Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க முயற்சியின் காலதாமதம் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும்

Featured Replies

நல்­லி­ணக்க முயற்­சியின் கால­தா­மதம் நம்­பிக்­கை­யீ­னங்­களை ஏற்­ப­டுத்தும்

 

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நிரந்­தர அர­சியல் தீர்வை காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் காண்­பிக்­கப்­பட்­டு­வரும் இழுத்­த­டிப்­புக்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் அர­சாங்­கத்­தின்­ மீ­தான நம்­பிக்­கையை குறைப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து புதிய நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்­றி­ருந்­தது. இந்த நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் மீண்டும் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போதும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைத்து நிரந்­தர அர­சி­யல்­தீர்வை காண்­ப­தற்கும் மக்கள் புதிய அர­சாங்­கத்­திற்கு ஆணை­ வ­ழங்­கி­யி­ருந்­தனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டனர். உயிர்­க­ளையும், உட­மை­க­ளையும் இழந்த தமிழ் மக்கள் இனி­யா­வது எமக்கு நிரந்­தர தீர்வு கிடைக்­கு­மென நம்பி இருந்­த­ போ­திலும் கடந்த ஆட்­சி­க் கா­லத்தில் அந்த நம்­பிக்கை வீண­டிக்­கப்­பட்­டது.

இத­னால்தான் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் சிறு­பான்­மை­யின மக்கள் புதிய ஜனா­தி­ப­தி­யையும் புதிய அர­சாங்­கத்­தையும் உரு­வாக்­கும்­வ­கையில் தமது தீர்ப்­பினை வழங்­கி­யி­ருந்­தனர். இவ்­வாறு பெரும் நம்­பிக்கை வைத்து புதிய அர­சாங்­கத்தை ஆத­ரித்­தி­ருந்த சிறு­பான்­மை­யின மக்கள் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை உரு­வாகி வரு­கின்­றது. இதேபோல் புதிய அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூ­கமும் பெரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது. ஆனாலும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும் நிரந்த அர­சி­யல்­தீர்வு காண்­ப­திலும் காண்­பிக்­கப்­படும் கால­தா­மதம் மற்றும் இழுத்­த­டிப்புப் போக்­குக்கள் இந்த நம்­பிக்­கையை சீர்­கு­லைப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

 இறு­தி­யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரி­மை ­மீ­றல்கள், மற்றும் யுத்த குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­படும் என்று அர­ சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு ஒக்­டோ­பர்­ மாதம் இடம்­பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்ட நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்­தினை இன்­னமும் நிறை­வேற்­ற­வில்லை.

சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ர­ணைக்கு இணங்­கிய அர­சாங்கம் இன்று அதற்கு எதிர்­மா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது. இதேபோல், தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென்று வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­ட ­போ­திலும் அந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் கால­தா­மதம் காண்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது. பொது­மக்­களின் காணி­களை மீளவும் அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் விட­யத்­திலும் மக்­களை மீளக் குடி­யேற்றும் விவ­கா­ரத்­திலும் இழுத்­த­டிப்புப் போக்­கு­களே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அர­சியல் கைதி­களின் விவ­கா­ர­மா­கட்டும், காணா­மல்­போ­னோ­ரது விட­ய­மா­கட்டும் எத்­த­கைய விட­யங்­க­ளுக்கும் உரிய தீர்­வுகள் இன்­னமும் காணப்­ப­ட­வில்லை. இதேபோல் நிரந்­தர அர­சி­யல்­தீர்வை காண்­ப­தற்­கான விவ­கா­ரத்­திலும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது ஒரு நிலைப்­பாட்டில் இருப்­ப­தாக தெரிய­ வில்லை. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு அர­சி­ய­ல­மைப்­ பினை மாற்­றி­ய­மைப்­பது தொடர்பில் ஆரா­ யப்­பட்டு வரு­கி­ன்­றது. அர­சி­யல்­யாப்பு சபை­ யா­னது 21 பேர் கொண்ட வழி­ந­டத்தல் குழுவை அமைத்து அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றது. ஆனாலும் இந்த விட­யத்­திலும் இழுத்­த­டிப்புப் போக்­கா­னது நீடித்தே வரு­கின்­றது.

