹென்­றிஸ், மன்­னார் சென். சேவி­யர் ஆகிய அணி­கள் தம­தாக்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/17032.html

 

 

பல்கலை. சம்பியன்

 
 
பல்கலை. சம்பியன்
 

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­திய யாழ்ப் பா­ணம் மாவட்ட துடுப்­பாட்டச் சங்­கத்­தில் அங்­கம் வகிக்­கும் மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கம் கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் மோதி­யது.
நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்று முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது சென்­ற­லைட்ஸ் அணி.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 46.4 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 158 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. வினோத் குமார் 49 ஓட்­டங்­க­ளை­யும், டார்­வின் 28 ஓட்­டங் களை­யும், செல்­ரன் 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் ஐனாந்­தன் 3 இலக்­கு­க­ளை­யும், குரு­ கு­ல­சூ­ரிய, லோக­தீஸ்­வர் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் வீழ்த்­தி­ னர்.

159 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப் பாணம் பல்­க­லைக் கழக அணி 34.4 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. துவா­ர­க­ சீ­லன் ஆட்­டம் இழக் கா­மல் 64 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

சிறந்த துடுப்­பாட்ட வீர­னா­க­வும், ஆட்­ட­நா­ய­க­னா­க­வும் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக அணி­யின் துவா­ர­க­சீ­லன், சிறந்த களத்­த­டுப்­பா­ளர் விருதை யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக அணி­யின் ஐனாந்­தன், சிறந்த பந்­து­வீச்­சா­ளர் விருதை சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி­யின் மயூ­ரன் ஆகி­யோர் பெற்­ற­னர்.

http://newuthayan.com/story/17026.html

  • Replies 78
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தெல்லிப்பழை மகாஜனா மூன்றாமிடம்

தெல்லிப்பழை மகாஜனா மூன்றாமிடம்
 

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய தேசி­ய­மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துப் பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரிக்கு மூன்றாம் இடம் கிடைத்­தது.

திரு­கோ­ண­மலை கிண்­ணி­யா­வில் நேற்று பிற்­ப­கல் நடை­பெற்ற மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு விதான மகா­தேவி வித்­தி­யா­லய அணி மோதி­யது. முதல் பாதி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வீராங்­கனை திலக்­சனா 5ஆவது நிமி­டத்­தில் ஒரு கோலைப் பதிவு செய்ய 1:0 என்ற கோல் கணக்­கில் அந்த அணி முன்­னிலை வகித்­தது.

இரண்­டாம் பாதி­யின் 12ஆவது நிமி­டத்­தில் சர்­மிகா ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று வெண்­க­லப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தது.

 

 

யூனியன், ஏ.எல். வெற்றிபெற்றன

 
 
யூனியன், ஏ.எல்.  வெற்றிபெற்றன
 

திக்கம் மத்திய சன­ச­மூக நிலை­யத்­தின் வைர விழாவை முன்­னிட்டு வடக்கு மாகாண ரீதி­யில் நடத்­தப்­பட்­டு­வ­ரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் ஆனைக்­கோட்டை யூனி­யன், அராலி ஏ.எல். அணி­கள் வெற்­றி­பெற்­றன.

திக்­கம் மத்­திய சன­ச­மூக நிலை­யத்­தின் மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு 7 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் வதிரி பொம்­மர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆனைக்­கோட்டை யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரு அணி­க­ளும் தலா ஓர் கோலைப் பெற்­றி­ருந்­த­மை­யால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.  5:4 என்ற கோல் கணக்­கில் யூனி­யன் அணி வெற்­றி­பெற்­றது.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு இடம்­பெற்ற இரண்­டா­வது ஆட்­டத்­தில் ஸ்மாட் போய்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அராலி ஏ.எல். விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. ஏ.எல். அணி 4:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது

 

 

சென். பற்­றிக்ஸ்  மகு­டம் சூடி­யது

 
சென். பற்­றிக்ஸ்  மகு­டம் சூடி­யது
 

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கத்தால் நடத்­தப்­பட்ட 12 வய­துப் பிரி­வி­ன­ ருக்­கான தொட­ரில், ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி சம்­பி­ய­னா­னது.  தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில், சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி மோதி­யது.

முதல் பாதி­யின் முடி­வில் 1:0 என்று ஆதிக்­கம் செலுத்­தி­யது சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி. இரண்­டாம் பாதி­யில் சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி அடுத்­த­டுத்து இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்து ஆதிக்­கம் செலுத்­தி­யது.

எனி­னும் பதி­லடி கொடுத்­தது சென். பற்­றிக்ஸ். நிர்­ண­யிக் கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரு அணி­க­ளும் தலா 2 கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­மை­யால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்டிய நிலை ஏற்­பட்­டது. 4:3 என்ற கோல் கணக்­கில் சென். பற்­றிக்ஸ் அணி கிண்­ணம் வென்­றது.  பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு தலைமை விருந்­தி­ன­ராக சிவன் அறக்­கட்­டளை நிறு­னத்­தின் நிறு­வு­னர்; வேலாயு­தம் கணேஸ்­வ­ரன் கலந்து கொண்­டார்.

 

 

பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் சம்­பி­யன்

 
 
பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் சம்­பி­யன்
 

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கத்தால் நடத்­தப்­பட்ட 12 வய­துப் பிரி­வி­ன­ருக்­கான தொட­ரில் பெண்­கள் பிரி­வில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி சம்­பி­ய­னா­னது.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யும் மோதின.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் அதே­நி­லை­தான். நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரு அணி­க­ளும் கோலெ­த­னை­யும் பெறா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 3:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி.

 

 

திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி அமோக வெற்றி

 
 
திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி அமோக வெற்றி
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­திய வி.ரி.மகா­லிங்­கம் ஞாப­கார்த்த வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்று இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் நிரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி வெற்­றி­பெற்­றது. வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணியை எதிர்த்து வின்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­ டிய வின்ஸ் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து 109 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஜெரிக்­சன் 57 ஓட்­டங்­க­ளை­யும், மைக்­கல் 14 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி­யின் சார்­பாக சுரேந்­தி­ரன் 2 இலக்­கு­க­ளை­யும், பிரபு, அனு­ர­தன் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கையும் கைப்­பற்­றி­னர்.

110 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி 18.4 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 4 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. தர்­சி­கன் 27 ஓட்­டங்­க­ளை­யும், லவன் 21 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­றுக் கொடுத்­த­னர்.

http://newuthayan.com/

  • தொடங்கியவர்

சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது

 
சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது
 

இலங்­கைக் கடற்­ப­டை­யால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.
யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

முத­ல் பாதி­யில் இரண்டு அணி­க­ளா­லும் எது­வித கோல்­க­ளை­யும் பதி­வு­செய்ய இய­ல­வில்லை. இரண்­டாம் பாதி­யின் 10ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி­யின் றோஜித் முதல் கோலைப் பதி­வு­செய்­தார்.

