Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோரின் உறவுகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

Featured Replies

காணாமற்போனோரின் உறவுகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
 
 
 
காணாமற்போனோரின் உறவுகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோ ருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
 
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23 ஆம்.திகதி காலை 8.00 மணி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால்எமது உறவுகள் கடத்திச்செல்லப்ப ட்ட மையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.
 
அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளுர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனா திபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வ தேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.
 
இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை.
 
ஆகவே எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?
 
உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
 
உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டு ள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
 
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
 
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
 
நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொ ள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22963

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.