அர­சியல் யாப்­பு­ ச­பையின் வழி­ந­டத்தல் குழு­வினால் அமைக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக் கள் தமது அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளன. இதேபோல் புதிய அர­சியல் யாப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவும் தமது இடைக்­கால அறிக்­கை­யினை சமர்ப்­பிக்க இருந்­த­போ­திலும் அந்த நட­வ­டிக்­கையும் பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்ட போதி லும் அந்த நட­வ­டிக்­கையும் பிற்­போ­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

இத­னை­விட அர­சியல் தீர்வு திட்டம் எவ் ­வா­றா­ன­தாக அமை­ய­வேண்­டு­மென்ற விட­ யத்­திலும் அர­சாங்­கத்­திற்குள் முரண் ­பா­டான நிலைமை காணப்­பட்டு வரு­கின்­றது. அர­சியல் யாப்­பு­ ச­பையின் வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் அர­சாங்­கத்­த­ரப்பு உறுப்­பி­னர்கள் அர­சி­யல்­தீர்வுத் திட்­ட­மா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் வடக்கு, கிழக்கு இணைப்­பற்ற வகையில் அமை­ய­வேண்­டு ­மென்றே வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். சம ஷ்டி தீர்வு என்­பது ஒரு­போதும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்று அர­சாங்­கத்­த­ரப்­பினர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து வரு­கின்­றனர்.

நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்கை அண்­மையில் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இந்த அறிக்­கை­யிலும் கலப்பு பொறி­மு­றையின் கீழான விசா­ர­ணையின் அவ­சியம் குறித்தும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ர­ணையின் தேவை தொடர்­பா­கவும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால், இந்த குழுவின் அறிக்­கையைக் கூட அமுல்­ப­டுத்த முடி­யாது என்ற தோர­ணையில் அர­சாங்கத் தரப்­பினர் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

 இவ்­வாறு சிறு­பான்மை மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அன்­றாடப் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அர­சாங்­க­மா­னது ஒரு நிலை­யான கொள்­கையை கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. இத­னால்தான் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் உள்­ளூ­ரிலும் சர்­வ­தே­சத்­திலும் சந்­தேகம் கொள்ளும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் தற்­போ­தைய போக்கு தொடர்பில் தேசிய சமா­தானப் பேரவை நேற்­று­முன்­தினம் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. அந்த அறிக்­கையில் கடந்த தேர்­தல்­களின் போது அளிக்­கப்­பட்ட நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான உறு­திப்­பாடு குறித்து உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் ஐயப்­பாடு அதி­க­ரித்­துள்­ளது என்று தேசிய சமா­தானப் பேரவை தெரி­வித்­துள்­ளது.

பிர­த­மரால் நிய­மிக்­கப்­பட்ட நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்கை தொடர்பில் அர­சாங்­கத்தின் ஆரம்­பக்­கட்ட பொறுப்­புக்­கூறல் கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்ளது. சில அர­சாங்க உறுப்­பி­னர்கள் அந்த அறிக்கை, வெளிப்­ப­டை­யா­கவே குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர். இந்தக் குழுவின் சிபாரிசு­களை முன்­னெ­டுக்கத் தவ­று­வ­தா­னது அர­சாங்­கத்­திற்கும் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­திற்­கு­மி­டை­யி­லான நம்­பிக்­கையை சின்­னா­பின்­ன­மாக்­கவே வழி­வ­குக்கும். எனவே, நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் குழுவின் சிபாரி­சு­களை தீவி­ர­மா­கவும் உண்­மை­யா­கவும் செயற்­ப­டுத்த அர­சாங்கம் முனை­ய­வேண்டும். அவ்­வாறு செயற்­ப­டுத்­தா­விடின் அது போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது நம்­பிக்­கை­க­ளுக்கும் அபி­லா­ஷை­க­ளுக்கும் துரோகம் செய்யும் நட­வ­டிக்­கை­யா­கவே அமையும் என்றும் தேசிய சமா­தானப் பேரவை தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யிருக்­கின்­றது.

தற்போதைய நிலையில் தேசிய சமாதானப் பேரவையின் இந்த அறிக்கையானது உண்மையான யதார்த்த நிலையினை பறை சாற்றுவதாகவே அமைந்திருக்கின்றது. அரசாங்கமானது நல்லி ணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரளவிற்காகவாவது விரும்பு கின்ற போதிலும் அதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் காணப் படுவதனால் அது எதிரான தரப்பினருக்கு சாதகமான போக்கை காண்பிக்கின்றது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பது குறித்தும் அரசாங்கமானது தமது செயற்பாடுகளை துரிதப்படுத்தவேண்டியது அவசியமாகின்றது. இந்த விவகாரத்தில் காலதாமதம் காட்டப்படுமானால் அது நல்லி ணக்கத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு ஊன்று கோலாக அமைந்துவிடும்.

எனவே, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய் யக்கூடிய அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கமானது விட் டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும். அரசியல் தீர்வை உள்ள டக்கிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான முயற்சியில் துரிதம் காண்பிக்கவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.