ஜூவன் 15ஆவது நிமி­டத்­தில் பற்­றிக்­ஸின் கோல் கணக்கை இரண்­டாக உயர்த்­தி­னார். 19ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் கோல் காப்­பா­ளர் ஆனல்ட் அடித்த பந்து மத்­திய கல்­லூ­ரி­யின் கோல் காப்­பா­ள­ரின் கையில் பட்­டுக் கோலாக மாறி­யது. முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது பற்­றிக்ஸ்.

http://newuthayan.com/story/17386.html

  • தொடங்கியவர்

 நேபாளத்தில் நடைபெறவுள்ள கால்ப்பந்தாட்டத்தொடரில் இலங்கை  மகாஜனவின் வீரனும் தெரிவு 

 
 நேபாளத்தில் நடைபெறவுள்ள கால்ப்பந்தாட்டத்தொடரில் இலங்கை  மகாஜனவின் வீரனும் தெரிவு 
 

தெற்­கா­சிய நாடு­க­ளின் 15 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான தொடர் நேபா­ளத்­தில் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி தொடக்­கம் 28ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் கலந்து கொள்­ள­வுள்ள இலங்கை அணி­யில் மகா­ஜ­னக் கல்­லூரி வீரர் ரவிக்­கு­மார் தனு­ஜன் இடம்­பெற்­றுள்­ளார்.

http://newuthayan.com/story/category/sports

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் மகு­டம் சூடி­யது

 
சென். ஜோன்ஸ் மகு­டம் சூடி­யது
 

யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் நடத்­தப்­பட்ட துடுப்­பாட்­டத் தொட­ரில் 17 வய­துக்­குட்­பட்ட பிரி­வில் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 41.1 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 132 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஜனார்த்­த­னன் 57 ஓட்­டங்­க­ளை­யும், பிரி­ய­தர்­சன் 24 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் யது­கு­லன் 3 இலக்­குக­ளை­யும், சௌமி­கன் டெல்­சான், அபி­நாத் ஆகி­யோர் தலா இரு இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி 39.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது.

அதிகபட்சமாக அபி­நாத் 50 ஓட்­டங்­க­ளை­யும், றொசான் ஆட்­டம் இழக்­கா­மல் 22 ஓட்­டங்­க­ளை­யும், யது­கு­லன் 17 ஓட்­டங்­க­ளை­யும், கௌசி­கன் 14 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் மது­சன் 3 இலக்­கு­க­ளை­யும் நிதர்­சன், வியாஸ்­கன் ஆகி­யோர் தலா இரு இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

http://newuthayan.com/story/19213.html

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணப் பல்கலை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

 
யாழ்ப்பாணப் பல்கலை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது
 

அனைத்­துப் பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­துள்­ளது.

சப்­பி­ர­க­முக மைதா­னத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து சிறி ஜெய­வர்த்­த­ன­புர பல்­க­லைக் கழக அணி மோதி­யது.

சிறி ஜெய­வர்­த­ன­புர பல்­க­லைக் கழக அணி 79:35 என்ற புள்­ளி­க­ளின்
அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றதை அடுத்து யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணிக்கு இரண்­டாம் இடம் கிடைத்­தது.

http://newuthayan.com/story/19809.html

  • தொடங்கியவர்

உலக மட்ட விளையாட்டுப்போட்டியில் யாழ். பல்கலையில் இருந்து இருவர்

 
 
உலக மட்ட விளையாட்டுப்போட்டியில் யாழ். பல்கலையில் இருந்து இருவர்
 

ரைப்­பே­யில் நாளை­ம­று­தி­னம் சனிக்­கி­ழமை தொடக்­கம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உல­கப் பல்­க­லைக் கழ­கங்க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்­டுப் போட்­டி­யில் பங்­கு­பற்­று ­வ­தற்கு யாழ்ப்­பா­ணப் பல் க­லைக் கழ­கத்­தில் இருந்து இரு­வர் தகுதி பெற்­றுள்­ள­னர்.

யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக கலைப்­பீ­டத்­தைச் சேர்ந்த பழு­தூக்­கல் வீரர் யு.வினோத் கு­மார், அதே பீடத்­தைச் சேர்ந்த மேசைப்­பந்­தாட்ட வீராங்­கனை ஆர்.ஏ.பிர­சாதி ஆகிய இரு­வ­ருமே அவ்­வாறு தகுதி பெற்­ற­வர்­க­ளா­வர்.

http://newuthayan.com/story/20050.html

  • தொடங்கியவர்

ஜொலிஸ்ரார் அணி பதற்றம் இல்லாமல் அசத்தலான வெற்றி

 
 
ஜொலிஸ்ரார் அணி பதற்றம் இல்லாமல் அசத்தலான வெற்றி
 

யாழ்ப்பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் மகாலிங்­கம் ஞாபகார்த்தக் கிண்­ணத்­துக்­கான ரி—-–20 தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­ட ­மொன்­றில் ஜொலிஸ்­ரார் அணி அபார வெற்­றி­பெற்­றது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ஜொலி ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஸ்ரான்லி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்ரான்லி விளை­யாட்­டுக் கழக அணி 17.2 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 111 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக சுதர்­சன் 47 ஓட்­டங்­க­ளை­யும் கண்­ண­ராஜ் 21 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் தூவ­ர­கன் 5 இலக்­கு­க­ளை­யும், வாம­ணன், மது­சன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

112 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு துடுப்­பெ­டுத்­தா­டிய ஜொலிஸ்­ரார் அணி 17.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 2 இலக்­கு­களை இழந்து 112 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. இதில் சந்­தோஸ் 40 ஓட்­டங்­க­ளை­யும், மது­சன் 22 ஓட்­டங்­க­ளை­யும், கஜ­ னாந் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

 

 

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் பல்கலைக் கழகத்தை வென்றது

 
திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் பல்கலைக் கழகத்தை வென்றது
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான ரி-–20 தொட­ரில் அண்­மை­யில் நடை­பெற்ற ஆட்­ட­மொன்­றில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழ­கம் வெற்­றி­பெற்­றது.

வட்­டுக்­கோட்டை யாழ்ப்பாணக் கல்­லூரி மைதா­னத்­தில் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பாணம் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி மோதி­யது.

நாண­யச்­சு­ழச்­சி­யில் வெற்­றி­பெற்ற பல்­க­லைக் கழக அணி களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 152 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. அதி­க­பட்­ச­மாக தர்­சி­கன் 33 ஓட்­டங்­க­ளை­யும், அசோக் 21 ஓட்­டங்­க­ளை­யும், சுரேந்­தி­ரன் 25 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் குரு­கு­ல­சூ­ரிய 3 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.
153 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பல்­க­லைக் கழக அணி 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் வரை தாக்­குப் பிடித்த போதி­லும், 9 இலக்­கு­ களை இழந்து 101 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றது. றுக்ஸ்­மன் 23 ஓட்­டங்­க­ளை­யும், குரு­கு­ல­சூ­ரிய 18 ஓட்­டங்­க­ளை­யும்
பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி­யின் சார்­பாக சிவ­ராஜ் 4 இலக்­கு­களை வீழ்த்­தி­னார்.

 

 

யங்கம்பன்ஸின் கரப்பந்தாட்ட முடிவுகள் சில

 
யங்கம்பன்ஸின் கரப்பந்தாட்ட முடிவுகள் சில
 

யங்­கம்­பன்ஸ் விளை­யாட்டு கழ­கம் நடத்­தும் தங்­க­வ­டி­வேல் ஞாப­கார்த்த கிண்­ணத் துக்­கான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளின் முடி­வு­கள் சில.

யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் மைதா­னத்­தில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம் கெரு­டா­வில் அண்ணா விளை­ யாட்­டுக் கழ­கத்தை 2:1 என்ற செற் கணக்­கி­லும், தோப்பு வாலி­பர் விளை­யாட்­டுக் கழ­கம் நீர்­வேலி காமாட்சி விளை­யாட்­டுக் கழ­கத்தை 2:0 என்ற நேர் செற்­றி­லும், புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­கம் கெரு­டா­வில் சிறி­மு­ரு­கன் விளை­யாட்­டுக் கழ­கத்தை 2:0 என்ற நேர் செற் கணக்­கி­லும் வெற்­றி­பெற்­றன.

 

 

 

ரைட்ரோன்ஸ் அணி வின்ஸை வென்றது

 
ரைட்ரோன்ஸ் அணி வின்ஸை வென்றது
 

யாழ்ப்­பாண மாவட்டத் துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான ரி – 20 தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் ரைட்­ரோன்ஸ் அணி அபார வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பாண மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் மதி­யம் 11 மணிக்கு இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ரைட்­ரோன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வின்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ரைட்­ரோன்ஸ் 8 இலக்­கு­களை இழந்து 154 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. அதி­க­பட்­ச­மாக திலக்­சன் 26 ஓட்­டங்­க­ளை­யும், டினோ­சன் 25 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் வின்­சன், யது­சன், ஜெபர்­சன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

155 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு துடுப்­பெ­டுத்தாடிய வின்ஸ் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 7 இலக்­கு­களை இழந்து 100 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்று 54 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது.

பந்­து­வீச்­சில் உத­ய­சாந், நந்­த­கு­மார், திலக்­சன் ஆகி­யோர் தலா 3 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

 

 

கொக்குவில் இந்து அசத்தல் வெற்றி

 
கொக்குவில் இந்து அசத்தல் வெற்றி
 

இலங்கை பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி 176 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்­றது.

கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி தனது முத­லா­வது இன்னிங்­ஸில் 9 இலக்­கு­களை இழந்து 235 ஓட்­டங்­க­ளைப் பெற்ற நிலை­யில் ஆட்­டத்தை இடை நிறுத்­தி­யது. அதி­க­பட்­சமாக துவா­ர­கன் ஆட்­டம் இழக்­கா­மல் 82 ஓட்­டங்­க­ளை­யும், கௌத­மன் 39 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் தமி­ழ­வன் 3 இலக்­கு­க­ளை­யும், சசி­க­ரன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய அணி 61 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. பந்­து ­வீச்­சில் தனோஜ் 4 இலக்­கு­க­ளை­யும், பிர­சாத் 3 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

 

 

ஆவரங்கால் மத்தி. புத்தூர் கலைமதி இறுதியில் மோதல்

 
ஆவரங்கால் மத்தி. புத்தூர் கலைமதி இறுதியில் மோதல்
 

இடைக்­காடு ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தி வரும் ‘ஏ’ பிரிவு அணி­யி­ன­ருக்­கான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் இன்று இடம்­பெ­றும் இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கத்­தினை எதிர்த்து புத்­தூர் கலை­மதி விளை­யாட்டு கழக அணி மோத­வுள்­ளது.

பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்­குத் தலைமை விருந்­தி­ன­ ராக யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக பிர­திப் பதி­வா­ளர் ம.கணே­ச­லிங்­க­ம், சிறப்பு விருந்­தி­னர் க­ளாக யாழ்ப்­பாண மாட்ட கரப்­பந்­தாட்­டச் சங்­கத்­தின் உப தலை­வர் சி.அப்­புத்­துரை ஆகி­ யோர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

 

25977.jpg

http://newuthayan.com/

  • தொடங்கியவர்

கே.ஸி.ஸி.ஸி. அணி அசத்தலான வெற்றி

 
 
கே.ஸி.ஸி.ஸி. அணி அசத்தலான வெற்றி
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடையே நடத்­தி ­வ­ரும் மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் கே.ஸி.ஸி.ஸி. அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஸ்கந்­தா ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப் பெ­டுத்­தா­டிய ஸ்கந்தா ஸ்ரார் அணி 19.5 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 95 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக சோபி­கன் 35 ஓட்­டங்­க­ளை­யும், குரு­சோத்­த­மன் 15 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் விஜி­த­ரன் 3 இலக்­கு­க­ளை­யும், பிர­தீசன், ஜெய­றூ­பன், சாம்­ப­வன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

96 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு துடுப்­பெ­டுத்­தா­டிய கே. ஸி.ஸி.ஸி. அணி 19.1 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. ஜெய­றூ­பன் 19 ஓட்­டங்­க­ளை­யும், ஜனு­தாஸ் 15 ஓட்­டங்­க­ளை­யும், பிர­தீ­சன் 15 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் சிந்­து­யன் 4 இலக்­கு­களை வீழ்த்­தி­னார்.

 

 

உருத்­தி­ர­பு­ரம் வி.கழக கால்­பந்­தாட்ட முடி­வு­கள்

 
உருத்­தி­ர­பு­ரம் வி.கழக  கால்­பந்­தாட்ட முடி­வு­கள்
 

உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு கிளி­நொச்சி மாவட்ட கரைச்சி கால்­பந்­தாட்ட லீக்­குக்கு உட்­பட்ட அழைக்­கப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங் க­ளின் முடி­வு­கள் வரு­மாறு.

நேற்­று­முன்­தி­னம் இரவு 7 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உழ­வர் ஒன்­றி­யம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து குறிஞ்சி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் உழ­வர் ஒன்­றி­யம் விளை­யாட்­டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

இரவு 8 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உத­ய­ தா­ரகை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சுட­ ரொளி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­யி­ன­ரும் தலா 5 கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­மை­யால் ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் வட்­டக்­கச்சி லக்கி ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஜெயந்­தி­ந­கர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் வட்­டக்­கச்சி லக்கி ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

 

 

றெயின்போவை வீழ்த்தியது ஜொனியன்ஸ்

 
றெயின்போவை வீழ்த்தியது ஜொனியன்ஸ்
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான ரி––-20 தொட­ரில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் ஜொனி­யன்ஸ் அணி வெற்­றி­பெற்­றது.

வட்­டுகோட்டை யாழ்ப் பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ஜொனி­யன்ஸ் அணியை எதிர்த்து றெயின்போ அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய றெஜின்போ விளை­யாட்­டுக் கழக அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 103 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக றஜீவ் 43 ஓட்­டங்­க­ளை­யும், செந்­தூ­ரன் 19 ஓட்­டங்­க­ளை­யும், யதுர்­சன் 13 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் லவேந்­திரா 2 இலக்­கு­க­ளை­யும், பிரிந்­தா­பன், யது­சன், டக்­சன் ஆகி­யோர் தலா ஓர் இலக்­கை­யும் வீழ்த்­தி­னர்.

104 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு துடுப்­பெ­டுத்­தா­டிய ஜொனி­யன்ஸ் அணி 13 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 2 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. கிசாந்­து­யன் 42 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

http://newuthayan.com/story/22334.html

  • தொடங்கியவர்

தேசபந்து தென்னக்கோன் வெற்றிக்கிண்ணத்தை வென்றது மன்னார் சென் அன்ரனீஸ்

Published by Vijithaa on 2017-08-26 18:06:44

 

வவுனியா மற்றும் மன்னார்  அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட்  இறுதிச் சுற்றுப்போட்டி  வன்னி பிரதி பொலிஸ்மா  அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று  நடைபெற்றது.

IMG_0537.JPG

வவுனியா மற்றும் மன்னாரில் பொலிஸாரால் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையை முன்னிட்டு வவுனியாவில் 13  அணிகளுக்கும் மன்னாரில் 9  அணிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற இரு அணிகளுக்கும் இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது.

மன்னார் சென் அன்ரனீஸ் மற்றும் வவுனியா பூந்தோட்டம் அண்ணா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்து ஓவர்களைக் கொண்ட இறுதிச்சுற்று போட்டியில் மன்னார் சென் அன்ரனீஸ் அணி வெற்றிபெற்று முதலாவது பரிசினை தட்டிச் சென்றது.

Local_News.jpg

போட்டியில் வெற்றிபெற்ற சென் அன்ரனீஸ் அணிக்கு வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெற்றிக் கிண்ணத்தையும் 25 ஆயிரம் ரூபா பணப்  பரிசினையும் வழங்கி வைத்தார்.

IMG_0608.JPG

இரண்டாம் இடத்தினைப் பெற்ற அண்ணா கிரிக்கெட் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தையும் 15 ஆயிரம் ரூபா பரிசுத்தொகையினையும் வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சககர் எம்.என்.சிசிர குமார வழங்கிவைத்தார்.

IMG_0606.JPG

நிகழ்வில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ.மகிந்த, ரெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் ப.கார்த்திக்,  வவுனியா வர்த்தக சங்க செயலாளர் கோ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன்,  பொலிஸ் அதிகாரிகள்   ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

http://www.virakesari.lk/article/23641

  • தொடங்கியவர்

ஜொனி­யன்ஸ் வி.கழ­கம் வெற்­றி­பெற்­றது

 
 
ஜொனி­யன்ஸ்  வி.கழ­கம் வெற்­றி­பெற்­றது
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் வி.ரி.மகா­லிங்­கம் ஞாப­கார்த்த கிண்­ணத்­துக்­கான ரி-20 துடுப்­பாட்­டத் தொட­ரில் ஜொனி ­யன்ஸ் அணி 17 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது.

சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ஜொனி­யன்ஸ் அணியை எதிர்த்து கிறாஸ் கொப்­பர்ஸ் அணி மோதி­யது. முத­ லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஜொனி­யன்ஸ் அணி 6 இலக்­கு­களை இழந்து 161 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

ஜது­சன் 68 ஓட்­டங்­க­ளை­யும், கிசாந்து­யன் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில ஜெறோம், சரண்­ராஜ் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

162 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய கிறாஸ் கொப்­பர்ஸ் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் வரை தாக்­குப்­பி­டித்த போதி­லும் 7 இலக்­கு­களை இழந்து 144 ஓட்­டங்­களை மாத்­தி­ரம் பெற்­றது. இத­னால் 17 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது ஜொனி­யன்ஸ் அணி.

 

 

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது

 
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் வி.ரி. மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணத் துக்கான ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி வெற்­றி­பெற்­றது.

சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணியை எதிர்த்து நியூஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூஸ்­ரார் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 114 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக மோக­ன­தீ­பன் 34 ஓட்­டங் களை­யும், ரம்­மிய ராகு­லன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் பிர­ப­வன், ஐசிந்­தன், சிவ­ராஜ் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

115 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக கழக அணி 15.4 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 3 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. தர்­சி­கன் அதி­க­பட்­ச­மாக 37 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

 

யங்ஸ்ரார் அணி அபார ஆட்டம்

 
யங்ஸ்ரார் அணி அபார ஆட்டம்
 

வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் ரி-20 துடுப்பாட்டத்தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில்
யங்ஸ்ரார் அணி 43 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து வடதாரகை விளையாட்டுக் கழக ‘பி’ அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யங்ஸ்ரார் அணி
20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. ஜெசிதரன் 69 ஓட்டங்களையும்,
கிரிசாந் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுபாஸ்கரன் 3 இலக்குகளையும்,
ஐசிவன், ஜெயகரன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
189 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வடதாரகை அணி 19.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும்
இழந்து 145 ஓட்டங்களை மட்டும்பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

http://newuthayan.com/story/category/sports

 

  • தொடங்கியவர்

துடுப்பாட்டத்தொடரில் கொக்குவில் இந்து வென்றது

 
 
துடுப்பாட்டத்தொடரில் கொக்குவில் இந்து  வென்றது
 

யாழ்ப்­பா­ணம் மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் வடக்கு, கிழக்கு மாகாண பாட­சா­லை­க­ளின் 19 வய­துப் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 19.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 94 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­து. அதி­க­பட்­ச­மாக கேதீஸ் 24 ஓட்­டங்­க­ளை­யும், சந்­துரு 19 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் விஜி­த­ரன் 4 இலக்­கு­க­ளை­யும், விம­ல­தாஸ் 3 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி 13 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 3 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. அதி­க­பட்­ச­மாக தனுக்­சன் 32 ஓட்­டங்­க­ளை­யும், துஸ்­யந்­தன் 14 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி­யின் சார்­பில் சந்­துரு 2 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

http://newuthayan.com/story/25236.html

  • தொடங்கியவர்

துடுப்பாட்டத்தொடரில் யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி

 
 
துடுப்பாட்டத்தொடரில் யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி
 

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்டத் தொட­ரில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி வெற்­றி­பெற்­றது.

கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன் தி­னம் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணியை எதிர்த்து யாழ்ப்­பாண மாவட்ட ‘பி’ அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணி 24.3 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 74 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக பிர­விந்­தன் ஆட்­டம் இழக்­கா­மல் 21 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ ’அணி­யின் சார்­பில் ஜோனந்­தன், சதுர்­சன் தலா 4 இலங்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

75 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி 19.2 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 3 இலக்­கு­களை இழந்து 78 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. நிகேஸ் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 21 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

http://newuthayan.com/story/25263.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சைவத் தமிழ் வித்தியாலயம் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்ட கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் 17 வய­துப் பெண்­கள் பிரி­வில் உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லய மக­ளிர் அணி அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்ளது.

கேகாலை மத்­திய கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்ற ஆட்­டத்­தில் காலி அரச தலை­வர் பாலிகா வித்­தி­யா­ல­ய­மும், உரும் பி­ராய் சைவத்­த­மிழ் வித்­தி­யா­ல­ய­ மும் மோதின. 3 செற்­க­ளைக் கொண்­ட­ தாக ஆட்­டம் அமைந்­தது.

முதல் இரண்டு செற்­க­ளை­யும் முறையே 25:08, 25:10 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றிய உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லய மக­ளிர் அணி 2:0 என்ற நேர் செற் கணக்­கில் வெற்­றி­பெற்று அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

 

தைக்கொண்டோ போட்டியில் யாழ். பல்கலைக்குப் பதக்கம்

பெற்றுக் கொடுத்தார் ஒபேசேகரா

 

இலங்கை பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தேசிய மட்ட தைக்­கொண்­டோ­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­துக்கு தங்­கம், வெண்­க­லம் என்று இரண்டு பதக்­கங்­கள் கிடைத்­துள்­ளன.டி.எவ்.பி.சி. ஒபே­சே­கரா என்ற மாண­ வனே இரண்டு பதக்­கங்­க­ளை­யும் பெற்­றுக்­கொ­டுத்­தார்.

இலங்கை பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தைக்­கொண்டோ தொடர் றுகுணு பல்­க­லைக் கழ­கத்­தில் அண்­மை­யில் நடை­பெற்­றது. இதில் 54 கிலோ­வுக்கு உட்­பட் டோ­ருக்­கான போட்­டி­யில் யாழ்ப் பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தைப் பிர­தி ­நி­தித்­துவம் செய்த டி.எவ்.பி.சி.ஒபே­சே­கரா குமித்­தே­யில் தங்­கப் பதக்­கத்­தை­யும் காட்­டா­வில் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னார்.

தைக்­கொண்டோ போட்டி கடந்த வரு­டமே யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

 

கொழும்பு சென். ஜோசப்பை வீழ்த்தியது சென். பற்றிக்ஸ்

 

பேரா­யர் பொஞ்­சி­யன் ஆண்­டகை ஞாப­கார்த்த வெற்­றிக் கிண்­ணத்தை கைப்­பற்­றி­யது யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் சென். பற்­றிக்ஸை எதிர்த்து சென். ஜோசப் கல்­லூரி அணி மோதி­யது. முதல் பாதி­யின் 20ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணிக்கு ஒரு தண்ட உதை கிடைத்­தது.

வாய்ப்பை சிறந்த முறை­யில் கோலாக மாற்­றி­னார் கெய்ன்ஸ். வேறெந்த மாற்­றங்­க­ளும் ஏற்­ப­ட­வில்லை. பற்­றிக்­ஸின் ஆதிக்­கத்­து­டன் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி.

இரண்­டாம் பாதி­யின் 77ஆவது நிமி­டத்­தில் சாந்­தன் பற்­றிக்­ஸின் இரண்­டா­வது கோலைப் பதிவு செய்­தார். 81ஆவது நிமி­டத்­தில் கெய்ன்ஸ் மற்­றொரு கோலைப் பதிவுசெய்தார். முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண் ணம் வென்றது சென். பற்றிக்ஸ்.

 

http://newuthayan.com

 

 

 

  • தொடங்கியவர்

43 ஆவது தேசிய விளையாட்டு விழா: கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வடமாகாணம் தகுதி

 

 

43 ஆவது தேசிய விளையாட்டு விழா: கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வடமாகாணம் தகுதி
 

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வட மாகாணம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

43 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான குழுநிலைப் போட்டிகளில், ஆடவருக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்றது.

இதன் அரையிறுதிப் போட்டியில் வட மத்திய மாகாண அணி , வட மாகாண அணியை சந்தித்தது.

போட்டியின் இரண்டு பாதிகளில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால் பெனால்ட்டி முறையை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.

பெனால்ட்டி முறையில் திறமையாக விளையாடிய வட மாகாண வீரர்கள் 3 கோல்களைப் போட்டனர்.

வட மத்திய மாகாண அணி வீரர்களால் 02 கோல்களை மாத்திரமே போட முடிந்தது.

போட்டியில் மூன்றுக்கு இரண்டு என வெற்றியீட்டிய வட மாகாண அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

http://newsfirst.lk/tamil/2017/09/43-ஆவது-தேசிய-விளையாட்டு-வி/

  • தொடங்கியவர்

சாகிராவை வீழ்த்தியது சென். பற்றிக்ஸ் அணி

 
சாகிராவை வீழ்த்தியது சென். பற்றிக்ஸ் அணி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்­கைப் பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் 18 வய­துப் பிரி­வி­ன­ருக்­கான முத­லாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்பாணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன் தி­னம் மாலை 4 மணிக்கு இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கொழும்பு சாகி­ராக் கல்­லூரி அணியை எதிர்த்து சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி மோதி­யது. ஆட்­டத்­தின் 9ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி­யின் அபி­சன் அடித்த பந்தை சாகி­ராக் கல்­லூரி அணி வீரர் தடுக்க முற்­பட்­ட­போது, அது சாகி­ரா­வின் பக்­கமே கோலாக மாறி­யது. முதல் பாதி­யின் முடி­வில் 1:0 என்று ஆதிக்­கம் செலுத்­தி­யது சென். பற்­றிக்ஸ்.

இரண்­டா­வது பாதி­யின் 34ஆவது நிமி­டத்­தில் சாகி­ராக் கல்­லூ­ரி­யின் கோலைப் பதி­வு­செய்­தார் மொகமட் றசிட். 43ஆவது நிமி­டத்­தில் கிறிஸ்தீபன் கோலொன்­றைப் பதி­வு­ செய்ய 2:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது யாழ்ப் பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.

http://newuthayan.com/story/32380.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பளுதூக்கல் தொடரில் யாழ். இந்து சம்பியன்

 
பளுதூக்கல் தொடரில் யாழ். இந்து சம்பியன்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

கொழும்பு டொறிங்ரன் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற் றன. யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் சம்­பி­ய­னா­க­வும், 20 வயது ஆண்­கள் பிரி­வில் இரண்­டா­வது இடத்­தை­யும், ஒட்­டு­மொத்த ஆண்­கள் பிரி­வில் சம்­பி­ய­னா­க­வும் வந்­தது.

20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் 62 கிலோ எடைப் பிரி­வில் யு.சுஜந்­தன் 195 கிலோ பளு வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை ­யும், 85 கிலோ எடைப் பிரி­வில் ஏ.எட்­வின் 200 கிலோ பளு­வைத் தூக்கி வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், 56 கிலோ எடைப் பிரி­வில் பி.அபி­ந­யன் 174 கிலோ பளு­வைத் தூக்கி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும், 105 கிலோ எடைப் பிரி­வில் எஸ்.மிதுன் 173 கிலோ பளு­வைத் தூக்கி வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், 105 கிலோ­வுக்கு மேற்­பட்ட பிரி­வில் ரி.கிரி­சான் 176 கிலோ பளு­வைத் தூக்கி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி ஒட்டு மொத்­த­மாக 3 தங்­கப்­ப­தக்­கங்­கள், 4 வெள்­ளிப்­ப­தக்­கங்­கள், 3 வெண்­க­லப் பதக்­கங்­கள் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/35401.html

  • தொடங்கியவர்

ஹென்றிஸின் வீரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு

 
ஹென்றிஸின் வீரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்­டப் போட்­டி­யில் வெற்­றி­பெற்ற இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூ­ரி­யின் வீரர்­க­ளுக்கு கல்­லூ­ரிச் சமூ­கத்­தால் நேற்றுச் சிறப்­பான வர­வேற்பு வழங்­கப்­பட்­டது.

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்­டத்­தில் சம்­பி­ யன், 16 வய­துக்கு உட்­பட்ட பிரி­வில் வெண் கலப்­ப­தக்­கம், உடற் பயிற்சிப் போட்­டி­யில் வெண்­க­லப் பதக்­கம், 20 வய­துக்கு உட்­பட்ட கப­டி­யில் வெண்­க­லப் பதக்­கம் ஆகி­ய­வற்றை ஹென்­றிஸ் கல்­லூ­ரி­யின் அணி­கள் தம­தாக்­கி­யி­ருந்­தன.

இந்த அணி­க­ளில் இடம்­பி­டித்த வீரர்­க­ளுக்கு கல்­லூ­ரிச் சமூ­கத்­தால் நேற்றுச் சிறப்­பான வர வேற்பு வழங்­கப்­பட்­டது.

கல்­லூரி முதல்­வர் அருட்­தந்தை ஹொட்விற் ஜோ­யல் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக வட­மா­காண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் கலந்து கொண்­டார்.

http://newuthayan.com/story/36610.html

  • தொடங்கியவர்

பூப்பந்தாட்டத்தில் வடக்குக்கு வரலாற்றில் முதல் பதக்கம்

 
பூப்பந்தாட்டத்தில் வடக்குக்கு வரலாற்றில் முதல் பதக்கம்
 
 

இலங்கைப் பூப்பந்தாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வடக்கு மாகாணத்துக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இலங்பூகை பூப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இது வென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பூப்பந்தாட்டச் சங்க உள்ளக அரங்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த றொமின்சன், துசாந்தன் இணையை எதிர்த்து கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தனுஸ்க, அமிலப் பெரேரா இணை மோதியது. றொமின்சன், துசாந்தன் இணை 21:14, 21:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்களையும் கைப் பற்றி 2:0 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றது.

போராடி வென்றது சென். ஜோன்ஸ்

 
போராடி வென்றது சென். ஜோன்ஸ்
 

மைலோ கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பாண மாவட்ட
16 வய­துப்­பி­ரிவு பாட­சாலை அணி­கள் பிரி­வில் நேற்று பிற்­ப­கல் 2 மணிக்கு
நடை­பெற்ற ஆட்­ட­மொன்­றில் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்ற இந்த
ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து குரு­ந­கர் சென். ஜேம்ஸ் மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யில் சென். ஜோன்­ஸின் கோல் பதி­வா­னது. முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

மகாஜனக் கல்லூரி வென்றது கிண்ணம்

 
மகாஜனக் கல்லூரி வென்றது கிண்ணம்
 

ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி தீபா­வ­ளிப் பண்­டி­கையை முன்­னிட்டு அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் தெல்­லி­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மானிப்­பாய் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யி­லும் அதே நில­மை­தான்.
நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளில் இரண்டு அணி­க­ளா­லும் கோல் எதுவும் பதி­வு­செய்­யப்­ப­டா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முடி­வில் 5:4 என்ற கோல் கணக்­கில் மகா­ஜ­னக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது. ஆட்­ட ­நா­ய­க­னாக மகா­ஜ­னக் கல்­லூரி அணி­யின் தனு­ஜன் தெரி­வா­னார்.

மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணியை எதிர்த்து யூனி­யன் கல்­லூரி அணி மோதி­யது. இதில் யூனி­யன் கல்­லூரி அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

3-inside.jpg

http://newuthayan.com/story/39367.html

  • தொடங்கியவர்

மைலோ கிண்ண கால்பந்து முடிவுகள்

 
மைலோ கிண்ண கால்பந்து முடிவுகள்
 

மைலோ கிண்­ணத் துக்­காக நடத்­தப்­ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில், வலி­கா­மம் லீக்­குக்கு உட்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடையே நேற்­று­ முன் தி­னம் இடம்­பெற்ற சில ஆட்­டங்­க­ளின் முடி­வு­கள் வரு­மாறு:

சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கல்­வ­யல் விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.
சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பிறைட் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் இரண்டு அணி­யி­ன­ரும் தலா ஓர் கோலைப் பெற்றதால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இந்த ஆட்­டத்­தில் சென். அன்­ர­னிஸ் விளை­ யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.
யூனி­யன் விளை யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பிறைட் ஸ்ரார் விளை ­ யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் பிறைட் ஸ்ரார் அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.மகாத்மா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் மகாத்மா அணி 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.
இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் இள­வாலை யங் ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சில்­வெஸ் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

3:0 என்ற கோல் கணக்­கில் யங்­ஹென்­றிஸ் அணி வெற்­றி­பெற்­றது.
வட்­டுக்­கோட்டை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா விளை­யாட்­டுக் கழக அணி மோதிய ஆட்­டத்­தில் அண்ணா விளை­யாட்­டுக் கழக அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

நவாலி சென். பீற்­றர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கண்ணகி விளை­ யாட்­டுக் கழக அணி மோதிய ஆட்­டத்­தில் நவாலி சென். பீற்­றர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

சில்வெஸ் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அராலி மாவத்தை விளை­யாட்­டுக் கழக அணி மோதிய ஆட்­டத்­தில், நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஓர் கோலைப் பதி­வு­செய்­த­மை­யால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இந்த ஆட்­டத்­தில் அராலி மாவத்தை விளை ­யாட்­டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.
ஸ்கந்தா ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மாத­கல் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணி மோதிய ஆட்­டத்­தில், மாத­கல் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

காக்­கை­ தீவு ஆத­வன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பாரதி விளை­யாட்­டுக் கழக அணி மோதிய ஆட்­டத்­தில் காக்­கை­தீவு ஆத­வன் விளை­யாட்­டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

 

 

நாவாந்துறை றோ.க.வித்தி. மிகவும் இலகுவான வெற்றி

 
 
நாவாந்துறை றோ.க.வித்தி. மிகவும் இலகுவான வெற்றி
 

மைலோ கிண்ணத்துக்காக நடத் தப் ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நாவாந்­துறை றோமன் கத்தோ­லிக்க வித்­தி­யா­லய அணி வெற்­றி­ பெற்­றது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் நாவந்­துறை றோமன் கத்­தோ­லிக்க வித்­தி­யா­லய அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

ஆட்­ட­நேர முடி­வில் நாவாந்­துறை றோமன் கத்­தோ­லிக்க வித்­தி­யா­லய அணி 5:1 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

போராடி வென்­றது மத்தி.

 
போராடி வென்­றது மத்தி.
 

மைலோ கிண்­ணத்­துக்­காக நடத்­தப் ப­டும் கால்­பந்­தாட்­டத் தொடரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற 14 வய­துப்­பி­ரிவு அணிக­ளுக்கு இடை­யி­லான ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி போராடி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து வயா­வி­ளான் மத்­திய கல்­லூரி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யில் மத்­தி­யின் சார்­பாக அபி­சன் ஒரு கோலைப் பதி­வு­செய்தார்.

அந்­தக் கோலே ஆட்­டத்­தின்இறு­திக்­கோ­லு­மாக அமைய முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

யங்ஹென்றிஸ் – மாதகல் ஐக்கியம் அணிகளின் ஆட்டத்தில் கைகலப்பு

 
 

வலிகாமம் லீக்குக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான மைலோ கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற இளவாலை யங்ஹென் றிஸ், மாதகல் ஐக்கியம் அணிகளுக்கு இடை யிலான ஆட்டத்தில் ரசிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டதை அடுத்து ஆட்டம் கைவிடப்பட்டது.

இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமானது.

முதல் 25 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் 2:0 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணி முன்னிலை வகித்தது. அதன்பின்னரேயே குழப்பம் ஏற் பட்டதாக அறியமுடிகிறது.

இந்த விடயம் தொடர்பில், வலிகாமம் லீக் குடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘‘இள வாலை யங்ஹென்றிஸ் வீரர்கள் அமர்ந் திருந்த இடத்தில் ஐக்கியம் அணியின் ஆதர வாளர் என்று கருதப்படும் நபர் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, அது கைகலப்பாக மாற ஆட்டம் கைவிடப்பட்டது. இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழக வீரர்களும் தாக்குதலுக்கு உள்ளா னார்கள். இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி மீதும் கற்களாலும் போத்தல்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

அன்பு சிறு­வர் இல்­லத்­துக்­கு கணி­ச­மான பதக்­கங்­கள்

அன்பு சிறு­வர் இல்­லத்­துக்­கு  கணி­ச­மான பதக்­கங்­கள்
 
 

இலங்கை கராத்தே சம்­மே­ளனத்தால் நடத்­தப்­பட்ட வட­மா­காண ரீதி­யி­லான கராத்தே தொட­ரில் அன்பு சிறு­வர் இல்லத்­துக்கு 8 தங்­கப்­ப­தக்­கங்­கள், 2 வெள்­ளிப்­ப­தக்­கங்­கள், 3வெண்கலப் ப­தக்­கங்­கள் என மொத்­த­மாக 13 பதக்­கங்­கள் கிடைத்­தன.

11 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான குமித்தே போட்­டி­யில் கேதீஸ் தங்­கப் பதக்கத்ைத­யும், 13 வய­துப்­பி­ரிவு ஆண்­களுக்கான குமித்தே போட்­டி­யில் மனோ­சன் தங்­கப் பதக்­கத்­தையும், அதே வய­துப்­பி­ரி­வில் தனுஸ் தங்­கப் பதக்­கத்தையும் பெற்­றனர்.

14-–15 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான 45 கிலோ எடைப் பி­ரி­வில் குமித்தே போட்­டி­யில் குவிந்தன தங்­கப்­ப­தக்­கங்கள்.

14-–15 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான 50 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் றூபன் தங்­கப் பதக்­கத்­தை­யும், 14-–15 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான 45 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் சஜீவன் வெண்­க­லப்­ப­தக்­கத்­தை­யும், 14-–15 வயது ஆண்­க­ளுக்­கான 45 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் பிர­காஸ் தங்கப்­ப­தக்­கத்­தை­யும் பெற்றனர்.

16-–17 வய­துப்­ பிரிவு ஆண்­க­ளுக்­கான 40 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் கோஸ்­மி­யன் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், 16-–17 வய­துப் பிரிவு ஆண்க­ளுக்­கான தனி காட்­டாப் போட்­டி­யில் ெஜக­தீஸ்­வ­ரன் தங்­கப்­பதக்கத்­தையும் பெற்றனர்.

14-–15 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான தனி காட்­டாப் போட்­டி­யில் குவிந்­தன வெள்­ளிப் பதக்கங்கள்.

16-–17 வயது ஆண்களுக்­கான 40 கிலோ எடைப் பிரிவு குமித்தே போட்­டி­யில் நிசாந்­தன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், 16-–17 வயது ஆண்­க­ளுக்­கான 50 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் ஜக­தீஸ் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் 14-–15 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆண்­க­ளுக்­கான தனி காட்­டாப் போட்­டி­யில் பிர­காஸ் வெண்­க­லப் பத்­தி­னை­யும் பெற்­ற­னர்.

http://newuthayan.com/story/41226.html

  • தொடங்கியவர்

சென். ஹென்றிஸ் போராடி வென்றது

சென். ஹென்றிஸ் போராடி வென்றது

மைலோ கிண்­ணத்­துக்­காக நடத்­தப்­ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்று இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் இள­ வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து மாத­கல் சென். ஜோசப் கல் லூரி அணி மோதி­யது.

1:0 என்று ஹென்­றி­ஸின் ஆதிக்­கத்­து­டன் முடி ­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யில் சென். ஹென்­றி­ஸின் கோலைப் பதி­வு­செய்­தார் பிர­சாந்.

வேறெந்த மாற்­றங்­க­ளும் ஏற் படா­ததை அடுத்து முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

 

யாழ்ப்பாணம் மத்தி இறுதியாட்டத்தில்

யாழ்ப்பாணம் மத்தி இறுதியாட்டத்தில்

யாழ்ப்பாணம் மத்­திய கல்­லூரி மாண­வர் முதல்­வர் சபை அம­ரர் பொன் விபு­லா­னந்­தன் ஞாப­கார்த்­த­மாக வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் நடத்தும் கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இறுதிக்குத் தகுதிபெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந் தாட்­டத்திட­லில் நேற்­று­ பிற்­ப­கல் 3.30 மணிக்கு இடம்­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 67:35 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

 

தெல்லிப்பழை யூனியன் அரையிறுதிக்குத் தகுதி

தெல்லிப்பழை யூனியன் அரையிறுதிக்குத் தகுதி

இலங்­கைப் பாட­சா­லை­கள் எறி­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் தேசிய ரீதி­யி­லான தொட­ரில் 20 வயது பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூரி அணி அரை­யி­று­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றுள்­ளது.

வெல்­ல­வாய குமா­ர­தாஸ மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் யூனி­யன் கல்­லூரி அணியை எதிர்த்து வெல்­ல­வாய குமா­ர­தாஸ மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது.

முதல் இரண்டு செற்­க­ளை­யும் முறையே 25:18, 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் வெற்­றி­பெற்­றது தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூரி அணி.

இன்று நடை­பெ­ற­வுள்ள அரை­யி­று­தி­யாட்­டத்­தில் கொழும்பு சிறிமாவோ பண்­டா­ர­நா­யக்­கக் கல்­லூரி அணியை எதிர்த்து யூனி­யன் மோத­வுள்­ளது.

 

http://newuthayan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம் மானிப்பாய் எக்ஸ்புளோரா கல்வி நிலையத்தின் மாணவன் அகில இலங்கை ரீதியிலான கராதே சுற்றுப்போட்டியில் தங்க பங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்........

  • தொடங்கியவர்
 
சுவிஸ் அணியிடம் நேற்று தோற்றது யாழ்ப்பாணம்
 
 

சுவிஸ் நாட்­டின் கழக அணியிடம் நேற்று தோற்றது யாழ்ப்பாணம்

சுவிஸ் நாட்­டின் கழக அணிக்­கும் யாழ்ப்­பாண மாவட்ட கால்­பந்­தாட்­டத் தெரிவு அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண அணி தோல்­வி­ய­டைந்­தது.

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மாலை 8.30 மணிக்கு மின் ஒளி­யில் யாழ். துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தச் சிநே­க­பூர்வ ஆட்­டம் ஆரம்­ப­மா­னது.

முதற்­பாதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண அணி முத­லா­வது கோலை அடித்­தது. ஞான றூபன் அத­னைப் பதிவு செய்­தார். பதி­லுக்கு சுவிஸ் அணி­யும் தனது முதல் கோலை முதல் பாதி­யி­லேயே அடித்­தது. ஜெனி­அ­கஸ்­ரின் அத­னைப் பதிவு செய்­தார்.

கோல் எண்­ணிக்கை சம­னா­னதை அடுத்து இரு அணி­யி­ன­ருமே முதல் பாதி­யின் எஞ்­சிய பகு­தி­யில் தற்­காப்பு ஆட்­டத்­தைத் தொடர்ந்­த­னர்.

இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் ஆரம்­பித்த போது இரு அணி­யி­ன­ருமே முன்­னேறி கோல்­களை அடிப்­ப­தற்கு முயன்­ற­னர். எனி­னும் சுவிஸ் அணி­யின் பனில் முல்­லர் அணி­யின்­இ­ரண்­டா­வது கோலை அடித்­தார்.

யாழ். அணிக்­குக் கிடைத்த அரு­மை­யான சில வாய்ப்­பு­கள் தவ­ற­வி­டப்­பட் ஆட்ட நேர முடி­வில் சுவிஸ் அணி 2 : 1 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

http://newuthayan.com/story/49501.html

    • யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – இன்னிங்ஸ் வெற்றி!
    யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – இன்னிங்ஸ் வெற்றி!
     
     

    யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – இன்னிங்ஸ் வெற்றி!

    இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 19 வய­துக்குட்பட்ட மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­டம் ஒன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இன்­னிங்ஸ் வெற்­றி­பெற்­றது.

    கண்டி அஸ்­கி­ரிய பொலிஸ் மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கண்டி சிறி சுமங்­கல கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற கண்டி சுமங்­கல கல்­லூரி அணி களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

    இதன்­படி முத­லில் துடுப்­பொ­டுத்­த­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 201 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. மது­சன் 44 ஓட்­டங்­க­ளை­யும், துசாந்­தன் 42 ஓட்­டங்­க­ளை­யும், சாரங்­கன் 42 ஓட்­டங்­க­ளை­யும், நிசாந் 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

    பந்­து­வீச்­சில்; குல­துங்க 6 இலக்­கு­க­ளை­யும், அனுஸ்க, சமிர ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

    பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய கண்டி சிறி சுமங்­கல கல்­லூரி அணி 99 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அவிஸ்க 23 ஓட்­டங்­க­ளை­யும், இசுறு 15 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

     

    பந்­து­வீச்­சில் துசாந்­தன் 6 இலக்­கு­க­ளை­யும், மது­சன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
    தொடர்ந்து களத்­த­டுப்­பில் ஈடு­ப­டத் தகு­தி­யற்ற நிலை­யில் கண்டி சிறி சுமங்­கல கல்­லூரி தொடர்ந்து துடுப்­பெ­டுத் தா­டப் பணிக்­கப்­பட்­டது.

    இதன்­படி தனது இரண்­டா­வது இன்­னிங்ஸூக்காக துடுப்­பெ­டு­தா­டிய கண்டி சிறி சுமங்­கல கல்­லூரி அணி 70 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து இன்­னிங்­ஸா­லும் 32 ஓட்­டங்­க­ளா­லும் வெற்­றி­பெற்­றது யாழ்ப் பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

 

http://newuthayan.com/story/49466.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.